தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:28 pm

குலாலன் _  குயவன்.
குலாலி _  குயத்தி.
குலாவுதல் _  நட்பொடு பழகுதல் : அளவளாவுதல் : மகிழ்தல் : கொண்டாடுதல் : வளைதல் : வயப்படுத்துதல்.
குலி _  மனைவியின் மூத்த தமக்கை :யாக்கை.
குலிகம் _  சாதி லிங்கம் : சிவப்பு இலுப்பை மரம்.




குலிங்கம் _  ஊர்க்குருவி : குதிரை : ஒரு நாடு.
குலிசபாணி _  தேவேந்திரன்.
குலிசம் _  வச்சிரப்படை : வயிரம் : இலுப்பை மரம் : வன்னி மரம் : கற்பரி பாடாணம் : நரக விசேடம்.
குலிசவேறு (ஏறு )  _ வச்சிரப்படை.
குலிசன் , குலிசி _  இந்திரன்.



குலிரம் _  நண்டு.
குலிலி _  வீராவேசவொலி.
குலீனன் _  உயர் குலத்தோன்.
குலுக்கி _  அழகு காட்டபவள்.
குலுக்குதல் _  அசைத்தல் : குலுங்கச் செய்து கலத்தல்.



குலுக்கை _  குதிர்.
குலுங்குதல் _  அசைதல் : நடுங்குதல் : நிறைதல்.
குலுத்தம் _  கொள்ளு.
குலும மூலம் _ இஞ்சி.
குலுமம் _  சேனையில் ஒரு தொகை.


குலை _  கொத்து : வில்லின் குதை : நாண் : செய்கரை : நடுக்கம் : பூங்கொத்து : பாலம் : கட்டவிழ் : அழி : மனந்தடுமாறு.
குலைக்கல் _  கோரோசனை.
குலைச்சல் _ அழிதல்.
குலைதல் _ அவிழ்தல் : கலைதல் : நிலை கெடுதல் : நடுங்குதல் : அழிதல் : சினக் குறிப்புக் காட்டுதல்.
குலை தள்ளுதல் _  குலை விடுதல்.




குலைத்தல் _  அவிழ்த்தல் : பிரித்தல் : ஒழுங்கறச் செய்தல் : அழித்தல் : அசைத்தல் : நாய் குரைத்தல்.
குலை நோய் _  மார்பெரிச்சல்.
குலோமி _  வெள்ளறுகம் புல்.
குலோமிசை _  வசம்பு.
குல்யன் _   மந்திரி.




குல்லகம் _  வறுமை.
குல்லம் _  முறம்.
குல்லரி _  இலந்தை மரம்.
குல்லா _  தலைக்கு அணியும் துகில் வகை : படகின் பாய் மரத்தில் கட்டும் கயிறு.
குல்லாய் _  தலைக்குல்லா.



குல்லிரி _  வீராவேச ஒலி.
குல்லை_  காட்டுத் துளசி : துளசி : வெட்சி : கஞ்சாச் செடி.
குல்வலி _  இலந்தை மரம்.
குவடு _  மலையுச்சி : திரட்சி : மலை : மரக் கொம்பு : சங்க பாடாணம்.
குவலயம் _  பூமி : நெய்தல் : கருங்குவளை : செங்குவளை : அவுபல பாடாணம்.




குவலயா பீடம் _ கம்சனின் பட்டத்து யானை.
குவலிடம் _  ஊர்.
குவலை _ துளசி : கஞ்சாச்செடி.
குவலையன் _  துரிசு.
குவவு _  திரட்சி :கூட்டம் : குவியல் : பெருமை : பிணைதல் : மேடு : பூமி.


குவவுதல் _  குவிதல் : தழுவுதல் : சேர்தல்.
குவளை _  செங்கழுநீர்ப் பூ : கருங்குவளை : ஒரு பேரெண் : மகளிர் கழுத்தணி : கண் குழி : கண்ணின் மேல் இமை : ஒரு பாண்டம் : பாண்டத்தின் விளிம்பு.
குவளைத்தாரான் _  குவளை மாலையணிந்த யுதிட்ரன் : தருமன்.
குவாகம் _ கமுகு : ஒரு வகைப் பிசின் மரம்.
குவாகுலம் _  ஒட்டகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:30 pm

கூ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:34 pm

கூ - ஓர் எழுத்து  : கூவென்னேவல்  : பூமி  : நிலம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:35 pm

கூஉங்கண்ணது - கூப்பிடு தூரத்திலுள்ளது.
கூகமானம் - மறைவு : எழினி : திரை : படுதா.
கூகம் - ஆந்தை : கூகை : மறைவு.
கூகளம் - மாய்மாலம் : ஒருவித மந்திரவித்தை.
கூகனம் - மறைந்த பொருளுடைய சொல் : அவைக்கு அடாத மொழி.


கூகாம் - கமுகு : பாக்குமரம் : பாளைமரம்.
கூகாரி - காகம்.
கூகு - எட்டாண்டுப் பெண்.
கூகை - ஒரு பருந்து : கோட்டான் : செடிவகை : கூகைக்கட்டு : அம்மைக் கட்டு.
கூகைநீறு - ஒரு மருந்து : காட்டெருமைப் பால் : கூவைமா.


கூக்குரல் - கூப்பிடும் ஒலி : முறையீடு : பேரொலி.
கூங்கைமா - யானை.
கூசம் - முலை : கூச்சம் : மனங்குலைகை.
கூசல் - அச்சக் குறிப்பு : அச்சம் : கூக்குரல் : கூசுதல் : நாணுதல்.
கூசிதம் - புட்குரல் : பறவையினொலி : சத்தம்.


கூசுதல் - நாணுதல் : அஞ்சுதல்.
கூசுமாண்டம் - பூசணி.
கூச்சம் - அச்சம் : நாணம் : நடுக்கம்.
கூச்சலிடுதல் - இரைதல் : கூக்குரலிடுதல்.
கூச்சிரம் - வெண்கடம்பு.


கூச்சு - கூரிய முனை : புளகம் : கூசல்.
கூடகம் - கொழு : வஞ்சனை : உடம்பினுள்.
கூடகாரம் - மேன்மாடம் : மாளிகையின் நெற்றிக்கூடு.
கூடகாரன் - கள்வன் : பொய்யன் : வஞ்சகன்.
கூடசதுக்கம் - மிறைக்கவியுள் ஒன்று : அஃது ஈற்றடி ஏனை மூன்றடியுள்ளும் சொற்புகாவெழுத்துக் கரந்து
நிற்கப் பாடுவது.


கூடசதுர்த்தம் - ஒருவகைச் சித்திரக் கவி.
கூடசன்மலி - முள்ளிலவு நிரம்பிய நரக வகை.
கூடசாலம் - நரகங்கள் ஏழனுள் ஒன்று.
கூடனை - மயிற்றோகைக்கண்.
கூடத்தன் - நிருவிகார சைதந்நியன் : முதன்மையானவன் : ஆன்மா.


கூடம் - அண்டம் : அறை : இந்திரசாலம் : இரகசியம் : உறையறி கருவி : ஏகாந்தம் : கலப்பை : கூட்டம் : கொழு : 
தானியக் குவியல் : கொல்லன் : சம்மட்டி : கோளக பாடாணம் : தீங்கு : புதையல் : பொய் : மலையின் உச்சி : மறைவு : 
மாயம் : யாழ்க்குற்றம் நான்கினுள் ஒன்று : யானைப்பந்தி : வஞ்சகம் : வீடு : தாழ்வாரம் : வீட்டின் கூடம்.
கூடம்பில் - சுரை.
கூடயந்திரம் - பொறி : வலை.
கூடரணம் - திரிபுரம்.
கூடலர் - பகைவர் : கூடார்.


கூடலித்தல் - வளைதல்.
கூடலிழைத்தல் - கூடற்சுழி வரைதல்.
கூடல் - அடுத்தல் : இயலல் : ஒரு விளையாட்டு : கழிமுகம் : கூடுதல் : சேர்தல் : புணர்தல் : மதுரை : மரம் முதலியவற்றின்
செறிவு : முகம் : பொருத்துகை.
கூடல்வளைத்தல் - மகளிர் விளையாட்டில் ஒன்று.
கூடற்குறி - தலைமகன் பிரிந்துழித் தலைவி பார்க்குங் குறி.


கூடற்கோ - பாண்டியன்.
கூடற்பற்றை - காடு : வனம்.
கூடஸ்தன் - பரப்பிரமம் : குலத்தின் மூலபுருடன்.
கூடனாயகன் - மதுரையில் எழுந்தருளிய கடவுள்.
கூடாகாரம் - மேல்வீடு : நிலவறை : கூடல்.


கூடாக்கு - புகையிலை.
கூடாங்கம் - ஆமை.
கூடாதது - இயலாதது : தகாதது : பொருந்தாதது.
கூடாமை - இயலாமை : பொருந்தாமை.
கூடாநட்பு - புறநட்பு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:35 pm

கூடாமையணி - ஓர் அலங்காரம்.
கூடாரம் - படாம்வீடு : பெருங்காயம் : படக்கிருகம் : வண்டிக்கூடு.
கூடார் - பகைவர்.
கூடாவொழுக்கம் - கள்ளவேடம் : தகாவொழுக்கம்.
கூடிலி - காமன்.


கூடு - அடைப்பு : உடம்பு : உறை : சிமிழ் : நெற்கூடு : மைக்கூடு : கூடென்னேவல்.
கூடுகொம்பன் - கொம்புமுனைப் பாகம் தம்முட் கூடிய மாடு.
கூடுதல் - இயலுதல் : சேருதல் : திரளுதல் : நேரிடுதல் : இணங்குதல் : சினேகித்தல் : அடைதல்.
கூடுவிட்டுக் கூடுபாய்தல் - ஓர் உடம்பை விட்டு மற்றோர் உடம்பிற் புகுதல்.
கூடுவிடுதல் - இறத்தல் : எலும்பு தோன்ற இளைத்தல்.


கூடுவிழுதல் - சாதல் : நோயின் ஆணிவேர் கழலுதல்.
கூடை - கூத்தின் விகற்பம் : கோரியை : பூக்கூடை முதலியன.
கூடைப்பாடல் - சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது : இயக்கம் நான்கினுள் ஒன்று.
கூடையன் - உடல் பருத்தவன்.
கூட்டடி - உப்புக் குவியற்களம்.


கூட்டநாட்டம் - பொதுமக்கள் கூடும் நிலைமை.
கூட்டம் - இனம் : சங்கம் : நட்பு : திரள் : தொகுதி : பிண்ணாக்கு : புணர்ச்சி : போர் : மிகுதி : மலையுச்சி.
கூட்டரவு - கூட்டம் : சேர்க்கை : கூடுகை : சகவாசம்.
கூட்டல் - அதிகப்படுத்தல் : சேர்த்தல்.
கூட்டாஞ்சோறு - கறிபதார்த்தங்கள் சேர்த்துப் பொங்கிய சோறு.


கூட்டாமை - காய் சேர்க்காமை.
கூட்டாளி - கூடி நடக்கிறவன் : பங்காளி : தோழன் : உடன் ஒத்தவன்.
கூட்டிவைத்தல் - வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல்.
கூட்டு - கொள்ளை : உறவு : கலப்பு : கறிக்கூட்டு : தொடர்பு : சேர்மானம் : நட்பு : துணை : திரள் : துகிலாகிய
அரைஞாண் : கூட்டென்னேவல்.
கூட்டுக்கால் - பாய்ந்தோடுகை.


கூட்டுணும் - கவரும்.
கூட்டுண்ணுதல் - கூடி உண்ணுதல் : முற்றும் அனுபவித்தல் : திறைகொள்ளுதல் : கலவி செய்தல்.
கூட்டுமா - கறியிர் சேர்க்கும் மா.
கூட்டுமூட்டு - பலருங் கூடுகை : பழிப்புரை.
கூட்டுறவு - இணைந்த உறவு : நெருங்கிய தொடர்பு : நட்பு.


கூட்டுறவுச் சங்கம் - ஐக்கிய நாணயச் சங்கம்.
கூட்டை - ஒருவகைக் கூத்து.
கூட்டோடு - அடியோடு.
கூணிகை - வீணையின் ஓர் உறுப்பு.
கூண்டடுப்பு - அனலடுப்பு.


கூதம் - குதம் : அபானம்.
கூதல் - குளிர் : ஊதை : காய்ச்சற்குளிர்.
கூதளம் - கூதாளிச் செடி : தூதுளை : வெள்ளரி.
கூதறை - இழிந்தது : கிழியல் : கூடற்றது : முறைமையற்றோன் : இழிந்த குணமுடையவள்.
கூதனம் - இடக்கர்ச் சொல்.


கூதாளம், கூதாளி - கூதாளம் : தூதுளை : கூதுளம் : ஒரு செடி வகை : வெள்ளரி.
கூதிர் - ஐப்பசி கார்த்திகையின் பருவம் : காற்று : கூதல் : பனிக்காற்று : பின்கார்ப்பருவம் : குளிர்.
கூதிர்காலம் - குளிர்காலம் : சரற்காலம் : பனிக்காலம்.
கூதிர்ப்பாசறை - போர்மேற் சென்ற அரசன் கூதிர்க் காலத்தில் தங்கும் படைவீடு.
கூதை - காற்று : குளிர்காற்று.


கூதை செய்தல் - காதை மூளி செய்தல்.
கூத்தச்சாக்கையன் - கூத்து நிகழ்த்தும் சாக்கைய குலத்தான் : ஒரு நாடகச் சாதியான்.
கூத்தப்பள்ளி - அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு.
கூத்தாற்றுப்படை - தலைவனைக் கண்டு மீண்ட இரவலன் கூத்தாடு நரை வழியிற் செலுத்துவது : மலை படுகடாம்.
கூத்தரிசிக்காரி - அரிசி குத்தி விற்பவள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:35 pm

கூத்தர் - நாடகர்.
கூத்தன் - உயிர் : கடவுள் : சிவன் : துரிசு : நாடகன் : சீவான்மா : ஒட்டக் கூத்தன் : நடன் : கூத்தாடி : கழைக்கூத்தன்.
கூத்தாட்டு - நடிப்பு.
கூத்தாடுதல் - நடனம் பண்ணுதல் : பெருமை காட்டுதல் : செழித்திருத்தல்.
கூத்தி - நாடகக்கணிகை : வேசை : வைப்பாட்டி.


கூத்து - நடனம் : நாடகம் : அதிசயம் : கேலி.
கூத்துகந்தோன் - சிவன்.
கூத்தக்களரி - நடனசாலை.
கூத்துள்படுவோன் - ஆடல் ஆசிரியன்.
கூந்தல் - கமுகோலை : குதிரை மயிர் : கூந்தற்கமுகு : கூந்தற்பனை : கூந்தல் தெங்கு : பனையோலை : பெண்ணின்
தலை மயிர் : மயிர் : மயிற்றோகை : யானைக் கழுத்தடி மயிர்.


கூந்தற்கிழவர் - கணவர்.
கூந்தற்கோடு - மயிர்முடி.
கூந்தன்மா - குதிரை.
கூந்தாலம், கூந்தாலி - குந்தாலி : கடப்பாரை.
கூந்தலாற்றுதல் - ஈர மயிரைக் கோதி உலர்த்துதல்.


கூபகம் - எண்ணெய்த் துருத்தி : கிணறு : பாடை : பாய்மரம் : இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடம்.
கூபம் - கிணறு.
கூபரம் - முழங்கை : அச்சு.
கூபரி - தேர்.
கூபாரம் - கடல்.


கூபிகை - நீரிடைப்பட்ட மலை முதலியன.
கூப்பரம் - முழங்கை.
கூப்பல் - கூப்புதல்.
கூப்பாடு - கூப்பீடு : முறையீடு.
கூப்பிடல் - அழைத்தல் : வரவழைத்தல் : கத்தல்.


கூப்பிடுதூரம் - குரோசம்.
கூப்பீடு - குரோசம் : கூப்பிடல் : கூப்பிடு தூரம்.
கூப்புதல் - குவியச் செய்தல் : சுருக்குதல் : கைகுவித்தல்.
கூமரை - கோங்குமரம் : காட்டிலவு.
கூமா - ஒரு மரம்.


கூமுட்டாள் - பெருமூடன்.
கூம்ப - மனவெழுச்சி குறைய.
கூம்பல் - ஒடுங்கல் : குமிழ்மரம் : குவிதல் : ஊக்கங்குறைதல்.
கூம்பு - கூம்பென்னேவல் : சேறு : தேர்க்கொடிஞ்சி : பாய்மரம் : பூவரும்பு : தேர்மொட்டு.
கூம்புவிடல் - தளையவிழ்தல்.


கூர - குளிர்ச்சி மிக.
கூரணம் - அலுவல் : கொடுமை : கோடகசாலை : பாகல் : பொறாமை.
கூரம் - கொடுமை : கோடகசாலை : பாகல் : பொறாமை : முயற்சி : யாழ் : ஓர் ஊர்.
கூரல் - ஒரு மீன் : புள்ளிறகு : பெண்மயிர்.
கூரன் - கூர்நெல் : நாய்.


கூராம்பிளாச்சு - மண்கொத்தும் மரக்கருவி.
கூரியது - கூர்மையுள்ளது.
கூரியன் - கூர்மையுள்ளவன் : புதன்.
கூரிலவணம் - அமரி உப்பு.
கூரை - சிற்றில் : வீட்டின் மேற் கூரை.


கூரைதட்டல் - ஆண்பிள்ளைப் பிறப்புக்குச் செய்யுமொரு மகிழ்ச்சிக் குறி.
கூரைவீடு - ஓலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு.
கூர் - இலையின் நரம்பு : காரம் : கூர்மை : நுனி : மிகுதி : கூரென்னேவல் : கதவுக்குடுமி : குத்துப்பாடான பேச்சு : 
குயவன் சக்கர உறுப்பு.
கூர்க்கதிர் - ஒரு கருவி.
கூர்க்கறுப்பன் - ஒருவகை உயர்ந்த நெல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:36 pm

கூர்ங்கண் - ஊடுருவிப் பார்க்குங் கண்.
கூர்ங்கோடு - கூரிய கொம்பு.
கூர்ச்சம் - எத்து : தருப்பை : தலை : தாடி : புருவமத்தி : மாய்மாலம் : வயிரிப்பு : வீண் புகழ்ச்சி.
கூர்ச்சரம் - நாடு ஐம்பத்தாறுள் ஒன்று.
கூர்ச்சிகை - ஊசி : எழுதுகோல் : பூவரும்பு.


கூர்தல் - ஆராய்தல் : கூருதல் : நுணுகுதல் : மிகுதல் : விரும்புதல் : வளைதல் : ஒடுங்குதல்.
கூர்த்தம் - விளையாட்டு.
கூர்த்தல் - உவர்த்தல் : மிகுத்தல் : கூர்மையாதல் : அறிவு : நுட்பமாதல் : சினத்தல்.
கூர்த்திகை - மட்டிப் படைக்கலம் : ஆயுதப்பொது.
கூர்ந்தபஞ்சமம் - மருதயாழ்த்திறவகை.


கூர்ந்தபுத்தி - நுண்ணுணர்வு.
கூர்ப்பது - உள்ளது சிறத்தல் : உறைப்பு : கூர்மை : மிகுதி.
கூர்ப்பு - உள்ளது சிறத்தல் : கூர்மை : அறிவு நுட்பம் : உவர்ப்பு.
கூர்மம் - ஆமை : திருமால் அவதாரத்துள் ஒன்று : ஒரு புராணம்.
கூர்மன் - தசவாயுக்களுள் ஒன்று.


கூர்முள் - குதிரை செலுத்துங் கருவி.
கூர்மை - அறிவு : கல்லுப்பு : கூர்நுண்மை : நுனி : சிறப்பு : வெடியுப்பு.
கூர்வாங்குதல் - கருவியைக் கூர்மையாக்குதல்.
கூலகம் - கறையான் புற்று : குவியல்.
கூலபிந்து - எட்டி.


கூலம் - அதிட்டம் : ஆற்றங்கரை : கடற்கரை : கடைத்தெரு : கரை : காராமணி : குவியல் : சிறுவரம்பு : நீர்நிலை : 
பசு : படையணி : பலபண்டம் : பாகல் : மந்தி : மரை : முசு : விலங்கின் வால் : நெல் முதலிய பதினெண்வகைப் பண்டம்.
கூலவதி - யாறு.
கூலி - ஊதியம்.
கூவநூல் - நீர் நிலையறி நூல்.
கூவம் - கிணறு : கூகைநீறு : ஓர் ஊர் : ஓர் யாறு.


கூவரம் - ஏர்க்கால்.
கூவரன் - கூனன்.
கூவரி - பண்டி.
கூவலம் - பல நிறமுள்ள ஆம்பற்பூ.
கூவலர் - அழைத்தல் : கிணறு : பள்ளம் : கொல்லுதல்.


கூவியர் - மடையர் : உணவு சமைப்போர் : அப்பவாணிகர்.
கூவிரம் - தேரிக்கிடயம் : தேர் : தேர்க் கொடிஞ்சி : வில்வமரம் : தேரின் தலையலங்காரம்.
கூவிரி - தேர்.
கூவிளங்காய் - நேர்நிரைநேர் குறிக்கும் வாய்ப்பாடு.
கூவிளம் - வில்வம்.


கூவிளி - அழைப்பு : கூப்பிடு தூரம்.
கூவிளித்தல் - சாப்பிடல்.
கூவுதல் - அழைத்தல் : சேவல் முதலியன கூவுதல் : பறவை கூவுதல் : சத்தமிடுதல்.
கூவுவான் - சேவல்.
கூவை - கூகை : ஒரு கிழங்கு : கூட்டம் : செடிவகை.


கூழங்கை - குறட்கை : குறைந்தகை : முடமான கை.
கூழம் - எள்ளு : திலம் : திலகம் : கூழகம்.
கூழன் - தெளிந்த அறிவிலான் : பலாவகை.
கூழா - நறுவிலி மரம் : அலிமரம்.
கூழாங்கல் - வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல்.


கூழுக்குப் பாடி - அங்கிடுதத்தி : ஔவை.
கூழை - இறகு : கடையின்மை : கவியுறுப்புள் ஒன்று : சேறு : நடுநீளங் குறைந்தது : படை வகுப்பு : பாம்பு :
பிற்படை : பெண்டிர் தலைமயிர் : பொன் : மந்தம் : மயிற்றோகை : குட்டையானது : கூழத்தொடை.
கூழைக்கடா - ஒரு கொக்கு : வாலில்லா எருமை : நீர்வாழ் வகை.
கூழைக்கும்பிடு - போலி வணக்கம்.
கூழைக்குறும்பு - பிறர் அறியாமற் செய்யுந் தீமையான செய்கை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:36 pm

கூழைத்தனம் - போலிக் குழைவு.
கூழைத்தொடை - செய்யுளின் ஓர் உறுப்பு.
கூழைப்பார்வை - வஞ்சகப் பார்வை.
கூழைமுட்டை - அழுகின முட்டை.
கூழைமுரண் - கடைச்சீரொழிந்த மற்றெல்லாச் சீர்க்கண்ணும் முரண்வரத் தொடுப்பது.


கூழைமை - குழைந்து நடக்கை : கடமை.
கூழையன் - குள்ளன் : முழுமடையன்.
கூழ் - உணவு : சோறு : நறுவிலி : பயிர் : பொன் : மா.
கூழ்த்தல் - ஐயமுறல்.
கூழ்படுதல் - கலக்கமுண்டாதல்.


கூழ்ப்பு - ஐயப்பாடு : சந்தேகம்.
கூழ்வடகம், கூழ்வடாம் - அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வடக வற்றல்.
கூழ்வரகு - கேழ்வரகு.
கூளம் - குப்பை : கஞ்சல் : திப்பிலி : சண்டு.
கூளன் - பயனற்றவன்.


கூளி - உறவு : எருது : குறள் : குற்றம் : சுற்றம் : தொகுதி : பூதம் : பெருங்கழுகு : பேய் : பொலியெருது : 
வலிமை : கூட்டம் : கற்பில்லாதவள்.
கூளியர் - படைவீரர் : வேடர் : வழிப்பறி செய்வோர் : ஏவலாளர்.
கூளுதல் - திரளுதல்.
கூறிட்டு மொழிதல் - வினாக்களுக்கு ஏற்படுத்திக் கூறும் விடை.
கூறிய - கூறுபடுத்த.


கூறியதுகூறல் - நூற்குற்றம் பத்தனுள் ஒன்று.
கூறிலான் - அறிவில்லாதவன் : பேதை.
கூறு - அறிவிக்கை : எள்ளு : காரணம் : கூறென்னேவல் : பங்கு : தன்மை : பிரிவு : பாதி : வகை : கூறுபாடு : 
பிளவுபட்ட துண்டு.
கூறுகொள்ளுதல் - அமர்த்துதல்.
கூறுச்சீட்டு - பாகபத்திரம்.


கூறுதல் - சொல்லுதல் : விளக்கிச் சொல்லுதல் : விற்றல்.
கூறுபாடு - கூறு : பாகுபாடு : பகுதி : தன்மை : வகை.
கூறை - சீலை : புத்தாடை : மணவாட்டியுடுக்கும் புதுப் புடைவை.
கூறைகோட்படுதல் - ஆடையைப் பறிகொடுத்தல்.
கூறைப்பாய் - தோணிப்பாய்.


கூற்றம் - பகுதி : கொடும்பகை : சொல் : நமன் : நாட்டின் பகுதி : அழிவுண்டாக்குவது.
கூற்றன் - நமன் : இயமன்.
கூற்று - காலன் : சொல் : நமன்.
கூற்றுவைத்தோன் - சிவன்.
கூற்றுவன் - நமன் : கொடிய பகைவன்.


கூனலங்காய் - புளியங்காய்.
கூனல் - கோணல் : சங்கு : நத்தை.
கூனன் - ஆமை : கூனுள்ளோன் : சங்கு : நத்தை.
கூனனன்முதுகு - ஆமையோடு.
கூனி - குசினி : கூனுள்ளோன் : கோணியது : சிற்றால் : மந்தரை : வசவி : பங்குனி : கொலை.


கூனிக்குயம், கூனிரும்பு - அரிவாள்.
கூனுதல் - ஒடுங்குதல் : வளைதல்.
கூனை - கருப்பஞ்சாறடு கூன் : கொடிப்படை : வேள்விக்குண்டம் : மிடா : நீர்ச்சால் : நல்ல பாம்பு.
கூன் - ஆந்தை : உறுப்புக்குறை எட்டனுளொன்று : கூனன் : கூனென்னேவல் : நத்தை : வளைவு : வெண்பா முதலிய
செய்யுள்களின் முதலடியின் ஒரோவிடத்துப் பொருள்படத் தனித்து நிற்பது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 01, 2013 12:37 pm

தமிழ் அகராதி -கெ- தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:10 pm

கெக்கட்டம் - அட்டகாசம் : மிக நகைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:11 pm

கெக்கரித்தல் - கொக்கரித்தல் : இனித்தல்.
கெக்கலி - மகிழ்வு : குலுங்கிச் சிரிக்கை.
கெக்கலித்தல் - மகிழ்தல்.
கெக்களித்தல் - தோல்வி காட்டல் : நெளிதல் : வளைதல் : துருத்துதல்.
கெசகன்னி - வெருகு.


கெசமாமுட்டி - எட்டி.
கெசம் - இரண்டுமுழ அளவு : யானை.
கெச்சங்கெட்டவன் - நாணமில்லாதவன்.
கெச்சம், கெச்சை - சிறுசதங்கை : முல்லை.
கெச்சிதம் - கெற்சிதம் : முழக்கம் : கெம்பீரம் : சவுக்கியமடைந்து வருகை.


கெச்சைநடை - பெருமிதநடை.
கெஞ்சுதல் - மன்றாடுதல் : இரந்து பலமுறை வேண்டுதல்.
கெடலணங்கு - மூதேவி.
கெடலூழ் - தீவினை : முன் செய்த கொடுவினை.
கெடவரல் - மகளிர் விளையாட்டு : மகளிர் கூட்டம்.


கெடி - அதிபத்தியம் : ஊர் : கீர்த்தி : துருக்கம் : அச்சம் : கெடியென்னேவல்.
கெடித்தல் - அஞ்சல் : பயப்படுதல் : நாணுதல்.
கெடிமாடு - நீண்ட பிரயாணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது.
கெடிலம் - ஆழமான ஓடை : ஒடுங்கிய வழி : குகை : ஓர் ஆறு : கெபி.
கெடிறு - கெளிற்று மீன்.


கெடு - கெடுவென்னேவல் : கேடு : தவணை : தறுவாய் : வறுமை.
கெடுகுறி - கேட்டிற்கு அறிகுறி.
கெடுதலை - அழிவு : இழிவு : கேடு.
கெடுதல் - சாதல் : சாய்தல் : பதனழிதல் : பழுதாதல்.
கெடுதல் விகாரம் - எழுத்துக் கெடும் மாறுபாடு.


கெடுதி - அழிவு : இடர் : கெட்டுப்போன பொருள் : கேடு : நட்டம்.
கெடுத்தல் - அழித்தல் : கெடச்செய்தல் : பழுதாக்குதல் : கைதவற விடுதல் : அவமாக்குதல் : காரியத்தடை செய்தல் : 
நீக்குதல் : நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல் : காணாமற் போக்குதல்.
கெடுப்பினை - வங்கமணல்.
கெடுமதி - அழிதற்காம் அறிவு.
கெடும்பு - அருந்தல் : கெடுதலை.


கெடுவல் - கெடுவேன்.
கெடை - மூங்கில்.
கெட்டதனம் - கெட்ட நடத்தை : தீயொழுக்கம்.
கெட்டி - உச்சிதம் : உலோப குணம் : உறுதி : நேர்த்தி : அழுத்தம் : ஆற்றல் : சாமர்த்தியம்.
கெட்டிபண்ணுதல் - பலப்படுத்தல்.


கெண்டம் - கண்டம்.
கெண்டல் - கிண்டல் : கிளைத்தல் : கொல்லுதல் : தின்னல்.
கெண்டன் - மிண்டன் : தடியன் : முரடன்.
கெண்டி - அறுத்துத் தின்று : கெண்டிகை : கெண்டியென்னேவல் : தறித்தல் : தறிவாய்.
கெண்டிகை - கமண்டலம்.


கெண்டிச் செம்பு - மூக்குள்ள செம்புவகை.
கெண்டுதல் - தோண்டுதல் : கிண்டுதல் : அறுத்துத் தின்னுதல்.
கெண்டை - கயல் : சரிகைத் தலைப்பு : சேல் : முழந்தாளின் கீழ்க் கால் : கண்டை : கணைக்கால் : 
புயத்தின் முன்பக்கத்துச் சதை.
கெதாயு - ஆயுள் முடிந்தவன்.
கெத்து - தந்திரம்.


கெத்துதல் - கண்டம் போடுதல் : கீறிப் பிளத்தல் : ஏமாற்றுதல்.
கெந்தகற்பம் - வில்வம்.
கெந்தகம் - கந்தகம் : கேரகண்ட பாஷாணம் : நாய்வேளை.
கெந்தி - கந்தகம் : பொன்னிமிளை.
கெந்திகம் - பாம்பு கொல்லி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:11 pm

கெந்தித்தல், கெந்துதல் - தத்துதல் : நெளிதல்.
கெபி - குகை : குழி : வளை.
கெப்பிதம் - நிந்தை.
கெமித்தல் - போதல் : புணர்தல்.
கெம்பத்து - இடம்பம்.


கெம்பரை - கூடை : நெற்கூடை.
கெம்பல் - ஆரவாரம் : எழும்பல்.
கெம்பளித்தல் - மகிழ்தல்.
கெம்பீரம் - ஆழம் : பரிமளிப்பு : மேன்மை : வீரம்.
கெம்பு - ஓர் இரத்தினக் கல் : கெம்பென்னேவல்.


கெம்புதல் - கிளர்தல் : கொந்தளித்தல்.
கெரடி - சிலம்பம்.
கெருமத்தம் - பறவை.
கெருவிதன் - கருவமுடையவன்.
கெலி - ஆசை : கெலியென்னேவல் : அச்சம் : பெருவயிறு.


கெலித்தல் - அஞ்சுதல் : ஆசைப்படல் : வெல்லல்.
கெலிப்பு - அச்சம் : ஆசை : வெற்றி : மகிழ்ச்சி.
கெல்லல் - கல்லல்.
கெல்லுதல் - கிண்டல் : தோண்டல் : வயிற்றை அரிந்துவிடுதல்.
கெவுரி சங்கம் - இரட்டை உத்திராக்கம்.


கெவுளி - சிவந்த சங்கு : சிவந்த முகிழுள்ள தேங்காய் : பல்லி.
கெவுனி - கோட்டை வாயில்.
கெழி - நட்பு.
கெழீஇய - பொருந்தின.
கெழு - இடைச் சொல் : நிறம் : பொருந்திய : சாரியை.


கெழுதகை, கெழுதகைமை - உரிமை.
கெழுதல் - கெழுமுதல்.
கெழுமல் - அமைதல் : கற்றல் : நிறைதல் : முதிர்தல் : முளைத்தல் : பொருந்துதல் : காம விகாரங்
கொள்ளுதல் : கிட்டுதல்.
கெழுமி - பொருந்தி.
கெழுமை - கெழுமுதல் : ஒளி.


கெழுவல் - நிறைதல் : பெற்றுக் கொள்ளுதல் : பொருந்துதல்.
கெழுவு - நட்பு.
கெளிதம் - பெருங்கல்.
கெளித்தி, கெளிறு - ஒருவகை மீன்.
கெறுவி - ஆணவம் உடையவன்.


கெற்சிதம் - முழக்கம்.
கெற்பகக்குவளை - கருப்பை.
கெற்பம் - கருப்பம்.
கெற்பிணி - கருப்பந்தரித்தவள்.
கெற்போட்டம் - மார்கழித் திங்களில் அவ்வத்திங்களைப் பற்றி முகிலோடுதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:12 pm

கெக்களம் _  அதிகச் சிரிப்பு.
கெச்சக்காய் _  கழற்சிக்காய்.
கெச்சை _ காற் சதங்கை.
கெச்சை மிதி _  கூத்தின் விரைந்த நடை : குதிரை நடை : பெருமித நடை.
கெடு காலம் _  அழிவு காலம் : தவணை நாள்.


கெடு நினைவு _ தீய புத்தி.
கெடு படுதல் _ விபத்தடைதல்.
கெடு பிடி _ தடபுடல் : விரைவு.
கெடு வாய் _ ஓர் இகழ் மொழி.
கெடுவு _ தவணை.


கெட்ட _ தீய.
கெட்டம் _  தாடி.
கெட்டலைதல் _ நிலை கெட்டுத் திரிதல்.
கெட்டவன் _  தீயவன்.
கெட்ட வேளை _ பொல்லாத காலம் : தீய நேரம்.



கெட்டிக்காப்பு _ கையில் அணியும் அணிவகை.
கெட்டிக்காரன் _ திறமையுடையவன்.
கெட்டிக் கொலுசு _ அணி வகை.
கெட்டிச் சாயம் _ அழுத்தமான சாயம்.
கெட்டித்தல் _  உறுதிப்படுத்துதல்.


கெட்டித்தனம் _  திறமை : செட்டு.
கெட்டி மூங்கில் _  கல் மூங்கில்.
கெட்டி மேளம் _ திருமண காலத்தில் முழங்கும் அனைத்து வாத்திய ஒலி.
கெட்டு _ பக்கக் கிளை.
கெட்டுப் போதல் _ அழிதல் : அழுகிப் போதல் : ஒழுக்கங் கெடுதல் : வறுமையுறுதல் : காணாமற் போதல்.



கெட்டு விடுதல் _  அழிதல் : அழுகிப் போதல்.
கெட்டேன் _ இரக்கக் குறிப்பு.
கெணனை _ எண்ணிக்கை.
கெண்டைக்கால் _ கணைக்கால்.
கெண்டை புரட்டுதல் _  பசி,தாகம் முதலியவற்றால் கை கால்கள் வலித்திழுத்தல்.


கெதி _ கதி : புகலிடம்.
கெந்தசாலி _  ஒரு வகை உயர்ந்த செந் நெல் : கந்த சாலி.
கெந்த பொடி _ ஒரு வகை மணப் பொடி.
கெந்தம் _ கந்தம் : மணம்.
கெந்தி பரம் _ ஆடு தின்னாப் பாளைச் செடி.


கெந்தி வாருணி _ பேய்த் தும்மட்டிக் கொடி.
கெந்து _  ஒரு வகைப் பிள்ளை விளையாட்டு : கிட்டிப் புள் விளையாட்டு.
கெம்பளிப்பு _ மகிழ்ச்சி.
கெம்பு நீலம் _ உயர்ந்த நீலம்.
கெம்பு மல்லிகை _  மயிர் மாணிக்கம்.



கெலுழன் _ கருடன்.
கெவரி _ வெள்ளைக் காக்கணங் கொடி.
கெவியூதி _ நாலரைக்கல் தொலைவு.
கெவுரா _  துளசிச் செடி.
கெழீ இ யிலி _ பகைவன்.


கெழுமுதல் _ நிறைதல் : முதிர்தல் : முளைத்தல் : கற்றல் : காமவிகாரம் கொள்ளுதல் : கூடுதல் பொருந்துதல்.
கெழுவுதல் _ பொருந்துதல் : நிறைதல் : பற்றுக் கொள்ளுதல்.
கெளித்தல் _  நெளிந்து போதல்.
கெளிர்ச் சல்லியம் _ மீன் எலும்பு.
கெளிறு _ மீன் வகை.


கெற்சி _ சிறு வழுதலை.
கெற்பு _ கிற்பு : திராணி : வலிமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:13 pm

கே -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:13 pm

கேகம் - மயிற்குரல் : வீடு : கேகை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:14 pm

கேகயப்புள் - அசுணமா : கிஞ்சுகம் : மயில்.
கேகயம் - கெவுரிபாடாணம் : கேகயப்புள் : நாடுகள் ஐம்பத்தாறுள் ஒன்று : மயில் : பண்வகை.
கேகயன் - கைகேயன் : கேகய நாட்டு அரசன் : கைகேயி தந்தை : சிபிச் சக்ரவர்த்தி.
கேகயி - தசரதன் மனைவி.
கேகரம் - கடைக்கண் பார்வை.


கேகரன் - ஓரக் கண்ணன்.
கேகாபலம், கேகி - மயில்.
கேசகன் - நாவிதன்.
கேசகீடம் - பேன்.
கேசபந்தி - மயிர் ஒழுங்கு.


கேசமுட்டி - வேம்பு.
கேசம் - குதிரை மயிர் : துவக்கம் : மயிர்ப்பொது : மக்கள் தலைமயிர் : விலங்கின் மயிர் : புறமயிர்.
கேசரஞ்சனம் - பொற்றலைக் கையாந்தகரை.
கேசரம் - அப்பிரகம் : சிங்கம் : பூங்கூந்தல் : பூந்தாது : பெருங்காயம் : மகிழமரம் : மயிர் : வண்டு : குங்குமப் பூ : 
விண்ணில் இயங்கல் : குங்குமம் : சிங்கம், குதிரை இவற்றின் பிடரி மயிர் : புன்னை : பெருங்குறிஞ்சி : பொன் மாதுளை. 
கேசரர் - வித்தியாதரர்.


கேசரவரம் - குங்குமம்.
கேசரி - அங்கயோகாதனத் தொன்று : குதிரை : சிங்கம் : பெருங்காயம் : கேசரியாசனம் : கொம்மட்டி : மாதுளை : 
விண்ணில் இயங்குவோன் : ஒரு சிற்றுண்டி.
கேசரிகம் - நாயுருவி.
கேசரை - பருத்திச் செடி.
கேசவம் - நறுமணம் : நிறைமயிர் : பெண்வண்டு : பைசாசம் :  வண்டு : ஓர் அறநூல்.


கேசவன் - சோழன் : நிறைமயிருள்ளோன் : திருமால் : சிவன் : நல்ல மயிருள்ளோன்.
கேசவேசம் - கொண்டை.
கேசன் - ஓர் அசுரன் : கேசமுடையவன் : தண்ணீரில் இருப்பவன் : வருணன் : திருமால்.
கேசாதிபாத மாலை - நூல்வகையுள் ஒன்று.
கேசாதிபாதம் - முடிமுதல் அடிவரை.


கேசாரி - குதிரைக் கழுத்தின் மயிர் : ஓர் அசுரன் : திருமால் : சிங்கம் : அழகிய மயிர்முடியுடையவர்.
கேசி - நல்ல தலைமயிர் உள்ளவள் :  அவுரிச் செடி : ஒரு செடிவகை.
கேசிகன், கேசிகை - திருமால்.
கேடகம் - ஒரு யாறு : ஒருவகை ஊர்தி : பரிசை : பாசறை : புறாமுட்டி : மலைகளையடுத்துள்ள ஊர் : ஒரு விமானம் : 
கேடம் : பலகை : மரவட்டம் : கடகம் : கிடுகு : தட்டு : வட்டணம் : வட்டம் : வேதிகை.
கேடம் - மலைகள் அடுத்துள்ள ஊர் : கிளியாறு : சிற்றூர்.


கேடயம் - பரிசை : கேடகம்.
கேடன் - கேடுடையவன் : அழிப்பவன்.
கேடிலி - அழிவற்றது.
கேடிலுவகை - வீடுபேறு.
கேடு - அந்தக்கேடு : அழிவு : குறைவு : கெடுதல் : சிதைவு : பொல்லாங்கு : வறுமை : தீமை : இறப்பு : விகாரம் : 
அழகின்மை : நட்டம் : நீக்கம் : கெடுதி : ஆனி : இழிவு : இழுக்கு : ஏதம் : கயம் : சேதம் : பாடு : மடி : மிகை : வழுவு.


கேடுபாடு - அழிவு : துன்பம் : நட்டம்.
கேட்கிய - கேட்க : கேட்கும் பொருட்டு.
கேட்குதல் - ஆராய்தல் : கேட்டல் : வினாவல்.
கேட்கை - கேள்வி.
கேட்கோ - கேட்பேனோ.


கேட்டல் - இரத்தல் : செவிகொடுத்தல் : வினாவல் : வேண்டுதல் : செய்தல் : உட்கோடல் : செவியாற் கேட்குதல்.
கேட்டி - மிலாறு : கேட்டித்தடி : ஓர் ஏவல்வினை : கேட்டிக் கம்பு.
கேட்டிகும் - கேட்டோம்.
கேட்டிசின் - கேட்பாயாக.
கேட்டித்தடி - தாற்றுக்கோல் : கேட்டிக் கம்பு.


கேட்டீக - கேட்டிடுக.
கேட்டுமுட்டு - கேட்டதனால் சைனர் மேற்கொள்ளும் தீட்டு.
கேட்டை - பதினெட்டாவது நாள் : மீன் : மூதேவி.
கேட்டைநாள் - இந்திர நாள் : எரி : செந்தழல் : கேட்டை : வினவுகை : கடா.
கேணம் - செழிப்பு : நிறைவு : பெருக்கு : மிகுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:14 pm

கேணி - அகழி : கிணறு : துரவு : சிறு குளம் : தடாகம்.
கேண்மை - உறவு : கண்ணோட்டம் : நட்பு : வழக்கு : அன்பு : உரிமை.
கேண்மோ - கேளும்.
கேதகம் - தாழை.
கேதகாரியம் - இழவு : சாச்சடங்கு.


கேதகி, கேதகை - தாழை : கேதகம்.
கேதறம் - இடம் : படர்கொடி : பெருங்கொடி : விருதுக் கொடி : வீடு : வேலை.
கேதம் - குற்றம் : துக்கம் : துன்பம் : வீடு : இளைப்பு : கிலேசம்.
கேதல் - அழைத்தல் : அழைக்கை.
கேதனம் - இடம் : படர்கொடி : அடையாளம் : பெருங்கொடி : விருதுக்கொடி : வீடு : வேலை : துகிர்க்கொடி.


கேதாரம் - இமயமலையில் உள்ள ஒரு சிவப்பதி : ஒரு நகரம் : மயில் : மலை : விளைநிலம் : ஓர் இராகம் : ஒரு பண்.
கேதாரன் - சிவன்.
கேதாரி - குதிரைப் பிடரி.
கேதாளி - குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று.
கேது - அடையாளம் : ஒரு கோள் : நோய் : விருதுக்கொடி : வெளிச்சம் : கதிர்ப்பகை : சிகி : செம்பாம்பு : 
மதிப்பகை : மதியுணி : ஒன்பது கிரகங்களுள் ஒன்று : கொடி : சுடர் : ஒளி : விளைநிலம் : தூமகேது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:14 pm

கேதுதல் - அழைத்தல் : கதறியழைத்தல்.
கேதுபம் - முகில்.
கேதுமாலம் - நவகண்டத்தொன்று.
கேதுரு - ஒரு வாசனை [ நை ] மரம்.
கேத்திரபாலன் - வயிரவன்.


கேத்திரம் - கொடித்தலம் : பூமி : விளைநிலம் : கோவில் : கோட்டம்.
கேத்திரி - திருமால் : விண்டு : நாராயணன்.
கேந்திரம் - வட்டத்தின் மத்தியம்.
கேந்துவம் - ஒரு மரம் : தவளை : வெள்ளத்தி மரம்.
கேப்பை - குரக்கன் : கேழ்வரகு.


கேயம் - அகழ் : இசைப்பாட்டு : இசைத்தற்குரியது.
கேயூரம் - தோளணி.
கேரண்டம் - காகம் : காக்கை.
கேரளம் - மலையாளம் : சேரநாடு.
கேலி - இகழ்ச்சி : நையாண்டி : விகடம் : விளையாட்டுப் பேச்சு : மகளிர் விளையாட்டு : பறவை : நிந்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:15 pm

கேலிகலை - கலைமகள் : கையிலுள்ள வீணை.
கேவணம் - மணிபதிக்குங் குழி.
கேவலக் கிழவன் - அருகக் கடவுள்.
கேவலஞானம் - முக்கால உணர்ச்சி.
கேவலதிரவியம் - மிளகு.


கேவலப்படுத்தல் - அவமதிப்புச் செய்தல்.
கேவலப் பொருள் - பரப்பிரமம்.
கேவலம் - அற்பம் : இட்டம் : இன்மை : உறுதி : ஒழுங்கு : ஓரவத்தை : தனிமை : துன்பம் : பெருக்கம் : மரணத்தறுவாய் : 
முடிவிடம் : மெலிவு : மோக்கம் : விடுதல் : இணையற்றது : தாழ்நிலை : அவமானம் : ஆணவமலம் : ஒன்றாயிருத்தல்.
கேவலவுணர்வு - பரஞானம் : முற்றுணர்வு.
கேவலாவத்தை - கீழாலவத்தை : காரணகேவலம் : சர்வசங்கார காலத்தில் ஆன்மாக்கள் சுத்தமாயா காரணத்தி லொடுங்கிச்
சிருட்டிகாலமளவும் ஆணவமலத்தால் மறைப்புண்டு கலையாதி தத்துவங்களுடன் கூடாமற் யாதொரு நினைவுமின்றியிருப்பது : 
இது கண் இருளிலே தன் ஒளி கெடாமல் விழித்திருப்பது போலுமுள்ள ஓரவத்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:15 pm

கேவல் - வள்ளிக் கொடி.
கேவேடன் - மீன் வலைஞன்.
கேழல் - பன்றி : நிறம் : குளநெல்.
கேழற்பன்றி - ஆண் பன்றி.
கேழ் - உவமை : ஒளி : நிறம் : ஒப்பு.


கேழ்த்த - நிறங்கொண்ட : மிகுந்த.
கேழ்பு - நன்மை.
கேழ்வரகு - குரக்கன் : கேப்பை.
கேளலம் - கேட்டறியேம்.
கேளலர் - பகைவர். 

கேளல்கேளிர் - பகையும் நட்புமில்லாத அயலார்.
கேளன் - தோழன்.
கேளார் - பகைவர் : செவிடர்.
கேளி - தெங்கு : மகளிர் விளையாட்டு.
கேளிக்கை - மகளிர் நடனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:16 pm

கேளிதம் - பெரும் பாறைக்கல்.
கேளியர் - கேட்க.
கேளிர் - கணவர் : நண்பர் : சுற்றம் : நாட்டார் : தோழர் : தலைவர் : உறவினர்.
கேள் - அன்பு : உறவு : கேளென்னேவல் : நட்பு : சுற்றம் : மதிப்பு : கணவன் : இனத்தார் : வினாவு : கொடுக்கச் சொல்.
கேளவன் - தலைவன் : நாயகன் : தோழன் : அன்பன் : ஐயன் : கணவன்.


கேள்வி - கல்வி : இராசத குணத்தொன்று : காது : பேச்சு : கேட்கை : வினா : நூற்பொருள் முதலியவை கேட்கை : 
இசைச் சுருதி : யாழ் : கேள்விப் பயிற்சி : கற்கை : கீழ்ப்படிவு : வழக்கு : கேட்டல் : தோணிக் கூலி : ஏலம்.
கேள்வித்தானம் - சாதகன் பிறந்த இலக்கினத்திற்கு இரண்டு அல்லது மூன்றாம் இடம்.
கேள்வு - கூலி : தோணிக் கூலி : கேவு : கேழ்வு : கப்பல் கூலி.
கேனன் - பித்துக் கொள்ளி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:17 pm

கை -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:17 pm

கை - இடம் : உடனே : ஒப்பனை : ஒழுக்கம் : ஓரெழுத்து : ஒரு விகுதி : சட்டையின்கை : காம்பு : கிரணம் :
செங்கல் முதலியவற்றை எண்ணும் ஓர் அளவு : அபிநயக்கை : கட்சி : கைமரம் : புகைவண்டிக் கைகாட்டி : 
கைப்பிடி : விசிறிக் காம்பு : படையுறுப்பு : சேனை : செய்யத்தக்கது : கைப்பொருள் : ஆற்றல் : ஆள் : 
உலக ஒழுக்கம் : ஒழுங்கு : ஒரு தமிழ் உபசருக்கம் : உடன் : காந்தட்பூ : கைத்தொழில் : கையாந்தகரை : 
திங்கள் : செய்கை : செயல் : தொனி : நரிப்பயற்றங்கொடி : பகுதி : பிடிப்பு : மரவட்டை : முறை : வரிசை : 
அத்தம் : கரம் : கைத்தலம் : சயம் : தோள் : பாணி : வழக்கம் : தங்கை : ஊட்டு : அலங்கரி : பதாகை : 
கத்தரிகை : முகுளம் : பிண்டி : தெரிநிலை : மெய்ந்நிலை : உன்னம் : சதுரம் : சங்கு : வண்டு : அஞ்சலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:18 pm

கைஇ - கோலஞ்செய்து.
கைகடத்தல் - கையை விட்டுப் போதல்.
கைகண்டது - சிந்தியுள்ளது : தேறினது.
கைகரத்தல் - ஒளித்தல்.
கைகலத்தல் - ஒன்றாய்க் கலத்தல் : பொருதல் : கூடுதல்.


கைகழிதல் - எல்லைகடத்தல்.
கைகழுவுதல் - விட்டு விடுதல் : பொறுப்பை நீக்கிக் கொள்ளுதல்.
கைகாட்டுதல் - குறிப்புக் காட்டுதல் : சைகை காட்டுதல் : அபிநயம் பிடித்தல் : சிறிது கொடுத்தல் : திறமை காட்டுதல்.
கைகாணுதல் - அநுபவித்தல்.
கைகாவல் - சமயத்திற்கு உதவுவது.


கைகுவித்தல் - கும்பிடல் : வணங்கல்.
கைகூடுதல் - சித்தியாதல் : கிட்டுதல்.
கைகூப்பல் - கை குவித்தல்.
கை கூப்புதல் - கைகூப்பி வணங்குதல்.
கைகேசி, கைகேயி - தசரதன் மனைவியருள் ஒருத்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:18 pm

கைகொடுத்தல் - உதவி செய்தல்.
கைகோத்தாடல் - குரவையாடல்.
கைகோலுதல் - முயலுதல் : தொடங்குதல் : சங்கற்பித்தல்.
கைகோள் - ஒழுக்கம் : தலைவன் தலைவியரின் களவுகற்பு ஒழுக்கங்கள்.
கைக்கடன் - கைம்மாற்றுக் கடன்.


கைக்கட்டி - கைக்கவசம் : அக்குள் புண்.
கைக்காணி - காணிக்கை.
கைக்கிளை - ஏழிசையுள் ஒன்று : ஒருதலைக் காமம் : ஒரு பிரபந்தம் : மருட்பா : யாழினொரு நரம்பு.
கைக்கிளைத்திணை - கைக்கிளையைப் பற்றிக் கூறுந்திணை.
கைக்குதவல் - சமயத்திற்குதவுதல்.


கைக்குறிப்பு - நினைவுக் குறிப்பு.
கைக்குன்று - யானை.
கைக் கூட்டன் - காவற்காரன்.
கைக்கூலி - பரிதானம் : அற்றைக் கூலி : இலஞ்சம் : கையிலே கொடுக்கும் விலைப் பொருள் : கைக்காணிக்கை.
கைக்கை - கசப்பு : வெறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 31 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum