தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 21 of 36 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 28 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:42 pm

பிரசண்டன் _ வலியன் : கடுமையானவன்.
பிரசத்தி _ சாசனம் : தக்க சமயம்.
பிரசம் _ பூந்தாது : தேன் : தேனீ : வண்து : கள்.
பிரசம்சை _ புகழ்ச்சி.
பிரசலை _ மனக்கலக்கம்.


பிரசவம் _ மகப்பேறு.
பிரசன்னம் _ தெளிவு : காட்சி.
பிரசாதம் _ தெளிவு : திருவருள்: சோறு : கடவுளுக்குப் படைக்கப்படும் பொருள்.
பிரசா பத்தியம் _ எண்வகை மணத்துள் ஒன்று : மக்களாட்சி.
பிரசாபதி _ பிரமன் : துணைப்பிரமன் : அரசன் : ஆண்மர்த்தானம்.



பிரசாரம் _ பரவுதல் : வேங்கை மரம்.
பிரசித்தம் _ வெளிப்படை : புகழ்.
பிரசித்தி _ புகழ்.
பிரசினம் _ கேள்வி : சிக்கல்: உபநிடதத்துள் ஒன்று.
பிரசீனம் _ காற்று.



பிரசுரம் _ அறிவிப்பு : நூற்பதிப்பு.
பிரசுரன் _ சுக்கிரன் : மிக்கவன்.
பிரசூனம் _ பூ.
பிரசை _ சந்ததி : குடி.
பிரசோற்பத்தி _ மக்கட் பெருக்கம்: ஒரு தமிழ் வருடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:43 pm

பிரச்சினை _ சிக்கல்.
பிரஞ்ஞன் _ அறிஞன்.
பிரஞஞானம் _ அறிவு.
பிரடை _ யாழ் முதலியவற்றின் முறுக்காணி.
பிரட்டன் _ வஞ்சகன் : நன்னெறியின்று தவறியவன்.


பிரணயம் _ அன்பு.
பிரணவம் _ ஓங்கார மந்திரம்.
பிரணாமம் _ பெரியோர் முன் செய்யும் வணக்கம்.
பிரண்டை _ ஒரு கொடி வகை.
பிரதட்சிணம் _ வலம் வருதல்.



பிரதம காலம் _ விடியற்காலம்.
பிரதமம் _ தொடக்கம் : முதன்மை.
பிரதமர் _ தலைமை அமைச்சர்.
பிரதானை _ உமையம்மை.
பிரதி _ ஒத்த தன்மை : படி : நகல்: ஒவ்வொரு.



பிரதிக்கினை _ துணிந்த பொருள் : சூளுரை : சம்மதி : தீர்மானம்.
பிரதிகூலம் _ தீமை : தடை : கைகூடாமை.
பிரதிட்டாகலை _ சீவான் மாவை முத்தியில் உய்க்கும் கலை.
பிரதிட்டை _ தெய்வத்தைப் புதுக் கோயிலில் வைத்தல் : புகழ் நிலை நிறுத்துதல்.
பிரதி நிதி _ பதில் ஆள்.



பிரதி பதம் _ பதவரை.
பிரதி பத்தி _ நம்பிக்கை : சிறப்பு : மதிப்பு.
பிரதி பந்தம் _ தடை.
பிரதி பலன் _ கைம்மாறு.
பிரதி பலித்தல் _ உருவம் தோன்றுதல்.



பிரதி பிம்பம் _ எதிர் உருவம் : போலியுரு.
பிரதிமை _ உருவம் : உருவச்சிலை.
பிரதிவாதி _ எதிர் வழக்காடுபவர்.
பிரதீகம் _ உறுப்பு.
பிரதீசி _ மேற்கு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:43 pm

பிரதீபம் _ எதிர் நிலை.
பிரதேசம் _  நாட்டுப் பகுதி : இடம்.
பிரத்தம் _  ஒரு நிறை : அளவு : நாழி : பிரமாதம்.
பிரத்தல் _  எழுத்தில்லா ஒலி.
பிரத்தியக்கு _  மேற்கு.



பிரத்தியட்சம் _  காட்சி.
பிரத்தியேகம் _  சிறப்பியல்பு : தனிமை.
பிரபஞ்சம் _  உலகம் : உலக வாழ்வு.
பிரபஞ்சனன் _  காற்று.
பிரபத்தி _  அடைக்கலம்.



பிரபந்தம் _  சிறு நூல் : பாமாலை : இசையுரு : கட்டுரை.
பிரபலம் _  புகழ்.
பிரபவ _ முதல் தமிழ் வருடம்.
பிரபாகரன் _  சூரியன் : அக்கினி : தேவன்: சந்திரன்.
பிரபாகீடம் _  மின்மினி.



பிரபாதம் _ மலைவீழருவி : விடியற் காலை : செங்குத்து : தெரு : கரை.
பிரபாதிகம் _  மயில்.
பிரபாவம் _  ஒளி : புகழ் : மேன்மை : வலிமை.
பிரபிதாமகன் _  கொள்ளுப் பாட்டன்.
பிரபிதா மகி _  கொள்ளுப்பாட்டி.



பிரபு _  பெருமையுடையவன் : பாதரசம்.
பிரபுத்தன் _ இளைஞன் : விழிப்புடையவன்.
பிரபை _  ஒளி : தண்ணீர்ப் பந்தல் : திருவாசி : துர்க்கை.
பிரபோதம் _ பேரறிவு.
பிரமகத்தி _  பார்ப்பனக் கொலைப்பாவம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:43 pm

பிரமகற்பம் _  பிரமனின் ஆயுட் காலம்: ஒரு பேரெண்.
பிரமகன்னிகை _  கலைமகள்.
பிரமகூர்ச்சம் _ தருப்பை முடிச்சு : பசுவிடம் கிடைக்கும் பஞ்ச கவ்வியம்.
பிரமக் கிழத்தி _ இறைவனது சத்தி.
பிரமசரியம் _  மாணவம் : திருமணம் இல்லா வாழ்க்கை : தவம்.


பிரமசாரி _ திருமணமாகாதவன் : மாணவன்.
பிரமஞானம் _ கடவுளைப்பற்றிய அறிவு.
பிரமணம் _ திரிதல் : மயக்கம் : சுழலுதல்.
பிரமதகணம் _  சிவகணம்.
பிரமதண்டம் _  மந்திர ஆயுதம் : யோக தண்டம் : நற்செயல்களுக்கு ஆகாத நட்சத்திரம்.



பிரமதனம் _ கொலை.
பிரமதாளம் _  சச்சரிப்பறை.
பிரமநாதை _  தாம்பிரபரணி : ஆறு.
பிரம நாழிகை _  சூரியோதயத்திற்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரு நாழிகைப்பொழுது.
பிரமபத்திரம் _  புகையிலை.



பிரமபுரம் _ சீகாழி : காஞ்சிபுரம்.
பிரமம் _  முழுமுதற் பொருள் : திருமால் : சிவன் : பிரமன் : சூரியன் : சந்திரன் : அக்கினி : முனிவன் : வேதம் : தெய்வீகம் : தவம் : தத்துவம் : மந்திரம்: வீடு பேறு : நடு : ஆடு : மாணவம் : பிரமசரியம் : ஞானம் : ஒழுக்கம் : வீணை வகை : தவறு : கலக்கம் : சூழல் காற்று : துரிதம் : மாயை.
பிரமயாகம் _  வேதம் ஓதுதல்.
பிரம ரகசியம் _ அதி ரகசியம்.
பிரமரந்திரம் _ தலையின் உச்சித் துளை.



பிரமரம் _ வண்டு : குதிரைச்சுழி.
பிரமராசனர் _ தபோதனர்.
பிரமராயன் _  பார்ப்பன அமைச்சர் பட்டப் பெயர்.
பிரமரி _  சுழற்சி : ஒரு சமண மந்திரம்.
பிரமலோகம் _  பிரமன் உலகம் : சத்தியலோகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:44 pm

பிரமவாதம் _  வேதமதம்.
பிரமன்  _ படைத்தல் தொழிலை செய்பவனாகிய நான்முகன்.
பிரமாணம் _  ஆதாரம் : அளவை : விதி : சான்று : ஆணை : பத்திரம் : மேற்கோள் : அறிதற்குதவும் கருவி.
பிரமாணன் _  மெய்யன் : திருமால்.
பிரமாணி _  சாத்திரங்களைக் கற்றறிந்தவன் : முதன்மையானவன் : பிரமாவின் மனைவி.



பிரமாணிகம் _ உண்மை : ஆணை : எடுத்துக்காட்டு.
பிரமாண்டம் _  உலகம் : மிகப் பெரியது : புராணத்துள் ஒன்று.
பிரமாதம் _ தவறு : அபாயம் : அளவில் மிக்கது.
பிரமாதி, பிரமாதீச _  ஒரு தமிழ் வருடம்.
பிரமாயும் _ பத்து நூறாயிரம்.



பிரமானந்தம் _  பேரின்பம் : வீடுபேறு.
பிரமி _ ஒரு பூண்டு வகை.
பிரமித்தல் _  மயங்குதல் : திகைத்தல்.
பிரமிப்பு _ திகைப்பு : மயக்கம்.
பிரமியம் _  ஒரு நோய் வகை.



பிரமிருதம் _  உழவுத் தொழில் : உழவால் வரும் பொருள்.
பிரமுகம் _  சிறந்தது : நிகழ்காலம்.
பிரமுகன் _ சிறந்தோன்.
பிரமேகம் _  வெட்டை நோய்.
பிரமேயம் _ வாய்ப்பு : சொல்லப்படும் பொருள் : ஐயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:44 pm

பிரமை _  மயக்கம் : பெருமோகம் : அறியாமை.
பிரமோதம் _  பெரு மகிழ்ச்சி.
பிரமோதூத _  ஒரு தமிழ் வருடம்.
பிரமோற்சவம் _  கோயிலில் நடைபெறும் சிறப்புத் திருவிழா.
பிரம்பு _ மூங்கில் : கொடி வகை : வரப்பு : கடல் : நெய்.



பிரயத்தனம் _ முயற்சி.
பிரயாசம் _  முயற்சி : உழைப்பு : வேள்வி வகை.
பிரயாணம் _  பயணம் : இறப்பு.
பிரயுதம் _  பத்து லட்சம் : கோடி.
பிரயோகம் _  ஏவல் : செலுத்துகை: மருந்து : மேற்கோள் : குதிரை.



பிரயோசனம் _  ஆதாயம் : பயன் படுகை.
பிரலாபம் _  புலம்பல்: பிதற்றல்: மொழி.
பிரவசனம் _ சொற்பொழிவு.
பிரவணம் _  நான்கு தெருக்கள் கூடுமிடம்: வளைவு : பள்ளத்தாக்கு.
பிரவர்த்தனம் _ செல்லுதல்: செய்தல்.


பிரவரம் _ மரபு : வமிசம்.
பிரவாகம் _  வெள்ளம் : குளம் : தொழில்.
பிரவாதம் _  காற்று : ஊர்ப்பேச்சு.
பிரவாலம் _  இளந்தளிர்.
பிரவாளம் _  பவளம்.



பிரவீணன் _ விரகன் : திறமையானவன்.
பிரவுடை _  31 முதல் 55 வயது வரை உள்ள பெண்பாற் பருவம்.
பிரவேசம் _  தொடக்கம் : தோன்றுதல்: வாயில்.
பிரவேசித்தல் _  உட் செல்லுதல்.
பிரவை _  ஒளி : திருவாசி : துர்க்கை : தண்ணீர்ப் பந்தல்.



பிரளயம் _  வெள்ளம் : கற்ப முடிவு : ஒரு பேரெண் : அழிவு.
பிரளயாகலர் _ ஆணவ கன்ம  மலங்கள் மட்டும் உடையவர்.
பிராகாமியம் _  எண் வகைச் சித்திகளுள் ஒன்று.
பிராகாரம் _  மதில் : கோயில் சுற்றுப் பகுதி.
பிராகிருதம் _  அழியத்தக்கது : இயற்கையானது : வடமொழித் திரிபாயுள்ள மொழி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:45 pm

பிராசம் _  ஓர் ஆயுத வகை.
பிராசயம் _  ஆதி.
பிராசனம் _  சோறூட்டுதல் : உண்ணுதல்.
பிராசாதம் _  கோயில் : உபரிகை : மந்திரம் : கருவறை.
பிராசி _  கிழக்கு : முன்னுள்ளது.


பிராசீனம் _  பழைமை : ஆடு தின்னாப்பாளை.
பிராசீனர் _  முன்னோர்.
பிராஞ்ஞம் _  நல்லறிவு.
பிராஞ்ஞன் _  அறிவுடையவன் : உயிர்.
பிராட்டி _  இறைவி : தலைவி : தேவி.



பிராணன் _ உயிர் : மூச்சு : பத்து வகை வாயுக்களுள் ஒன்று : வலிமை : இரணிய கருப்பன்.
பிராணாயாமம் _  எண்வகை யோகத்துள் ரேசகம் : பூரகம் : கும்பகம் என்னும் மூவகையாய் மூச்சை அடக்கி யாளும் யோக வகை.
பிராணி _  உயிரி : உயிருள்ளது.
பிராதக்காலம் _ விடியற்காலம்.
பிராது _ முறையீடு.



பிராத்தி _ எண்வகைச் சித்தியுள் ஒன்று : பயன் : விதி: வேண்டுவன அடைதல்.
பிராந்தம் _ ஓரம் : நாட்டுப்பகுதி : திரி புணர்ச்சி.
பிராந்தியம் _ சுற்றுப்புறம் : நாட்டுப் பகுதி.
பிராந்து _  பருந்து : மயக்கம்.
பிராப்தி _  பேறு : பயன் : விதி : உரிமம்.


பிராமணன் _ பார்ப்பனன்.
பிராமி _ கலை மகள் : வட மொழியின் பழைய எழுத்து வகை.
பிராயச்சித்தம் _ கழுவாய் : பாவத்தைப் போக்கும் சடங்கு.
பிராயம் _  வயது : நிலை : சமானம்.
பிராரத்தம் _  பழவினை : இப்பிறவியில் நுகர்வது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:45 pm

பிரார்த்தனை _ வேண்டுதல் : நேர்த்திக் கடன் : துதி.
பிரான் _ தலைவன் : கடவுள்.
பிரிதல் _  விட்டு விலகுதல் : வேறு படுதல்.
பிரிதி _ அன்பு : விருப்பம் : உவகை : யோகம் இருபத் தேழனுள் ஒன்று : திருமால் தலமான இமயத்துள்ள நந்தப் பிரயாகை.
பிரியகம் _  கடப்ப மரம் : வேங்கை மரம்.



பிரியம் _ அன்பு : விருப்பம்.
பிரியாம்பு _ மாமரம்.
பிரியை _ பெண் : மனைவி.
பிரிவினை _ வேறு பாடு : ஒற்றுமை யின்மை.
பிரிவு _ பிரிதல் : பாகம் : வேறுபாடு : பேதம்.


பிரீதி _  அன்பு : விருப்பம் : யோகம் : இருபத் தேழனுள் ஒன்று.
பிருகதி _  கத்தரிச் செடி : மாமரம் : ஒரு வீணை வகை.
பிருகற்பதி _ வியாழன் : புரோகிதன் : ஓர் அறநூல் : அறநூலாசிரியருள் ஒருவர்.
பிருகு _ ஒரு முனிவர் : சுக்கிரன் : முற்றாத கிழங்கு வனை.


பிருகுடி _ புருவம்.
பிருங்கம் _  வண்டு : கரிசலாங்கண்ணி.
பிருங்கராசம் _ கரிசலாங்கண்ணி.
பிருங்கி மலை _ பறங்கி மலை.
பிருசகன் _  கொலைஞன்.


பிருடை _ கழலாணி:யாழின் முறுக்காணி : அடைக்கும் தக்கை : பொய்ச் சேதி : போலி நடிப்பு.
பிருட்டம் _ பின்பக்கம் : இடுப்பின் பூட்டு : குண்டி : முதுகு : பரப்பு : அரைத்தமா.
பிருத்தியன் _ அடிமை.
பிருதிவி _ நிலம் : கடுக்காய் வகை.
பிருது _ விருது : சூரிய குலத்தரசருள் ஒருவன்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:45 pm

பிருதூதரம் _  ஆட்டுக்கடா.
பிருந்தம் _   துளசிச் செடி : கூட்டம்.
பிருந்தாவனம் _  துளசிக்காடு : கல்லறை.
பிருந்தை _ துளசிச் செடி : நெருஞ்சி.
பிரேதம் _  பிணம் : பேய் : தெற்கு : பிதிரர் : பின்.


பிரேரணை  _  தூண்டுகை : ஒரு செய்தியை முன்னர் எடுத்து மொழிதல்.
பிரை _ உறை மோர் : பாதி : பயன் : தொழிற்சாலை.
பிரைக் காற்சின்னி _  அரைக்காற் படி.
பிரோகம் _  முடிச்சு.
பிரெளடம் _  பெருமிதமானது.



பிலகரி _  ஒரு பண்.
பிலகாரி _  பெருச்சாளி.
பிலஞ்சுலோபம் _  எறும்பு.
பிலம் _  பாதாளம் : கீழறை : குகை : வளை.
பிலம்பி _  புளிச்சைக் காய்.



பிலவ _  ஒரு தமிழ் வருடம்.
பிலவகம் _  குரங்கு : தவளை.
பிலவங்க _  ஒரு தமிழ் வருடம்.
பிலவங்கம் _  ஆடு : தவளை : மான் : நஞ்சுள்ள உயிரினங்கள்.
பிலவம் _  தவளை : ஆடு : தெப்பம் : நீர் நிலை.


பிலன் _  எறும்பு.
பிலா _  பலாமரம்.
பிலாக்கு _  மூக்கணி வகை.
பிலாளகம் _ புழுகு சட்டம்.
பிலிஞ்சி _  புளிச்ச காய் மரம்.



பிலிற்றுதல் _  தூவுதல் : வெளியிடுதல்.
பிலுக்கன் _ பகட்டன்.
பிலுக்கி _ பகட்டுக்காரி.
பிலுக்கு _  பகட்டு.
பில்குதல் _  பொசிதல் : வழிதல் : கொப்புளித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:46 pm

பில்லடை _ இடியப்பம்.
பில்லாணி _  பெண்கள் காலில் அணியும் மோதிரம்.
பில்லி _  சூனிய வித்தை : தீத் தேவதை : பூனை.
பில்லை _ வி்ல்லை : சதுர ஓடு : திருகு வகை.
பிவாயம் _ சோறு சமைத்த பானைகளுக்கு இடும் திருநீற்றுக் குறி.


பிழக்கடை _  வீட்டின் பின்வாயிற்புறம் :கடைமடை.
பிழக்கு _  பிழை.
பிழம்பு _ திரட்சி : வடிவு : கொடுமை.
பிழா _  கொள்கலம்.
பிழி _  கள் : வெளிப்படுத்து : பிழி என் ஏவல்.



பிழிஞன் _  கள் விற்போன்.
பிழிதல்_  வடிதல் : சொரிதல்.
பிழிவு _ பொருட் சுருக்கம் : சாறு.
பிழுக்கை _ ஆடு முதலியவற்றின் மலம் : ஒன்றுக்கும் உதவாதது.
பிழை _  தவறு : குற்றம் : குறைவு: உய் : குற்றம் செய்.


பிழைத்தல் _  குற்றம் செய்தல் : தவறிப்போதல் : உய்தல் : உயிர் வாழ்தல்.
பிழைப்பு _  குற்றம் : உயிர் வாழ்க்கை.
பிளகு _  பிரிவு : கமுக வேர்.
பிளத்தல் _ பிரிவு படுதல் : வெடி படுதல் : ஊடுருதல் : போக்குதல் : வெல்லுதல்.
பிளப்பு _  பிளவு : வெடிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:46 pm

பிளவு _  விரிந்துண்டாக்கும் சந்து : துண்டு : வெட்டுப்பாக்கு : பிரிந்திசைப்பு.
பிளவை _ பிளக்கப்பட்ட துண்டு : புண் கட்டி.
பிளிறல் _ யானையின் முழக்கம் : பேரோசை.
பிள் _ பிள்ளைமையழகு.
பிள்ளுவம் _ யானை.


பிள்ளை _ குழந்தை : மகன் : மகள் : இளைஞன் : சிறுமை : சாதியின் பட்டம் : ஒரு சில விலங்கின் இளமை : காகம் : கரிக்குருவி : பிள்ளைப் பூச்சி: மரப்பாவை.
பிள்ளைக்கிணறு _  உட்கிணறு.
பிள்ளைத் தமிழ் _ சிற்றிலக்கிய நூல் வகை.
பிள்ளைப் பூச்சி _ ஒரு  பூச்சி வகை.
பிள்ளைப் பேறு _  மகப் பேறு : பிரசவம்.



பிள்ளைமை _  அறியாமை.
பிள்ளையாண்டான் _  இளையவன்.
பிள்ளையார்  சுழி _  எழுதத் தொடங்கு முன்  குறிக்கப்படும் "உ" என்னும் குறி. 
பிற _  மற்றவை.
பிறகிடுதல் _ தோற்றல் : கழிதல் : பின் வாங்குதல்.



பிறகு _  பின்பு : முதுகு : சற்றுப் பொறுத்து : அடுத்தது.
பிறக்கம் _ ஒளி : உயர்ச்சி : குவியல் : அச்சம் : மரக்கிளை.
பிறக்கீடு _  பின்னிடுகை.
பிறங்கடை _ மகன் : வழித்தோன்றல் : மருமகன் : அயலிடம்.
பிறங்கல் _  ஒலி : பெருமை : மிகுதி : உயர்ச்சி : மலை : நிறைவு : ஒளி : வீடு பேறு : அரசன் : கற்பாறை.


பிறங்கியல் _  முதுகாடு : சுடுகாடு : இடுகாடு.
பிறங்குதல் _  சிறத்தல் : மிகுதல்: விளங்குதல் : நிலை மாறுதல் : உயர்தல் : பெருத்தல் : ஒலித்தல் : செறிதல்.
பிறத்தல் _  தோன்றுதல்.
பிறந்தகம் _  தாய்வீடு.
பிறந்தவம் _  பிறப்பு.



பிறந்தை _  பிறவி : பாவம் : துன்பம் : இயல்பு : பிறந்த இடம்.
பிறப்பலி _ சிவபிரான் : கடவுள்.
பிறப்பு _  தோற்றம் : தொடக்கம்: அச்சம் : மயக்கம் : நெருக்கம்.
பிறர் _  அயலார்.
பிறர்மனை _  அயலார் மனைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:47 pm

பிறவாநெறி _  வீடுபேறு.
பிறவாயாக்கைப் பெரியோன் _  சிவபிரான்.
பிறவி _  பிறப்பு : இயல்பு.
பிறழ்ச்சி _  ஒழுங்கின்மை : மாறுதல் : நடுக்கம்.
பிறழ்தல் _  மாறுதல் : முறை கெடுதல் : துள்ளுதல் : பெயர்தல் : விளங்குதல் : முரிதல் : நடுங்குதல்.



பிறன்மனை _  வேறொருவன் மனைவி.
பிறாண்டுதல் _  நகத்தாற் கீறதல்.
பிறிது _  வேறானது.
பிறிது மொழிதல் _  கருதிய பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்துதற்கு அது போன்ற பிறிதொன்றைக் கூறும் அணி.
பிறியகம் _  கடப்ப மரம் : ஞாழல் மரம் : வேங்கை மரம்.



பிறை _  இளஞ்சந்திரன் :மகளிர் தலையணி வகை : அபிநய வகை.
பிறைச் சந்திரன் _  மூன்றாம் பிறை நாள்.
பிறையிரும்பு _  கருக்கு அறுவாள்.
பிற்கழித்தல் _  வலியிழந்து ஓடுதல்.
பிற்காலம் _  வருங்காலம்.


பிற்கால் _  தம்பி.
பிற்குளம் _  உத்தராட நாள்.
பிற்சாமம் _  இரவின் கடைச்சாமம்.
பிற்பகல் _  பகற் பொழுதின் பின் பகுதி.
பிற்படுதல் _  பிந்துதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:47 pm

பிற்படை _  கூழைப்படை.
பிற்பாடு _  பின்னர் : பிறகு.
பிற்போக்கு _  வீழ்ச்சி நிலை.
பிற்றல் _  பின்வாங்குதல்.
பிற்றை _  பின்னர் : பிறகு.


பினத்து _ பினாத்து : புலம்பு : பிதற்று.
பினாகபாணி _ சிவபிரான்.
பினாகம் _  சிவன் வில் : திரிசூலம் : மணி மாலை : மண் மாரி.
பினாகி _ சிவபிரான் : பெண்ணையாறு.
பினாதி _  அற்பன் : புல்லன்.


பினைதல் _  பிசைதல் : தொல்லைப்படுத்துதல்.
பின் _ பிறகு : பின் பக்கம் : இடம் : கடை : பிற்காலம் : தம்பி.
பின்பு _ பிறகு.
பின்மழை _  காலந் தவறின மழை.
பின் மாலை _  வைகறை : விடியற்காலம்.


பின்றி _  மீள.
பின்றுதல் _  கீழ்ப்பட்டிருத்தல்: மீளுதல் : சேய்மையாதல் : மாறுபடுதல்.
பின்றை _ பின்னை நாள் : பின்பு.
பின்னகம் _  பின்னிய மயிர் : ஆண் பால் மயிர்முடி : வேறு பாடு : பேதி.
பின்னப்படுதல் _  துன்பமடைதல் : சிதைதல் : வேறு படுதல் : தடைப் படுதல்.


பின்னம் _  மாறுபாடு : வேறுபாடு : சிதைவு : பிளவு : கேடு : தடை : கீழ் வாயிலக்கம் : தூள் : பகுப்பு : பின்னர்.
பின்னர் _ பின்பு : தம்பியர் : வேளாளர்.
பின்னல் _ பின்னுதல் : முடைதல் : சிக்கு : சடை : தவறு : பருத்தி.
பின்னவர் _ இளையவர் : பிற்பட்டவர்.
பின்னவள் _  தங்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:48 pm

பின்னவன் _  தம்பி.
பின்னனை _ செவிலித்தாய்.
பின்னி _ தங்கை : சிறிய தாய்.
பின்னிடுதல் _  பின்வாங்குதல் : தோற்றல் : தாமதமாதல்.
பின்னிதம் _ மாறுபாடு.


பின்னியாசம் _  பெருங்காயம்.
பின்னுதல் _ முடைதல் : பிணித்தல் : தழுவுதல் : மனங்கலத்தல்.
பின்னும் _  மேலும் : மறுபடியும்.
பின்னே _ பின்பு.
பின்னை _ தம்பி : தங்கை : மேலும் : பிறகு : திருமகள் : நப்பின்னை: தலைமயிர் : புன்னை மரம் : நாய்த் தேக்கு மரம்.


பின்னை நாள் _ மறு நாள்.
பின்னோன் _  பிற்பட்டவன் : தம்பி : வேளாளன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:48 pm

பீ - அச்சம் : ஓரெழுத்து : மலம் : தொண்டி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:49 pm

பீகம் - முகமதியப் பெண் : திறவுகோல்.
பீக்கம் - எட்டிக்கொட்டை.
பீக்கருவேல் - ஒருவகை மரம்.
பீக்கலாட்டம் - தடை : தொந்தரை : பித்தலாட்டம்.
பீக்கிலாந்தி - சங்கங்குப்பி.


பீசகம் - யானைவிரல்.
பீசம் - அண்டம் : ஆண்குறி : சந்ததி : சுக்கிலம் : தாடி : தாமரைப் பூச்சுருள் : மூலம் : விதை : அண்டவிதை : பீசாட்சரம்.
பீசாங்குர நியாயம் - காரண காரியம் இதுவதுவென முன்பின் வரையறுக்கப்படா வழக்கு.
பீசாட்சரம் - விந்து : மறை எழுத்து.
பீச்சாங்கை - பீச்சக்கை : இடது கை.


பீச்சாங்கொள்ளி - அச்சமுடையோன்.
பீச்சுவிளாத்தி - நாற்றமுள்ள ஒருவகை மரம்.
பீடம் - ஆசனம் : குதம் : அரியணை : தருப்பைப்பாய் : மேடை : பலிபீடம்.
பீடரம் - கோயில்.
பீடிகை - அணிகலச் செப்பு : ஆசனம் : கடைவீதி : பூந்தட்டு : முகவுரை : முனிவர் இருக்கும் இடம் : பீடம் : தேர்த்தட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:49 pm

பீடிகைத்தெரு - கடைத்தெரு.
பீடித்தல் - இரங்கல் : துன்புறுதல் : துன்புறுத்தல்.
பீடிப்பு - உருக்கம் : துன்பம் : வருத்துகை.
பீடு - குலவு : பீடை : பெருமை : வலிமை.
பீடை - உருக்கம் : துன்பம் : பாழாதல் : முடிமாலை.


பீட்டை - பயிரின் இளஞ்சூல் : முதல் அறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர்.
பீதகம் - அரிதாரம் : இருவேலி : சாந்து : தேன் : பித்தளை : பொன்னிறம் : மஞ்சள் : பொன் : துகில்வகை.
பீதசாரம் - சந்தனம் : வேங்கை மரம் : செவ்வள்ளி.
பீதநம் - அரிதாரம் : குங்குமம்.
பீதபீசம் - வெந்தயம்.


பீதம் - அச்சம் : அரிதாரம் : குடித்தல் : சந்தனம் : சிவப்பு : நால்வகைச் சாந்தினொன்று : நீர் : நேரம் : பருமை : 
பொன் : பொன்னிறம் : மஞ்சள்.
பீதலகம் - பித்தளை.
பீதன் - குடிப்பவன் : அஞ்சுபவன் : சூரியன் : தீ.
பீதாபன் - இந்திரன் : குபேரன்.
பீதாம்பரம் - பொன்னாடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:49 pm

பீதாம்பரன் - திருமால்.
பீதாம்பரி - பார்வதி.
பீதி - அச்சம் : குடிப்பு : மதுக்கடை.
பீதிகை - செம்மல்லிகை.
பீதினி - மூவிலைப்புன்னை.


பீதை - பொன்னிறப் பூவுள மருதோன்றி மரம்.
பீத்தல் - பீற்றல் : தற்பெருமைப் பேச்சு.
பீத்து - வீம்பு : வீண்பெருமை : பீத்தல்.
பீத்தோல் - மேற்றோல்.
பீபற்சு - அருச்சுனன் : சீர்குலைவு : தொந்தரவு.


பீமநாதம் - சிங்கம் : பேரொலி.
பீமம் - அச்சம் : பருமை.
பீமாபத்திரம் - உத்திரவாத ஈட்டுச் சாசனம்.
பீயு - ஆந்தை : காகம் : காலம் : சூரியன்.
பீரங்கி - பெருவெடிக் குழாய்.


பீரம் - தாய்ப்பால் : வீரம் : வலிமை : பீர்க்கு : பூவரசு : பசலை நிறம்.
பீரு - அச்சமுள்ளோன் : புருவம் : புலி : வெள்ளாடு.
பீருகம் - ஆந்தை : கரடி : காடு.
பீருகன் - அச்சமுடையோன் : பயந்தவன்.
பீரை - பீர்க்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:50 pm

பீரோ - மரத்திற் செய்த அலமாரி : நிலைப்பேழை.
பீர் - அச்சத்தால் வேறுபட்ட நிறம் : அச்சம் : ஒலிக்குறிப்பு : பசலை நிறம் : பீர்க்கு : முலைப்பால் : வெளுப்பு : 
மரவகை : முகம்மதிய சப்பரம்.
பீர்க்கு - ஒருவகைக் கொடி.
பீலிகை - எறும்பு.
பீலி - ஆலவட்டம் : ஓட்டச்சீட்டு : சிறுசின்னம் : பத்தல் : பறைப்பொது : பெருஞ்சவளம் : பொன் : மதில் : மயில் : 
மயில்தோகை : மாதர் காலணியில் ஒன்று : வாச்சியம் : விசிறி : பனங்குருத்து : நீர் பாய் தொட்டி.


பீலிக்கண் - மயில்தோகைக் கண்.
பீலிக்குஞ்சம் - அலங்காரத் தொங்கல்.
பீலிக்கொட்டு - நீர் இறைக்கும் பத்தல்.
பீலு - அச்சமுடையோன் : அச்சம் : அணு : அம்பு : உள்ளங்கை : உகாய் மரம் : செந்தூ : பூ : யானை : எறும்பு.
பீலுகம் - கரடி : பல்லூகம் : குடாவடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:50 pm

பீவரம் - ஆமை : பருமை.
பீவரி - அமுக்குறா : பசு : பருவப் பெண் : பெண்கிளி.
பீவை - நீர்.
பீழித்தல் - வருத்தல்.
பீழை - துன்பம்.


பீழ்தல் - பிடுங்குதல்.
பீளல் - பெண்குறி.
பீளை - கண்ணழுக்கு.
பீள் - கருப்பம் : சினை : பயிரிளங் கதிர் : இளமை.
பீறல் - கிழிதல் : கிழித்தல் : கிழியல்.


பீறு - கிழிவு : பீறென்னேவல்.
பீறுதல் - கிழித்தல் : பிளத்தல்.
பீறுகை - பீறுந்தீன்மை.
பீறுதல் - பீறல்.
பீற்றல் - கந்தை : கிழியல் : கடனாளி.


பீசனம் - மூக்கடைப்பு நோய் : சளி நோய் வகை.
பீனம் - பருமை : பாசி : பெருமை : பேடி : ஊர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:50 pm

பீக்கை _  இலேசானது : பசளைக்கீரை.
பீங்கான் _ ஒரு மட்பாண்ட வகை.
பீசகோசம் _ பூவில் விதையுள்ள இடம்.
பீசபூரம் _  மாதுளை.
பீசி _  பூவில் விதையுள்ள இடம்.


பீச்சாங்குழல் _ வேகமாக நீர் எறியும் கருவி.
பீடணம் _ அச்சம்.
பீட பூமி _ உயர்ந்து அகன்ற நிவப் பகுதி.
பீடர் _ பெருமையுடையவர்.
பீடனம் _ துன்புறுத்தல் : வருத்தம்.


பீட்டகம் _ தொழில்.
பீட்டன் _ இரண்டாம் பாட்டன் : இரண்டாம் பேரன் : பாட்டன் : குதிரை வண்டி.
பீட்டி _ பாட்டி.
பீதகன் _ வியாழன்.
பீதகாட்டம் _ செஞ்சந்தனக் கட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:51 pm

பீதகாவேரம் _ பித்தளை : மஞ்சள்.
பீதகி _ அரிதாரம்.
பீசாலம் _ சந்தனம் : வேங்கை மரம்.
பீததுண்டம் _ சிச்சிலி : மீன் கொத்திப் பறவை.
பீதராகம் _ தாமரை நூல் : பொன்மை.

பீதவண்ணம் _ கடுக்காய்.
பீத்தை _ நாடா.
பீநாறி _ ஒரு மரவகை : பெருமரம்.
பீப்பாய் _  எண்ணெய்  முதலியன அடைக்கும் மரத்தாலான பாண்டம்.
பீமபாகம் _ சிறந்த சமையல்.


பீமன் _  சிவபிரான் : வீமசேனன் : விதர்ப்ப நாட்டு மன்னன்.
பீராய்தல் _ சிறிது சிறிதாகச் சேர்த்தல்: பொறுக்கி எடுத்தல்.
பீரிடுதல் _ விரைந்து பாய்தல் : அலறுதல்.
பீரோடுதல் _ தாய்ப்பால் வெளிப்படுதல்.
பீலகம் _ எறும்பு.


பீலிகை _ எறும்பு.
பீலியார் _ சமணர்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:52 pm

புக - புகுதலைச் செய்ய.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:52 pm

புகடு - அடுப்பின் பின்பக்கம்.
புகடுதல் - வீசியெறிதல்.
புகட்டுதல் - ஊட்டுதல்  :  அறிவுறுத்தல் :  உட்புகுத்துதல்.
புகரி - புகழுடையது :  புள்ளியுடையது :  மான்.
புகரோன் - சுக்கிரன்.


புகர் - கபிலநிறம் : குற்றம் : சுக்கிரன் : நிறம் : பொறி : அழகு : பள்ளி : உயிர் : அருவி : சோறு : கொக்கு.
புகர்முகம் - யானை.
புகர்வு - சோறு : அன்னம் : கூழ்.
புகலல் - சொல்லுதல்.
புகலிடம் - ஊர் : தஞ்சம் : இருப்பிடம்.


புகலுதல் - சொல்லல் : விரும்புதல் : ஒலித்தல் : மகிழ்தல் : தெரிதல்.
புகல் - உடல் : உபாயம் : குதிர் : சொல் : தஞ்சம் : புகலென்னேவல் : வெற்றி : விருப்பம் : கொண்டாடுகை : சரண்.
புகல்வி - விலங்கின் ஏறு : மனச்செருக்கு : விருப்பம்.
புகல்வு - மனச்செருக்கு : புகலுதல்.
புகவு - உணவு : மேலேறுகை.


புகழ்மை - புகழ் : புகழுடைமை.
புகறல் - குறித்தல் : சொல்லல்.
புகறி - சொல்வாய் : புகழுதி.
புகற்சி - விருப்பம் : காதல்.
புகற்றுதல் - விரும்பச் செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:52 pm

புகா - உணவு : சோறு : செல்லா : புகாமல் : புகுந்து : புகவு.
புகார் - ஆற்றுமுகம் : கழிமுகம் : காவிரிப்பூம்பட்டினம் : கபிலநிறம் : மந்தாரம் : முகில் : பனிப்படலம் : பெருங்கூச்சல் : 
முறையீடு : அவமதிப்பு விளைக்கும் செய்தி.
புகிய - புக.
புகீஇ - புக்கு : புகுந்து.
புகுடி - கழி : புருவம் : மாதர் காதணியின் ஒன்று : வாயில்.


புகுதந்தீக - புகுக.
புகுதல் - உட்செல்லுதல் : தொடங்கல்.
புகுதி - ஆழ்ந்தறியும் நுண்ணறிவு : வழி : மனைவாயில் : வருவாய் : புகுவென்னேவல் : சம்பவம்.
புகுமுகம் புரிதல் - ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட இடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின்
உள்ள நிகழ்ச்சி.
புகைக்கொடி - தூமகேது.


புகை - தூபம் : நீராவி : பனிப்படலம் : புகையென்னேவல் : யோசனைத் தூரம் : ஆவி : துக்கம் : மாணிக்கக் குற்றம்.
புகைக்குண்டு - நச்சுப்புகை : புகைக்கும் பாத்திரம் : துப்பாக்கிக் குண்டு.
புகைச்சல் - இருள் : கண் மங்கலாயிருத்தல் : தீய்ந்து புகைதல் : பயிர் தீய்தல் : புகையெழும்புதல் : பொறாமை : வயிற்றெரிவு : 
புகை : பார்வை மயக்கம் : புகையிருமல் : மன எரிச்சல்.
புகைதல் - புகையெழல்.
புகைப்படலம் - புகைச் செறிவு.


புகையாற்றி - ஒட்டறை.
புக்ககம் - கணவன் வீடு.
புக்கசன் - சண்டாளன் : இழிஞன் : பாதகன்.
புக்கல் - புகுதல்.
புக்கில் - தங்குமிடம் : வீடு : புகலிடம் : உடம்பு.


புக்கை - புற்கை : நீரூற்றுள்ள கேணி : ஒருவகைக் கூழ்.
புக்தம் - உணவு : அனுபவிக்கப்பட்டது.
புங்கம் - அம்பு : அம்புக்குதை : உயர்ச்சி : குவியல் : சீலை : அம்பின் அடிப்பாகம் : மெல்லாடை : சிறு துகில்.
புங்கலம் - ஆத்துமா : சீவன் : உயிர்.
புங்கவம் - இடபம் : எருது.


புங்கவர் - கடவுள் : வானோர்.
புங்கவன் - சிறந்தோன் : கடவுள் : குரு : புத்தன்.
புங்கவி - தெய்வப் பெண் : பார்வதி.
புங்கானு புங்கம் - அம்பின் பின் அம்பு தொடர்கை.
புசம் - எருவரட்டி : தயிராடை : பதர் : பாக்கியம் : புயம் : கோணத்தின் புறக்கோடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 21 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 36 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 28 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum