தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 7 of 36 Previous  1 ... 6, 7, 8 ... 21 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:01 pm

சோ - அரண் : உமை : ஓர் எழுத்து : வியப்புச் சொல் : வாணாசுரன் நகர் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:01 pm

சோக நீக்கி - மாதவி.
சோகம் - உண்டை : ஒட்டகம் : சோம்பல் : சோர்வு : துன்பம் : தொடை : ஐங்கணைத் துன்பத்தில் ஒன்று : அசோகு : திரள்.
சோகம்பாவனை - ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல்.
சோகாத்தல் - துன்பப்படுதல் : வதங்குதல்.
சோகாப்பு - துன்பம்.


சோகி - பலகறை : பிடாரன் : விட வைத்தியன்.
சோகு - பேய் : பிசாசம்.
சோகை - இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை.
சோங்கம் - அகில் மரம் : சிச்சிலிக் கிழங்கு.
சோங்கு - மரக்கலம் : குருகு : மலைச் சோலை : மறத்தல் : நாரை : கானாறு.


சோங்குதல் - சரிதல் : வாடுதல் : மறத்தல்.
சோசக்காய் - தேங்காய்.
சோசித்தல் - வற்றுதல் : துக்கப்படுதல் : சோர்வடைதல்.
சோச்சிபாச்சி - சோறும் பாலும்.
சோடசி - வேள்வி இருபத்தொன்றுள் ஒன்று.


சோடன் - கீழ்மகன் : சோம்பன் : மூடன்.
சோடித்தல் - அழகு செய்தல் : வற்றுதல் : முனைந்து பேசுதல்.
சோடு - இரண்டு : கவசம் : செருப்பு : காற்கவசம் : ஓர் எடை : ஒப்பு.
சோடு கட்டுதல் - சரிவர இணைத்தல் : சூதாட்டத்தொன்று.
சோடை - அறிவிலி : ஒரு நோய் : விருப்பம் : வறட்சி : மகிழ்ச்சி : கடமை : வண்டிப் பாதை : 
காய்த்து ஓய்ந்த மரம்.


சோட்டா - வளைதடி.
சோட்டைப் பண்டம் - ஆசை உணவு.
சோணம் - இரத்தம் : ஓர் யாறு : கடல் : சிவப்பு : செங்கரும்பு : செந்தூரம் : தீ : சோணகிரி : பொன்.
சோணாகம் - பெருவாகை.
சோணாடு - சோழநாடு.


சோணி - பலகறை : இரத்தம்.
சோணிதம் - இரத்தம் : சிவப்பு : மஞ்சள் : சுரோணிதம்.
சோணை - அருகு : அருணை மாநகர் : காதின் அடித்துண்டு : சோணாசலம் : சோணை நதி : திருவோணம் : 
மண்வெட்டியில்  காம்பு சொருகும் அடிப்பகுதி : கைப்பிச்சுவா : கோட்டை : மதில் : சேரலாதன் மனைவி.
சோதகம் - கழிக்குந் தொகை : சோதனை : சுத்தி பண்ணல் : தலைப் பெயல் மழை.
சோதகன் - கல்விமான் : ஆசிரியன்.


சோதம் - ஒழுகல் : சுத்தமான நீர்.
சோதரன் - உடன் பிறந்தோன்.
சோதனம் - தூய்மை செய்தல் : சோதித்தல் : துரிசு : புடமிடுகை.
சோதனி - துடைப்பம் : செத்தை.
சோதனை - அளவு : ஆராய்வு : கட்டளை : சோதிப்பு : பிரமாண்டம் : புடமிடுகை : குறிப்பு : 
பரீட்சை : முகத்தலளவு.


சோதி - அருகன் : இடிவு : உணர்வு : ஒளி : கடவுள் : கருப்பூரம் : சாதிலிங்கம் : சிவன் : சுவாதிநாள் : 
கதிரவன் : பூநாகம் : விண்மீன் : திருமால் : சோதியென்னேவல்.
சோதி சொருபிணி - அறுபத்தெட்டாவது மேளகர்த்தா.
சோதிட நூலோர் - எண் கலைஞர்.
சோதிடம் - வான சாத்திரம் : கோள் சார நூல்.
சோதித்தல் - ஆராய்தல் : இலங்கல்.


சோதிநாயகன் - கடவுள்.
சோதிமயம் - மிக்கவொளி : ஒளியுருவம்.
சோதிவிருட்சம் - ஒளி மரம்.
சோதினி - செத்தை : துடைப்பம்.
சோத்தம் - தோத்திரம் : இழிந்தார் செய்யும் அஞ்சலி.


சோத்தியம் - கழிக்கப்படுந் தொகை : வியப்பு : சுத்தம் : சோதிக்கப்படுவது.
சோத்திரம் - காது : கேள்வி.
சோந்தை - பற்று : இடையூறு.
சோபகிருது - முப்பத்தேழாவதாண்டுப் பெயர்.
சோபம் - அழகு : ஆயாசம் : இரக்கம் : ஒளி : கள் : சோம்பல் : சோர்வு : தாமதகுணத்தொன்று : 
பத்துக் கோடி : கோடாகோடி : பிரபை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:01 pm

சோபனம் - அழகு : மகிழ்ச்சி : சுபம் : தாமரை : நித்திய யோகத்தொன்று : நன்மை : முகூர்த்தம் : வாழ்த்து.
சோபாதி - உபாதியோடு கூடியது.
சோபாலிகை - அடம்பு : அடுப்பு : சுவாலையுள்ளது : விரிதூறு.
சோபான முறை - படிக்கிரமம்.
சோபானம் - கற்படி : தாழ்வாரம் : நன்னிமித்தம் : வசதி.


சோபித்தல் - ஒளி செய்தல்.
சோபை - அழகு : ஒளி : ஒருவித நோய்.
சோப்பி - ஈச்சோப்பி.
சோப்புதல் - அடித்தல் : வாட்டுதல்.
சோமகுண்டம் - காவிரியாற்றுச் சங்கமத்திலிலுள்ள ஒரு தடாகம்.


சோமநாதன் - சிவன்.
சோமபந்து - ஆம்பல் : சூரியன் : புதன்.
சோம மண்டலம் - சந்திரமண்டலம்.
சோமம் - ஆகாயம் : ஒரு பூண்டு : கஞ்சி : கள் : ஒரு வேள்வி.
சோமவட்டம் - அமிர்தம் பெருகும் இடம் என்று கருதப்படும் புருவ மத்தி.


சோமவல்லரி - பொன்னாங்காணி.
சோமன் - அட்டவசுக்களில் ஒருவன் : அமுதம் : ஒரு வள்ளல் கருப்பூரம் : காற்று : சந்திரன் : சிவன் : 
சீலை : தூது : நமன் : நீலபாஷாணம் : பன்னிரண்டு முழமுள்ள புடைவை : புதன் : மலை.
சோமாறி - சமையற்காரன் : சோம்பேறி.
சோமாஸ்கந்தர் - உமையோடும் கந்தனோடும் கூடியுள்ள சிவமூர்த்தம்.
சோமி - ஆற்றூரிலே கீர்த்தி பெற்றிருந்த ஒரு தாசி : துர்க்கை.


சோம்பல் - அழுங்கல் : தாமத குணத்தொன்று : பெருஞ்சீரகம் : மடிமை : மந்தம் : சோம்பென்னேவல்.
சோம்புதல் - உறங்கல் : தாமதித்தல் : மடியாதல் : வாட்டங் கொள்ளுதல்.
சோம்பேறி - சவர்ணபேதி : சோம்பியிருப்பவன்.
சோயம் - 'இவன் அவனே' என்னும் பொருள் கொண்ட வடமொழித் தொடர்.
சோய்வு - சோர்வு : மயக்கம் : களைப்பு.


சோரகன் - கள்வன்.
சோரங்கொடுத்தல் - பறிகொடுத்தல் : மனைவியின் கற்பழியப் பெறுதல்.
சோரப் போடுதல் - ஆறப் போடுதல் : பின்போடுதல்.
சோரம் - களவு : வஞ்சனை : விபசாரம்.
சோரர் - கள்ளர்.


சோராவாரி - கொள்ளை : பலாத்காரம்.
சோரி - இரத்தம் : மழை : சிறுசெருப்படை.
சோரிகை - களவு.
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்.
சோர்ச்சி - அயர்ச்சி : தளர்வு : சோகம்.


சோர்தல் - தவறுதல் : தளர்தல் : பொசிதல் : தங்குதல் : வாடல் : விழுதல்.
சோர்பதன் - தளர்ந்த காலம்.
சோர்பு - சோர்வு.
சோர்பொழுது - மாலைக்காலம்.
சோர்மாறுதல் - நெகிழவிடுதல்.


சோர்மாற்று - நெகிழ்ச்சி.
சோர்வு - அயர்ச்சி : தளர்வு : மெலிவு : நெகிழ்ச்சி : மறதி : நிறையழிவு : களவு : தவறு : வதக்கம் : வியபசாரம்.
சோலி - காரியம் : தோணியில் ஒதுக்கிடம் : இரவிக்கை வகை.
சோலை - தோப்பு : மரச்செறிவு.
சோவெனல் - ஒலிக்குறிப்பு.


சோழகக் கச்சான் - தென்மேற்குக் காற்று.
சோழகக் கொண்டல் - தென்கீழ்த் திசை : தென்கீழ்த் திசைக் காற்று.
சோழகம் - தெற்கு : தென்காற்று.
சோழகன் - ஒரு காட்டுச் சாதியான் : கள்ளர் பட்டப்பெயர்.
சோழங்கன் - சோழன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:02 pm

சோழன் - தமிழ் நாட்டு மூவேந்தருள் ஒருவன்.
சோழிப்பல் - பலகறை போன்ற பல்.
சோழியப் பை - இரப்போர் பை.
சோழியர் - ஒரு சாதியார்.
சோழியவணம் - இருபதினாயிரம் வெற்றிலை பாக்குக் கொண்டது.


சோழிய வேளாளர் - சோழியர்.
சோழியன் - ஒரு வேளாளன் : மண்வெட்டி : சோழ நாட்டான்.
சோளம் - சோனப் பயிர் : சங்கஞ் செடி.
சோளி, சோளிகை - ஒரு வகைக் கூடை : பிச்சைக்காரர் பை.
சோறு - அன்னம் : கற்றாழஞ் சோற்றி முதலியன : பரணி நாள் : பூஞ்சுண்ணம்.


சோறுவாய்த்தல் - செஞ்சோற்றுக் கடன் கழித்தல்.
சோறுகொல்லி - பெருந்தீனிக் காரன்.
சோற்றி - மரத்தினுட் சோறு : வயிரமற்றது.
சோற்றிலை - கற்றாழை.
சோற்றுக்குவால் - அன்னக் குவியல்.


சோற்றுப்பனை - வயிரம் அற்ற பனை.
சோனகம் - ஐம்பத்தாறு நாட்டில் ஒன்று.
சோனகர் - துலுக்கர்.
சோனகன் - யவன நாட்டான்.
சோனம் - முகில்.


சோனாமேகம் - பெருமழை பொழியும் முகில்.
சோனாவாரி - பெருமழை : விடாமழை.
சோனை - சொரிதல் : திருவோண நாள் : விடாமழை : மழைச் சாரல் : கார் முகில் : கைப்பிடிச்சுவர்.
சோனைப் புல் - அக்கதேவி.
சோனை மழை - பெருமழை.
சோன்மதன் - பித்தன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:02 pm

சௌ - சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின்
முதலெழுத்துக் குறிப்பு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:02 pm

சௌகந்தம் - சுகந்தம் : நறுமணம்.
சௌகந்திகம் - சௌகந்திக மலர்கள் நிறைந்துள்ள ஒரு தடாகம் : சௌகந்தி : கருங்குவளை : 
வெள்ளாம்பல் : பதுமராகமணி : மாணிக்கத்தின் மூன்றாவது சாதி.
சௌகந்திகை - ஒருவகைத் தாமரை : நல்ல மணம் உடையது.
சௌகம் - கிளி : தூக்கம் : நான்கு.
சௌகரியம் - சுகம் : வசதி : மலிவு.


சௌசம் - சுத்தஞ் செய்கை.
சௌசன்னியம் - அன்பு : இரக்கம் : நட்பு : பட்சம் : இனிய குணம் : அன்னியோன்னியம்.
சௌண்டிகன் - கள் விற்போன்.
சௌதம் - அரண்மனை : சாலை : மலிவு : வெள்ளி : மாளிகை.
சௌதாயம் - சீதனம் : நன்கொடை : பந்தயப் பொருள்.


சௌந்தரன் - அழகன் : சிவன்.
சௌந்தரியம் - அழகு.
சௌந்தரேசன் - சொக்கலிங்கமூர்த்தி.
சௌபலம் - சகுனி.
சௌபலி, சௌபலை - காந்தாரி.


சௌபாக்கியம் - மிகு செல்வம் : யோகத்துள் ஒன்று : உபநிடதத்துள் ஒன்று.
சௌபாஞ்சனம் - முருங்கை மரம்.
சௌபானம் - படிக்கட்டு.
சௌப்திகம் - துயில்வோரை எதிர்த்துக் கொல்லுகை.
சௌமன் - புதன்.


சௌமாரம் - இளமை.
சௌமிய - நாற்பத்து மூன்றாவதாண்டு.
சௌமியதாது - கோழை.
சௌமியபுவனம் - சோமலோகம்.
சௌமியம் - அழகு : சாந்தம்.


சௌமியவாரம் - புதன்கிழமை.
சௌமியன் - அருகன் : புதன் : சிவன்.
சௌரமாதம் - சூரிய கதியினால் ஏற்படும் மாதம்.
சௌரமானம் - சூரியன் கதியினால் அளவு செய்தல்.
சௌரம் - அட்டாதச உப புராணத் தொன்று : சூரம் : சூரிய மாதம் : சௌனம் : நாள் : சூரியனை
வழிபடுஞ் சமயம் : மயிர் கழித்தல் : சூரிய சம்பந்தம் : குடுமி வைத்தல்.


சௌரன் - சனி : சூரியன் : கள்ளன் : சோமன்.
சௌராட்டிரம் - ஓர் இராகம் : ஒரு நாடு : பண்வகை : வெண்கலம் : பித்தளை.
சௌரி - திருமால் : கருடன் : கன்னன் : சனி : துர்க்கை : நமன் : சவரி : யமுனையாறு : காளிந்தி நதி.
சௌரியம் - களவு : பலம் : சௌகரியம் : வீரம்.
சௌவீரம் - இலந்தைக்கனி : ஒரு மருந்து : ஒரு பட்டணம் : ஒரு நாடு.
சௌளம் - சௌரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:03 pm

செளகதன் _  சூனியவாதி : புத்தன்.
செளகந்தி _ ஒரு மாணிக்க வகை : கந்தக பாடாணம்.
செளக்கம் _ பண்டங்களின் மலிவு.
செளக்கியம் _ ஆரோக்கியம்.
செளசிகன் _ தையற்காரன்.


செளசேயன் _ வண்ணான்.
செளடு _ வண்டல்.
செளநந்தரம் _ அழகு.
செளந்தரி _  அழகி : பார்வதிதேவி.
செளபன்னம் _ சுக்கு : மரகதம்.



செளபாக்கியவதி _ சிறு பெண்கள் : சுமங்கலிகளின் பெயர்க்கு முன் வழங்கப்படும் மங்கலச் சொல்.
செளமேசகம் _  பொன்.
செளரகன் _ நாவிதன்.
செளரப்பியன் _  குபேரன்.
செளரிய லட்சுமி _ வெற்றித் திருமகள்.


செளரியன் _ வீரன்.
செளரு _ உவர்ப்பு.
செளலப்பியம் _ எளிவந்த தன்மை.
செளவீரகம் _ இலந்தை மரம்.
செளளாம்பரம் _ பட்டாடை.
செளனிகன் _ ஊன் விற்பவன்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:03 pm

ஞஃகான் - ஞகரம் : ஞ என்னும் எழுத்து. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:03 pm

ஞஞ்சை _ மயக்கம்.
ஞண்டு _  நண்டு : கடகராசி.
ஞத்துவம் _ அறியும் தன்மை.
ஞமர்தல் _ பரத்தல்: தங்குதல்: முற்றுதல்: ஒடிதல்: நெரிதல்.
ஞமலி _  மயில்: நாய்: கள்.


ஞமன் _  இயமன்: துலாக்கோலின் சமன்: வாய்.
ஞயம் _  நயம்: இனிமை.
ஞரல்தல் _  ஒலித்தல்: முழங்குதல்.
ஞவல் _  கொசு வகை : மின்மினிப்பூச்சி.
ஞறா _ மயிலின் குரல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:03 pm

ஞா - கட்டு : பொருந்து 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:04 pm

ஞாங்கர் _ இடம்: பக்கம் : மேல் : அங்கே : இனி: வேற்படை : முன்.
ஞாஞ்சில் _ மதிலுறுப்பு : கலப்பை.
ஞாடு _ நாட்டுப் பகுதி.
ஞாட்பு _ போர் : போர்க்களம் : படை : கனம்: வலிமை : கூட்டம்.
ஞாண் _ கயிறு : வில்லின் நாண்.


ஞாதம் _ அறியப்பட்டது : அறிபவன்.
ஞாதா _ ஞானவான்: அறிகிறவன்.
ஞாதி _ பங்காளி : தாயாதி : சுற்றம்,தொலையுறவினர்: பதினோர் உருத்திரளுள் ஒருவர்.
ஞாதிரு _ அறிபவன்: ஆன்மா.
ஞாதேயம் _ உறவு.



ஞாத்தல் _ கட்டுதல்: பொருந்துதல்.
ஞாபகம் _ நிறைவு : அறிவு : நற்பொருள்: குறிப்பிப்பது : மேற்கோள் இலக்கியம்.
ஞாபகவேது _ அறிவிற்குக் காரணமாயது.
ஞாபித்தல் _ நினைப்பூட்டுதல்.
ஞாயம் _ நியாயம்.



ஞாயில் _ கோட்டையின் ஏவறை.
ஞாயிறு _ சூரியன் : ஞாயிற்றுக்கிழமை : செளரமதம்.
ஞாய் _ தாய்.
ஞாலமாது _ நிலமகள்:ஊமத்தை.
ஞாலம் _ உலகம் : பூமி: நிலம் : மாயவித்தை : உயர்ந்தோர்.



ஞாலுதல் _ தொங்குதல்: பொழுது சாய்தல்.
ஞாழல் _ புலி நகக் கொன்றை : குங்கும மரம் : கோங்கு மரம் : மர வயிரம் : ஆண்மரம் : மல்லிகை வகை.
ஞாழல் மாது _ ஊமத்தை.
ஞாழி _ வள்ளைக் கொடி.
ஞாழ் _ யாழ்.


ஞாளம் _ தண்டு.
ஞாளி _ கள்: நாய்.
ஞாளியூர்தி _ நாயை ஊர்தியாகவுடைய வைரவன்.
ஞாறுதல் _ தோன்றுதல்: மணம் வீசுதல்.
ஞாற்றுதல் _ தொங்க விடுதல்.



ஞான கிருதம் _ தெரிந்த செய்த பாவம்.
ஞானக் கண் _ அறிவாகிய பார்வை.
ஞானக் கூத்தன் _ சிவபிரான்.
ஞானக்கை _ பரஞானமாகிய முத்தி சாதனம்.
ஞான சக்தி _ முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி.



ஞான சபை _ ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை.
ஞானசமாதி _ நிட்டையின் பொருட்டுத் துறவிகள் நேராக நிமிர்ந்திருக்கும் நிலை.
ஞான சரிதன் _ ஞான நெறியில் ஒழுகுபவன்.
ஞானசரீரம் _ உண்மை அறிவுமயமான சரீரம்.
ஞான சித்தன் _ உண்மை உண்மை அறிவு கைவரப்பெற்றவன்.



ஞான சுகம் _ இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்ப மகிழ்ச்சி.
ஞான சூனியன் _ மெய்யறிவற்றவன்.
ஞான தீட்சை _ ஞான உபதேசவகை.
ஞான நாயகன் _ கடவுள்.
ஞானப் பல் _ கடைசிக் கடைவாய்ப்பல்.


ஞானப்புதல்வன் _ மாணாக்கன்.
ஞானப் பூங்கோதை _ திருக்களத்தில் உள்ள உமையம்மை.
ஞான பரன் _ கடவுள்.
ஞான பாதம் _ சிவாகமம் நாள் பாதங்களுள் பதி பசு பாசம் ஆகியவற்றைக் கூறும் பகுதி: அருகக் கடவுள்: திருமொழி.
ஞானம் _ அறிவு : கல்வி: பூமி : தத்துவ நூல். 



ஞானவல்லியம் _ பார்வதிதேவி: கிணறு வெட்டுவதற்குரிய நிலத்தியல்பைக் கூறும் கூவநூல்.
ஞான விரல் _  மோதிரவிரல்.
ஞானாசாரியன் _ மெய்யறிவு புகட்டும் ஆசான்.
ஞானார்த்தம் _ மெயப்பொருள்.
ஞானானந்தம் _ பேரின்பம்.



ஞானானந்தன் _ கடவுள்.
ஞானி _ கேது : பேரறிவுடையவன்: அருகன்: நான் முகன்: சேவல்.
ஞானேந்திரியம் _ உணர்தற்குரிய மெய் ,வாய், கண், மூக்கு, செவி என்பன.
ஞானோதயம் _ மெய்யறிவு தோன்றுகை.
ஞான்று _ நாள்: காலத்தில்.
ஞான்றை _ காலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:04 pm

ஞிமிர - ஒலிக்க : நிமிர.
ஞிமிர் - ஒலி : ஞிமிரென்னேவல்.
ஞிமிர்தல் - ஒலித்தல் : நிமிர்தல்.
ஞிமிறு - வண்டு : தேனீ : பொன் வண்டு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:04 pm

ஞெகிழ - அலைய : கழல : சோர : நழுவ.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:05 pm

ஞெகிழம் _ சிலம்பு.
ஞெகிழி _ தீ : தீக்கடைக்கோல்: கொள்ளிக் கட்டை : கொடி வேலி: சிலம்பு.
ஞெகிழ்தல் _  கழலுதல்: தளர்தல் : மலர்தல்: மனம் : இளகுதல்: மெலிதல்: சோம்புதல்: உருகுதல்.
ஞெண்டுதல் _  கிண்டுதல்.
ஞெப்தி _  அறிவு : நினைவு.



ஞெமர்தல் _  பரத்தல் : நிறைதல்.
ஞெமலி _  மகநாள்.
ஞெமல் _ சருகு.
ஞெமல்தல் _ திரிதல்.
ஞெமன் கோல் _ துலாக் கோல்.



ஞெமிடுதல் _ கசக்குதல்.
ஞெமிதல் _ நெரிதல்.
ஞெமிர்தல் _ பரத்தல் : முற்றுதல்: தங்குதல் : ஒடிதல் : நெரிதல்.
ஞெமிர்த்தல் _ ஒடித்தல் : நெரித்தல் : அழுத்தல் : பரப்புதல்.
ஞெமுக்கம் _ அழுந்துகை : அமுக்கம்.


ஞெமை _ ஒரு மரவகை.
ஞெரல் _ ஒலி: விரைவு.
ஞெரி _ முரிந்த துண்டு.
ஞெரிதல் _ முரிதல்.
ஞெலி, ஞெலிகோல் _  தீக் கடைக்கோல்.



ஞெலிதல் _  குடைதல் : தீக்கடைதல்.
ஞெலுவன் _ தோழன்.
ஞெளிதல் _ நெளிதல்.
ஞெளிர் _ யாழின் உள்ளோசை: ஒலி.
ஞெளிர்தல் _  ஒலித்தல்.



ஞெள்ளல் _ உடன் படுதல் : பள்ள மாதல்: பூசை : விரைவு: சோர்வு : மிகுதி : வீதி : மேன்மை : குற்றம்.
ஞெள்ளுதல் _  உடன் படுதல்: ஒலித்தல் : பள்ளமாதல்.
ஞெள்ளை _ நாய்.
ஞெறித்தல் _ நெரித்தல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:05 pm

ஞேயம் - அறியப்படுவது : நெய் : நேயம் : கடவுள் : நட்பு : அன்பு : அறியப்படும் பொருள்.
ஞேயர் - அறிவுடையோர் : நண்பர்.
ஞேயா - பெருமருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:05 pm

ஞை - இகழ்ச்சிக் குறிப்பு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:06 pm

ஞொள்ளல், ஞொள்ளுதல் - அச்சக் குறிப்பு : அஞ்சுதல் : அலைதல் : இளைத்தல் : மெலிதல் : குலைதல் : சோம்பல் : குறைவுபடுதல் : குத்தல்.
ஞொள்ளு - இளை : அஞ்சு : சோம்பு : அலை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:06 pm

டக்கு - சட்டை முதலியவற்றை வைக்கும் மடிப்பு : தந்திரம் : பிகு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:06 pm

டங்கா _  ஒரு வகைத் தோற்கருவி.
டங்காரம் _ வில்லின் நாணோசை.
டபிரடி _ பெரும் பொய்.
டபேதார் _ தலைமைச் சேவகன்.
டாணா _ காவலிடம்.


டால் _  கேடகம் : கொடி : பெருமிதப் பேச்சு.
டிங்குசுரம் _ முடக்குக் காய்ச்சல்.
டீக்கு _ மிடுக்கு.


டேரா _   முகாம் : கூடாரம்.
டேவணி _ முன்பணம்.
டொங்கு _  பொந்து : கோணல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:07 pm

த - ஓர் எழுத்து : குபேரன் : நான்முகன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:07 pm

தகசு _ தவழ் கரடி என்னும் விலங்கு : தகடு.
தகடி _ பீதாம்பரம் : ஏமாற்றுகை :நீர்.
தகடு _ உலோகத் தட்டு : வண்ணத் தகடு : கம்மார் வெற்றிலை : கறுப்பு வெற்றிலை : பூவின் புறவிதழ் : வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு.
தகணிதம் _ துந்துபி : உலோக மணல்.
தகணேறுதல் _ தழும்பு படுதல்: பழக்கமாதல் : முற்றுதல்.


தகணை _ உலோகக் கட்டி.
தகத்து _ அரியணை : சிறந்த இடம் : பெருமை : அலங்காரத்தேர்.
தகப்படுதல் _ மேன்மை தங்குதல்.
தகப்பன் _ தந்தை.
தகப்பன் சாமி _ முருகக் கடவுள்.


தகம் _ சூடு : எரிவு.
தகரடி _  பெருமிதப் பேச்சு.
தகரஞாழல் _ மயிர்ச் சாந்து வகை.
தகரம் _ மணம் : வெள்ளீயம் : உலோகத்தகடு : இதயத்தின் உள்ளிடம்.
தகரவித்தை _ தியானத்தை உணர்த்தும் தன்மை.



தகராறு _ மறுப்பு : தடை : விவாதம்.
தகர் _  ஆடு : வெள்ளாடு : செம்மறி யாட்டுக் கடா : யாளியின் ஆண் : ஆண் யானை : ஆண் சுறா : மேட்டு நிலம் : பூமி : பலாசு மரம் : தகர் என் ஏவல்: அழி.
தகர்தல் _ உடைதல் : நெரிதல் : நொருங்குதல் : சிதறுதல் : அழிதல்.
தகர்த்தல் _ அழித்தல் : நெரித்தல் : சிதறடித்தல் : உடைத்தல் : குட்டுதல்.
தகர்வு _ அழிவு : உடைவு.



தகலக் கட்டுதல் _ ஏமாற்றுதல்.
தகல் _ தகுதி : ஒரு கீரை வகை.
தகவல் _ செய்தி : எடுத்துக் காட்டு : நேர் விடை.
தகவின்மை _ தகுதியின்மை : வருத்தம்.
தகவு _ தகுதி : உவமை : உரிமை : குணம் : பெருமை : அருள்: நீதி : வலிமை : அறிவு : தெளிவு : கற்பு : நன்மை : நல்லொழுக்கம்.



தகவுரை _ பரிந்துரை.
தகழி _ அகல் : உண்கலம் .
தகனம் _ எரித்தல் : செரித்தல்: உணவு : ஈமச் சடங்கு.
தகனன் _ நெருப்பு.
தகனித்தல் _ எரித்தல்.


தகனை _ உலோகக் கட்டி.
தகன் _ பூரான் : வேர் விட்ட பனங்கொட்டை : நெருப்பு : கீரை வகை.
தகா _ மிக்க ஆசை : பசி தாகம் : மோகம் : பொருளாசை : மோசம்.
தகித்தல் _ எரித்தல் : சூடு செய்தல்.
தகிலன் _ வஞ்சகன்.


தகிலாயம் _ நட்பு : நன்றி.
தகிலித்தல் _ உட் செலுத்துதல்: வஞ்சித்தல் : குற்றம் சாட்டுதல் : உழக்குதல் : பண்ட மாற்றம் செய்தல்.
தகிலிமா _  சேங்கொட்டை மரம்.
தகுணிச்சம் _ முழவு வகை: வரிக்கூத்து.
தகுணிதம் _ வாத்தியம் பொது : முழவு.



தகுதி _ பொருத்தம் : பொறுமை: மேன்மை : ஆற்றல் : அறிவு : குணம்.
தகுதியோர் _ அறிஞர் : சிறந்தோர்.
தகுதி வழக்கு _ பொருள்களுக்கு இயல்பாயுள்ள சொற்களை ஒழித்து வேறு தகுதியான சொற்கள் கொண்டு உரைத்தல்.
தகுவ _ இயன்றவை.
தகுவன் _ அசுரன்.



தகுவியர் _ அசுர மகளிர்.
தகுளம் _ அன்பு : அழகு : கவசம் : தகுதி : பொருத்தம் :  மேம்பாடு : ஒப்பு : பெருமை : இயல்பு : நிகழ்ச்சி : மாலை : தாகம் : தளர்ச்சி.
தகை _  தடுத்து விடு : ஆணையிடு.
தகைதல் _ தடுத்தல் : அடக்குதல்: கட்டுதல்.
தகைமை _ அழகு : தன்மை : தகுதி: பெருமை : மதிப்பு : ஒழுங்கு : நிகழ்ச்சி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:07 pm

தகைவு _ தடை : இளைப்பு.
தக்கடி _ வஞ்சனை : துரோகம் : கடுமை : பொய் : குதர்க்கம் : துலாக்கோல் : பத்துச் சேர் கொண்ட நிறையளவு.
தக்கடை _ இரட்டை தட்டுள்ள அளவு கோல்.
தக்கடைக்கல் _ நிறை கல் : எடை கல்.
தக்கணம் _ தெற்கு : வலப்பக்கம் : தக்கண நாடு.



தக்கணன் _ தக்கணா மூர்த்தி : தென் முகக் கடவுள்.
தக்கது _ தகுதியானது.
தக்கம் _ பற்று : நிலைபேறு : பல்லாங் குழி விளையாட்டில் காய் இல்லாத குழி : பாண்டத்தின் அடியில் தங்கிய பருக்கை வாதம் : முதல் : அற நூலுள் ஒன்று.
தக்கரம் _  களவு : வஞ்சகம்.
தக்கராகம் _ ஒரு பண்.



தக்கர் _ சாடி.
தக்கல் _ அடைப்பு.
தக்கவர் _ தகுதியுடையவர்.
தக்கன் _ பிரசாபதிபளுள் ஒருவன்: எண் வகை நாகத்துள் ஒன்று : கள்வன்.
தக்காணம் _ தெற்கு : வலப் பக்கம் : இந்தியாவின் தென்பகுதி.


தக்காரி _ வாத மடக்கி.
தக்கார் _ மேன் மக்கள்: உறவினர்: பெருமையிற் சிறந்தோர்.
தக்காளி _ மணித்தக்காளி : சீமைத் தக்காளி.
தக்காளிப்பிள்ளை _ பிள்ளைப் பூச்சி.
தக்கிணம் _ தெற்கு.



தக்கிணாக்கினி _ தென் முக அங்கி : வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று.
தக்கிரம் _ மோர்.
தக்கு _  தந்திரம் : இசையில் தாழ்ந்த ஓசை.
தக்குதல் _ நிலை பெறுதல் : பயன் படுதல்: ஏற்றதாதல் : நயப்படுதல்.
தக்கேசி _ மருத நிலப் பண்வகை.



தக்கை _ காதிலிடும் குதம்பை : ஒரு பறை : தெப்பம் : அடைப்பான்: பாலமாக இடும் பனையின் அடி மரம் : சோளம் முதலியவற்றின் உலர்ந்த தட்டை.
தக்கோர் _ அறிஞர் : சான்றோர்.
தக்கோலம் _ வால் மிளகு : தாம் பூலம் : திப்பிலி : சிறுநாவற் பூ: திருவூறல்  என்கிற தேவாரப் பாடல் பெற்ற ஓர் ஊர்.
தக்கோலி _  அகில் வகை.
தக்தம் _ சுடப்பட்டது.


தங்கக் குணம் _ சிறந்த குணம்.
தங்கச்சி _ தங்கை.
தங்கசாலை _  நாணயம் அடிக்கும் சாலை.
தங்கப் பூச்சு _ பொன் முலாம்.
தங்கமலை _  மகாமேரு.


தங்க முலாம் _ பொன் மெருகு.
தங்கம் _  பசும் பொன் : சிறந்தது : மிக நல்லவர்.
தங்கலர் _ பகைவர்.
தங்கல் _ தங்குதல்: தாமதித்தல்: தங்குமிடம் : நிலை பெறுதல்: அடியில் படிந்திருப்பது.
தங்கள் _ உங்களுடைய : ஒரு வழக்கு மொழி.


தங்காள் _ தங்கை : அம்மா.
தங்கு _ தங்கு என்னேவல் : இரு நிலைத்தல்.
தங்கு தடை _ தடுமாற்றம்.
தங்கு நடை _ தங்கிச் செல்லும் பயணம்.
தங்கு படி _ மீதி.



தங்கை _ இளைய சகோதரி.
தச _ பத்து.
தசகண்டன் _ இராவணன்.
தசகம் _ பத்து செய்யுள் கொண்ட பதிகம்.
தசசீலம் _ பத்து வகையான ஒழுக்க முறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:07 pm

தசமம் _ பத்தாவது : பத்தில் ஒன்று.
தசமி _ பத்தாம் திதி : ஒரு பணியார வகை.
தசமுகன் _ இராவணன்.
தசம் _ பத்து : சிவிகை.
தசரா _ துர்க்கையை வணங்கி நிகழ்த்தப் பெறும் பத்து நாள் விழா.



தசனம் _ பல்கவசம் : மலைமுடி.
தசாக்கரி, தசாட்சரி _ ஒரு பண் வகை.
தசாமிசம் _ பத்தில் ஒரு கூறு.
தசியு _ ஆரியர் அல்லாத சாதி வகை: திருடன்.
தசிரம் _ மழைத்தூறல் : குழல்: புரை : உட்டுளை.


தசுகரம் _ களவு.
தசுமன் _ கள்வன் : வேள்வி செய்விப்போன்.
தசும்பு _ குடம் : மிடா : பொன் : கோபுர விமானங்களின் உச்சிக்குடம்.
தசை _ இறைச்சி : ஊன் : புலால் : மாமிசம் : சதை : முடை நாற்றம்: பழத்தின் சதை : நிலைமை : கோளின் ஆட்சிக் காலம் : திரி.
தசைதல் _ பூரித்தல் : சதைப் பற்றாதல்.


தசை நார் _ அசைவு கொடுக்கும் நரம்பு.
தச்சகன் _ குடும்பத் தலைவன்.
தச்சக் கோல் _ 33 அங்குல முள்ள தச்சு முழம்.
தச்சவாடி _ தச்சு வேலை செய்யும் இடம்.
தச்சன் _ மரவேலை செய்பவன்: விசுவகர்மாவுக்குரிய சித்திரை நாள்.



தச்சன் குருவி _ மரங்கொத்தி .
தச்சி _ தயிர்.
தஞ்சக் கேடு _ வறுமை.
தஞ்சம்_ எளிது : தாழ்வு : அடைக்கலப் பொருள், பெருமை.
தஞ்சன் _ அறிஞன்.


தட _ பெரிய : வளைந்த : மெல்லிய .
தடக்கம் _ தடக்கு : தடை.
தடங்கல் _ தடை : மறுப்பு : சுணக்கம்.
தடத்தம் _ நடு நிலை : ஐந்தொழில்களைப் புரியும் இறை நிலை.
தடத்தன் _ மேலோன் : நடுநிலையாளன்.



தடபுடல் _ விரைவு : சந்தடி : பகட்டு.
தடமண் _ சுதைமண்.
தடம் _ நீர் நிலை : கரை : வரம்பு : வேள்விக் குழி : தாழ்வரை : வெளியிடம் : மலை : மூங்கில் : உயர்ந்த இடம் : வழி : சுவடு : பெருமை : அகலம் : செல்வப் பகுதி : வளைவு.
தடம் புரளுதல் _ நிலைகெடுதல்: பாதை கெடுதல்.
தடயம் _ பல பண்டம் : அணிகலன்கள் : விலங்கு : சுவடு : அடையாளம்.




தடல் _ மேட்டு நிலம் : பலாப்பழச் செதிள் : வாழை மடல் : விலங்கின் தோல்: மரப்பட்டை.
தடவரல் _ வளைவு.
தடவு _ பருமை : பகுதி : வேள்விக் குழி : தூபக் கால் : கணப்புச் சட்டி : சிறைச்சாலை : பூசு : தடவு என்னேவல்.
தடவுதல் _ வருடுதல் : பூசுதல் : இருளில் துழாவுதல் : தேடுதல்: திருடுதல்: அசைதல்: தடுமாறுதல்: யாழ் முதலியன மீட்டுதல்.
தடவு நிலை _ துறக்கம்.



தடவு வாய் _ மலைச்சுனை.
தடவை _ முறை : தவணை.
தடறு _ ஆயுத உறை.
தடா _ பானை : மிடா : கணப்புச் சட்டி : பருமை : மிடாவினும் பெரிய கலம்.
தடாக கருமம் _ மலங்கழிக்கை.



தடாகம் _ குளம்.
தடாதகை _ தடுத்தற்கரிய தகையுடைய மீனாட்சி தேவி.
தடாதடி _ குழப்பம்.
தடாம் _ வளைவு.
தடாரம் _ 
ஈரொத்துத் தாளம் : சின்னம்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:08 pm

தடாரி _  உடுக்கை : கிணைப் பறை : பம்பை : வாத்தியம் பொது.
தடாரித்தல் _ ஊடுருவுதல் : மிகக் கண்டித்தல்.
தடாவுதல் _  வளைதல்.
தடி _  கழி : தண்டாயுதம் : தடிக்கொம்பு : அளவு கோல்: உலக்கை : ஆற்றங் கரை : வயல் : பாத்தி : தசை : கருவாடு : உடும்பு : மின்னல்: கீறற்கையெழுத்து : மிதுன ராசி.
தடிகை _  மின்னல்.




தடிக்கம்பு _  கைக்கழி.
தடிதல் _  அழித்தல் : வெட்டுதல் : தண்டனை கொடுத்தல்.
தடித்தல் _  பெருத்தல் : மிகுதல் : உறைதல் : திரளுதல் : தாமதித்தல் : உரப்பாதல் : வீங்குதல்: பருத்தல்: சித்தம் : கடினமாதல்.
தடித்தனம் _ முருட்டுத் தனம் : மட்டித்தனம் : சோம்பேறித்தனம்.
தடித்து _  மின்னல்.



தடிப்பம் _  பருமை : வீக்கம்.
தடியன் _  கொழுத்தவன் : முரடன்.
தடிவு _  வெட்டு : கொலை : அழிக்கை.
தடினி _  ஆறு.
தடு _  தடுத்தல் : தடு என்னேவல்.



தடுக்கல் _  தடை.
தடுக்கு _ இடறுதல் : தட்டி : பாய் : தவிசு.
தடுத்தல் _  தடை செய்தல் : அடைத்தல் : அடக்குதல் : மறுத்தல் : பயனறச் செய்தல்.
தடுத்தாளுதல் _  திருத்தி வயமாக்குதல்.
தடுப்பு  _  தடுக்கை : தடை.



தடுமாற்றம் _  ஒழுங்கின்மை : தள்ளாடுகை : மனக் கலக்கம் : ஐயம் : தவறு.
தடை _  இடையூறு : தடுத்தல் : மறுப்பு : கவசம் : காப்பு : காவல் : வாசல் : அணை : அடைப்பு : மந்திரத்தடை : எண்பது பலம் கொண்ட அளவு.
தடை இய _  திரண்ட : பெருத்த.
தடை கட்டுதல் _  பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல் : தராசில் எடைத் தடையமிடுதல்.
தடைதல் _  தடுத்தல்.




தடையம் _  அணி கலங்கள் : தடை : களவு முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பொருள் : கத்திப்பிடி : பொன்னிறை கல் : தராசு தடை : நிறுக்கப் போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றின் எடை.
தடையறுத்தல் _  மந்திரத்தடை நீக்குதல் : இடையூறு விலக்குதல்.
தடை விடை _  மறுப்பும் மாற்றமும்.
தட்குதல் _  கட்டுதல் : தடுத்தல் : தங்குதல்.
தட்சகன் _  எண் வகை நாகத்துள் ஒன்று : குடும்பத்தலைவன்.



தட்சசங்காரன் _  தக்கனை அழித்தவனான சிவன்.
தட்சணம் _  தெற்கு : வலப்பக்கம் : அப்போது.
தட்சணாக்கினி _  தென்முக அங்கி : வேள்வித் தீ மூன்றனுள் ஒன்று.
தட்சணாமூர்த்தி _  தென் முகக் கடவுள்.
தட்சணாயனம் _  சூரியன் தெற்குத் திக்கு நோக்கிச் செல்லும் ஆடி முதல் ஆறு மாதம்.



தட்சிணம் _  தக்கினம் : தெற்கு : வலப்பக்கம் : அறிவுக்கூர்மை : தாராளம்.
தட்சணாசலம் _  பொதிய மலை.
தட்சிணாமூர்த்தி _ தென் முகமாயிருக்கும் சிவமூர்த்தி : தெற்கிலியிருக்கும் அகத்தியர்: நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
தட்சிணை _ குரு முதலிய பெரியோர்களுக்கு வழங்கும் பொருள்.
தட்டத்தானி _  தன்னந்தனி : முற்றும் தனிமையாயிருத்தல்.



தட்டம் _  உண் கலம் : தாம்பாளம் : துயிலிடம் : படுக்கை: கச்சு : கை கொட்டுதல் : நீர் நிலை : அகன்ற இதழ் கொண்ட பூ : பல் : பாம்பின் நச்சுப் பல் : யானை செல்லும் வழி : வயல் : நிலத்தில் வீழ்ந்து வணங்குகை : அல்குல் : மோவாய்.
தட்டம்மை _  அம்மை நோய் வகை.
தட்டல் _  கைதட்டுதல் : தாளம் போடுதல் : தடுத்தல் : முட்டுப்பாடு : தாளம்.
தட்டழி _  ஒரு வாத்திய வகை.
தட்டழிதல் _  நிலை கலைதல் : சீர் கெடுதல் : தோல்வியுறுதல்: திகைத்தல்.


தட்டழிவு _  கலக்கம் : தோல்வி.
தட்டறை _  அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை.
தட்டாரப் பூச்சி _  ஒரு பூச்சி வகை.
தட்டான் _  பொற் கொல்லன்.
தட்டி _  காவல் : கதவு : சிறை : படல் : பலகை : பிரம்பு முதலியவற்றால் பின்னிய தடுக்கு : ஆயுத வகை : வாத்திய வகை : தாம்பாளம் : வெண் கோட்டம் : வெற்றிலைக் கட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:08 pm

தட்டிக் கவி _  கருப்பூர ஆரத்திப் பாட்டு.
தட்டிக் கழித்தல் _ விலக்குதல் : செய்ய வேண்டிய பணியை வேறு காரணத்தை முகமனாகக் கூறிச் செய்யாது நீங்குதல்.
தட்டிக் கேட்டல் _  அடக்கி ஆளுதல்: ஆணை செலுத்துதல்.
தட்டிக் கொடுத்தல் _  தூண்டுதல்: ஊக்கம் கொள்ளச் செய்தல்.
தட்டிக் கொள்ளுதல் _  பறித்தல் : கவர்தல்.



தட்டிப்பேசுதல் _  மறுத்துரைத்தல் : திக்கிப் பேசுதல்.
தட்டியம் _  நெடுங்கேடயம்.
தட்டியழைத்தல் _  கை கொட்டிக்கூப்பிடுதல்.
தட்டியளத்தல் _  தானியத்தை அளவு கருவியின் தலையை வழித்து அளத்தல்.
தட்டி விடுதல் _  ஊக்கப் படுத்துதல் : கவிழச்செய்தல் : வெட்டி விடுதல்: தப்புதல்: உழுதசாலில் திரும்ப உழுதல் : பின் வாங்கச் செய்தல்.



தட்டு _  தட்டுகை : அடி: மோதுகை : தாளம் போடுதல்: முட்டுப்பாடு : தடை: குற்றம் : மறைவு : காவல்: பயிர்த் தட்டை : தராசுத் தட்டு : வட்டம் : வளைவு : கேடகம் : குயவன் : சக்கரம் : முறம் : தேரின் நடுவிடம் : ஆசனத் தடுக்கு : நெடுங்கை : பூ விதழ் : விபசாரி.
தட்டுக் காரன் _  ஏமாற்றுக்காரன் :தந்திரக்காரன்.
தட்டுக் கிளி _  ஒரு விளையாட்டு வகை.
தட்டுக் கூடை _  அகன்ற கூடை.
தட்டுக் கேடு _  இழப்பு : அழிவு : வறுமை : குழப்பம்.



தட்டுக் கொட்டு _  கொட்டு முழக்கு : போலி நடிப்பு : மினுக்குப் பொருள்: தந்திரம்.
தட்டுச் சுளகு _  அகன்ற முறம்.
தட்டுத் தாவரம் _ புகலிடம்.
தட்டுதல் _  மோதுதல்: கொட்டுதல் : தள்ளுதல்: அகற்றுதல்: தடுத்தல்: தப்புதல்: மறுத்தல்.
தட்டுப் படுதல் _  குறைவு படுதல்: தடைப்படுதல் : புலன்களுக்குத் தெரிதல்.



தட்டு மானம் _  ஏமாற்று : தந்திர வழி.
தட்டு முட்டு _  கருவிகள் : வீட்டுப் பொருள்கள்.
தட்டுவாணி _  குதிரைவகை : விலை மகள்.
தட்டை _  பயிர்களின் அடித்தாள்: மொட்டை : பரந்த வடிவம் : முறம் : திருகாணி : தினைத்தாள் :மூங்கில்: கிளிகடி கருவி : கவண் : கரடி கைப்பறை : அறிவிலி : காலணி வகை : தீ.
தட்டோடு _  தட்டையோடு : கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஒரு வகை ஓடு.




தட்பம் _  குளிர்ச்சி : அருள்.
தணக்கு _  நுணாமரம் : தணக்க மரம் : முட்டைக் கோங்கிலவு மரம் : வால்.
தணத்தல் _  போதல் : நீங்குதல்: பிரிதல் : நீக்குதல்.
தணப்பு _  தடை : செல்லல்: நீங்குதல்.
தணலம் _  எருக்கு.



தணல் _  நெருப்பு : நிழலிடம்.
தணவம் _  அரச மரம்.
தணி _ மலை : குளிர்ச்சி : தேர் நெம்புங் கட்டை.
தணிகை _  திருத்தணிகை என்னும் தலம்.
தணிக்கை _  மேற்பார்வையிடுதல்: விதிமுறைப்படி சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தல்.




தணிதல் _  குறதைல்: ஆறுதல்: வற்றுதல்: தாழ்தல்: இசைதல்: நிறைதல்.
தணிவு _  குறைகை : சாந்தம் : வணக்கம் : நீர் வற்றுதல்: தாழ்வு.
தணுப்பு _  குளிர்ச்சி : நீர்க்கோவை.
தண் _  குளிர்ச்சி : அருள்.
தண்கதிர் _  நிலவொளி : சந்திரன்.




தண்டக மாலை _  300 வெண் பாக்களால் பாடும் நூல் வகை.
தண்டகம் _  தொண்டை நாடு : தண்டகாரண்யம் : தண்டனை: முதுகெலும்பு : அணிகலன்: கரிக்குருவி : நுரை.
தண்டகன் _  ஒரு மன்னன் : இயமன்.
தண்டகாரண்யம் _  தக்கண தேயத்தில் துறவியர் வசித்து வந்த ஒரு  காடு.
தண்டச்சக்கரம் _   குயவனது சுழற்றுக் கருவி.




தண்டஞ்செய்தல் _  நிலத்தில் வீழ்ந்து வணங்குதல்: தண்டித்தல் : கோலால் அளத்தல்.
தண்டத் தலைவன் _  படைத் தலைவன்.
தண்டத்தான் _  இயமன்.
தண்டநாயகம்  _  படைத்தலைமை.
தண்ட நாயகன் _  படைத்தலைவன் : அரசன்: சிவகணத் தலைவனாகிய நந்தி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 7 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 36 Previous  1 ... 6, 7, 8 ... 21 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum