தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 22 of 36 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:53 pm

புசல் - பெருங்காற்று : குச்சுமட்டை.
புசிப்பு - அனுபவிப்பு : புசித்தல் : உண்பொருள் : நுகர்ச்சி.
புச்சம் - தோள் : மயில்தோகை : வால் : பிருட்டம் : வால் நட்சத்திரம் : தேள் : தேள் கொடுக்கு.
புச்சி - எருக்கு : கோழி.
புஞ்சம் - குவியல் : திரட்சி : நூற்குஞ்சம் : கூட்டம்.


புஞ்சவனம் - கருப்பங் கொண்ட மூன்றாந் திங்களில் செய்யுமொரு சடங்கு.
புஞ்சுதல் - ஒன்று சேர்தல்.
புகடம் - இலைக்கலம் : தாமரை : இலைத்தொன்னை.
புடமிடுதல் - பொன் முதலியவற்றைத் தூய்மை செய்தல்.
புடம் - எரித்துப் பக்குவப்படுத்துகை : கண்ணிமை : மூடி : புடமிடுங்கலம் : இடம் : பக்கம் : உள்வளைவு : கோவணம் : 
மூடுகை : சுத்தம் : வான அளவை.


புடலிப்பு - திரட்சி : பருத்தல் : பூரிப்பு.
புடவி - பூமி : உலகம் : பிரபஞ்சம் : அகிலம்.
புடவி மூலம் - சிறு குறட்டை.
புடனம் - பினத்தல் : பிதற்றல் : குழறுதல்.
புடாயம் - மாணிக்கக் குற்றவகை.


புடை - அடிப்பு : இடம் : ஏழனுருபு : திரட்சி : பக்கம் : பாழி : புடையென்னேவல் : போர் : மொத்தி.
புடைகவற்றி - வேறு சிந்தை.
புடைக்கருத்து - ஒருசார் தோற்றும் பொருள்.
புடைத்தல் - முறத்தில் இட்டுத் தட்டுதல் : அடித்தல் : துவைத்தல் : நீந்துதல் : வீங்குதல் : ஆரவாரித்தல் : குத்துதல் : 
கொட்டுதல் : சிறகடித்தல் : நூல் முதலியவற்றை எற்றுதல் : குட்டுதல் : பருத்தல் : வெளிப்படுதல் : தட்டுதல்.
புடைநூல் - சார்பு நூல்.


புடைபடுதல் - அணுகுதல் : திரண்டு பருத்தல்.
புடைபெயர்ச்சி - பக்கத்தில் போக்குவரவு செய்தல் : வெளியேறுகை : நிலைமாறுகை : கருத்தாவின் தொழிற்பாடு.
புடைபெயர்ச்சிவினை - மாறிக் காரியப்படும் வினை.
புடையல் - பனை மாலை.
புட்கரம் - அம்பு : ஆகாயம் : ஒரு குளிகை : ஒன்றிப்பு : ஓரிடம் : ஒருவகை நாரை : ஒரு நோய் : ஒரு பாம்பு : ஒரு வாத்தியம் : 
குகை : கோஷ்டம் : ஏழு தீவில் ஒன்று : தாமரைப் பூ : தீர்த்தம் : நடன சாத்திரம் : நிறைவு : நீர்நிலை : பங்கு : பருந்து : 
பாண்டமுகம் : யானைத் துதிக்கை நுனி : போர் : வாளலகு : வாளுறை : வாள் : வெறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:53 pm

புட்கரி - யானை.
புட்கரிணி - தாமரைக் குளம் : நாற்சதுரவாவி : பெண்யானை.
புட்கலம் - நிறைதல் : புட்கலாவர்த்தம் : பிச்சை யுணவு : உடம்பு.
புட்கலாதேவி - புட்கலை.
புட்கலாவர்த்தம் - ஏழு முகிலில் ஒன்று : அது பொன் பொழிவது.


புட்கலை - ஐயனார் தேவிகளில் ஒருத்தி.
புட்களம் - நிறைவு.
புட்குத் திருப்பி - வட்டத்திருப்பி.
புட்டக மண்டபம் - கூடாரம்.
புட்டகம் - புடைவை.


புட்டம் - காகம் : சீலை : நிறைவு : உடலின் ஆசனப் பக்கம் : பெண்குறி.
புட்டல் - தலைச்சுமை.
புட்டி - குப்பி : சிறுபடி : பருமை : கொழுப்பு : முகத்தலளவை.
புட்டில் - அம்பறாத்தூணி : வீரலுறை : கூடை : குதிரையுணவு கட்டும் பை : கெச்சையணி : தக்கோலக்காய் : இறைகூடை : முறம்.
புட்பகம் - அன்னபேதி : இரத்தின கங்கணம் : இருப்புப் பாத்திரம் : ஒருவகைக் கண்ணோய் : குபேரனூர்தி : சகாதேவன் : 
சங்கு : புட்பக விமானம் : மூக்கிரட்டை.


புட்பகாசம் - விமானக் கோவில்.
புட்பகாரசை - தூரஸ்திரி.
புட்பகீடம் - தேன் வண்டு.
புட்பகேது, புட்பசரன், புட்பசாபன் - மன்மதன்.
புட்பபலம் - விளாங்கனி.


புட்பம் - மலர் : வாழை.
புட்பராகம் - நவமணியில் ஒன்று.
புட்பரேணு - பூந்தாது.
புட்பவதி - பூப்படைந்த பெண்.
புட்பவருடம் - மலர் மழை : புட்பாஞ்சலி : சிறுதூற்றல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:54 pm

புட்பாகன் - திருமால்.
புட்பாஞ்சலி - மலரிட்டு வணங்கல்.
புணரி - அலை கடல் : கரை : ஒலிக்கை : தனிமை.
புணரிய - புணர.
புணரியோர் - ஒன்று கூட்டியவர்.


புணர் - புணரென்னேவல் : புதுமை : சேர்க்கை.
புணர்ச்சி - இசைப்பு : இசைவு : எழுத்து முதலியவற்றின் சந்தி : கலத்தல்.
புணர்ச்சி விதும்பல் - புணர்ச்சிக்கு விழையும் விருப்பம்.
புணர்தல் - இசைதல் : இணங்கல் : இணைதல் : கலத்தல் : சார்தல் : விளங்கல் : பொருந்துதல் : கலவி செய்தல் : 
அளவளாவுதல் : உடலிற் படுதல் : கூடியதாதல்.
புணர்த்தல் - இணைத்தல்.


புணர்த்துதல் - சேரச் செய்தல்.
புணர்ந்தன்று - புணர்ந்தது : கூடியது : சேர்ந்தது : கைகூடியது.
புணர்ப்பு - இணைப்பு : உடல் : கூடல் : தந்திரம் : மாயம் : செயல் : சூழ்ச்சி.
புணர்வு - இசைவு : இணைவு : உடல் கலப்பு.
புணை - தெப்பம் : புணையென்னேவல் : மரக்கலம் : மூங்கில் : விலங்கு : ஒப்பு : உதவி : ஈடு : ஆள் : சாமீன்.


புணைத்தல் - கட்டல் : பிணைத்தல்.
புண் - காயம் : வடு : ஊறு : தசை.
புண்டரநீறு - திருநீறு.
புண்டரம் - இரேகை : கழுகு : செங்குரங்கு : நெற்றிக்குறி : வெண்கரும்பு : வெண்டாமரை : ஒரு நாடு : 
நீற்றுக் குறி : குருக்கத்தி.
புண்டரீகக்கண்ணன் - திருமால்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:54 pm

புண்டரீகம் - குட்டநோய் வகை : ஒரு பாம்பு : ஒரு மருந்து : கழுகு : தாமரை : தென்கீழ்த்திசை :  யானை : புலி : 
யானை நோய் : வண்டு : வெண்கொற்றக் குடை : வெண்தாமரை : சிங்காதனம் : கவரி.
புண்ணழற்றி - புண்ணில் வைக்கும் காரமருந்து.
புண்ணியத்திசை - வட திசை.
புண்ணிய முதல்வன் - அருகன்.
புண்ணியம் - அறம் : திவ்வியம் : தூய்மை : நல்வினை : நீர்த்தொட்டி : தருமம் : நல்வினைப் பயன் : தெய்வத்தன்மை.


புண்ணியன் - அரசன் : அருகன் : சிவன் : சுத்தன் : தருமவான் : புத்தன்.
புண்ணியசாந்தம் - சாணி : திருநீறு.
புண்ணியாக வாசனம் - தூய்மைச் சடங்கு.
புண்ணீர் - இரத்தம் : குருதி.
புண்படுதல் - மனநோயுண்டாதல்.


புண்படுத்துதல் - புண்ணுண்டாக்குதல் : வருத்துதல் : மனம் நோவச் செய்தல்.
புண்வழலை - புண்சீழ்.
புதசனன் - அறிஞன்.
புதரவண்ணான் - இராப்பாடி.
புதர் - ஞானிகள் : நூறு : தேவர் : புலவர் : புல்.


புதல் - நாணல் : புருவம் : புல் : பூடு.
புதல்வன் - மகன் : மாணாக்கன்.
புதல்வி - மகள்.
புதவம் -  வாயில் : கதவு : அறுகு.
புதவு - ஒருவகைப் புல் : கதவு : கதவு விட்டுப் புகும் வழி : கோபுர வாயிற் கதவு : திட்டி வாசல் : மதகு.


புதற்பூ - நிலப்பூ.
புதா - கொக்கு : பெருநாரை : மரக்கால்.
புதானன் - அறிஞன் : குரு.
புதிய ஏற்பாடு - விவிலிய நூலின் பிற்பகுதி.
புதியன புகுதல் - புதுமொழி வழங்கல்.


புதிர் - புதிது : விடுகதை.
புதினம் - வியப்பு : நூதனம் : செய்தி.
புதுக்குதல் - புதுப்பித்தல் : அலங்கரித்தல்.
புதுக்குப்புறம் - கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச் சொத்து.
புதுநிரை - புது வெள்ளம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:55 pm

புதுநீர்விழவு - புதுப்புனல் விழவு : புதுநீராட்டு.
புதுமை - அற்புதம் : நூதனம் : மிகுதி : புதிதாந் தன்மை : அபூர்வம் : அதிசயம் : பழக்கம் இன்மை : நாட்டுக் கோட்டையார்
பிள்ளைப்பேறு முதலியவற்றைக் கொண்டாடும் சடங்கு வகை.
புதுவது - புதிது.
புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூர் புதுக்கோட்டை : புதுச்சேரி.
புதுவோர் - புதியோர் : விருந்தினர் : அன்னியர்.


புதை - அம்பு : அம்புக்கூடு : அறிவுடைமை : உடல் : புதுமை : புதையென்னேவல் : மறைவிடம் : மறைவு : 
காட்டில் மரமடர்ந்த இடம் : புதைபொருள் : ஆயிரம் : புரை.
புதை பொருள் - புதைக்கப்பட்ட பொருள் : மறைபொருள் : ஆழந்த கருத்து.
புதைப்பு - சேமம் : தாழ்ப்பு : மறைவு.
புதையல் - புதைத்த பொருள் : புதைப்பு.
புத்தகம் - மயிலிறகு : நூல் : சித்திரப் படாம்.


புத்தசேடம் - மிச்சில்.
புத்தசைத்தியம் - புத்தாலயம்.
புத்தி - அறிவு : இடித்துரை : போதனை.
புத்திகோசரம் - புத்திக்குப் பொருளாவது.
புத்திபூர்வம் - மனமறிந்தது.


புத்திமதி - அறிவுறுத்துகை.
புத்தி மயக்கம் - புத்தி மாறாட்டம் : அறிவுக் கலக்கம் : பைத்தியம்.
புத்திரகன் - விசேட தீட்சை பெற்றவன் : அன்பன் : வஞ்சகன்.
புத்திரநாதன் - பிள்ளையினால் காக்கப்படுபவன்.
புத்திரகாமேட்டி - மகப்பேற்று வேள்வி.


புத்திவிமரிசை - விசாரணை.
புத்தேள் - புதுமை : தெய்வம் : புதியவள்.
புத்தோடு - புதுப்பானை.
புனிதன் - அரசன் : அருகன் : இந்திரன் : சிவன்.
புந்தி - மனம் : அறிவு : புதன் : நெல்வகை.


புந்தியர் - அறிவாளிகள் : புலவர்.
புந்திவாரம் - புதன்கிழமை.
புமான் - ஆண்குறி : ஆண்மகன் : ஆன்மாவினொரு தத்துவம்.
பும் - ஆண்குறி : ஒலிக்குறி.
புயகம் - பாம்பு : புயகடி : கட்செவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:55 pm

புயகோடரம் - கைக்குழி.
புயக்கறுதல் - வெளியேறுதல் : பசுமையறுதல்.
புயங்கம் - பாம்பு : ஒரு கூத்து.
புயங்க நிருத்தம் - ஒருவகைக் கூத்து.
புயங்கன் - சிவபிரான்.


புயம் - தோள் : ஒரு பக்கம் : முன்கை : வளைந்த வரி.
புயல் - சுக்கிரன் : நீர் : பெருங்காற்று : மழைக்கோள் : மேகம் : மழை பெய்கை : கொடுங்காற்று.
புயவலி - தோளாண்மை.
புயாந்தரம் - மார்பு.
புய்தல் - பறிக்கப்படுதல் : மறைதல்.


புய்த்தல் - பிடுங்குதல் : பறித்தல் : பயத்தல்.
புரசை - புரோசை : யானை கட்டுங் கயிறு.
புரஞ்சரம் - தோள் : திருமால் கேடகம்.
புரஞ்சனன் - உயிர் : சீவன் : ஓர் அரசன்.
புரஞ்சனி - அழிவு.


புரடம் - பொன் : காஞ்சனம் : கனகம்.
புரட்சி - கீழ்மேலாய் வருதல் : திரும்புதல் : ஒழுங்கின்மை : அராசக நிலைமை.
புரட்டல் - திருப்புதல் : மாறுபாடு பண்ணல்.
புரட்டன் - பொய்யன்.
புரட்டு - புரட்சி : புரட்டென்னேவல் : பொய் : வஞ்சகம் : மாறுபட்ட பேச்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:55 pm

புரட்டை - பூரட்டாதி : புரட்டாசி.
புரணம் - கடல் : புரட்சி : நிறைவு : அசைகை : துடிக்கை : தோன்றுகை : ஒளி : மயக்கம்.
புரணி - ஊன் : புறணி : மேற்புறம் : கோள்.
புரண்டை - ஒருவகைக் கொடி.
புரதகனன் - சிவன்.


புரத்தல் - ஈதல் : காத்தல் : நிலைபெறுத்தல் : அனுக்கிரகித்தல்.
புரந்தரம் - தோள்.
புரந்தரன் - இந்திரன் : கள்வன்.
புரந்தரை - கங்கை.
புரப்பு - காப்பு.


புரம் - ஊர் : நகரம் : கோயில் : வீடு : உடல் : இராசதானி : தோல் : மருதநிலத்தூர் : மேன்மாடம்.
புரவலன் - அரசன் : காப்போன் : கொடையாளன்.
புரவி - அசுபதி : குதிரை : வேகி.
புரவிவட்டம் - வையாளி வீதி.
புரவு - கொடை : பாதுகாப்பு : செழுமை : அரசிறை : இறையிலி நிலம் : ஆற்றுநீர் பாயும் வயல் : ஆட்சியிடம்.


புரளல் - புரளுதல் : மாறுதல்.
புரளி - பொய் : சண்டை : வஞ்சனை : முரட்டுத்தனம்.
புராகிருதபாவம் - ஊழ்வினை.
புராகிருதம் - முன் செய்தது.
புராணகன் - நான்முகன் : புராணம் படிப்போன்.


புராணம் - பழங்கதை : பழைமை : பழைய நிகழ்ச்சி.
புராணை - பழைமையானவள் : பார்வதி : புராண தேவி.
புராதலம் - பாதலம்.
புராதனம் - பழைமையானது.
புராந்திம காண்டம் - பழைய ஏற்பாடு.


புராந்திமம் - பழைமை : புராணம்.
புராரி - சிவன்.
புராவிருத்தம் - வரலாறு வழிவழி.
புரி - அரசன் : ஆசை : இராசதானி : ஊர் : கட்டுங்கயிறு : கயிற்றுப் புரி : கோட்டை : சங்கு : சுரி : சுருள் : பட்டினம் : 
புரியென்னேவல் : மருதநிலத்தூர் : யாறு : உடல் : விருப்பம் : யாழ் நரம்பு : முறுக்கு : நகர்.
புரிகுழல் - கடைகுழன்று சுருண்ட கூந்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:56 pm

புரிக்கூடு - நெற்கூடு.
புரிசம் - அருமை : பருடப் பிரமாணம்.
புரிசாலம் - கெஞ்சுகை : விண்ணப்பம்.
புரிசை - மதில்.
புரிதல் - ஈனுதல் : உற்றுப் பார்த்தல் : செய்தல் : விரும்பல் : தியானித்தல் : கொடுத்தல் : விசாரணை செய்தல் : சொல்லுதல் : 
மிகுதல் : அசைதல் : பொருள் விளங்குதல்.


புரித்தல் - நிரைத்தல் : பதித்தல் : விரும்பச் செய்தல்.
புரிந்தோர் - நண்பர்.
புரிப்பித்தல் - வளைந்து திரும்பச் செய்தல்.
புரிமுகம் - கோபுரம் : சங்கு : நத்தை.
புரியட்டகம் - சூக்குமதேகம் : [நுண்ணுடல்].


புரியம் - கூத்து : நாடகம் : கேளிக்கை : களரி.
புரிவு - அன்பு : ஆசை : விருப்பம் : தொழில் : தவறு : தெளிவு : தப்பி நீங்குகை : வேறுபடுகை.
புரீஇ - விரும்பி : புரிந்து.
புரீடம் - அழுக்கு : மலம்.
புரு - ஓர் அரசன் : ஒரு தைத்தியன் : குழந்தை : வீடுபேறு : பருமை.


புருகூதன் - இந்திரன்.
புருடவாகனன் - குபேரன்.
புருடன் - புருஷன் : ஆண்மகன் : பரம ஆன்மா : கணவன் : அணு : ஒரு மரம் : கடவுள் : சிவன் : சீவான்மா : 
அத்தி சிங்குவை : புருட தத்துவம்.
புருடா - பொய் : வீண் மிரட்டல்.
புருடாமிருகம் - புருஷ முகம் கொண்ட விலங்கு வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:56 pm

புருடார்த்தம் - அடைய வேண்டுவது : அறம் பொருள் இன்பம் வீடு.
புருடோத்தமன் - சிறந்தவன் : திருமால்.
புருதம் - பொன் : காஞ்சனம் : தமனியம்.
புருவம் - குதிரை : நெற்றிப் புருவம் : வரை : புண்விளிம்பு : கண் உரோம வளைவு.
புருவை - ஆடு : இளமை : பெண்ணாடு.


புரூணம் - கரு : இளமை.
புரூரம் - புருவம்.
புரை - உட்டுளை : குரல்வளை : விளக்குமாடம் : குற்றம் : பொய் : இலேசு : கூறுபாடு : உயர்வு : வீடு : ஆச்சிரமம் : 
தேவாலயம் : அறை : பக்கம் : ஓர் உவமையுருபு : மறைவு : எதிர்காலம் : களவு : குடில் : குழிப்புண் : செல்காலம் : பழைமை : 
பழுது : பன்னசாலை : புரையென்னேவல் : மடிப்பு : மேன்மை : உள்ளோடும் புண் : கண்ணோய் வகை : மாட்டுத் தொழுவம்.
புரைசல் - இரகசியம் : குழப்பம் : சச்சரவு.
புரைசை - புரோசை.


புரைச்சல் - இழைப்பு : தைத்தல் : பின்னுதல் : வெளிவருதல்.
புரைதல் - இழைத்தல் : தைத்தல் : பின்னுதல் : ஒத்தல் : மறைத்தல் : பொருந்துதல் : நேர்தல் : மூச்சுத் திணறுதல்.
புரைய - உவமைச் சொல்.
புரையன் - குடில் : பன்னசாலை : வீடு.
புரையேறுதல் - துளைவழியுட் புகுதல்.


புரையோர் - கள்ளர் : கீழோர் : பெரியோர் : மேலோர் : மெய்ப்பொருளுணர்ந்தோர் : காதல் மகளிர்.
புரைவது - ஒப்பது : சிறந்தது.
புரைவு - ஒப்பு : உயர்வு.
புரோகம் - நாய் : முன் செல்லல்.
புரோகிதன் - சடங்கு செய்விப்போன் : ஊர்ச் சோதிடன் : இந்திரன்.


புரோசர் - குறுநில மன்னர்.
புரோசை - யானை கட்டுங்கயிறு : யானைக் கழுத்தணி கயிறு.
புரோட்சணம் - மந்திரநீர் தெளிக்கை.
புரோபாகி - பிறர் குற்றம் நாடுவோன்.
புரோதம் - குதிரை மூக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:57 pm

புரோதாயம் - தூய்மை நீரில் குளிக்கை.
புரோவாதம் - பொருளை முன்னர்க் கூறுவது.
புலக்கம் - வழக்கம் : பழக்கம்.
புலத்தகை - ஊடல் : புலவியேற்றல் : சிணுக்கம்.
புலத்தல் - கலவியிற் பிணங்கல் : மனம் வேறுபடுதல் : துன்புறுதல் : அறிவுறுத்தல் : வெறுத்தல்.


புலத்தி - வண்ணாத்தி.
புலத்தியன் - ஓர் இருடி.
புலத்தோர் - ஞானியர்.
புலநெறி வழக்கம் - புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு.
புலந்தோர் - ஊடினோர்.


புலப்பகை - ஐம்புலனடக்கல்.
புலப்படுதல் - விளங்கல்.
புலப்பம் - அலப்பு : பிதற்றுதல் : விளக்கம்.
புலமகள் - கலைமகள்.
புலமகன் - புலமையுள்ளவன்.


புலமங்கை - நிலமகள்.
புலமினுக்கி - விளக்குமாறு.
புலமை - கல்வி : மெய்யறிவு.
புலம் - அறிவு : இடம் : ஒலி முதலைம் புலன் : திக்கு : நுண்மை : மேட்டு நிலம் : வயல் : கூர்மதி.
புலம்பல் - இரங்கல் : ஒலித்தல்.


புலம்பன் - நெய்தனிலத் தலைவன் : துறைவன்.
புலம்பிடித்தல் - துப்புக் கண்டுபிடித்தல்.
புலம்பு - அழுகையொலி : தனிமை : பிரிவு : குற்றம் : வருத்தம் : வெறுப்பு : கடற்கரை : துன்பம் : புலம்பல் : புலம்பென்னேவல்.
புலம்புதல் - அழுதல் : ஒலித்தல்.
புலம்பெயர் மாக்கள் - பிறநாட்டினர் : கடலோடிகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:57 pm

புலம்விசாரித்தல் - உளவறிதல்.
புலரி - விடியல் : கதிரவன்.
புலர் - உலர் : இருள் : நீங்குதல்.
புலர்தல் - உலர்தல் : வாடுதல் : விடிதல் : தெளிதல் : முற்றல் : தளர்தல் : குறைதல்.
புலர்வு - உலருகை.


புலவரை - நிலவெல்லை : அறிவினெல்லை.
புலவர் - அறிஞர் : கம்மாளர் : கவிவாணர் : குறுநிலமன்னர் : கூத்தர் : தேவர் : புதன் : பொருநர் : புலமையோர் : ஓவியம்
முதலிய கலைவல்லார் : ஓச்சர் முதலிய சாதியார் பட்டப்பெயர்.
புலவல் - வெறுப்பு.
புலவன் - அருகன் : அறிஞன் : கம்மாளன் : கவிவாணன் : கூத்தன் : தேவன் : தேவேந்திரன் : புதன் : போர்வீரன் : 
முருகன் : வானோன்.
புலவி - ஊடல் : வெறுப்பு.


புலவிநீட்டம் - ஊடல் மிகுதி.
புலுவிநுணுக்கம் - அற்பக் காரணத்தைக் கொண்டு தலைவி ஊடுகை.
புலவு - ஊன் : நரகம் : புலம் : புலால் மணம் : குருதி.
புலவுதல் - புலால் நாற்றம் அடித்தல் : வெறுத்தல்.
புலனுழுதுண்மார் - ஆற்றோர்.


புலனெறி - புலனெறிப்பட்ட ஒழுக்கம் : புலனை அடக்கிய தன்மை : நூனெறி : நூல் வழக்கு.
புலனெறிதல் - ஐம்புலன்களை வெல்லுதல்.
புலன் - அறிவு : ஐம்புலன் : காட்சி : வயல் : கருத்து : வனப்பு எட்டினொன்று.
புலன்வனப்பு - இயற்சொல்லான் : இயன்றபொருள் தோன்றக் கூறல்.
புலன்வென்றோர் - முனிவர்.


புலாகம் - அழகு : சுருக்கம் : சோறு : பதர் : மீன்.
புலால் - ஊன் : மீன்.
புலாற்றானம் - உடம்பு : புலால் துருத்தி.
புலானீர் - இரத்தம்.
புலி - அண்ணா : ஒரு விலங்கு : சிங்கவிராசி : வேங்கைமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:58 pm

புலிக்கண்கள் - கோமேதகம்.
புலிக்குடத்தி - கழுதைப்புலி.
புலிக்கொடியோன் - சோழன்.
புலிங்கம் - ஊர்க்குருவி : தீப்பொறி.
புலிசை - புலியூர் : திருத்தில்லை.


புலிநகக்கொன்றை - ஒரு மரம்.
புலிந்தம் - நாடுகள் ஐம்பத்தாறில் ஒன்று.
புலிப்போத்து - ஆண்புலி : அறுகு.
புலிமுகப்பு - அரண்மனை வாயில்.
புலியுறுமி - ஒருபறை : கிறிச்சான்.


புலியூர் - சிதம்பரம்.
புலியேறு - ஆண்புலி.
புலிரிகம் - பாம்பு.
புலுட்டை - தழைவற்றது.
புலுதம் - உயிர் அளபெடை : கால தசப்பிரமாணத்தொன்று : குதிரை : முழுவோட்டம்.


புலை - ஊன் : புலால் : புன்குணம் : பொல்லாங்கு : இழிவு : அசுத்தம் : தீட்டு : வியபிசாரம் : தீநாற்றம்.
புலைஞர் - ஈனர் : சண்டாளர் : பறையர் : மறவர் : வேடர்.
புலைத்தனம் - புன்குணம்.
புலைமகன் - கீழ்ச்சாதியான் : புரோகிதன் : நாவிதன்.
புலைமை - கீழ்மை : புலைத்தன்மை.


புலோமசித்து - இந்திரன்.
புலோமசை - இந்திராணி.
புலோமாரி - இந்திரன்.
புல் - அற்பம் : அனுடநாள் : இழிவு : கல்வி : பனை : பலி : புல்லு : புல்லென்னேவல் : புன்மை : புல்லரிசி : தென்னை : 
புதர் : மருந்துச் செடி : புணர்ச்சி.
புல்குதல் - தழுவுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:58 pm

புல்லகம் - நுதலணி.
புல்லணல் - இளந்தாடி.
புல்லம் - இடபவிராசி : எருது : புட்பம் : மலர்ந்தது.
புல்லரிகம் - பாம்பு.
புல்லரித்தல் - மயிர்க்கூச்செறிதல்.


புல்லர் - கீழ்மக்கள் : வேடர்.
புல்லல் - அமைதல் : கூடுதல் : புணர்தல்.
புல்லறிவு - கீழ்மையான அறிவு.
புல்லன் - கீழ்மக்கள் : சிறியவன் : அறிவீனன்.
புல்லாங்கழி - ஓர் ஊதுகுழல்.


புல்லார் - பகைவர் : பொருந்தார் : மேவலர்.
புல்லார்தல் - தோல்வியுறுதல்.
புல்லாள் - புல்லுரு : ஆறலைகள்வன்.
புல்லான் - வழிப்பறி செய்வோன்.
புல்லி - புறவிதழ் : பூவிதல்.


புல்லிங்கம் - வடசொல்லின் ஆண்பால்.
புல்லிதழ் - பூவின் புறவிதழ்.
புல்லிது - புன்மையானது : பூ.
புல்லியர் - கீழ்மக்கள்.
புல்லினம் - ஆட்டினம்.


புல்லுதல் - தழுவுதல் : பொருந்துதல் : வரவேற்றல் : ஒத்திருத்தல் : புணர்தல் : நட்புச் செய்தல்.
புல்லுநர் - நண்பர்.
புல்லுருவி, புல்லூரி - மரஞ் செடிகளில் ஒட்டி வளரும் பூடு வகை.
புல்லுவர் - வேடர்.
புல்லெழுதல் - மக்கள் நடமாட்டம் இன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:58 pm

புல்லெனல் - ஒளி மழுங்கல் : பொலிவழிதல்.
புல்லை - மங்கலான மஞ்சள் நிறம் : வெண்மை கலந்த சிவப்பு.
புல்வாய் - கலைமான்.
புவம் - வான்.
புவலோகம் - மேலேழ் உலகில் ஒன்று.


புவனகோசம் - பூகோளம்.
புவனம் - அப்பியாசம் : ஆகாயம் : நீர் : பதினான்கு உலகப் பொது : பூமி.
புவன் - இறைவன்.
புவி - பூமி.
புவிதவிருக்கம் - பெருவாகை.


புவிப்பாத்திரம் - மண்கலம்.
புழகு - மலையெருக்கு.
புழக்கம் - பழக்கம் : அறிமுகம்.
புழங்குதல் - கையாளுதல் : வழங்குதல்.
புழல் - உட்டுளை : பணியாரம் : ஓர் ஊர் : சலதாரை : துளையுடைப் பொருள் : மீன் சாதி.


புழல்வல்சி - தேங்குழல்.
புழு - கிருமி : புழுவென்னேவல்.
புழுகு - நாவிப்புழுகு : வாசனைப் பண்டவகை : புழுகுப் பூனை : பெரிய புனுகுப்பூனை : அம்புத்தலை.
புழுகு சட்டம் - ஒரு வாசனைப் பண்டம்.
புழுக்கம் - துன்பம் : சூடு : பொறாமை.


புழுக்கல் - அவித்தது : சோறு : முதிரைப் பண்டம் : புழுங்கல் அரிசி.
புழுக்கை - அடிமை : ஆடு முதலியவற்றின் எரு : இழிந்தவன்.
புழுங்கல் - சூடாதல் : சினக் குறிப்பு : வருந்துதல் : பொறாமை கொள்ளுதல் : வாடுதல்.
புழுதி - பராகம் : காய்ந்த நிலம் : மண்தூள் : புழுதிக்கால்.
புழுதிமாயம் - ஏமாற்று : வீண் செலவு செய்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:59 pm

புழுது - அம்புக்குதை.
புழுவறை - தேனடை.
புழை - துளை : சிறுவாயில் : காட்டு வழி : ஒடுக்கவழி : சாளரம் : ஏவறை : நரகம் : துளையுடைப் பொருள் : வாயில்.
புழைக்கடை - பின்புறவாயில்.
புழைக்கை - துதிக்கை : யானை.


புழைத்தல் - துளையிடுதல்.
புளகம் - அரிதாரம் : கண்ணாடி : சோறு : புடைப்பு : மகிழ்ச்சி : மயிர் சிலிர்த்தல் : வெடிப்பு.
புளகிதம் - மகிழ்ச்சி.
புளகிப்பு - மயிர்சிலிர்ப்பு.
புளம் - அண்ணம் : குதிரை நடையின் ஒன்று.


புளாகம் - கஞ்சி : சோற்றுத்திரளை.
புளி - புளிச்சுவை : புளியென்னேவல் : புளியமரம்.
புளிச்சி - பருத்தி.
புளிஞர் - வேடர் : மறவர்.
புளிதம் - ஊன் : ஒருவகையுணவு.


புளிந்தன் - புளிஞன் : வேடன்.
புளிமா - ஒருமரம் : நிரைநேர்வருஞ் சீர்க்கு வாய்பாடு.
புளிமிதவை - புளிங்கூழ்.
புளியோதனம் - புளிச்சோறு.
புளினம் - மணற்குன்று : மணல் திட்டை : ஆற்றிடைத்திட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:59 pm

புளினர் - வேடர்.
புளுகன் - பொய்யன்.
புளுகு - பொய்.
புள் - அவிட்டநாள் : ஒரு விளையாட்டுக் கருவி : பறவைப்பொது : நிமித்தம் : கைவளை : வண்டு : மதுபானம்.
புள்ளகம் - மகிழ்ச்சி.


புள்ளடி - உரைகல் : புள்ளின் அடிச்சுவட்டையொத்த அடையாளம் : ஒரு பூண்டு.
புள்ளம் - அரிவாள் : கொடுவாள்.
புள்ளரசு - கருடன்.
புள்ளி - ஆயுதவெழுத்து : மெய்யெழுத்து : இமயமலை : பொட்டுக்குறி : ஓர் அடையாளம் : நண்டு : பணத்தொகை : 
பல்லி : பொறி : மதிப்பு : தேமல் : நவமணி ஐங்குற்றத்தொன்று : எழுத்தின் குத்து : பேரேடு : ஆள்.
புள்ளிபார்த்தல் - அறுவடைக்கு முன் வயலின் விளைவை மதிப்பிடுதல்.


புள்ளிமிருகம் - கலைமான்.
புள்ளியம் - சிறுகுறிஞ்சா.
புள்ளிவண்டு - கழுதைவண்டு.
புள்ளுவம் - பறவையோசை : வஞ்சகம் : புள்ளொலி கொண்டு நிமித்தங் கூறுகை : மனக்குறை : கைதவம் : 
புள்ளறிவு : புள்ளியற்கை.
புள்ளுவர் - கீழ்மக்கள் : வஞ்சகர் : வேடர் : பாலைநிலத்தார் : தீவினையாளர்கள்.


புறகு - புறம்பானவன்.
புறக்கடன் - பின் அடைமானம்.
புறக்கடை - வீட்டின் பின்புறம்.
புறக்கணித்தல் - அலட்சியஞ் செய்தல் : பராமுகமாதல்.
புறக்கண் - கடைக்கண்.


புறக்கந்து - வண்டி அச்சின் முனை : களத்தில் தூற்றி விழுந்த பதர்க்குப்பை.
புறக்கரணம் - வெளியுறுப்பு.
புறக்காழ் - புறவயிரம் : பெண்மரம் : பனை முதலியவற்றிலுள்ள வெளிவயிரம்.
புறக்கிடுதல் - புறங்காட்டுதல்.
புறக்க - வெளிப்புறம் : முதுகு.


புறக்கொடுத்தல் - தோற்றோடுதல் : போகவிடுதல்.
புறக்கொடை - புறங்காப்பு : பிரிந்த நிலை : புறமுதுகிடுகை.
புறங்கடை - வெளிவாயில் : வீட்டின் வெளிப்புறம் : பின்பிறந்தோன் : வெளிப்பிரதேசம்.
புறங்காடு - இடுகாடு : சுடுகாடு.
புறங்காட்டுதல் - தோற்றோடுதல் : பின்காட்டுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 1:59 pm

றங்காணுதல் - தோற்றோடச் செய்தல்.
புறங்காத்தல் - பாதுகாத்தல்.
புறங்கால் - புறவடி.
புறங்காழ் - புறக்காழ்.
புறங்கான் - முல்லை நிலம்.


புறங்கூறுதல் - காணாத இடத்துப் பழியுரைத்தல்.
புறங்கொடுத்தல் - தோற்றுத் திரும்புதல்.
புறச்சுட்டு - மொழிக்குப் புறத்துச் சுட்டெழுத்துப் புணர்ந்து நிற்பது.
புறஞ்சாய்தல் - தோற்றல்.
புறஞ்சிறை - தோற்றல்.


புறஞ்சிறை - அருகிடம் : வேலிப்புறம்.
புறஞ்சிறைப்பாடி - நகரின் வெளிப்புறச்சேரி.
புறஞ்சுவர் - கோலஞ்செய்தல் : உட் குற்றம் களையாது உடம்பை அலங்கரித்தல்.
புறணி - புறங்கூறல் : மேற்பட்டை : மரப்பட்டை : மண்கட்டு : முல்லை நிலம் : குறிஞ்சி நிலம்.
புறத்தவன் - ஐயனார்.


புறத்தி - பின்பக்கம் : புறம்பு.
புறத்திணை - அரசர் போரொழுக்கம்.
புறத்திறுத்தல் - முற்றுகையிடுதல் : வெளியே காத்திருத்தல்.
புறத்தொழுக்கம் - பரத்தையரோடு கூடி ஒழுகுகை.
புறநகர் - நகர்ப்புறம்.


புறநடம் - வென்றிக்கூத்து முதலானவை.
புறநிலையகத்திணை - தான் குறித்தவற்றின் புறத்துப் பிறிதொரு பொருளை எடுத்துக் காட்டித் தன் பொருளை விலக்குதல்.
புறநீர்மை - ஒரு பண் : வெளிக்குணம்.
புறந்தரல், புறந்தருதல் - ஓம்பல் : தோற்றல்.
புறப்பகை - வெளிப்பகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:00 pm

புறப்பற்று - வெளிப்பற்று : என தென்பது : மமகாரம்.
புறப்பொருள் - அறம் பொருள் என்னும் இருவகைப்பாற்  பட்டிருப்பன : படைத்திறம்.
புறமடை - வெளி வாய்க்கால் : மதகின் வெளிப்புறம் : சிறு தெய்வங்கட்கிடும் படைப்பு.
புறமயிர் - உரோமம்.
புறமறிப்பார்த்தல் - நன்கு ஆராய்தல்.


புறமுழவு - அதமத் தோற்கருவி.
புறம் - இடம் : ஏழாம் வேற்றுமையுருபு : சுற்று : பக்கம் : பின்புறம் : மதில் : முதுகு : வீரம் : வெளிவளம் : புறத்திணை : 
இறையிலி நிலம் : அன்னியம் : அலர்மொழி : காலம் : உடம்பு.
புறம்பணை - மருதநிலம் : முல்லை : குறிஞ்சி நிலங்கள்.
புறம்பு - தனியானது : புறத்தி : மற்றை : வெளியிடம் : முதுகு.
புறவடி - புறங்கால்.


புறவணி - குறிஞ்சி நிலம் : முல்லை நிலம்.
புறவம் - காடு : குறிஞ்சி நிலம் : புறா : முல்லை நிலம் : சீகாழி.
புறவயிரம் - ஆண்மரம் : வெளி வயிரம்.
புறவரி - தலைவனுடன் அணையாது தலைவி புறத்தே நின்று நடிக்கும் நடிப்பு.
புறவாயம் - பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலிய சில்லறை வரிகள்.


புறவாயில் - கடைத்தலை.
புறவாழி - பெரும்புறக் கடல்.
புறவிடன் - கடல் : சோலை : மலை : யாறு.
புறவிதழ் - புல்லிதழ்.
புறவு - குறிஞ்சி நிலம் : புறா : முல்லை நிலம் : விலங்கின் கூட்டம் : காடு : சிறுகாடு : சாகுபடி நிலம்.


புறவுரை - பாயிரம்.
புறனடை - புறக்காப்பாய்ச் சொல்வது.
புறனழித்தல் - புறங்கூறுதல்.
புறன் - புறம் : முதுகு.
புற்கசன் - சண்டாளன் : வேடன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:00 pm

புற்கம் - புல்லறிவு : புன்மை : குறைவு : மாயம்.
புற்கலம் - உடல் : உயிரற்றது.
புற்கலன் - உடல் : உயிர் : ஆன்மா.
புற்கு - கபிலநிறம் : குறை : நிந்தைக் குறிப்பு.
புற்கெனல் - அந்திப் பொழுதின் குணம் : புகர்நிறக் குறிப்பு : ஒளி மழுங்கற் குறிப்பு : பயனில்லாமைக் குறிப்பு.


புற்கை - கஞ்சி : சோறு : கூழ்.
புற்பதி - அனுடநாள் : பனை : வாழைக் கிழங்கு.
புற்புதம் - நீர்க்குமிழி : கொப்புள்.
புற்றாஞ்சோறு - புற்றுக் கறையான் திரள் : பூஞ்சணம்.
புற்றாளி - அனுடம் : பனை.


புற்று - வளை : வன்மீகம்.
புனகம் - உணவு.
புனக்கரணம் - தாளத்தின் ஆவர்த்தனம்.
புனஸ்காரம் - வணக்கம்.
புனமுருக்கு - பலாசு.


புனமுருங்கை - ஒருவகை முருங்கை.
புனம் - கொல்லை : வயல்.
புனருத்தாரணம் - மீண்டும் நிலைநிறுத்துகை.
புனர்பூசம் - ஒரு நட்சத்திரம்.
புனர்ப்பவம் - நகம் : மீண்டும் பிறத்தல் : புனர்ச்சனனம் : புனர் உற்சவம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:00 pm

புனர்வசு - சிவன் : திருமால் : புனர்பூச நட்சத்திரம்.
புனலி - மோசி மல்லிகை : காட்டு மல்லிகை : புனலிக் கொடி.
புனல் - ஆறு : குதலை : நீர் : குளிர்ச்சி : வாலுளுவை : வாய் குறுகிய பாட்டில்களில் திரவப் பொருளை ஊற்ற உதவுங் கருவி.
புனல்வேந்தன் - வருணன்.
புனவர் - குறிஞ்சி நில மாக்கள் : வேடுவர்.


புனற்றிரை - நீர்த்திரை.
புனனாடன் - சோழன்.
புனனாடு - காவிரி நாடு.
புனாகம் - பின்பு.
புனிதம் - தூய்மை.


புனிதன் - அருகன் : இந்திரன் : சிவன் : பரிசுத்தன் : புத்தன்.
புனிற - ஈன்றணிமை : தோல் : புதுமை : பிஞ்சுத் தன்மை : தீட்டு.
புனிற்றா - இளங்கன்றுப் பசு.
புனுகு - புழுகு.
புனை - அலங்கரிப்பு : அழகு : சீலை : புதுமை : புனையென்னேவல் : பொலிவு : விலங்கு : ஆபரணம் : நீர் : பூ : 
பாராட்டு : இட்டுக்கட்டுதல்.


புனைஇ - புனைந்து : அணிந்து : அலங்கரித்து.
புனைகுழல், புனைகோதை - பெண்.
புனைசுருட்டு - மோசம்.
புனைதல் - அணிதல் : அலங்கரித்தல் : தரித்தல் : சித்திரம் எழுதுதல் : கற்பித்தல் : செய்தல்.
புனையல் - மாலை.


புனையிழை - பெண்.
புனையிறும்பு - செய்காடு.
புனைவர் - கம்மாளர்.
புனைவிலி - உபமானப் பொருள்.
புனைவிலி  நவிற்சியணி - ஓர் அலங்காரம் : அது சொல்லப்பட்ட ஓர் உபமேயந் தோன்றுதலாம்.


புனைவு - அலங்காரம் : அழகு : செழிப்பு : செய்கை : கட்டுகை : இணைப்பு : கற்பனை.
புனைவுளி - வருணிக்கப்படு பொருள் : உவமேயப் பொருள்.
புனைவுளி விளைவணி - ஓர் அலங்காரம்.
புன்கண் - வறுமை : துன்பம் : நோய் : மெலிவு : அச்சம் : இழிவு : பொலிவழிவு.
புன்கம் - உணவு : சோறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:01 pm

புன்கு - புனமுருங்கை.
புன்கூர்தல் - வருந்துதல்.
புன்சிரிப்பு - புன்முறுவல்.
புன்செக்கர் - மாலை.
புன்செய் - கொல்லை நிலம்.


புன்பயிர் - சிறுபயிர்.
புன்புலம் - புல்லிய இடம் : புல்லிய அறிவு : தரிசு நிலம்.
புன்புலால் - இழிந்த ஊன்.
புன்மானம் - இளஞ்செக்கர் வானம்.
புன்முறுவல் - சிறுநகை.


புன்மூரல் - புன்சிரிப்பு.
புன்மை - அற்பம் : ஈனம் : சிறுமை : துன்பம் : மறதி : வறுமை : இழிவு : அசுத்தம் : குற்றம் : பார்வை மழுக்கம்.
புன்றலை - இளந்தலை : சிவப்பு மயிருள்ள தலை.
புன்றுமி - தூறல் : சிறுதுளி.
புன்றுளி - சிறுதிவலை.


புன்தொழில் - இழிதொழில்.
புன்னகை - புன்சிரிப்பு.
புன்னம்புலரி - வைகறை.
புன்னறவம் - இஞ்சி.
புன்னாகம் - கோழிக்கீரை : புன்னை.


புன்னாதம் - புன்னை : வெள்ளாம்பல்.
புன்னாதர் - இழிவறிவாளர்.
புன்னெறி - இழிந்த வழி : தீயவழி : பொய்ச் சமயம்.
புன்னை - புன்னை மரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:05 pm

பூ - அழகு : இடம் : இந்துப்பு : விளைவுப்போகம் : இருக்குதல் : இலை : ஓமாக்கினி : ஓரெழுத்து : ஒரு கண்ணோய் : 
ஒரு நரகம் : கூர்மை : தாமரை : தீப்பொறி : பிறப்பு : புட்பம் : பூமி : பூவென்னேவல் : பொலிவு : மகளிர் பூப்பு : 
மலர் : நிறம் : புகர் : நான்குவகை மலர் : பூத்தொழில் : சேவலின் தலைச்சூடு : மென்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:05 pm

பூகண்டகர் _ உலகின் பகைவரான அசுரர்.
பூகண்டம் _ பூமியின் நிலப்பகுதி.
பூகதம் _ கமுக மரம்.
பூகதர் _ புகழ்வோர்.
பூகம் _ பாக்கு மரம் : நேரம் : திரட்சி : இயல்பு : இருள் : கழுகு : பலா : பிளப்பு.


பூகம்பம் _  நிலநடுக்கம்.
பூகரம் _ கையாந்தகரை.
பூகாகம் _ அன்றில் : கரும் புறா.
பூககேசம் _ ஆலமரம் : நீர்ப்பாசி.
பூக்கம் _ கமுக மரம் : ஊர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:05 pm

பூங்கணை _ மன்மத பாணம் : மலரம்பு.
பூங்கற்று _ அழகு : பூதம்.
பூங்கா, பூங்காவனம் _  பூஞ்சோலை : நந்தவனம்.
பூங்கு _ பல.
பூங்கோயில் _ திருவாரூர்ச் சிவாலயம்.


பூசகன் _ அருச்சகன்.
பூசங்கள் _ புனர் பூசம் : பூசம் நாள்கள்.
பூசணி _ கொடி வகை.
பூசந்தி _ கடலைப் பிரிக்கும் சிறு நிலம்.
பூசம் _  ஒரு நட்சத்திரம்.



பூசல் _ போர் : பேரொலி : கூப்பீடு :வருத்தம் :ஒப்பனை.
பூசனை _ வழிபாடு : சிறப்பித்தல்.
பூசாரி _ கோயிற் பூசை பண்ணுபவன்.
பூசிதன் _ பூசிக்கப்படுவோன்.
பூசு _ பூசுதல் : தூசு : ஒட்டடை.


பூசுதன் _ பூமியின் புதல்வனான  செவ்வாய்.
பூசுதை _ பூமியின் புதல்வியாகிய சீதை.
பூசுரன் _ அந்தணன்.
பூசை _ ஆராதனை : பூனை.
பூச்சக்கரன் _ அரசன்.


பூச்சாரம் _ நிலவளம்.
பூச்சி _ சிற்றுயிர் : குடற் புழு.
பூச்சிதம் _ மதிப்பு.
பூச்சிப்பல் _ சொத்தைப் பல்.
பூச்சியத்துவம் _ சிறப்புத்தன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:06 pm

பூச்சியம் _ பகட்டு : வழிபடத்தக்கது : இன்மை : நற்பேறின்மை : அருமை : மதிப்பின்மை.
பூச்சியன் _ வழிபடத் தக்கவன் : கறுப்பும் வெள்ளையுமான வண்டிமாடு.
பூச்சு _ தடவுகை : மேற் பூசுகை : மருந்துப் பற்று.
பூச்சை _ பூனை.
பூஞை _ பூனை.


பூஞ்சணம் _ ஒட்டடை : பாசி.
பூஞ்சல் _ மங்கல் நிறம் : வலுவற்றவன்.
பூஞ்சான் _ புல்வகை.
பூஞ்சி _ தூசி : மங்கல்.
பூஞ்சிட்டு _  ஒரு குருவி வகை.



பூஞ்சு _  ஒட்டடை : பாசி : மங்கல் நிறம்.
பூஞ்சுண்ணம் _  பூந்தாது.
பூஞ்சை _  மங்கல் நிறம் : வலுவற்றவன் : பாசி : கண்ணொளி மங்கல் : பாழ் : ஒட்டடை.
பூஞ்சை நிலம் _ பாழ் நிலம்.
பூஞ்சோலை _ மலர்ச் சோலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 36 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum