தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:13 pm

கீழ்க்கடை _  இழிந்தது.
கீழ்க்கண் _  கீழ்ப்பார்வை : கண்ணின் கீழ்ப் பக்கம்.
கீழ்க்கணக்கு _  அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறும் நூல் வகை : கீழ் வாய் இலக்கம் : உதவிக் கணக்கன்.
கீழ்க்கதுவாய்த் தொடை _ அளவடியுள் ஈற்றயற்  சீர் ஒழிந்த ஏனைய மூன்று சீரிலும் மோனை முதலியன வரத்தொடுப்பது.
கீழ்க்காற்று _  கிழக்கிலிருந்து வீசும் காற்று.



கீழ்க்குரல் _  அடிக்குரல் மந்த வொலி.
கீழ்தல் _  கிழித்தல் : பிளத்தல் : சிதைத்தல் : தோண்டுதல் : மீறுதல் : கோடு கிழித்தல் : பறியுண்ணுதல்.
கீழ்த்திசை _  கிழக்குத்திக்கு.
கீழ்த்திசைப் பாலன் _  இந்திரன்.
கீழ்நிலை _  தாழ்ந்த நிலைமை : கீழ் மாடம் : நில வறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:13 pm

 கீழ் நோக்கம் _  கீழ்ப்பார்வை : கீழ்த்தரமானவற்றில் மனம் நாடுதல்.
கீழ்ப்பட்டவர் _  தாழ்ந்தவர்.
கீழ்ப்படிதல் _  அடங்கி நடத்தல்.
கீழ்ப்படுதல் _  இழிவு படுதல் : அடங்குதல்.
கீழ்ப்பயிர் _  பயிருக்குக் கீழ் உண்டாகும் பயிர் : புன்செய்ப்பயிர்.



கீழ்ப்பாதி _  குடிவாரம்.
கீழ்ப் பாய்ச்சி _  மூலைக்கச்சம்.
கீழ்ப்பார்வை _  வஞ்சகப் பார்வை.
கீழ்ப்பால் _  கிழக்குப் பக்கம் : கீழ்ப்புறம் : கப்பலின் சாய்வுப் பக்கம் :கிழக்கு.
கீழ்மகன் _  இழிந்தோன் : சனிக்கிரகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:14 pm

கீழ்மடை _  கடை மடை : மடை நீர் பாய்வதற்குத் தொலைவான நிலம்.
கீழ் மரம் _  அச்சுமரம்.
கீழ் மாடம் _  நிலவறை.
கீழ் முந்திரி _  கீழ் வாய் இலக்கங்களுள் ஒன்று : ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து  நானூற்றின் ஒரு பகுதி : 1/102400.
கீழ் மேலாதல் _  தலை கீழாதல் .



கீழ்மை _  இழிவு : தாழ்வு.
கீழ்வாய் _  மோவாய் : சிற்றெண் : தாடி : குய்யம்.
கீழ்வாய் நெல்லி _  கீழா நெல்லி.
கீழ்வாய்யிலக்கம் _  ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்ப்பாடு:பின்ன எண்ணின் கீழ்த் தொகை.
கீழ் விழுதல் _  செயல் முடிவதற்காகத் தாழ்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:15 pm

கீழ்வு _  கீழிடம்.
கீழ்வெட்டு _  தடுத்துப் பேசுதல் : சதி செய்து கெடுத்தல் : கிண்டல் பேச்சு.
கீளி _  கடல் மீன் வகை.
கீளுடை _  கோவணம் : இலங் கோடு.
கீள் _  கூறு :இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரை ஞான்.



கீள்தல் _  கிழித்தல் : உடைதல் .
கீறல் _ பிளவு : வரி வரைதல் : எழுதுகை : கீற்றுக் கையெழுத்து.
கீறியாற்றுதல் _  உட் கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக் கொள்ளுதல்.
கீறு _  வரி :பிளப்பு : துண்டம் : எழுத்து :தென்னை மட்டை : பனங்கிழங்கின் பாதி .
கீறுதல் _  வரி கீறுதல் : எழுதுதல் : கிறுக்குதல் : கிழித்தல் : அறுத்தல் : குறிப்பித்தல் : பறண்டுதல் : வகிர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:15 pm

கீற்பாய் _  தார் பூசிய துணி.
கீற் பிடிப்பு _  வாதப் பிடிப்பு நோய்.
கீற்றன் _  குறுக்குக் கோடுள்ள புடவை.
கீற்று _  வரி : துண்டு : கூரை வேயும் தென்னங் கீற்று : கிடுகு : வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று : மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று.
கீற்றுக்கால் _  வெடிப்புள்ள பாதம்.



கீற்று மதி _  மூன்றாம் பிறைச் சந்திரன்.
கீனம் _ இழிவு : குறைவு.
கீன்றல் _  கீறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:16 pm

கு -அகராதி தொடரும் 
நன்றி ;நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:17 pm

குகநன் -  எலி  : பாம்பு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:18 pm

கு _  நான்கனுருபு : பண்புப் பெயர் விகுதி : பூமி குற்றம் : சிறுமை : தடை : தொனி : நிந்தை : பாவம் : இன்மை : நீக்குதல் : நிறம் : இகழ்ச்சி.
குகம் _  மலைக்குகை : நுட்பம் : மறைவு : வேகமான நடையுள்ள குதிரை.
குகரம் _ சுரங்கம் : மலைக்குகை : நிலவறை : செவி : தொண்டை.
குகரர் _  சாவகத் தீவில் வாழும் ஒரு சாதியார்.
குகலிதம் _  ஒலி : குயிலின் குரல்.



குகன் _ முருகன் : குரு : இராமரிடம் நட்புக்  கொண்ட ஒரு வேடன்.
குகராணி _  உமாதேவி.
குகீலம் _ மலை.
குகு _ அமாவாசை : பத்து நாடியுள் ஒன்று : கூகையொலி.
குகுலா _ கடுகு ரோகிணி : தேனீ.



குகூகம் _ குயில்.
குகை _ மலையில் விலங்குகள் தங்குமிடம் : முனிவர் வாழிடம் : சிமிழ் : கல்லறை : உலோகங்களை உருக்கும் பாத்திரம்.
குகைக்காமன் _ கல்நார்.
குகைச்சி _ கறையான் புற்று.
குகைப்புடம் _ மூசையில் வைத்து இடும் புடம்.




குக்கர் _  மிக இழிந்தோர்.
குக்கல் _  நாய் : கக்குவான் நோய்.
குக்கன் _ நாய்.
குக்கி _  வயிறு.
குக்கில் _ செம்போத்து : குங்கிலியம்.





குக்கிலம் _  அதிவிடயப் பூண்டு .
குக்குட சர்ப்பம் _ ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் பாம்பு.
குக்குடம் _  கோழி : குக்குட சர்ப்பம் .
குக்குடாசனம் _ இரு பாதங்களையும் கீழ் வைத்துக் கோழி போல் குந்தியிருந்து யோகம் செய்யும் இருக்கை வகை.
குக்குடி _  பெட்டைக் கோழி : இலவ மரம்.




குக்குதல் _
 இருமுதல் : குந்துதல்.
குக்குரம் _ கோடகச் சாலைப் பூடு.
குக்குரி _ பெண் நாய்.
குக்குலி _ செம்போத்து.
குக்குலுவம் _ குங்கிலியம்.





குக்கூடல் _ முட்டாக்கு.
குங்கிலிகம் _ குங்கிலியம் : வாலுளுவையரிசி.
குங்கிலியம் _  ஒரு வகை மரம் : சால மரம் : ஒரு வகை வாசனைச் சரக்கு.
குங்குதல் _ குன்றுதல் : குறைதல்.
குங்குமக் காவி _ செங்காவி.



குங்குமச் சம்பா _ மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல் வகை.
குங்குமச் சோரன் _  குதிரையில் ஒரு வகை.
குங்குமப் பரணி _ குங்குமம் வைக்கும் சிமிழ்.
குங்குமப்பூ _ குங்கும மரத்தின் பூ.
குங்குமம் _ செடிவகை : மஞ்சளிலிருந்து  செய்யும் செம்பொடி : குரங்கு மஞ்சள் நாறி : செஞ்சாந்து : நெற்றியிலிடும் குங்குமப் பொடி.



குங்கும வர்ணி _  மஞ்சட் கல் : அரிதாரம்.
குங்குலு _ குங்கிலிய மரம்.
குசக்கணக்கு _ தவறான கணக்கு .
குசக்கலம் _ மட்பாண்டம்.
குசத்தனம் _ மூடத்தனம் : அறிவுக்குறைவு.




குசத்தி _ குயப்பெண் : பூவழலை: ஓடு.
குசந்தனம் _ செஞ்சந்தனம்.
குசபலம் _ மாதுளை மரம்.
குசமசக்கு _ குழப்பம் : காரியச் சிக்கல்.
குசம் _ தருப்பை : நீர்: மரம் : மார்பகம் : குயவற்குரியது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:19 pm

குசர் _ பிசிர்.
குசலக்காரன் _  வஞ்சகன் : மந்திரக்காரன்.
குசலப்புத்தி _  கூர்மையான புத்தி : தந்திரப்புத்தி .
குசலப்பிரசினம் _ நலங்கேட்டல் .
குசலம் _ திறமை : நலம் : நற்குணம் : மாட்சிமை : தந்திரம் : மாந்திரிகம்.
குசலர் _  அறிஞர் : வல்லவர்.
குசலவித்தை _  மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழிலாகிய எண்ணல்,  எழுதல் , இலை கிள்ளல் , பூத்தொடுத்தல் : யாழ் மீட்டல்,  மந்திர வித்தை என்பன.
குசலவேதனை _ இன்பவுணர்ச்சி .
குசலன் _ மிகவல்லோன் : அறிஞன் : சூழ்ச்சி மிக்கவன்.
குசலை _  தடை : சுவர்த் தலையிற் கட்டும் ஆரல்.

குசவம் _  கொய்சகம் : ஓரம் கொய்து சுருக்கப்பட்ட உடை.
குசன் _ செவ்வாய் : இராமபிரான் : புதல்வருள் ஒருவன்.
குசாக்கிர புத்தி _ மிக நுண்ணிய புத்தி : தருப்பை நுனிபோல் கூரிய அறிவு.
குசாண்டு _ சிறுமை : அற்பத் தன்மை.
குசால் _ மனக்களிப்பு.

குசாற்காரன் _ பகட்டுக்காரன் : மகிழ்ச்சியாய் இருப்பவன்.
குசினி _ சமையலறை : சிறியது : சமையற்காரன்.
குசினிப்பயிர் _ இளம் பயிர்.
குசு _ அபான வாயு.
குசுமம் _ பூ.


குசுமாகரம் _ பூந்தோட்டம் : இளவேனில்.
குசுமாசவம் _ தேன்.
குசும்பம் _ செந்துருக்கம் பூ மரம்.
குசும்பு _ குறும்புத் தனம்.
குசுலம் _  குதிரை.

குசேசயம் _ தாமரை.
குசை _ தருப்பைப் புல் : குதிரைக் கடிவாளம் : குதிரையின் பிடரி மயிர் : மகிழ்ச்சி.
குசைக்கயிறு _ குதிரையின் வாய் வடம்.
குசைக்கிரந்தி _ தருப்பைப் பவித்திர முடிச்சு.
குசோத்தியம் _ தந்திரம் : நேர்மையற்ற கேள்வி : பரிகாசம்.

குச்சம் _ நெற்குஞ்சம் : கொத்து : குன்றி மணி : நாணல் : புறந்தூற்று மொழி.
குச்சரி _ பண்வகை : துகில் வகை.
குச்சி _ முகடு : கொண்டையூசி : மரக்குச்சி.
குச்சிகை _  வீணை வகை.
குச்சிதம் _ இழிவு.


குச்சிப்புல் _ ஒரு வகைப்புல்.
குச்சு _  கழுத்தணி வகை : சிற்றறை : கொண்டையூசி : சிறுகுடில் : சீலையின் முன்மடி.
குச்சை _ கொய்சகம்.
குஞ்சங் கட்டுதல் _ அலங்காரத்துக்குத் தொங்க விடுதல்.
குஞ்சட்டி _  சிறுசட்டி

குஞ்சம் _ குறள் : கூன் : குறளை : பூங் கொத்து : புற் குச்சு : புடைவை அகலத்தின் அரைக்காற்பாகம் : கொய்சகம் : ஈயோட்டி : குன்றிக் கொடி : நாழி : சீதாங்க பாடாணம் : புளி நறளைச் செடி.
குஞ்சரத்தீ _ யானைத்தீ.
குஞ்சரம் _ யானை : கருங்குவளை.
குஞ்சரமணி _  கழுத்தணி அணிவகை.
குஞ்சரன் _  ஒரு வானரன் : அஞ்சனையின் தந்தை : அனுமான் பாட்டன் : கத்துருவின் மகன் : நாகன்.

குஞ்சராசனம் _ அரசமரம்.
குஞ்சரி _ பெண் யானை : முருகக் கடவுளின் தேவியான தெய்வயானை.
குஞ்சனம் _ வளைவு.
குஞ்சன் _ குறளன் : குள்ளன் .
குஞ்சாமணி _ ஆண் குழந்தையின் அரையிற்கட்டும் மணிவிசேடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:21 pm

குஞ்சி _ குடுமி : சிறுமையுடையது : பறவைக்குஞ்சு : சிற்றன்னை : சிற்றப்பன் : கொடி நாட்டும் குழி : கொடிக்கழை : தலை : குன்றிக் கொடி : தலைமயிர் : குறி.
குஞ்சிதம் _ வளைந்தது.
குஞ்சித்தல் _ கால் தூக்கி வளைத்தல்.
குஞ்சியப்பன் _ தந்தையின் தம்பி : தாயின் தங்கை கணவன் : தாயின் இரண்டாம் கணவன்.
குஞ்சியாய்ச்சி _ சிறிய தாய் : தந்தையின் தம்பி மனைவி : தந்தையின் இரண்டாம் மனைவி : தாயின் தங்கை

குஞ்சிரிப்பு _ புன்னகை : குறுநகை.
குஞ்சு _ பறவைக்குஞ்சு : சிறுமை : எலி, அணில் முதலியவற்றின் குஞ்சு.
குஞ்சுக்கடகம் _ சிறிய ஓலைப் பெட்டி.
குஞ்சுச் சிப்பி _ முற்றாத முத்துச் சிப்பி.
குஞ்சுரம் _ குன்றிமணி.


குஞ்சுறை _ பறவைக்கூடு.
குஞ்சை _ நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம்.
குட _ வளைந்த.
குடகம் _ மேற்கு : குடகு மலை : கோளக பாடாணம்.
குடகரம் _ வேலிப்பருத்தி : உத்தா மணிக்கொடி.
குடகன் _ மேல் நாட்டான் : சேரன்.
குடகாற்று _ மேல்காற்று.
குடக்கம் _ வளைவு.
குடக்கனி _ பலாக்கனி.
குடக்கியன் _ கூனன்.
குடக்கினி _ காசுக்கட்டி : கருங்காலி மரம்.
குடக்கு _ மேற்கு.
குடக்குழி _ நீர்க்குண்டு.
குடக்கூத்து _ கண்ணபிரான் குடமெடுத்து ஆடியகூத்து.
குடக்கோ _ சேரன்.
குடங்கர் _ குடம் : குடிசை : கும்பராசி.
குடங்குல் _ மடி.
குடங்குதல் _ வளைதல்.
குடங்கை _ உள்ளங்கை .
குடசப்பாலை _ கசப்பு வெட்பாலை : கறிப்பாலை : கொடிப் பாலைச் செடி.

குடசம் _ மலை மல்லிகை : குடசப் பாலை.
குடச்சிப்பி _ வளைவுள்ள சிப்பி.
குடச்சூழ் _ பாதச் சிலம்பு வகை.
குடஞ்சாய்தல் _ வண்டி குடம் சாய்ந்து விழுதல்.
குடஞ்சுட்டவர் _ பசு நிரை மேயக்கும் ஆயர்.
குடஞ்சுட்டு _ பசு.
குடதாடி _ தூணின் மேல் வைக்கும் குடவடிவான உறுப்பு.
குடதிசை _ மேற்குத் திசை.
குடதேவர் _ அகத்தியர்.
குடத்தி _ ஆயர் மகள் : கழுதைப்புலி : ஓநாய்.

குடநாடு _ சேர நாடு : மேல் நாடு : கொடுந் தமிழ் நாடு : பன்னிரண்டனுள் ஒன்று.
குடந்தம் _ கை கூப்பி மெய் வளைத்துச் செய்யும் வழிபாடு : நால்விரல் மடக்கிப் பெரு விரல் நிறுத்தி நெஞ்சிடை வைத்தல் : குடம் : கும்ப கோணம் : திரட்சி.
குடந்தம் படுதல் _ வழிபடுதல்.
குடந்தை _ வளைவு : கும்ப கோணம்.
குடபலை _ மணித்தக்காளி.

குடபுலம் _  மேல் நாடு.
குடப்பம் _ இருப்பை மரம்.
குடப்பாம்பு _ குடத்தில் அடைபட்ட பாம்பு : மதிற் பொறி வகை.
குடப்பிழுக்கை _  வரிக் கூத்து வகை.
குடப்பெட்டி _  நெல்வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:21 pm

குட மணம் _ கருஞ்சீரகம்.
குடமண் _  வெண் மணல்.
குட மலை _  குடகு  மலை.
குட மல்லிகை _  மல்லிகை வகையுள் ஒன்று.
குடமாடல் _  குடக்கூத்து : மாயோன் கூத்து.



குடமாலை _  உருட்சியான மாலை வகை.
குட மிளகாய் _ மிளகாய் வகை.
குட முழவம் _  முழா வாத்திய வகை.
குட முழுக்கு _ கும்பாபிடேகம்.
குடமுனி _  குடதேவர் : அகத்திய முனிவர்.




குட மூக்கு _  கும்ப கோணம் : குடந்தை.
குடம் _  கும்பபராசி :நீர்க்குடம் : குடக்கூத்து : வண்டிக்குடம் : பசு : திரட்சி : நகரம் : பூசம் :வெல்லக் கட்டி : சதுரக்கள்ளி : குடநாடு .
குடம்பை _ கூடு : முட்டை : ஏரி : உடல்.
குடராசம் _ பூரான் வகை.
குடரி _ யானைத் தோட்டி.



குடர் _ குடல்.
குடலிரைச்சல் _  வயிற்றிரைவு : நோய் வகை.
குடலேறுதல் _  குடல் இடம் மாறி மேலேறுதல்.
குடலை _  பூக்கூடை : கதிர்க்கூடை : கிணற்றுக்கூடை : பழக்கூடு : குடல்.
குடலையாகுதல் _  கதிர் ஈனுதல் .




குடல் _ வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய் : பெருங்குடல் : சிறு குடல் : காயின் குடல் : மரக்குடல் : பழக்குடல் .
குடல் காய்கை _  பசியால் வயிறு ஒட்டிக் கொள்ளுதல்.
குடல் வாதம் _  ஒரு வகை நோய் : அண்ட வாதம்.
குடவம் _  பித்தளை.
குடவரை _  அத்தகிரி : மேற்கு மலை.




குடவரைவாசல் _  கோபுர வாசல் .
குடவர் _  குடகு நாட்டிலுள்ளோர்.
குடவளப்பம் _ இருப்பை மரம்.
குடவறை _  சிற்றரை : நிலவறை .
குடவன் _ இடையன் : பித்தளை : ஒரு கொட்டைக்காய் : காணிகை :குடவுண்ணி : கோஷ்டம்.





குடவிளக்கு _  மணவறையில் குடத்தின் மேல் வைக்கும் விளக்கு.
குடவு _ வளைவு : குகை.
குடவுதல் _ வளைவாதல்.
குடவோலை _  முன்னாளில் ஊர்ச் சபையோரைத் தேர்தெடுக்க மக்கள் குடத்திலிடும் சீட்டு.
குடற்புரை _  குடலின் துளை.




குடற்பை _
  கருப்பப்பை.
குடற்றுடக்கு _  இரத்தக் கலப்பான உறவு.
குடா _  வளைவு : குடைவு : குடாக் கடல் : மூலை.
குடாக்கடல் _  மூன்று பக்கம் தரை சூழ்ந்த கடல்.

குடாக்கு _  
உக்கா : புகையிலை , பாகு , பழம் , சந்தனம் இவற்றாலான உக்கா மருந்து.




குடாசகம் _ 
கபடம் : ஏமாற்று : தீயுரை.
குடாசுதல் _  தந்திரம் செய்தல்.
குடாது _  மேற்கு : மேற்கிலுள்ளது .
குடாப்பு _  கூடு.
குடாரம் _  கோடாரி : தயிர் கடை தாழி.




குடாரி _  
கோடாலி : யானைத் தோட்டி : திப்பிலி.
குடாரு _  தயிர்க்கடை  தாழி.
குடாவடி _  வளைந்த அடியையுடைய கரடி.
குடாவு _  குடைவு.
குடான் _  செம்முள்ளிச் செடி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:22 pm

குடி _ வீடு, பருகுகை  மது பானம் : புருவம் : குடியானவன் : குடும்பம் :குலம் : ஊர் : வாழிடம்.
குடிகாரன் _ குடியன் : கள் முதலியன குடிப்பவன்.
குடிகேடன் _  தீயொழுக்கத்தால் குலத்தின் பெருமையைக் கெடுப்பவன்.
குடிகேடு _  குடும்ப அழிவு.
குடிகை _  இலைக்குடில் : கோயில் : ஏலவரிசி : கமண்டலம்.




குடிகொள்ளுதல் _  நிலையாகத் தங்கியிருத்தல்.
குடிகோள் _  சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை.
குடிக்காடு _  ஊர்.
குடிக்காணம் _  குடிவரி.
குடிக்காவல் _ ஊர்க்காவல்.



குடிக்கூலி _  வீட்டு வாடகை.
குடிங்கு _  பறவை.
குடிசரம் _  நீர்ப்பன்றி.
குடிசல் _  குடிசை.
குடிசெய்தல் _  வாழ்தல் : பிறந்த குடியை உயர்த்துதல்.




குடிசை _  சிறுவீடு : சிறுகுடில்.
குடிச்செருக்கு _  குடிவளம் : குடிப்பிறப்பால் உண்டான இறுமாப்பு.
குடிஞை _ ஆறு : குடிசை :கோட்டான் : பறவை.
குடிஞைக்கல் _  எடைக்கல்.
குடிஞைப்பள்ளி  _  கண்ணுளாளர் தங்குதற்குரிய நாடக அரங்கின் பகுதி.




குடிதாங்கி _  குடும்பத்தைத் தாங்குபவன்.
குடித்தரம் _  தனித்தனியான குடித்தீர்வை.
குடித்தல் _ பருகுதல் : உட்கொள்ளுதல்.
குடித்தனக்காரன் _  பயிரிடுவோன் : ஊரில் செல்வாக்கு உள்ளவன் : வீட்டுத் தலைவன் :வாடகைக்குக் குடியிருப்போன்.
குடித்தனப்படுதல் _  இல் வாழ்க்கை நிலையை அடைதல்.




குடித்தனப்பாங்கு _ இல் வாழ்க்கை யொழுங்கு.
குடித்தனம் _ இல் வாழ்க்கை : வாடகைக்குடி.
குடித் தெய்வம் _  குலதெய்வம்.
குடிநாட்டுதல் _ குடியேற்றுதல்.
குடிநீர் _ குடித்தற்குரிய நீர்.



குடிபடை _  குடிமக்கள்.
குடிபுகுதல் _  புது வீட்டிற் குடிபோதல்.
குடிப்படை _  குடிகளாலான சேனை.
குடிப்பழி _  குலத்திற்கு ஏற்பட்ட நிந்தை.
குடிப்பிறப்பு _ உயர்ந்த குடியில் பிறத்தல்.



குடிப்பெண் _  மனைவி : கற்புடையவள்.
குடிப்பெயர் _ குலத்தால் வந்த பெயர்.
குடிமகன் _  நற்குடிப்பிறந்தவன் : வழி வழி அடிமை : படி வாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன்.
குடிமக்கள் _  பணி செய்தற்குரிய ஊர்க்குடிகள் : அடிமைகள்.
குடிமதிப்பு _  ஊர் வரித்திட்டம்.




குடிமிராசு _ வழி வழி நிலவுரிமை.
குடிமை _  உயர்குலத்தாரது  ஒழுக்கம் : குடிப்பிறப்பு : அரசனது குடியாய் இருக்கும் தன்மை : குடித்தனப் பாங்கு : குடிகளிடம் பெறும் வரி.
குடிமைப்பாடு _ ஊழியம்.
குடியரசு _  மக்களால் நடத்தப் பெறும் அரசாங்கம்.
குடியன் _  குடிகாரன்.



குடியாள் _  பண்ணையாள்.
குடியானவன் _ பயிரிடுவோன் : உழவன்.
குடியிருப்பு _ குடியிருக்கை : சிற்றூர் : வாழ்வு.
குடியிறை _ குடிகள் செலுத்தும் வரி.
குடியேற்றுதல் _ குடியேறச் செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:22 pm

குடிரம் _ காரைச் செடி : குடிசை.
குடிலச்சி _ கருவண்டு.
குடிலப்பாட்டு _ இசை.
குடிலம் _ விண் : குராமரம் : வஞ்சகம் : சடை : வட்டம் : வளைவு : மோசம் : பிரணவம் : ஈயமணல் : வெள்ளீயம் : கொடுமை : மாயை : வானம் : உள் வாங்கிப் பாடும் இசைத்தொழில் : நாகபாடாணம் : குதிரை நடைவகை.
குடிலை _ பிரணவம் : சுத்தமாயை.



குடில் _ குடிசை : குச்சு : சிற்றில் : வீண்:  உடம்பு : வீடு : வானம்.
குடிவருதல் _  குடிபுகுதல்.
குடிவாரம் _  பயிரிடுவோன் உரிமை.
குடிவெறி _ கட்குடி மயக்கம்.
குடிவைத்தல் _  குடியிருக்கச்  செய்தல் : வீட்டை வாடகைக்கு விடுதல் .



குடீசகம் _  ஒரு வகைச் சன்னியாசம்.
குடீசகன் _ குடிலில் வாழும் துறவி.
குடீரம் _  குடிசை : இலைக்குடில்.
குடு _ கள்.
குடுகு _  குடுக்கை : தேங்காய் முதலியவற்றாலான குடுவை.



குடுகுடுக்கை _  கொப்பரைத் தேங்காய்.
குடுகுடுப்பாண்டி _ குடுகுடுப்பை அடித்துக் குறி சொல்லும் பிச்சைக்காரன்.
குடுக்கம் _ உபதாளம் ஐந்தனுள் ஒன்று.
குடுக்கை _  தேங்காய் முதலியவற்றின் குடுவை : கமண்டலம் : இடக்கை யென்னும் தோற் கருவி : வீணையின் உறுப்பு.
குடுப்பம் _ நான்கு பலம் உள்ள பழைய அளவு வகை.




குடுமி _ ஆடவர்களது முடிந்த மயிர் : மலையுச்சி : தலையுச்சி : மாடத்தின் உச்சி : உச்சிக்கொண்டை  : நுனி : முடி : கதவின் குடுமி : மேழிக் குடுமி : முது குடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் :வெற்றி : பாம்பாட்டி : கதவு  பொருத்தும் முளை.
குடுமி களைதல் _ தலைமயிர் நீக்குதல்.
குடுமி கொள்ளுதல் _ வெற்றி கொள்ளுதல்.
குடுமி வாங்குதல் _ மயிர் களைதல் : இழிவு செய்தல்.
குடும்ப பாரம் _  குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு.



குடும்பம் _  சமுசாரம் : உறவினர் : குலம் : மனைவி : மக்கள்.
குடும்பன் _ குடும்பத் தலைவன் : சமுசாரி :  ஊரில் சாகுபடியான நிலங்களை அளப்பவன்.
குடும்பி _  சமுசாரி : குடும்பத் தலைவன் : குறும்பி : காதுள் அழுக்கு.
குடும்பினி _ மனைவி.
குடும்பு _  காய் முதலியவற்றின் குலை.



குடுவை _  கமண்டலம் : கள்ளிறக்கும் சிறு கலம்: ஒரு வகைச் சீட்டாட்டம்.
குடை _  கவிகை : அரசாட்சி : குடைக்கூத்து : பாதக்குறட்டின் குமிழ் : நீர் அருந்தும் ஓலைப்பட்டை : குடை வேல் : உட்டுளைப்பொருள்.
குடைக்கல் _  கல்லறையின் மூடுகல்.
குடைக்காம்பு _  குடையின் கைப்பிடி.
குடைக்காளான் _ நாயக்குடை .




குடைக்கூத்து _ குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல் வகை.
குடைக் கொள்ளுதல் _  மேலெழுதல் : குடஞ் சாய்தல்.
குடைச்சல் _ வாயுவால் உண்டாகும் குடைச்சல் : நோவு .
குடைச்சூழ் _  சிலம்பு :உள்ளிடம் குடைவு படுதல்.
குடைச் செலவு _ பகையைத் தடுத்துக் காக்கப் புறப்படுவதன் முன் : கொற்றக்குடையை நல்ல வேளையில் புறவீடு செய்தலாகிய ஒரு காஞ்சித் திணைத்துறை.



குடைதல் _  கிண்டுதல் : துளைத்தல் : மிக வருந்துதல் : கடைதல் : வேண்டாதவற்றில் தலையிடுதல் : துருவுதல் : உட்புகுதல் : நீரில் மூழ்குதல் : அராவுதல் : உளைவு.
குடைநாட்கோள் _  பகையரணைக்  கொள்ள நினைந்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு  விடும் உழிஞைத் திணைத்துறை.
குடை நிலை _  பகை மேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித் திணைத்துறை.
குடைந்தாடுதல் _ அமிழ்ந்து நீராடுதல்.
குடை மங்கலம் _  நான்கு திக்கும் புகழ் மிக விளங்கிய அரசனது வெண் கொற்றக் குடையைப் புகழ்ந்து கூறும் பாடாண் துறை.




குடை மிளகாய் _ மிளகாய் வகை.
குடைமுல்லை _  போரில் வெற்றி கண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத்துறை.
குடையாணி _ தலையிடம் உருண்டையான ஆணி : கோயிற் குடையில் செருகும் ஆணி.
குடை வண்டு _  துளைக்கும் வண்டு.
குடைவிருத்தி _  திருக்கோயில் விழாக்காலத்தில் சுவாமிக்குக் குடை பிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:23 pm

குடைவு _ குகை : பொந்து.
குடைவேல் _  உடை : நீருடை மரம்.
குடோரி _  கீறுகை : பாம்புக்கடிக்கு மருந்து இடுகை : வங்க மணல் : வெங்காரம் : வெள்ளைப்பாடாணம்.
குடோரி வைத்தல் _  மண்டையைக் கீறி மருந்து வைத்தல்.
குட்சி _ வயிறு.


குட்ட நாசனம்
 _ வெண்கடுகு.
குட்ட நாடு _ திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்ததும் , கோட்டயம் , கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதுமான ஒரு கொடுந் தமிழ்நாடு.
குட்டம் _  ஆழம் , குளம் , மடு : குட்ட நாடு : பரப்பிடம் : திரள் சபை : குரங்குக் குட்டி : குறைந்த சீருடைய அடி : தரவு : தொழுநோய்.
குட்டமிடுதல் _  பள்ளந் தோண்டுதல்.
குட்டரி _  மலை.




குட்டன் _  சிறு பிள்ளை : ஆட்டுக்குட்டி : விலங்கின் குட்டி .
குட்டான் _ சிறு ஓலைப் பெட்டி .
குட்டி _  ஆடு , கீரி , குதிரை, நரி ,  நாய் , பன்றி , புலி ,பூனை முதலியவற்றின் குட்டி : விலங்கின் பிள்ளைப் பொது : சிறுமை : சிறு பெண் : கடைசி மகன் : ஆதாயம் : வாழைக்கன்று : கடிச்சை.
குட்டிக்கரணம் _  தலைகீழாகப் புரளும் வித்தை .
குட்டிக்கலகம் _  சிறு கலகம் : கோள் சொல்லல்.



குட்டிச்சாத்தான் _ குறளித்தேவதை.
குட்டிச்சுவர் _  இடிந்த சிறு சுவர் : பாழ்மனை : பழுது.
குட்டிமம் _  கல் பதித்த தரை.
குட்டியம் _  சுவர் : மேடை.
குட்டினம் _  கருஞ்சீரகம்.




குட்டு _ கைமுட்டியால் தலையில் இடிக்கை : இரகசியம் : மானம் : கோஷ்டம் : குட்ட நோய்.
குட்டுணி _  பிறரால் குட்டுண்பவன்.
குட்டுதல் _ கை முட்டியால் தலையில் குட்டுதல் .
குட்டுப்படுதல் _  அடிக்கடி இடறுதல்.
குட்டுவன் _  குட்ட நாட்டிலுள்ளவன் : சேரன்.



குட்டேறு _  சிறு காளை : எருத்துத் திமில் : மாட்டுக்கொண்டை .
குட்டை _ குள்ளம் : சிறு குளம் : குறுணி.
குணகண்டி _  சிவகைக் கொடி.
குணகம் _  பெருக்கும் எண்.
குணகர் _  கணக்கர்.




குணகாரம் _  பெருக்கல்.
குணகு _  பூத பிசாசம்.
குணகுதல் _  வளைதல் : சோர்தல் : தளருதல் : மனந் தடுமாறுதல்.
குணகோளார்த்தம் _  பூமியின் கிழக்குப் பாதி உருண்டை.
குணக்காய்ப் பேசுதல் _  விதண்டா வாதம் செய்தல்.



குணக்கிராகி _  நற்குணம் உடையவன் .
குணக்கு _  கிழக்கு : கோணல் : எதிரிடை : மாறுபாடு : நோய் முற்றுகை.
குணக்குதல் _  பின்னிற்றல் : வளைத்தல் .
குணக்குன்று _  நற்குணம் மிக்கவன் .
குணக்கேடன் _  நற்குணமில்லாதவன்.



குணக்கேடு _  நற்குணமின்மை.
குணங்கர் _  குணங்கு : பூத பிசாசம்.
குணங்குறி _  தன்மையும் வடிவமும்.
குணசாலி _  நற்குணமுடையவன்.
குணசீலன் _  நற்குண நற் செயல் உடையவன்.



குணசைவம் _  சைவசமய வகையுள் ஒன்று.
குணஞ்ஞன் _  இனிய குணமுள்ளவன்.
குணட்டுதல் _  மயக்கிப் பேசுதல்: செல்லங் கொஞ்சுதல் : பகட்டுப் பண்ணுதல்.
குணதரன் _  முனிவன் : நற்குணமுடையவன்.
குணதிசை _  கிழக்குத் திக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:23 pm

குணத்திரயம் _ சாத்துவிகம் , இராசதம் ,  தாமதம் ஆகிய மூவகையான மூல குணங்கள்.
குணத்தொகை _  பண்புத்தொகை.
குணத்தொனி _ வில்லின் நாணோசை.
குணநிதி _  நற்குணம் நிறைந்தவன்.
குணபத்திரன் _ அருகன் : கடவுள்.



குணபம் _ பிணம் : சுடுகாட்டுப்பிசாசு.
குணபாகம் _ ஏற்ற பக்குவம் : அனுகூல நிலை.
குணபேதம் _  குணம் மாறுதல் : நோய் கடுமையாக மாறும் அறிகுறி.
குணப்படுதல் _ சீர்ப்படுதல் : நலமடைதல் : செழிப்படைதல்.
குணப்படுத்துதல் _  நோயை நீக்குதல்.



குணப்பிழை _ குணக்கேடு.
குணப்பெயர் _ பண்பு குறிக்கும் பெயர்ச் சொல்.
குணமாதல் _ நலமடைதல்.
குணமுள்ளவன் _ நற்குணமுடையவன்.
குணம் _ பொருளின் தன்மை : ஒழுக்கத் தன்மை : அனுகூலம் : சுகம் : மேன்மை : நிறம் : புத்தித் தெளிவு : வில்லின் நாண் : குடம் : கயிறு : இயல்பு : சீலம் : தகவு : நாணம் : அச்சம் : மடம் : பயிர்ப்பு : சால்பு .



குணலி _  சீந்திற்கொடி.
குணலை _ ஆரவாரக்கூத்து : நாணத்தால் உடல் வளைதல் : 
குணவதம் _ நற்குணம் : ஒரு வகையான சமண சமய நோன்பு.
குணவதி _ நற்குணமுள்ளவள்.
குணவாகு பெயர் _ பண்புப் பெயரைப் பண்பிக்கு உரைத்தல்.



குணவியது _  மேன்மையானது.
குணவிரதம்  _  சமண சமய நோன்பு வகை.
குணனம் _ எண் வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல்.
குணனீயம் _  பெருக்கப் படும் எண்.
குணன் _  நற்குணமுடையவன்.



குணாக்கர நியாயம்  _ மரம் : புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போன்று தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி.
குணாதிசயம் _ குணவிசேடம்.
குணாதீதம் _ குணங்கடந்தது.
குணாது _ கிழக்கிலுள்ளது.
குணாம்பி _ கோமாளி.



குணாம்பு _ பகடி.
குணாம்புதல் _ பகடி பேசுதல்.
குணாலங்கிருதன்   _  நற்குணத்தை அணியாக உடையவன்.
குணாலம் _ ஒரு வகை மகிழ்ச்சிக் கூத்து : வீராவேசத்தால் கொக்கரித்தல் : ஒரு பறவை.
குணாலயன் _   நற்குணமுள்ளவன் : நற்குணங்களுக்கு இருப்பிட மானவன்.



குணாலை _  ஆரவாரத்துடன் நடிக்கும் கூத்து.
குணாளன் _  நற்கணம் மிக்கவன்.
குணி _  பண்பி : நற்குணம் உடையவன் : முடமானது.
குணிதம் _  பெருக்கி வந்த தொகை : மடங்கு.
குணித்தல் _ கணித்தல் : ஆலோசித்தல் : வரையறுத்தல் : பெருக்குதல்.



குணிப்பு _ மதிப்பு : அளவு : ஆராய்ச்சி.
குணில் _ குறுந்தடி : பறையடிக்குந் தடி : கவண்.
குணு _ புழு.
குணுகுணுத்தல் _  மூக்கால் பேசுதல் : முணுமுணுத்தல்.
குணுகுதல் _ கொஞ்சுதல்.




குணுக்கம் _ வருத்தம் : துன்பம்.
குணுக்கன் _ மூக்கால் பேசுவோன்.
குணுக்கு _  மாதர் காதணி : காதுத்துளை : பெருக்க இடும் ஓலைச்சுருள் : மீன் வலையின் ஈயக் குண்டு : வெள்ளி : பணியார வகை.
குணுக்குதல் _ வளைத்தல்.
குணுக்குத்தடி _ இரும்புப் பூணிட்ட கனத்த கழி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:23 pm

குணுங்கர் _  இழிந்தோர் : புலையர் : தோற் கருவியாளர் : குயிலுவர்.
குணுங்கு _ பிசாசு : கொச்சை நாற்றம்.
குண்டகம் _ மண் பறிக்கும் கருவிவகை.
குண்டகன் _  சோர நாயகனுக்குப் பிறந்தவன்.
குண்டக்கணிகை _ கற்பழிந்து வேசையானவள்.


குண்டக்கம் _ கோள் : வஞ்சனை.
குண்டக்கிரியை _ ஒரு பண் வகை.
குண்டடியன் _ ஆண் சிவிங்கி.
குண்டடுப்பு _  அடுப்பு வகை.
குண்டணி _ குறளைச் சொல்.



குண்டப் பணிவிடை _ கீழ்த்தரமான ஊழியம்.
குண்டம் _  வேள்விக் குண்டம்: குழி : வாவி : குடுவை : பானை : பன்றி.
குண்டம் பாய்தல் _  வேண்டுதலை முன்னிட்டுத் தீக்குழியில் நடத்தல்.
குண்டலப் பூச்சி, குண்டலப் புழு _  புழுவகை.
குண்டலம் _ ஆடவர் காதணி : வானம் : வட்டம் : சுன்னம்.




குண்டலி _  நாபித்தானம் : கருவாய்க்கும் எரு வாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம் : சுத்தமாயை : பாம்பு : மயில் : மான் : சங்கஞ்செடி : சீந்திற் கொடி : தாளகம்.
குண்டலிசத்தி _  சுத்த மாயை.
குண்டலினி _ மகாமாயை : மூலாதாரத்தில்  உறக்க நிலையில் உள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி.
குண்டன் _ பருத்து வலுத்தவன் : இழிந்தவன் : அடிமை : வளைந்தது : கோள் சொல்லுபவன்.
குண்டாக்கன் _ தலைவன்.




குண்டாஞ்சட்டி _  குண்டா : வாய் அகன்ற பாண்டம்.
குண்டி _  ஆசனப் பக்கம் : அடிப்பக்கம் : இதயம் : மீன் சினை : சிறு நீரகம்.
குண்டிகை _ கமண்டலம் : குடம் : குடுக்கை : 108 உபநிடதங்களுள் ஒன்று.
குண்டிக்காய் _  இதயம் : மூத்திரப்பிருக்கம்.
குண்டியம் _  குறளை : பொய்.




குண்டில் _ முதுகு.
குண்டீரம் _  வல்லமை : தத்துவம்.
குண்டு _  உருண்டை வடிவமான பாண்டம் : பந்து போல் உருண்டு கனப்பது : விலங்குகளின் விதை: ஆண் குதிரை : ஆழம் : குழி : குளம் : தாழ்வு : சிறு செய் : உரக்குழி.
குண்டுக்கல் _ தராசின் நிறை கல் .
குண்டுக்கலம் _  24 மரக்கால் கொண்ட ஓர் அளவு.



குண்டுக்கழுதை _  ஆண் கழுதை.
குண்டுக் காளை _  பொலி எருது.
குண்டுக் குதிரை _ ஆண் குதிரை.
குண்டுசட்டி _ உருண்டையான சட்டி .
குண்டுணி _  கோட் சொல் : கலக மூட்டுதல் : கோள் சொல்லுபவன்.



குண்டு தைரியம் _  முரட்டுத் தைரியம்.
குண்டு நீர் _  கடல்.
குண்டு நூல் _  நுனியில் ஈயக் குண்டு கட்டப்பட்டிருக்கும் அளவு நூற் கயிறு.
குண்டு படுதல் _ வெடி குண்டால் தாக்கப்படுதல்.
குண்டு பாய்தல் _  ஆழம் படுதல்.


குண்டு மணி _  குன்றி மணி.
குண்டு மரக்கால் _  எட்டுப்படி கொண்ட ஓர் அளவு.
குண்டு மல்லிகை _  குட மல்லிகை.
குண்டூசி _  தலை திரண்ட ஊசி.
குண்டெழுத்து _  திரண்டு தடித்த எழுத்து.



குண்டை _  எருது : இடபராசி : குறுகித் தடித்தது : குறுமை .
குண்டோதரன் _ பெருந் தீனிக் காரன் : ஒரு பூதன் : சிவகணத் தலைவருள் ஒருவன்.
குண்ண வாடை _  வட கீழ்க்காற்று.
குண்ணியம் _  பெருக்கப்படும் எண்.
குதகீலம் _  மூல நோய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:24 pm

குதட்டுதல் _ குதப்புல் : அதக்குதல் : குழறிப் பேசுதல்.
குதபம் _  பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற் காலத்தில் எட்டாம் பாகம் : தருப்பைப் புல் : எருது : மயிர்க் கம்பளம்.
குதபன் _  சூரியன் : தீ.
குதப்புதல் _  மெல்லுதல் : அதக்குதல்.
குதம் _  ஓமம் : தருப்பை : மலவாய் : தும்மல் : மிகுதி : வெங்காயம் : கிடங்கு.



குதம்புதல் _  கொதித்தல் : சினத்தல் : துணி அலசுதல்.
குதம்பை _  காதணி வகை.
குதரம் _  மலை : பூதரம் : வெற்பு : பொருப்பு.
குதர் _  பிரிவு : விலக்கு : நீக்கம் : குதறு.
குதர்க்கம் _ தடை : முறையற்ற வாதம்.



குதர் செல்லுதல் _  நெறி தவறிச் செல்லுதல்.
குதர்தல் _   கோதி யெடுத்தல் : அடியோடு பெயர்த்தல் : குதர்க்க வாதம் செய்தல்.
குதலை _ மழலைச் சொல் : இனிய மொழி : அறிவிலான்.
குதறுதல் _  சிதறுதல் : கிண்டுதல் : நெறி தவறுதல் : புண் மிகுதல் : குலைதல் .
குதனம் _  துப்புர வின்மை : திறமையின்மை : அக்கறையின்மை.



குதாவிடை _  அலங்கோலம் : காலத்தாழ்வு.
குதானன் _  தாளிச்செடி.
குதி _  குதிப்பு : குதிகால் : முயற்சி.
குதிகள்ளன் _  குதியில் வரும் புண்.
குதிகொள்ளுதல் _  பெருகுதல் : பொலிதல் : குதித்தல்.



குதிங்கால் _  உள்ளங் காலின் பின்பக்கம்.
குதித்தல் _  கூத்தாடுதல் : துள்ளல் : செருக்குக் கொள்ளுதல் : கடந்து விடுதல்.
குதிமுள் _ குதிரை முள்.
குதிரம் _  35 கழஞ்சு அளவுள்ள கருப்பூரம்.
குதிரி _  அடங்காதவள்.



குதிரை _  பரி : கயிறு முறுக்கும் கருவி : யாழின் ஓர் உறுப்பு : துப்பாக்கியின் ஓர் உறுப்பு :தாங்கு சட்டம் : குதிரை மரம் : ஊர்க்குருவி : அதியமானின் குதிரை மலை.
குதிரைக் குளம்பு _  குதிரையின் குரம் : நீர்க் குளிர்ச் செடி .
குதிரைக் கொம்பு _  கிடைத்தற்கு அரியது.
குதிரைச் சம்மட்டி _  குதிரைச் சவுக்கு .
குதிரைச்சாணி _  குதிரைக்காரன் : குதிரை வைத்தியன்.




குதிரைச் சாரி _  குதிரையின் சுற்றி ஓடும் கதி.
குதிரைச் சேவகன் _  குதிரை வீரன்.
குதிரை நடை _  கம்பீர நடை : பெருமித நடை.
குதிரைப்பட்டை _  மேற்கூரை தாங்கும் கட்டை.
குதிரைப் பல்லன் _  வெள்ளைப்பூண்டு.




குதிரைப்பிடுக்கன் _  பீ நாறி மரம்.
குதிரை மரம் _  கால்வாய் அடைக்கும் கதவு : உடல் பயிற்ச்சிக்குரிய தாண்டு மரம் : குதிரைத்தறி : நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச்சட்டம்.
குதிரை மறம் _  போர்க் குதிரையின் திறத்தினைக்கூறும் புறத்துறை .
குதிரை மறி _ பெட்டைக்குதிரை :  குதிரைக் குட்டி.
குதிரையேறுதல் _  குதிரையின் மீது ஏறிச் செல்லுதல் : பிறரைக் கீழ்ப்படுத்துதல்.



குதிரை வலி _  பெண்களுக்குப் பேறு காலத்தில் உண்டாகும் பெரு வலி.
குதிரை வாலிச் சம்பா _  ஒரு வகைச் சம்பா நெல்.
குதுகம் _  விருப்பம்.
குதுகுதுப்பு _  ஆவல் :  குளிரால் நடுங்குதல்.
குதும்பகர் _  தும்பைப் பூடு.



குதூகலம் _  விருப்பம் : மனக் களிப்பு : மகிழ்ச்சி.
குதை _  விற்குதை :  அம்பு : அம்பின் அடிப்பாகம் : ஆபரணத்தின் பூட்டு : முயற்சி : பசி.
குதைச்சு _ சட்டையில் பொத்தானிடும் துளை : தாலியுருவகை.
குதைதல் _  துளையிடுதல் : தடுமாறச் செய்தல் : செலுத்துதல் .
குதைத்தல் _  விற்குதையில் நாணப் பூட்டுதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:24 pm

குதைபோடுதல் _ முடிச்சுப் போடுதல்.
குத்தகை _ அனுபவ உரிமை அளிக்கும் ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறை.
குத்தகைக்காரன் _ குத்தகை எடுப்பவன்.
குத்தகைச் சீட்டு _ ஒப்பந்தப் பத்திரம்.
குத்தம் _ எருது.



குத்தரசம் _ பெருங்காயம் .
குத்தரம் _ சுடு சொல் : பொய் : வஞ்சகம்.
குத்தல் _ உடம்பின் உள் நோவு : தெருவிற்கு நேர் எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் : நீர்க் குத்தலான இடம் : குற்றலரிசி.
குத்தன் _ காப்பவன் : வணிகர் பட்டம் : குப்தர் மரபில் வந்த அரசன்.
குத்தாணி _ மரக்கைப் பிடியமைந்த நீண்ட ஊசி வகை.




குத்தாலம் _ திருவாத்தி : காட்டாத்தி.
குத்தாலா _ கடுகு ரோகிணி.
குத்தாளை _ மானாவாரி நெல் .
குத்தி _ குத்தூசி : கலப்பைக் கூர் : திரி கரண அடக்கம் : மாறுபாடு : மண்.
குத்திக்காரன் _ வஞ்சகன்.




குத்திரப்பேச்சு _ இகழ்ந்துரைக்கும் சுடு சொல்.
குத்திரம் _ வஞ்சகன் : இழிவு : ஏளனம் செய்தல் : குரூரம் : மலை : சணல் : பொய்.
குத்திர வித்தை _ சூனிய வித்தை : தந்திரம்.
குத்திரன் _ வஞ்சகன்.
குத்திருமல் _ கக்குவான் இருமல் .






குத்தினி _ ஒரு வகைப் பட்டுச் சீலை.
குத்தீட்டி _ ஈட்டி வகை.
குத்து _ கைமுட்டியால் தாங்கவது : உரலில் குற்றுதல் : புள்ளி : செங்குத்து : நோவு : பிடி.
குத்துக்கல் _ செங்குத்துக் கல் : ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் அளவுக்கல்.
குத்துக்கால் _ தாங்கும் கால் : தடை : நெசவுத் தறியின் ஓர் உறுப்பு.



குத்துக்கோல் _ தாற்றுக் கோல் : முனையில் கூரிய இரும்பு முள் உள்ள கோல்.
குத்துச்சண்டை _ மற்போர் : குத்துப்போர்.
குத்துண்ணுதல் _ செங்குத்தாக நிற்றல்.
குத்துணி _ இழிவு பட்டவன் : குத்துப்பட்டவன் : தமுக்குணி : ஒரு புடவை.
குத்துத்திராய் _ கீரை வகை.




குத்துதல் _ துளையிடுதல் : தைத்தல் : கொம்பினால் முட்டுதல் : உலக்கையால் குற்றுதல் : சுடு சொல் சொல்லுதல் : வருத்துதல் : அகழ்தல் : கிண்டுதல்.
குத்துப்பாடு _ குற்றம்.
குத்துப்போர் _ மற்போர் : குத்துச் சண்டை : தீராப்பகை.
குத்து மதிப்பு _ தோராய மதிப்பு.
குத்து வலி _ இசிவு நோவு.




குத்து வாதை
 _ பசி வருத்தம்.
குத்து வாள் _ உடைவாள்.
குத்து விளக்கு _ விளக்கு வகை.
குத்தூசி _ குத்தித்தைக்கும் ஊசி.
குநகி _ சொத்தை நகம் உள்ளவன்(ள்).





குந்தகம் 
_ தடை.
குந்தம் _ குதிரை :ஒரு நிறை : அளவு வகை : கண்ணோய் வகை : துயரம் தருவது : எறிகோல் :வெண் குருத்து : நவநிதியுள் ஒன்று : குருந்த மரம் : கற்பாடாணம் : கோளாக பாடாணம்.
குந்தமம் _ பூனை.
குந்தலிங்கம் _ சாம்பிராணி.
குந்தளம் _ மகளிர் தலைமயிர் : மயிர்க் குழற்சி :சாளுக்கிய அரசரது நாடு.




குந்தனம் _
 தங்கம் : மணி பதிக்குமிடம்.
குந்தன் _ திருமால் : தூய தன்மையுடையவன்.
குந்தா _ துப்பாக்கியின் அடி : கப்பலின் பின்புறம்.
குந்தாணி _ பெரு உரல் : உரலின் வாய்க்கூடு : கண்ணோய் வகை.
குந்தாலம் _ குத்தித் தோண்டும் கருவி : கணி்ச்சி : மண் வெட்டி : குந்தாளித்தல் : களித்துக் கூத்தாடல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:25 pm

குந்தாளித்தல் _  களித்துக் கூத்தாடுதல்.
குந்தி _  கள் : பாண்டவரின் தாய்.
குந்து _  உட்காருகை : ஒட்டுத் திண்ணை : நொண்டுகை : பழத்தின் சிம்பு.
குந்துரு _ பறங்கிச் சாம்பிராணி : வெள்ளைக் குங்கிலியம்.
குபசுபா _  எட்டி மரம்.



குபதம் _
  தீய நடை : பாழ் வழி.
குபலம் _  வலியின்மை : இழப்பு.
குபார் _  கூச்சலிடுகை.
குபிதன் _ கோபம் கொண்டவன்.
குபிலன் _ மன்னன் : காவலன்.



குபினன் _
  வலைஞன்.
குபேரகம் _  சின்னிப்பூடு.
குபேர சம்பத்து _  குபேரனுக்கு உரியது போன்ற பெருஞ் செல்வச் செழிப்புடமை.
குபேரன் _  வட திசைக்கு உரிய பெருஞ் செல்வன் : வடக்கு திசைப் பாலன் : சந்திரன் : இயக்கர்  கோமான் : நிதிக்கிழவன்.
குப்ப அஞ்சனா _ நெற்குவியலின் மதிப்பு.



குப்பக்காடு _
 பட்டிக்காடு.
குப்பத்தம் _ நிலச் சொந்தக்காரரின் பங்கு.
குப்பம் _ ஊர் : காடு : கூட்டம் : குவியல்.
குப்பல் _ குவியல் : மேடு : கூட்டம் .
குப்பாசம் _ மெய்ச்சட்டை : பாம்புச் சட்டை.



குப்பாமணி _
  குப்பை மேனி.
குப்பாயம் _ சட்டை : மேற் பார்வை.
குப்பான் _ மூடன்.
குப்பி _ குடவை : சிமிழ் : வயிர வகை : வீணையின் முறுக்காணி : சங்கங் குப்பி : சாணி : முதல் இரண்டு குழந்தைகள் தவறிய பின் பிறக்கும் மூன்றாம் குழந்தைக்கு இடும் பெயர்.
குப்பிச்சாரம் _ காசிச்சாரம் .



குப்பிமா _
  மாக்கல்.
குப்பிலவணம் _
  வளையலுப்பு.
குப்புறுதல் _ கடத்தல் : தலை குனிதல் : சத குப்பை : பயனற்றது .
குப்பைப் பருத்தி _  பருத்தி வகை.
குப்பை மேனி _ ஒரு வகைப் பூடு.




குப்பையன் _
  அழுக்கடைந்தவன்.
குமஞ்சம் _ தூபவர்க்கம்.
குமடு _  கன்னம்.
குமட்டுதல் _  தெவிட்டுதல் : கக்குதல் : அருவருத்தல்.
குமணன் _ முதிரை மலை அரசன்: ஒரு வள்ளல்.




குமண்டை _
  ஒரு வகை மகிழ்ச்சிக் கூத்து.
குமதி _ புத்தி கேடன் : அறிவு கெட்டவன்.
குமர கண்டம் _ ஒரு வகை வலிப்பு நோய்.
குமரகம் _ மாவிலிங்க மரம்.
குமர கோட்டம் _ காஞ்சி புரத்தில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயில்.




குமர தண்டம் _
 முருகக் கடவுளைப் படைத் தலைவனாகக் கொண்ட தேவர் படை.
குமரம் _ கொம்பில்லாத விலங்கு: மறைந்த ஒரு தமிழ் இலக்கண நூல்.
குமர வேள் _ முருகக் கடவுள்.
குமரன் _ இளைஞன் : மகன் : மருகன் : வயிரவன்.
குமரி _ கன்னி : மகள் : பருவம் அடைந்த பெண் : துர்க்கை : குமரியாறு: கன்னியா குமரி : அழிவின்மை : கற்றாழை : மலை நிலத்துச்  செய்யும் வேளாண்மை : உமாதேவி.




குமரிக்கடல் _
  கன்னியாகுமரியருகிலுள்ள கடல்.
குமரிக் கோடு _ கடலாற் கொள்ளப்பட்ட குமரி நாட்டு மலை.
குமரிச் சேர்ப்பவன் _ குமரித் துறைக்குரிய பாண்டியன்.
குமரிஞாழல் _ மல்லிகை.
குமரித்துறை _  கன்னியா குமரி : தீர்த்தத் துறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:25 pm

குமரித்துறை _  கன்னியாகுமரி : தீர்தத் துறை.
குமரித் தெய்வம் _ கன்னியா குமரித் தெய்வம்.
குமரிப்படை _ அழியாச் சேனை.
குமரிப்போர் _ கன்னிப் போர் : முதற் போர்.
குமரி மதில் _  அழியாக் கோட்டை .


குமரி மூத்தல் _ கன்னியாயிருந்து மூப்படைதல் : பயனின்றிக் கழிதல்.
குமரியாடுதல் _ கன்னியாகுமரியில் நீராடுதல் : கன்னிப் பெண்ணோடு கூடல்.
குமரியிருட்டு _  கன்னியிருட்டு : விடியலுக்கு முன்னுள்ள இருள் .
குமரியிருத்தல் _  வீணே கழிதல்.
குமர் _  மணமாகாதவள் : கன்னி : கன்னிமை : அழியாத்தன்மை.


குமலி _  துளசி.
குமல் _  அரிவாள்.
குமாரத்தி _  மகள் : புதல்வி.
குமாரம் _  இளமை : உருக்கி ஓட வைத்த பொன்.
குமாரன் _  மகன் : இளைஞன் : முருகக் கடவுள்.



குமாரி _  புதல்வி : குமரி : காளி : அழியா இளமையினள்.
குமார்க்கம் _  தீய வழி.
குமிகை _  முதிராத எள் : வெள்ளை எள்.
குமிண் சிரிப்பு _ புன் சிரிப்பு.
குமிண்டி _ கீரை வகை.



குமிதம் _ தேக்க மரம்.
குமிதல் _  குளிர்தல் : திரளுதல்.
குமித்தல் _  குவித்தல்.
குமிலம் _  பேரொலி.
குமிலவோதை _ பேராரவாரம்.



குமிலி _  துளசி.
குமிழி _  நீர்க்குமிழி : பாதக் குறட்டின் குமிழ் : ஊற்றுவாய்.
குமிழ் _  நீர்க்குமிழ் : உருண்டு திரண்ட வடிவம் : எருதின் திமில் : நாணற் புல் : குமிழ மரம்.
குமிழ்க்கட்டை _ பாதக் குறடு.
குமிழ்த்தல் _ குமிழிடுதல் : மயிர் சிலிர்த்தல் : ஒலிக்கச் செய்தல் : கொழித்தல்.



குமிறுதல் _ ஒலித்தல்.
குமுகம் _  பன்றி.
குமுகாயம் _ சமுதாயம்.
குமுகுமுத்தல் _  மணம் வீசுதல் .
குமுக்கு _  மொத்தம் : பெருந்தொகை : உதவி : கூட்டம் : இரகசியம்.



குமுக்குதல் _  ஆடை கும்முதல்.
குமுங்குதல் _  மசிதல் : உள்ளிறங்குதல் : மனம் வெம்புதல்.
குமுதகம் _  கட்டத்தின் எழுதக வகை : ஒரு சித்திரக் கம்பி.
குமுதச் சிலந்தி _  கொப்புளமாகாமல்  சீழ் வடியும் புண்.
குமுத நாதன் _  சந்திரன்.



குமுதம் _  மிகுதி : வெள்ளாம்பல் : செவ்வாம் பல் : தென் மேற்குத்திக்கு யானை : படையின் ஒரு தொகை : கட்டடத்தின் 
எழுதுக வகை : கரு விழியால் உண்டாகும் ஒரு வகை நோய் : அடுப்பு பேரொலி : தருப்பை : கருப்பூரம் .
குமுதிகை _  பூசணிக் கொடி: பறங்கிக் கொடி.
குமுதிப்பனை -  கிச்சிலிப்பனை.
குமுலி _  துளசிச் செடி.
குமுறக் காய்தல் _ நன்றாகக் காய்தல்.



குமுறப் பிழிதல் _  இறுகப் பிழிதல்.
குமுறல் _  பேரொலி : மனத்துள் வேதனைப்படுதல் : கொதித்தல்.
குமேரு _  பேய் பிசாசுகளுக்கு இருப்பிடமான  தென்முனை.
குமை _  அழிவு : துன்பம் : அழுக்குத் துணி : முதலியன இடும் பெட்டி : ஓர் எடை : அடி : மயங்கு : வருந்து .
குமைதல் _  குழம்புதல் : குழைய வேகுதல் : வெப்பத்தால் புழுங்குதல் : சோர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:26 pm

குமைதின்னுதல் _  அடியுண்ணுதல்.
குமைத்தல் _  துவைத்தல் : உரலில் வைத்து இடித்தல் : வருத்துதல் : அழித்தல் : குழையவேகச் செய்தல்.
கும்பகம் _ இழுத்த மூச்சுக் காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாம வகை.
கும்பகாம்போதி _  ஒரு பண் வகை.
கும்பகாரன் _  குயவன்.



கும்பகாரிகை _ குயத்தி : கண்ணிடு மை.
கும்பங்கொட்டுதல் _  துர்க்கைக்கு வேண்டுதலைச் செய்தல் : பெருந்தீனி கொடுத்தல்.
கும்பசம்பவன் _ குடத்திலிருந்து பிறந்தவன் : அகத்தியன் : துரோணன்.
கும்பஞ் செய்தல் _  கல்லறையின் மீது மண்ணைக் குவித்தல்: பிணத்தைப் புதைத்தல் .
கும்பதீபம் _  குடவடிவமான  ஆராதனை விளக்கு.



கும்பம் _  குடம் : கும்ப கலசம் : கலசம் : யானை மத்தகம் : கும்ப ராசி : மாசி மாதம் : நெற்றி : இரு தோள்கட்கு இடையில் முதுகின் மேற் பகுதி: குவியல் : சிவதை : நூறு கோடி.
கும்ப முனி _  அகத்தியர்.
கும்பல் _ குவியல் : திரள் : கூட்டம் : கும்பி நாற்றம்.
கும்பளம் _  கலியாணப் பூசணி.
கும்பன் _  அகத்தியன் : சிவகணத் தலைவருள் ஒருவன் : கயவன் : ஓர் அரக்கன்.



கும்பாகம் _ பவளக்கொடி.
கும்பாபிடேகம் _ குடமுழுக்கு.
கும்பாரம் _ அம்பாரம் : கும்பம் .
கும்பி _  குவியல் : சேறு : சுடு சாம்பல் : வயிறு : யானை: நரகம் : கும்பராசி : நெருப்பு : மண் பாண்டம்.
கும்பிடு _ வணக்கம் : வணங்குதல்.



கும்பிடு சட்டி _  தீச்சட்டி.
கும்பிடுதல் _  கைகூப்பி வணங்குதல்.
கும்பித்தல் _ யோக முறையில் மூச்சு அடக்குதல்.
கும்பி நாற்றம் _  தீய்ந்து போன உணவில் உண்டாகும் நாற்றம் .
கும்பிபாகம் _ ஏழு நரகத்துள் ஒன்று : பாவம் செய்தவரைக் குயவர் சூளையில் சுடுவது போல் வாட்டுவதாகிய நரகம்.



கும்பீரம் _  முதலை.
கும்பு : கூட்டம் : திரள் : அடிப்பற்று.
கும்புதல் _ சமைத்த உணவு தீய்ந்து போதல் : அடிப்பற்றுதல்.
கும்பை _  சிறுமரம் : சேரி : கும்ப கோணம் : குடம் : வேசி : வாழை வகை : ஓம குண்டத்தின் வேதிகை.
கும்மட்டம் _ ஒரு வகைச் சிறு பறை : விமானக்கூண்டு : கட்ட வளைவு.


கும்மட்டி _ குதிக்கை : குதித்து விளையாடுதல் :ஒரு வாத்தியம் : தீச் சட்டி : ஆற்றுத் தும்மட்டிச் செடி.
கும்மலி _ தடித்தவள் : பருத்தவள் .
கும்மலித்தல் _  விளையாடுதல்.
கும்மல் _ ஆடையை நனைத்துக் கசக்குதல் : அரிவாள் : கூட்டம்.
கும்மாயம் _  குழைத்துச்  சமைத்த பருப்பு : சுண்ணாம்பு.



கும்மாளம் _ குதித்து விளையாடுகை.
கும்மி _ மகளிர் கைகொட்டிப் பாடியாடும் கூத்து.
கும்மிருட்டு _ மிக்க இருள்.
கும்முதல் _   ஆடை கசக்குதல் : மெல்லக் குற்றுதல்.
குயக்கலம் _  மட்பாண்டம் : ஒரு நூல்.



குயத்தி _ குயவர் குடிப்பெண்.
குயமயக்கு _ தாறுமாறு.
குயம் _ அரிவாள் : நாவிதன் : கத்தி : குயச்சாதி : இளமை : தருப்பைப் புல்.
குயலன் _  தேர்ந்தவன்.
குயவரி _  புலி.



குயவன் _  மட் பாண்டம் வனைவோன் : மறை பொருளாளன்.
குயவு _  தேர்.
குயா _  கோங்கு மரம்.
குயலாயம் _  மட் கலம் வனையும் கூடம் : சுவருள் அறை : பறவைக்கூடு.
குயிலுவர் _  இசைக் கருவி வாசிப்போர்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:26 pm

குயில் _  சொல் : ஒரு பறவை : கோகிலம் : மேகம் : துளை.
குயில்தல் _  கூவுதல் :  சொல்லுதல் : செய்தல் : மணி பதித்தல் : கட்டுதல் : பின்னுதல் : நெய்தல் : துளைத்தல் : செறிதல் : நடை பெறுதல் : வாத்தியம் ஒலித்தல்.
குயிறல் _ குயில்தல்.
குயிற்றுதல் _ சொல்லுதல் : செய்தல் : மணி பதித்தல்.
குயினர் _  மணியில் துளையிடுவோர் : தையற்காரர்.



குயின் _ மேகம் : செயல்.
குயின் மொழி _ அதிமதுரம் : இன் மொழி.
குயுக்தி _ நேர்மையற்ற உத்தி : ஏளனம்.
குய் _ தாளிப்பு : நறும்புகை : சாம்பிராணி.
குய் மனத்தாளர் _ வஞ்சகர்.



குய்ய தீபகம் _ மின்மினி.
குய்ய பீசகம் _ எட்டி.
குய்யம் _  மறைவானது : ஆண், பெண் மருமத்தானம் : வஞ்சகம் : எரு வாயில்.
குரகதம் _  குதிரை.
குரகம் _ விமானப் பறவை : நிர் வாழ் பறவை.



குரக்கன் _   கேழ்வரகு.
குரக்கு வலி _ கைகளில் வரும் வலிப்பு நோய் : குரங்குக்கு வரும் வலிப்பு நோய்.
குரங்கம் _ எட்டி மரம் : மான் : விலங்கின் பொது : மலைக் கொன்றை.
குரங்கன் _ குரங்கு போன்று குறும்புத் தனம் செய்பவன் : குரங்கம் : எட்டி மரம் : சந்திரன் .
குரங்காட்டம் _ குரங்கின் கூத்து.



குரங்கி _  சந்திரன்.
குரங்கு _  வளைவு : வானரம் : முசுமுசுக்கைக் கொடி : கொக்கி : விலங்கு.
குரங்குத் தாழ்ப்பாள் _ கொக்கித் தாழ்ப்பாள்.
குரங்குதல் _ வளைதல் : தாழ்தல் : தொங்குதல் : தங்குதல் : குறைதல் :இரங்குதல்.
குரங்குப் பட்டை _  கூரையோடுகள்  கலைந்து போகாதபடி முகட்டிலிருந்து அடிவரை கட்டும் சுண்ணாம்புப் பட்டை .



குரங்குப்பிடி _  விடாப்பிடி வாதம்.
குரங்கு மச்சு _  கூரையின் கீழ் அமைக்கும் மச்சு.
குரங்கு மார்க்கம் _ குதிரை நடையுள் ஒன்றான வானர நடை.
குரசு _  குதிரைக் குளம்பு.
குரணம் _ முயற்சி.



குரண்டம் _ மரு தோன்றி மரம் : கொக்கு.
குரத்தம் _  ஆரவாரம்.
குரத்தி _  குரு பத்தினி : ஆசாரிய பதவி வகிப்பவள் : தவைலி : சமணப் பெண் துறவி.
குரப்பம் _  குதிரை தேய்க்கும் கருவி.
குரமடம் _ பெருங்காயம்.



குரம் _  குதிரை முதலியவற்றின் குளம்பு : பசு : ஒலி: தருப்பை : பாகல்.
குரம்பு _  அணைக்கட்டு.
குரம்பை _ சிறு குடில் : பறவைக்கூடு : உடல் : தானியக்கூடு : இசைவகை.
குரல் _ கதிர் : பூங்கொத்து : தினை வாழை முதலியவற்றின் தோகை : தினை : பாதிரி : பெண்டிதர் தலை மயிர் : மகளிர் குழல் முடிக்கும் ஐவகையுள் ஒன்று : இறகு : பேச்சொலி : மொழி : மிடறு : சந்தம் : ஏழிசையுள் முதலாவது : ஓசை : கிண்கிணி மாலை.
குரல் வளை _ மிடற்றின் உறுப்பு.



குரவகம் _ 
மருதோன்றி மரம் : வாடாக் குறிஞ்சி மரம்.
குரவம் _  குராமரம் : பேரீந்து மரம் : கோட்டம்.
குரவம் பாவை _ குரவம் பூ .
குரவன் _  அரசன் : ஆசிரியன் : குரு : தாய், தந்தை , தமையன் என்பவருள் ஒருவர் : பிரமன் : அமைச்சன்.
குரவு _  குராமரம்.



குரவை _  கடல் : மகிழ்ச்சி யொலி : மகளிர் கைகோத்தாடும் கூத்து .
குரவைக் கூத்து _  ஏழு அல்லது ஒன்பது பேர் கைகோத்தாடும் ஒரு வகைக்கூத்து.
குரவை யிடுதல் _ நாவால் குழறி மகிழ்ச்சியொலி செய்தல் : குலவை யிடுதல்.
குரா _ குரா மரம்.
குரால் _  புகர் நிறம் : ஈனாப் பருவத்து ஆடு : பசு : கோட்டான்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:26 pm

குராற்பசு _  கபிலை நிறப் பசு.
குரான் _  முகமதியர் வேதம்.
குரிகிற்றாளி  _  ஒரு கிழங்கு வகை.
குரிசில் _  தலைவன் : பெருமையிற் சிறந்தோன் : உபகாரி.
குரீஇ _  குருவி : பறவை.



குரு _  கொப்புளம் காணும் நோய் : புண் : வேர்க்குரு : புளகம் : கொட்டை : பதி : ஒளி : முத்துக் குற்றங்களுள் ஒன்று : துருசு : இரசம் : ஈசன் : ஞானா சாரியன் : ஆசிரியன் : புரோகிதன் : தகப்பன் : அரசன் : வியாழன் : பூச நாள் : இரு மாத்திரை அளவு : 
இரும்பு, செம்பு, ஈயம் முதலிய உலோகங்களைப் பொன் வெள்ளியாகப் போதிக்கும் சிந்தூரம் : சோறு : துரோணன் :தேர் : ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று : பெருமை : மேன்மை : வருத்தம் : சினம் கொள்ளுதல் : கனம் : பருமன் : நெடில் : குரு வருடம் : சிவன் : திவ்வியம் : தேசிகன் : புங்கவன் : குருகுலத் தலைவன்.
குருகு _  இளமுடைய விலங்கு : குட்டி : குருத்து : பறவை : நாரை : வெண்மை : அன்றில் : கோழி : மூலநாள் : கைவளை :குருக் கத்தி மரம் : ஒரு நாடு : இடைச் சங்க நூல்களுள் ஒன்று.
குருகு மண் _  வெண் மணல்.
குருகுருத்தல் _  நமைத்தல் : நெஞ்சை உறுத்துதல்.
குருகுலம் _  குரு மரபு.




குருகுல வாசம் _ கல்வியின் பொருட்டு மாணாக்கர்கள் ஆசிரியருடன் வாழ்தல்.
குருகூர், குருகை _  நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த ஆழ்வார் திருநகரி.
குருக்கத்தி _  மதவிக் கொடி.
குருக்கள் _ ஆசாரியர் : சிவன் கோயிலில் பூசை செய்பவர்.
குருக்கன் _  மெலிவிக்கும் நோய்.




குருக்குத்தி _  பிரம தண்டுச் செடி.
குரு சந்திர யோகம் _ குருவும் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம்.
குருசில் _  குரிசில்.
குருசு _  சிலுவை.
குருசேவை _ ஆசாரியனை வழி படுதலும் தொண்டு செய்தலும் .




குருடன் _  பார்வையில்லாதவன் : திருதராட்டிரன் :சுக்கிரன்.
குருடி _  பார்வையில்லாதவள்.
குருடு _  பார்வையின்மை : ஒளியின்மை.
குருட்டுக்கல் _  ஒளி மங்கின கல்.
குருட்டுத் தனம் _  அறியாமை.




குருட்டு நாள் _  செவ்வாயும், சனியும்.
குருட்டுப்புத்தி _ அறியாமையான புத்தி.
குருட்டு யோகம் _ முயற்சி யின்றிச் செல்வம் கிட்டுகை.
குருதட்சினை _  குருவிற்குச் சீடன் கொடுக்கும் காணிக்கை.
குருதி _  மூளை : இரத்தம் : சிவப்பு :செவ்வாய்.



குருதி வாரம் _  செவ்வாய்க்கிழமை .
குருது _  நெய் : தானியக் குதிர்.
குருத்தல் _  தோன்றுதல் : சினங் கொள்ளுதல்.
குருத்து _  ஓலைக்கொழுந்து : இளமை : வெண்மை.
குருத்து மணல் _  பொடி மணல்.



குருத்துவம் _  குருத்தன்மை: பெருமை : களம் : நன்றி.
குருத்தெலும்பு _  இளவெலும்பு.
குருத் தோலை _  இளவோலை.
குருநாதன் _  முருகக் கடவுள் : பரமகுரு.
குருநாள் _  பூச நாள் : வியாழக்கிழமை.




குருநிந்தை _  ஐந்து பெருங் குற்றங்களுள் ஒன்றான  குருவைப் பழித்தல்.
குரு நோய் _  அம்மை நோய்.
குருந்தம் _  குருந்த மரம் : குருந்தக்கல்.
குருந்து _ வெண் குருந்து: குழந்தை : காட்டெலுமிச்சை: குருக்கத்தி : குருந்தக்கல்.
குருபத்தி _  குருவின் மீது கொள்ளும் அன்பு.




குருபத்திரம் _  துத்தநாகம் : புளிய மரம்.
குரு பரம்பரை _  குரு வமிச வழி : ஆழ்வார் : ஆசாரியர்களின் வரலாறு கூறும் நூல்.
குருபரன் _  பரம குரு.
குருபன்னி _  குரு பத்தினி.
குருபீடம் _ குருவினது இடம்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:27 pm

குரு பூசை _  குரு சமாதியடைந்த நாளில் ஆண்டு தோறும் மகேசுவர பூசையுடன் அக் குருவுக்கு  ஆராதனை செய்யும் வழிபாடு.
குருப்பு _  பரு.
குருமணி _  பரமகுரு.
குருமித்தல் _  பேரொலி செய்தல் : முழங்குதல்.
குருமுனி _  அகத்தியன்.



குருமூர்த்தம் _  தெய்வம் குருவாக வருதல் : குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி.
குருமூர்த்தி _  தட்சிணா மூர்த்தி : பரமகுரு.
குருமை _  பெருமை : வண்ணம்.
குரும்பட்டி _  தென்னை : பனைகளின் இளங்காய்.
குரும்பம் _  வலை.



குரும்பி _  புற்றாஞ்சோறு.
குரும்பை _  பனை : தெங்குகளின் பிஞ்சு : இளநீர் : காதினுள் திரளும் குறும்பி : புற்றாஞ்சோறு.
குருலிங்க சங்கமம் _  குருவும் சிவமும் திருக்கூட்டமும்.
குருவகம் _  வெண் சிவப்பு.
குருவண்டு _  புள்ளியுள்ள குளவி வகை.



குருவருடம் _  நவ கண்டங்களுள் ஒன்று.
குருவன் _  குரு.
குருவாரம் _  வியாழக்கிழமை.
குருவால் _  இத்தி மரம்.
குருவி _  ஒரு சிறு பறவை : குன்றி மணி : மூல நாள்.



குருவிக்கண் _  சிறுகண் : சிறு துளை.
குருவிக்கல் _  ஒரு வகைச் செம்மண்.
குருவிக்காரன் _ குருவி பிடிப்பவன் : ஓர் இனத்தவன்.
குருவிக்கார் _   கார் நெல் வகை.
குருவிஞ்சி _  காட்டு வெற்றிலை.



குருவித் தலை _  மறைந்திருந்து அம்பு எய்தற்குரிய  மதில் உறுப்பு : சிறிய தலை.
குருவிந்தம் _  தாழ்ந்த தர மாணிக்க வகை: குன்றி மணி : சாதி லிங்கம் : வாற் கோதுமை.
குருவி வாலான் _   பெரு நெல் வகை.
குருவுக்காதி _  பச்சை கருப்பூரம்.
குருளை _  இளமை : விலங்கின் குட்டி : குழந்தை : ஆமை.



குருள் _  மகளிர் தலை மயிர்: நெற்றியில் மயிர்ச்சுருள்.
குரூபம் _  வேறுபட்ட உருவம்.
குரூரம் _  கொடுமை.
குரூர வதை _  சித்திரவதை.
குரை _  ஒலி : பெருமை : பரப்பு : குதிரை : இசை நிறை.



குரைத்தல் _ ஆரவாரித்தல் : குலைத்தல்.
குரைப்பு _  ஓசை.
குரைமுகன் _  நாய்.
குரோசம் _  கூப்பிடு தொலைவு: 2  1/4 மைல் கொண்ட தொலைவு.
குரோட்டம் _  நரி.



குரோட்டு, குரோடம் _  பன்றி.
குரோதம் _  பகைமை : கோபம்.
குரோதன _  ஒரு தமிழ் ஆண்டு.
குரோதன் _  வீரபத்திரன் : கோபம் உள்ளவன்.
குரோதி _  ஒரு தமிழ் ஆண்டு:  பகைவன்.



குலகன்னி _  கற்பரசி.
குலகாயம் _  குலவொழுக்கம்: பேய்ப் புடலை: நத்தை.
குலகாலன் _  குலத்தைக் கெடுப்பவன்.
குலகிரி _ எட்டுத் திக்குகளிலிருந்தும் உலகைத் தாங்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள்.
குலகுரு _  வமிச குரு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 10:28 pm

குலக்காய் _  சாதிக்காய்.
குலக்கொழுந்து _  குலத்தை விளங்கச் செய்பவன்.
குலங்கூறுதல் _  நற்குடிப் பிறப்பைப் பாராட்டுதல்.
குலசன் _  ஒழுக்கமுடையவன் : நற்குலத்தினன்.
குலசேகரன் _  குலத்தில் சிறந்தோன் : குல சேகரப் பெருமாள்: பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் .



குலசேகரன் படி _  திருமால் கோயிலின் கருவறை வாயிற்படி.
குலச்சிறை _  மதுரையை ஆண்ட கூன் பாண்டியனின் அமைச்சர் : அறுபத்து மூன்று நாயனாருள் ஒருவர்.
குலச்சுமால் _  களத்தில் விற்கும் தானியம்.
குலஞ் செப்புதல் _  தன் குலப் பெருமை கூறுதல்.
குலடை _ கற் பொழுக்கம் கெட்டவள்.




குலதருமம் _  குல ஒழுக்கம்.
குலதிலகன் _  குலத்தில் சிறந்து விளங்குபவன்.
குலதெய்வம் _  ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம்.
குல நாசகம் _  ஒட்டகம்.
குலந் தெரித்தல் _  குலப்பழி தூற்றுதல்.



குலபதி _  குலத்துக்குத் தலைவன் : பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன்.
குலப்பம் _  செம்பு மணல் : கக்குவான்.
குலப்பரத்தை _  கணிகையர் குலப்பெண் : ஒருவர்க்கே உரிமை பூண்டு ஒழுகும் பரத்தையர் குலத்தவள்.
குலமகள் _  நற்குடிப்பிறந்தவள்.
குலமகன் _  நற்குடிப்பிறந்தவன்.




குலமணி _  குலத்திற் புகழ் மிக்கவன்: சாதி ரத்தினம்.
குலமதம் _  குடிப்பிறப்பால் தோன்றும் செருக்கு.
குல மரியாதை _  குலத்தின் ஒழுங்கு.
குலமீன் _  வட மீன் : அருந்ததி.
குலமுதல் _  மரபு முன்னோன் : மகன் : குல தேவதை : குல தெய்வம்.



குலமுறை _  மரபு வரலாறு.
குலம் _  குடி : சாதி : இனம் : மகன் : குழு: கூட்டம் : வீடு : அரண்மனை : கோயில் : இரேவதி நட்சத்திரம் : நன்மை : அழகு : மலை : மூங்கில் : விழுப்பம் : கற்கண்டு : தினை : உலகம்.
குலம்பா _  பேய்ச்சுரை.
குலரி _  குலை : பூங்கொத்து .
குலவரி _  சந்தனம் : செஞ்சந்தனம் .




குலவரை _  எண் குல  மலை : சிறந்த மலை.
குலவலி _  இலந்தை.
குலவன் _  உயர் குடிப் பிறந்தோன்.
குலவித்தை _  குலத்துக்குரிய கல்வி.
குல விருது _  குலத்துக்குரிய பட்டம்.



குலவு _  வளைவு.
குலவு காசம் _  நாணற் புல்.
குலவுதல் _  விளங்குதல் : மகிழ்தல் : உலாவுதல் : நெருங்கி உறவாடுதல் : தங்குதல் : வளைதல் : குவிதல்.
குலவுரி _  சந்தன மரம் : செஞ் சந்தன மரம்.
குலவை _  குரவை : மாதர் வாயால் செய்யும் மங்கல  வொலி.



குலா _ மகிழ்ச்சி.
குலாங்கனை _  உயர் குலத்தவள்.
குலாசாரம் _  குல வொழுக்கம்.
குலாசாரியன் _  குலகுரு.
குலாதனி _  கடுகு ரோகிணி.




குலாமர் _  உலோபிகள்.
குலாம் _  அடிமை.
குலாயம் _ பறவைக்கூடு : வலை.
குலாயனம் _  மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு.
குலாரி _  ஒரு வகை வண்டி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 30 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum