தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:20 pm

ஏகபிங்கலம் - இருநூற்று இருபத்து நான்கு புவனங்களுள் ஒன்று.
ஏகபிங்கலன், ஏகபிங்கன் - பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்.
ஏகபிண்டன் - நெருங்கிய உறவினன்.
ஏகப்பிரளயம் - ஒரே நீர்ப் பெருக்கு.
ஏகம் பிழை - முழுதும் பிழை.


ஏகப்பீடை - பெருந்துன்பம்.
ஏகப் பெருவெள்ளம் - ஒருங்கு மூடிய பெரு வெள்ளம்.
ஏகமாயிருத்தல் - ஒன்றாயிருத்தல் : மிகுதியாயிருத்தல்.
ஏகம்பர் - காஞ்சியில் கோயில் கொண்டுள்ள சிவபிரான்.
ஏகராசி - அமாவாசை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:20 pm

ஏகல புச்சன் - பைத்தியக்காரன்.
ஏகல் - கடத்தல் : போகல் : கண்ட இடம் செல்லல் : உயர்ச்சி : ஓங்கிய கற்கள்.
ஏகவசனம் - ஒருமைச் சொல் : ஒரே மொழி : மெய் : ஒருமை : அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசுதல்.
ஏகவடம், ஏகவட்டம் - ஏகவல்லி : ஒற்றைச் சரமாலை : தனிமாலை : ஏக வடம்.
ஏகவல்லி - ஏகாவலி.


ஏகவாணை - பொதுவற ஆளுகை.
ஏகவாரம் - ஏகாவலி : ஒரு போது.
ஏகவெளி - பெருவெளி.
ஏகவேணி - ஒற்றைச் சடையுடைய மூதேவி.
ஏகன் - ஒருவன் : கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:21 pm

ஏகாக்கம் - காக்கை.
ஏகாங்கி - தனியன் : துறவி : திருமால் : அடியாருள் ஒருவகையார்.
ஏகாங்குலம் - சிறுநீர். [ மூத்திரம் ]
ஏகாசம் - உத்தரீயம் : மேலாடை.
ஏகாட்சி - ஒற்றைக் கண்ணன் : காக்கை : சிவன் : சுக்கிரன் : ஒற்றைக் கண்ணி.


ஏகாண்டம் - முழுக்கூறு : ஆகாயம் : வெளி : சராசரல்.
ஏகாதசம் - பதினொன்று.
ஏகாதசர் - ஏகாதச ருத்திரர் : பதினோரு ருத்திரர்.
ஏகாதிபத்தியம் - தனியரசாட்சி.
ஏகாத்தியம் - தனிச்செங்கோன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:21 pm

ஏகாந்தவாதி - ஆருகதரல்லாத சமயி.
ஏகாயம் - ஏகாசம். [ மேற் போர்வை ] 
ஏகாயனர் - மாத்துவார்.
ஏகாரம் - ஏ : பொன்.
ஏகாரவல்லி - பலா : பாகல் : பழுபாகல்.


ஏகார்த்தம் - ஒரே நோக்கம்.
ஏகாவலி - ஒன்றைவடம் : ஓரசரம் உள்ள முத்துமாலை : ஓர் அணி.
ஏகான்மவாதம் - பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையெனல்.
ஏகிபாவம் - ஒன்றுபடுகை.
ஏகியன் - தோழன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:22 pm

ஏகுதல் - போதல் : கடத்தல் : கழலுதல்.
ஏகை - உமை : வயிரக் குற்றங்களுள் ஒன்றாகிய இரேகை.
ஏகோ திட்டம் - இறந்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் ஒரு சிரார்த்தம்.
ஏகோபித்தல் - ஒன்றுபடுத்தல்.
ஏக்கரவு - ஏக்கம்.


ஏக்கழுத்தம் - தலையெடுப்பு : இறுமாப்பு : வீற்றிருக்கை.
ஏக்கறவு - ஒன்றைப் பெற விருப்பம் அடைதல்.
ஏக்கறுதல் - அவாவினால் தாழ்ந்து நிற்றல் : விரும்பி நிற்றல் : இளைத்து இடைதல் : மற்றொன்றின்
தன்மையைத் தான் பெற விரும்புதல்.
ஏக்கிபோக்கி - ஒன்றுக்கும் உதவாதவர்.
ஏக்கு - ஏக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:22 pm

ஏக்கெறிதல் - கவலையொழிதல் : அச்ச முறுதல்.
ஏக்கை - இகழ்ச்சி.
ஏங்குதல் - அஞ்சல் : அழுதல் : இரங்கல் : ஒலித்தல் : கவலைப்படல் : திகில் : உறல் : மயிற்குரல் : 
வாடல் : வாய்விடல் : ஆரவாரித்தல் : குழந்தைகளுக்கு வரும் காச நோய்.
ஏங்கி - இளைத்து நின்று.
ஏங்குவனர் - ஏங்குவார் : மனம் வருந்துவார்.


ஏங்குறல் - ஏங்கல்.
ஏசம் - வெண்கலம்.
ஏசறவு பேசல் - தோத்திரஞ் செய்தல்.
ஏசறுதல் - வருத்தம் உறுதல் : அவாக் கொள்ளுதல் : பழித்தல்.
ஏசாதவர் - இகழ்ச்சி செய்யாதவர் : தேவர் : குற்றம் இல்லாதவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:22 pm

ஏசி - கிளி.
ஏகிடாவகம் - அதிமதுரம்.
ஏசுகை - ஏசல்.
ஏசுதல் - இகழ்தல்.
ஏச்சுக்காட்டுதல் - பழிப்பைச் சுட்டிக் காட்டிப் பேசுதல்.


ஏச்சுரை - பழிப்புரை.
ஏட - இழிந்தோனை முன்னிலையாக விளிக்கும் ஒரு சொல்.
ஏடகணி - ஓலையீர்க்கு.
ஏடகம் - பூ : ஆட்டுக் கடா : பனை மரம் : ஒரு சிவப்பதி.
ஏடணாத்திரயம் - மூவகையான விருப்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:23 pm

ஏடணை - விருப்பம்.
ஏடமுகம் - கணை : செவிட்டூமன்.
ஏடமூகன் - ஆற்றலற்றவன்.
ஏடர் - தொழும்பர்.
ஏடலகம் - அதிமதுரம் : குன்றி : ஒரு செடி.


ஏடல் - கருத்து : மனம் : எண்ணம் : அவா.
ஏடல் - தோழன் : தொழும்பன்.
ஏடாகோடம் - ஏற்றத்தாழ்ச்சியான நடை.
ஏடாசிரியர் - ஆசிரியன் இன்றி ஏடளவில் கற்றோர்.
ஏடி - இழிந்தாளை விளித்தற்கண் முன்னிலைப் பெயர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:23 pm

ஏடுகம் - பிரேதக் கல்லறை.
ஏடுகோளாளன் - கணக்கன்.
ஏடுதூக்குதல் - ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்.
ஏடுபடுதல் - பாலில் ஆடை உண்டாதல் : பாசிபடிதல்.
ஏடை - அவா : ஆசை.


ஏட்சி - உதயம் : உறுதி.
ஏட்டிக்குப் போட்டி - எதிருக்கெதிர் : ஒவ்வாமை : விதண்டாவாதம்.
ஏட்டுக்கல்வி - குருவில்லாக் கல்வி : உலக அனுபவம் இல்லாத கல்வி.
ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு கூடாத கல்வியறிவு.
ஏட்டுப் படிப்பு - உலக அனுபவம் இல்லாத கல்வி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:24 pm

ஏட்டுப்பொறி - ஓலைப்பத்திரத்தில் பதித்த முத்திரை.
ஏட்டை - வறுமை : இளைப்பு : அவா : துன்பம் : எருமை : எருது : வெருகு : விருப்பம் : விலங்கேற்றின் பெயர்.
ஏட்டைப்பட்டு - இளைத்து.
ஏட்டைப் பருவம் - தளர்ந்த சமயம்.
ஏணகம் - ஒருவகைக் கருமை நிறங் கொண்ட மான்.


ஏணக்கோடு - மான் கொம்பு.
ஏணம் - நிலைபேறு : மான் : எலும்பு : வலி.
ஏணல் - வளைவு : கோணல்.
ஏணல்கோணல் : ஒழுங்கின்மை.
ஏணாசனம் - மான்றோலாசனம் : அரிணாசனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:25 pm

ஏணாப்பு - இறுமாப்பு : செருக்கு.
ஏணிப்பந்தம் - தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி.
ஏணிமயக்கம் - கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணி மிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை.
ஏணுக்குக்கோண் - எதிரிடையான பேச்சு.
ஏண்கோண் - திருக்கு : நேரின்மை.


ஏண்டாப்பு - இறுமாப்பு.
ஏதசன் - பார்ப்பான்.
ஏதடை - எதிரிடை : போட்டி : பகைமை.
ஏதண்டை - சிறாம்பி : பலகைத் தூக்கி : நீர்த்துறையிற் கட்டிய பரண்.
ஏதர் - கெட்டவர்கள் : தீயோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:25 pm

ஏதலிதல் - பெருமையாய்ப் பேசுதல்.
ஏதனம் - மூச்சு விடுதல்.
ஏதன் - மூலகாரணன் : ஆதிகாரணன் : முதல்வன் : கடவுள்.
ஏதி - ஆயுதப் பொது : வாட்படை : துண்டம்.
ஏதிதம் - விருத்தியடைந்திருப்பது. 


ஏதியம் - கிரணம் : கதிர் : ஒளி.
ஏதிலார் - பிறர் : அன்பில்லாதவர் : பகைவர் : பரத்தையர் : வறுமையாளர்.
ஏதிலாளன் - பிறன்.
ஏதிலாள் - பிறமாது : சக்களத்தி.
ஏதில் - அயல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:25 pm

ஏதீடு - தோழி அறத்தோடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக்
காரணமாக இட்டுரைக்கை.
ஏதுகரப்படுதல் - அனுகூலமாதல்.
ஏதுகரம் - ஆயத்தம் : வழிவகை.
ஏதுகாரணம் - யாது.
ஏதுக்கருத்தன் - ஏவுதற்கருத்தா.


ஏதுக்காட்டல் - காரணங்காட்டல்.
ஏதுங்கெட்டவன் - இடமற்றவன் : வீணன் : பயனற்றவன்.
ஏதுத்தற்குறிப்பு - ஓர் அணி.
ஏது நிகழ்ச்சி - கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை.
ஏதுப்பண்ணல் - வகை செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:26 pm

ஏதுப்போலி - ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப் போலத் தோன்றுவது.
ஏதும் - எதனையேனும் : சிறிதும்.
ஏதுவின்முடித்தல் - ஒரு யுக்தி அது காரணங்காட்டி முடித்தல்.
ஏதை - பேதை : வெறியன்.
ஏத்தம் - ஏற்றம்.


ஏத்தல் - துதித்தல் : வணங்கல்.
ஏத்தாளிகள் - புகழ்வோர்.
ஏத்து - புகழ்கை : தேக்கம் : ஆழம் : இனிமை : ஏத்தென்னேவல்.
ஏத்தியலாளன் - புகழ்வோன்.
ஏத்துதல் - துதித்தல் : வணங்கல் : புகழ்தல் : வாழ்த்துதல் : உயர்த்திக் கூறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:26 pm

ஏத்துவம் - பின்பு : பிறகு : போற்றுவோம்.
ஏத்துவாபாசம் - இகழ்ச்சி : ஏதுப் போலி.
ஏந்தானம் - ஏந்துதல் : சிறாம்பி : பொருளைத் தாங்குமாறு தொங்கும் தட்டுப் பலகை.
ஏந்தல்வண்ணம் - விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்துதற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ்சந்தம்.
ஏந்தி - ஏந்துபவன் : தரித்திரன் : வறியவன்.


ஏந்திசைச் செப்பல் - வெண்சீர் வெண்தளையாற் பிறக்கும் ஒலி.
ஏந்திசையகவல் - நேரொன்றாசிரியத் தளையான் வருவது.
ஏந்திரவச்சு - வண்டியச்சு : திரிகையச்சு.
ஏந்திலை - வேல்.
ஏந்திழை - பெண் : அழகிய அணிகலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:26 pm

ஏந்திழையார் - பெண்கள்.
ஏந்துதல் - பூணுதல் : சிறத்தல் : மிகுதல் : தாண்டுதல் : கைந்நீட்டுதல் : சுமத்தல்.
ஏந்தெழில் - மிகுந்த அழகு.
ஏப்பாடு - அம்பு விடும் எல்லை.
ஏப்பியன் - பேதை : அறிவில்லாதவன்.


ஏப்புழை - மதிலின் அம்புத்துவாரம்.
ஏமகூடம் - எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன் மலை.
ஏமங்கோலா - ஒருவகை மீன்.
ஏமதவஞ்சம் - போகபூமி ஆறின் ஒன்று.
ஏமதி - ஏவுவாயாக. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:27 pm

ஏமத்தி - பொற்றொட்டிப் பாடாணம்.
ஏமந்தம் - பனி : இமம் : இமயம்.
ஏமந்தருது - முன்பனிப் பருவம்.
ஏமந்தாசலம் - இமயமலை.
ஏமபுட்பம் - அசோகமரம் : செண்பக மரம் : பொன்முல்லை.


ஏமப்புணை - வலியபடகு : சேமப்படகு : ஏமமாகிய புணை : உபதேசம் : துணைப்படகு.
ஏமமணல் - பொன்மணல்.
ஏமமாதல் - இளைப்புத் தீர்த்தல்.
ஏமமாலை - இயமன் : மனைவி.
ஏமரல் - ஏமருதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:27 pm

ஏமரா - காவல் அற்ற.
ஏமலி - திலகப் பொட்டு : முதிரை.
ஏமல் - முதிரை : மனக்கலக்கம்.
ஏமவதி - கடுக்காய்.
ஏமா - செருக்குறு : களி.


ஏமாசலம் - மகாமேரு.
ஏமாத்தல் - அவாவுறல் : களித்தல் : செருக்குறுதல் : அறிவு மயங்கச் செய்தல் : இன்புறுதல் : உறுதி செய்தல்.
ஏமாந்த - அவாவுற்ற.
ஏமாந்து - இன்பம் உற்று.
ஏமாப்ப - கலக்கமுறும்படி : துணிய. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:28 pm

ஏமார்தல் - மனங்கலங்குதல் : அரணாதல்.
ஏமார்த்தல் - காப்புச் செய்தல் : பலப் படுத்தல்.
ஏமாறுதல் - மோசம் போதல்.
ஏமாற்றுதல் - வஞ்சித்தல் : ஏமஞ் செய்தல்.
ஏமிலாந்துதல் - திகைத்து நிற்றல் : மனந்தடுமாறுதல்.


ஏமிலாப்பு - அலமாப்பு : மனந்தடுமாற்றம்.
ஏமுறுதல் - மகிழ்வுறுதல் : இறுமாத்தல் : தன்மை திரிதல் : வருந்துதல் : மயங்குதல் : பித்துப் பிடித்தல் : பொருத்தமுறுதல்.
ஏமுற்றவர் - பித்தர் : மயங்கினார் : வருந்தினார்.
ஏமுற்று - இன்பம் உற்று.
ஏம் - ஏமம் : செருக்கு : இன்பம் : மயக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:28 pm

ஏம்பலித்தல் - மிகுந்த அவாக் கொள்ளுதல் : அங்கலாய்த்தல்.
ஏம்பல் - ஏக்கம் அடைதல் : கலங்கல் : களிப்பு : வருத்தம் : ஆரவாரம்.
ஏம்பு - ஏக்கமடை : களி : மயங்கு : மருந்து : ஏன்பென்னேவல்.
ஏம்புதல் - ஏம்பல்.
ஏய - ஓர் உவம உருபு.


ஏயது - ஏற்புடையது.
ஏயம் - தள்ளத்தக்கது.
ஏயான் - ஒரு தொழிலைச் செய்யத் தகாதவன் : பொருந்தான் : இசையான் : ஒவ்வான் : ஏவினான்.
ஏயில் - ஒரு பாட்டு : இசை : இராகம் : ஒரு பண்.
ஏயின - ஏவப்பட்ட செயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:28 pm

ஏயினர் - ஏவினர்.
ஏயே - இகழ்ச்சிக் குறிப்பு.
ஏய்தல் - பொருந்துதல் : ஒத்தல் : அடைதல் : தகுதல் : எதிர்ப்படுதல்.
ஏய்த்தல் - இயையப்பண்ணுதல் : ஒப்பாதல் : தழுவல் : வஞ்சித்தல் : பொருந்தச் சொல்லுதல்.
ஏய்ப்ப - ஓர் உவம உருபு.


ஏய்வு - உவமை.
ஏர - ஓர் உவம உருபு.
ஏரகம் - ஆடு : சுவாமிமலை என்னும் ஊர்.
ஏரகை - பெண் ஆடு.
ஏரங்கம் - மீன் வகைகளில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:29 pm

ஏரணம் - தருக்க நூல்.
ஏரண்டம் - ஆமணக்கு மரம் : ஆமணக்கு நெய் : ஒருவகைப் பறவை : ஓவியம் : சிற்றாமணக்கு விதை : கண்ட பேரண்டம்.
ஏரண்டை - திப்பிலி.
ஏரம்பம் - ஒரு கணித நூல்.
ஏரல் - கிளிஞ்சில் : சமுத்திரசுண்டி.


ஏரா - நீராழம் : மயக்கம் இல்லாத கள்ளு : மரக்கலத்தின் ஓர் உறுப்பாகிய அடிமரம்.
ஏராண்மை - உழவுத் தொழில்.
ஏராதது - ஏலாதது.
ஏராப்பலகை - கப்பலின் அடிமரம்.
ஏராளர் - உழவர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:29 pm

ஏரிசா - கடற் கொந்தளிப்பு : புரளி. 
ஏரிப்பாய்ச்சி - மீன் பிடிவரி.
ஏரிவாரியத்தார் - ஏரியை மேர்பார்வையிடும் சபையார்.
ஏரின் வாழ்நர் - உழவர்.
ஏரோர் - உழுவோர்.


ஏர்க்களம் - நெற்களம் : போர்க்களம்.
ஏர்க்கால் - கலப்பை, வண்டி இவற்றின் நுகம் கொழுவும் உறுப்பு.
ஏர்தல் - எழுதல் : பொலிவுறல் : ஒத்தல்.
ஏர்த்தாயம் - பருவக்காலத் துழவு.
ஏர்நாழி - கலப்பையின் ஓர் உறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:30 pm

ஏர்ப்ப - ஓர் உவமையுருபு.
ஏர்மங்கலம் - பொனோர்ப்பாட்டு.
ஏர்வாரம் - ஏர்க்காகக் கொடுக்கும் விளைவுப் பங்கு.
ஏல - இயல : பொருந்த : முன்னம் : மிக : ஏடி.
ஏலக்குழல் - மணம் ஊட்டப்பட்ட கூந்தல்.


ஏலப்பாட்டு - கப்பற்பாட்டு.
ஏலல் - ஒப்புக் கொள்ளல் : இசைவாயிருத்தல் : கையிடல் : பிச்சையிடல்.
ஏலவாலுகம் - பலவகை மணப் பொருள்கள்.
ஏலா - தோழன் : தோழி : முன்னிலை : சிற்றேலம் : பேரேலம்.
ஏலாதது - இயலாதது : பொருந்தாதது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:30 pm

ஏலாதன - தகாதன.
ஏலாதார் - இயலார் : பகைவர்.
ஏலாபத்திரம் - தக்கோலம்.
ஏலாபரணி - பரங்கிச்சக்கை.
ஏலாப்பு - துன்பம் : துனி : வருத்தம் : கட்டம்.


ஏலாவாலுகம் - வால்மிளகு.
ஏலாள் - தோழி.
ஏலி - கள் : அரிட்டம் : சொல்விளம்பி : தேறல் : வாருணம் : ஆம்பிலம்.
ஏலு - சங்கஞ்செடி.
ஏலுதல் - இயலுதல் : தகுதியாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 14 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum