தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 29 of 36 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 32 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:26 pm

யூகபதி - சுக்கிரீவன்.
யூகவான் - அறிஞன்.
யூகி - யூகியென்னேவல் : விவேகி.
யூதி - நாவிதன் : காட்டு முல்லை.
யூதிகம் - முல்லை : யூதிகை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:27 pm

யோகசரன் - அனுமான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:28 pm

யோகக் காட்சி _  யோகத்தாற் காணும் அறிவு.
யோகசத்தி _ நவச்சாரம்.
யோக சம்பந்தம் _  கூட்டம் : புணர்ச்சி.
யோகசாதனை _  யோகப் பயிற்சி.
யோக சித்தி _ யோகம் செய்ததனால் பெற்ற பேறு.


யோக தண்டம் _  யோகியின் கையிலுள்ள கோல்.
யோக நித்திரை _  உறங்குவது போல் இருந்தும் அறிவுற்றிருக்கும் யோக நிலை.
யோகபாதம் _  கடவுளை அகத்தால் வழிபடும் நெறி : யோகத்தைப் பற்றிக் கூறும் சிவாகமம்.
யோகம் _  சேர்க்கை : புணர்ச்சி : நற்பேறு : உயர்ச்சி : ஊக்கம் : தகுதி : சூத்திரம் : வழி : மருந்து: ஏமாற்று : நற்சுழி.
யோகர் _ யோகியர் : முனிவர் : சமண முனிவர்.


யோகவான் _ நற்பேறு பெற்றவன்.
யோகாசனம் _ யோகத்துக்குரிய இருக்கை.
யோகாதிசயம் _ இன்ப நிலை.
யோகி _  சன்னியாசி : சிவன் : அருகன் : ஐயனார்.
யோகித்தல் _ தியானித்தல்.


யோகிப்பு _ தியானம்.
யோகினி _ காளியின் ஏவல் செய் மகளிர் : தெய்வப் பெண் : தேவதை.
யோகு _ ஆழ்ந்த தியானம்.
யோக்கியதை _ தகுதி : நேர்மை : கல்வி ஒழுக்கம் முதலிய வற்றால் வரும் சிறப்பு.
யோக்கியம் _ தகுதி : நேர்மை : தூய்மை.


யோக்கியன் _ குணவான்.
யோசனவல்லி _ மஞ்சிட்டிவேர்: வல்லாரை.
யோசனன் _ கடவுள்.
யோசனை _ சிந்தனை : கருத்து : புத்திமதி : அறிவுக் கூர்வை :ஓசை : ஒரு நீட்டலளவை.
யோதனம் _ போர்.


யோனி _ பிறப்பிடம் : கருப்பப்பை : பிறவி : காரணம் : பூர நாள் : நீர்.
யோனி பேதம் _ 84 நூறாயிரம் பிறப்பு வகை.
யோனிப் பொருத்தம் _ மணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:28 pm

யோககுண்டலி - நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்று.
யோகக்காரன் - நல்வினையாளன்.
யோகசாதனம் - யோகப்பயிற்சி : யோக சாதனை.
யோகஞ்செய்தல் - தியானம் பண்ணுதல்.
யோகநிலை - தியானத்தில் அமர்ந்திருக்கை.


யோகரூடி - காரண விடுகுறி.
யோகவிபாகம் - ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள் கோடலாகிய நூற்புணர்ப்பு.
யோகிவுறக்கம் - அறிதுயில்.
யோகீசுவரி - துர்க்கை.
யோக்கியதாபட்சம் - தகுதி பற்றிய மதிப்பு.


யோக்கியதாபத்திரம் - நற்சாட்சிப் பத்திரம்.
யோசனம் - யோசனை.
யோசித்தல் - ஆழ்ந்து நினைத்தல்.
யோசிப்பு - சிந்திப்பு.
யோசியம் - சோதிடம்.


யோதனன் - போர்வீரன்.
யோனிப்படுதல் - பிறத்தல்.
யோனிலிங்கம் - யோனிமணி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:32 pm

யௌகிகம் - பகுபதம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:33 pm

யெளதகம் _  மகளுக்கு வழங்கும் சீதனம்.
யெளவன  கண்டகம் _  முகப் பரு.
யெளவனதசை _ இளம் பருவம்.

யெளவனம் _ இளமை : அழகு : களிப்பு : மகளிர் கூட்டம்.
யெளவனலட்சனம் _ அழகு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 7:34 pm

யௌதம் - ஓரளவு : பெண்கள் கூட்டம் : நீட்டலளவு.
யௌவனிதை - பதினாறு வயது தொடங்கி ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:13 pm

வகதி - எருது : காற்று : நண்பன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:14 pm

 _ கால் (1/4 ) என்னும் பின்ன எண்ணின் குறி.
வகந்தம் _ காற்று : குழந்தை.
வகம் _ காற்று : வழி : குதிரை : ஊர்தி.
வகிடு _ வகிர்ந்த முன் தலை மயிரின் இடைவெளி யொழுங்கு.
வகித்தல் _ தாங்குதல்.


வகிரங்கம் _ வெளிப்டை.
வகிரெடுத்தல் _ உச்சியிலிருந்து நெற்றிவரை மயிரை ஒழுங்கு படப் பிரித்தல்.
வகுஞ்சம் _ இரவு.
வகுதல் _  பிளத்தல் : பகிர்தல் : வகைப் படுத்தல்.
வகுதி _ வகுப்பு.



வகுத்தல் _ 
கூறுபடுத்தல் : பகிர்தல் : வகைப்படுத்தல்.
வகுத்தான் _ ஊழ் : இறை.
வகுத்திரம் _ தெப்பம்.
வகுந்து _  வழி.
வகுப்பு _  பிரிவு : சாதி : தரம் : தடுக்கப்பட்ட அறை : பொலிவு : சந்தம் : அழகு : கூறு படுத்துகை : இடம் பற்றிப் பிரிக்கை.



வகுமை _ மகிழ்ச்சி.
வகுலி _ மீன்.
வகுளம் _  மகிழ மரம்.
வகுளாபரணர் _  மகிழம் பூவை அணிந்த நம்மாழ்வார்.
வகுளி _ ஒலி.



வகை _  கூறுபாடு : சாதியினம் : இனம் : முறை : வழி : காரணம் : தந்திரம் : வலிமை : தன்மை.
வகை தெரிவு _  பகுத்தறிவு.
வகைமாலை _  தளிரும் பூவும் விரவத் தொடுத்த மாலை.
வகையறா _  சார்ந்தது.
வகையறிதல் _  செய்யும் முறை தெரிதல்.


வகையறுதல் _ கதியற்றுப் போதல்.
வகையார் _  இனத்தார்.
வக்கணை _  நிந்தை : போற்றுரை : வருணனை : பட்டப் பெயர் : நாகரிகம் : ஒழுங்கு : திறமையான பேச்சு.
வக்கரை _  பற்கரை : வரிந்து கட்டும் முகட்டுக் கட்டை.
வக்கா _  கொக்கு வகை : சிப்பி வகை.


வக்காணம் _ ஆலாபனம்.
வக்காலத்து _ வழக்கறிஞருக்குக் கொடுக்கும் அதிகாரப் பத்திரம்.
வக்கிரக்கண் _  மாறுகண்.
வக்கிரக் கிரீவம் _  ஒட்டகம்.
வக்கிரகம் _ மழையால் உண்டாகும் தடை.


வக்கிர சந்திரன் _ இளம் பிறை.
வக்கிர தந்தம் _  வளைந்த பல்.
வக்கிர துண்டன் _  விநாயகன்.
வக்கிர நாசிகம் _ கிளி : ஆந்தை.
வக்கிரம் _  வளைவு :வட்டம் : சென்ற வழியே மீளுதல் : பொய் : கொடுமை : நேர்மையற்ற செலவு : பொறாமை : கோளின் பிற்போக்கான நடை : கலக்கம் : வஞ்சனை : கோணல் வழி.


வக்கிரன் _  சனி : மாறுபாடுள்ளவன் : குரூரன் : செவ்வாய் : தந்த வக்கிரன் : உருத்திரன் : ஓர் அசுரன்.
வக்கிராங்கம் _  அன்னப் பறவை வகை.
வக்கிரித்தல் _ கோள் மடங்கித் திரும்புதல் : கோணியிருத்தல் : ஆலாபனம் செய்தல்.
வக்கு _ வேகுதல் : தோல் : ஊமைக்காயம் : நீர்த் தொட்டி : மூத்திரக் குண்டிக்காய் : வழி.
வக்குதல் _  வதக்குதல்.


வக்குத்தரி கரணம் _  படுக்கை.
வக்குரித்தல் _ வேகுதல்.
வங்கக் கல் _  சுக்கான் கல்.
வங்க சிந்தூரம் _ ஈயத்தின் சிந்தூரம்.
வங்கணத்தி _ உற்ற தோழி : கொடியவள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:14 pm

வங்கணம் _ காதல் : நட்பு : தகுதி : செடி வகை.
வங்கணன் _ உற்ற தோழன் : கொடியவன்.
வங்க நீர் _ கடல்.
வங்கம் _ கப்பல் : ஓர் ஊர்தி வகை : ஈயம் : தகரம் : துத்த நாகம் : வெள்ளி : ஒரு நாடு : ஒரு மொழி : அலை : ஆற்று வளைவு : கருத்து : வறுமை : கத்தரிச் செடி.
வங்கர் _  நெய்தல் நில மக்கள்: வங்க நாட்டார்.


வங்கன் _ வறிஞன் : சண்டாளன்.
வங்கா _ பறவை வகை : ஊது கொம்பு வகை.
வங்காரம் _ பொன் :  உலோகக் கட்டி : செப்பம்.
வங்காளி _ வங்க நாட்டான் : வங்க மொழி : வாழை.
வங்கி _  தோளணி வகை : வளைந்த ஆயுதம் : சம்பா நெல் வகை : கொடி வேலி : பணச் சேமிப்பு செய்யுமிடம்.


வங்கிசம் _ வமிசம்.
வங்கியம் _ மூங்கில் : இசைக்குழல்.
வங்கு _ எலி வளை : மலைக்குகை : மரப் பொந்து : பாய்மரக் குழி : நாய்ச் சொறி : கழுதைப் புலி :தாழம் பூவின் மகரந்தம்.
வங்கூழ் _   காற்று :வாதம்.
வங்கை _ குறும்பு : பகை.


வசக்கட்டு _ ஆட்சி : ஒப்படைத்த பொருள் : செலவுக்காகக் கொடுத்த பணம்.
வசக்குதல் _ வயப்படுத்துதல்.
வசங் கண்டவன் _ உண்மையறிந்தவன் : ஒரு வகைப் பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன்.
வசங்கெட்டவன் _  விருப்பமில்லாதவன் : நிலைமை கெட்டவன் : ஒழுங்கீனன்.
வசதி _  நல்லிருப்பிடம் : வீடு : இரவு.



வசநாவி _  நஞ்சு.
வசந்த காலம் _ இளவேனில்.
வசந்த தரு _ மாமரம்.
வசந்த தூதம் _  குயில் : மாமரம் : சித்திரை மாதம் : பாதிரி மரம் : ஒரு பண் வகை.
வசந்த மலர் _ இலவங்கம்.


வசந்த மாலை _ தென்றலைச் சிறப்பித்துக்கூறும் நூல் வகை.
வசந்தம் _ இளவேனிற் பருவம் : சித்திரை மாதம் : நறுமணம் : தென்றல் காற்று : மணப்பொடி : காதற் பேச்சு : ஒரு பண் வகை : சிறிய முத்து : இந்திரன் மாளிகை.
வசந்தருது _ இளவேனில்.
வசந்தன் _ மன்மதன் : காமனின் நண்பன் : இளவேனிற் காலத்துக்குரிய தேவன் தென்றல் : தென்றல் : ஒரு கூத்துவகை.
வசந்தா _ ஒரு பண் வகை.


வசந்தி _ இருவாட்சி.
வசந்திகை _ தேமல்.
வசம் _  தன்வயம் : ஆட்சி : ஒழுங்கு : பக்கம் : வசம்பு.
வசம்பு _ ஒரு மருந்துச் செடி வகை.
வசரம் _ கோழி.


வசவன் _ பசுவின் ஆண் கன்று : வசுதேவர் : சேங்கன்று.
வசவி _ தேவதாசி : கெட்ட நடத்தையுள்ளவன்.
வசவு _ இழிவுரை.
வசனம் _ சொல் : உரைஉடை : பழமொழி : பேச்சு : உடை : நோன்பு : அரைப் பட்டிகை.
வசன் _ எல்லை : நேர்.


வசி _ பிளவு : கூர்மை : தழும்பு : வாள் : சூலம் : வசியம் : இருப்பிடம் : தேற்றுதல் : குற்றம் : மழை : வெள்ளை வெங்காயம் : வசித்துவம்.
வசிகம் _ மிளகு.
வசிகரம் _ அழகு : சீந்திற் கொடி.
வசிகன் _ தன்வயத்தன்.
வசிதல் _ வடுப்படுதல் : வளைதல்.


வசித்தல் _ வாழ்தல் : தங்குதல்.
வசித்துவம் _ எண்வகைச் சித்திகளுள் ஒன்று : யாவரையும் தன் வயப்படுத்தும் தன்மை.
வசியம் _ கைவசம் : வசப்படுதல் : காதல் : ஒரு வித்தை : கிராம்பு.
வசியை _ கற்புடைய மாது.
வசிரம் _ கடலுப்பு : ஆனைத்திப்பிலி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:15 pm

வசீகரம் _ வசமாக்குதல்.
வசீரன் _ குதிரை வீரன் : திப்பிலி.
வசு _ எண் வகை வசுக்கள் : சுடர் : அக்கினி தேவன் : பொன் : செல்வம் : கதிர் : இரத்தினம் : நீர்: மரம் : பசுவின் கன்று : வெள்ளை வெங்காயம்.
வசுகம் _ எருக்கஞ் செடி.
வசுகி _  பொன் மலை : மேரு மலை.



வசு நாள் _ அவிட்ட நாள்.
வசுந்தரை _ வசுமதி : பூமி.
வசூரித்தல் _ வரி முதலியவற்றைத் தண்டுதல்.
வசை _ பழிப்பு : நிந்தை : இகழ்ச்சி : குற்றம் : மகள் : மலட்டுப் பசு : அகப்பை : பெண் யானை : கணவனுடன் பிறந்தாள் : நிணம் : மனைவி.
வசைத்தல் _ சூழ்தல் : வளைத்தல்.


வசையுநர் _  வசை கூறுவோர்: பகைவர்.
வசைவு _ பழிப்பு : குற்றம்.
வச்சகம் _ மலை மல்லிகை : வெட் பாலை.
வச்சணத்தி _ அன்பு.
வச்ச நாபி _ நச்சுச் செடி வகை.


வச்சம் _  ஒரு நாடு : கன்று.
வச்சயம் _ கலைமான்.
வச்சரி _ வேம்பு.
வச்சல மணி _  கோரோசனை.
வச்சனி _ மஞ்சள்.


வச்சி _ காயா மரம்.
வச்சிரக்கட்டு _ பலமான அமைப்பு.
வச்சிரக்கல் _  வைரமணி.
வச்சிர கங்கடன் _ அனுமான்.
வச்சிர சரீரம் _  உறுதியான சரீரம்.


வச்சிர தரன் _ இந்திரன்.
வச்சிரதுண்டம் _ கருடன் : கொக்கு : வலியான்.
வச்சிர நிம்பம் _  கரு வேம்பு மரம்.
வச்சிரப் படை _ ஓர் ஆயுதம் :  கோபுரத்தின் அடி நிலைக் கட்டடம்.
வச்சிர பாதம் _ இடியேறு.


வச்சிர பீசம் _ கழற்சிக் காய்.
வச்சிர மணி _ வைரக்கல்.
வச்சிர ரேகை _  பெண் மகப்பேறு அடைவதைக் குறித்ததான இரேகை வகை.
வச்சிரம் _ ஓர் ஆயுதம் : மிகவும் உறுதியானது : வைரமணி : மரத்தின் காழ் : சதுரக் கள்ளி : மல்லர் கருவி : ஒரு பசை வகை : சிற்ப நூல் : யோகத்துள் ஒன்று : வச்சிர நாடு.
வச்சிர லேபம் _ ஒரு வகைப் பசை.



வச்சிர வண்ணன் _ குபேரன்.
வச்சிரவல்லி _ சூரிய காந்தி : பிரண்டைக் கொடி.
வச்சிரன் _ இந்திரன்.
வச்சிராங்கம் _ சதுரக்கள்ளி மரம்.
வச்சிராங்கி _ வைரம் பதித்த உறுதியான கவசம்.


வச்சிராட்சி _  பிண்டைக்கொடி.
வச்சிராயுதம் _  இந்திரனின் ஆயுதம்.
வச்சிராவர்த்தம் _  இராமபிரானது வில்.
வச்சை _  வாஞ்சை : இவறல் : உலோபம் : பழிப்பு.
வச்சையம் _  கலைமான்.



வச்சையன் _  உலுத்தன்.
வஞ்சகம் _  ஏமாற்றம் : விரகு : நரி : மறைவு.
வஞ்சக மூடி _  ஆமை.
வஞ்சகன் _  கயவன் : சூழ்சிக்காரன் : நரி.
வஞ்சகி _  சூழ்சிக்காரி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:17 pm

வஞ்சகி _ சூழ்ச்சிக்காரி.
வஞ்சம்  _ அழிவு : பொய் : கபடம் : கொடுமை : வாள் : சிறுமை : மரபு.
வஞ்சம் தீர்த்தல் _  பழி வாங்குதல்.
வஞ்சவம் _ பாம்பு.
வஞ்னம் _ வஞ்சகம்.


வஞ்சனி _ வஞ்சகி : உமை : மாலை யென்னும் தேவதை : பெண்: ஆணை.
வஞ்சனை _ தந்திரம் : பொய் : மாயம்.
வஞ்சி _ பெண் : வஞ்சிப்பா : வஞ்சிக் கொடி : சேர நாடு : அரசன் வஞ்சிப் பூவைச் சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு செல்லக் கருதியது கூறும் புறத்துறை : சேரர் தலை நகரான கருவூர் : கொடுங்கோளுர்: குடை.
வஞ்சித்தல் _  ஏமாற்றுதல்.
வஞ்சிப்பா _ பா வகை.


வஞ்சினம் _ சூளுரை : கடுஞ் சினம்.
வஞ்சுளம் _ கரிக் குருவி.
வடகம் _ வற்றல் : மேலாடை.
வடகயிலை _ வெள்ளியங்கிரி.
வடகலை _ வடமொழி : ஒரு வகை வைணவப் பிரிவினர் : பாதம் இடாத திருமண் காப்பு.


வடகிரி _ மேரு மலை.
வடகிழக்கு _ வடக்கும் கிழக்கும் சேரும் கோண திசை.
வடகீழ்த்திசைப் பாலன் _  ஈசானன்.
வடகு _ தோல்.
வடக் கயிறு _ தேர் இழுக்கும் கயிறு.
வடக் கிருத்தல் _ உயிர் துறக்கம் துணிவுடன் வடக்கு நோக்கியிருந்து உயிர் விடுதலை மேற்கொள்ளுதல்.


வடதளம் _ ஆலிலை.
வடதிசைப்பாலன் _ குபேரன்.
வடதுருவம் _ வடக்கிலுள்ள முனை.
வடந்தை _ வட திசையில் உள்ளது : வாடைக்காற்று.
வட பல்லி _ புல்லகமென்னும் தலையணிகலன்.



வடபுலம் _ வடநாடு : உத்தர குரு.
வடமரம் _ ஆல மரம் கப்பலின் நடுவிலிருக்கும் பாய் மரம்.
வடமலை _ மேரு மலை : இமய மலை : மந்தர மலை : திருப்பதி மலை.
வடமீன் _ அருந்ததி : துருவ மீன்.
வட மூலகன் _ சிவபிரான்.


வட மேரு _ மேரு மலை.
வட மேற்றிசைக் குறி _  கழுதை.
வடமேற்றிசைப் பாலன் _  வாயு தேவன்.
வடமொழி _  சமஸ்கிருதம்.
வடம் _ கனமான கயிறு : பலகை : மண்டலம் : வில் நாண் : சரம் : ஆலமரம் : ஒழுங்கு.



வடரம் _  பாய் :  தலைச்சீலை.
வடலி _ இளம் பனை மரம்.
வடவர் _ வட நாட்டார்.
வடவு _ மெலிவு.
வடவேங்கடம் _ வடமலை : திருப்பதி மலை.


வடவை _ பெண் குதிரை : அடிமைப்பெண் : குதிரைச் சாதிப் பெண் : எருமை : பெண் யானை : வடவைக் கனல்.
வடவைத் தீ _  பெண் குதிரை முகத்தின் வடிவத்தில் கடலுள் தங்கியிருந்து நெருப்பைக் கக்கிக் கடல் பொங்காதவாறு காத்து ஊழி முடிவில் மேலே கிளம்பி அழிப்பதாகக் கருதப்படும் நெருப்பு.
வடாது _ வடக்கிலுள்ளது வடக்கு.
வடாரகம் _ கயிறு.
வடி _ கள் : தேன் : ஆராய்ச்சி : மாவடு : கயிறு : நாய் : காற்று : வடிவம் : சிறு தடி : வடி என்னேவல்.



வடிகட்டுதல் _ சாரத்தைத் திரட்டுதல்.
வடிகால் _ நீரை வெளியேற்றும் கால்வாய்.
வடிக்கதிர் _  நூல் முறுக்கும் கருவி.
வடிசம் _ தூண்டில்.
வடிசல் _ வடித்த சோறு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:17 pm

வடிதல் _ ஒழுகுதல் : நீர் வற்றுதல் : தெளிதல் : நீளுதல் : அழகு பெறுதல்.
வடித்தல் _ வடியச் செய்தல் : பிழிதல் : பழக்குதல் : சோறு சமைத்தல் : அமைத்தல்.
வடிப்பம் _ வடிவழகு : செப்பம் : அழகு : திறம்.
வடிம்பிடுதல் _ கட்டாயப் படுத்தல் : தேரை நிறுத்திக் கிளப்புதல் : தூண்டுதல்.
வடிம்பு _ விளிம்பு : கூரைச்சாய்வு : பழி : தாங்கு மரம் : தழும்பு.



வடிவணங்கு _  அழகிய பெண்.
வடிவம் _ உடம்பு : உருவம் :அழகு : நிறம் : ஒளி : மெய்ச்சொல்.
வடிவாளன் _ அழகுள்ளவன்.
வடிவு _ அல்குல்: வடிந்த நீர் : வடிவம் : அழகு.
வடிவேல் _  கூர்மையான வேல் : முருகக் கடவுள்.


வடு _ தழும்பு : மாம்பிஞ்சு : இளங்காய் : உடல் மச்சம் : புண்வாய் : குற்றம் : பழி : கேடு : கருமணல் : செம்பு : வண்டு : வாள் : பிரம சாரி : இளைஞன் : வைரவன்.
வடுகக் கடவுள் _ வைர மூர்த்தி.
வடுகச்சி _ வடுகப்பெண்.
வடுகர் _ தெலுங்கர்.
வடுகன் _ வைரவன் : பிரமசாரி : இளைஞன் : மூடன் : தெலுங்க நாட்டான்.


வடுகி _ காளி.
வடுகு _ ஆந்திர மாநிலம் : தெலுங்கு மொழி : இந்தளராகம் : மெய்க்கூத்து வகை : பூணூல் அணிவிக்கும் சடங்கு.
வடுச்சொல் _ பழமொழி.
வடுவரி _  வண்டு.
வடை _ உழுந்தாற் செய்யப்படும் ஒரு பலகார வகை.



வடையற்றது _ வீணானது.
வட்கர் _ குற்றம் : இடை : முரிவு.
வட்கல் _ வெட்கம் : நாணம்: கூச்சம் : கேடு : ஒளி : மழுக்கம்.
வட்காரம் _ வெடிகாரம்.
வட்கார் _ பகைவர்.



வட்கிலான் _ பகைவன்.
வட்குதல் _ வெட்குதல் : கூசுதல் : கெடுதல் : தாழ்தல் : வளம் பெறுதல் : ஒளி மழுங்குதல்.
வட்டகை _  நாட்டுப்பகுதி : சிறு கிண்ணம் : வட்டில் : வண்டிச் சக்கர வட்டை.
வட்டணம் _  பரிசை.
வட்டணை _  தாளக் கருவி : மண்டலம் : உருண்டை : தாளம் போடுகை : மொத்துதல்.


வட்டத்தோல் _  கேடகம்.
வட்டப் பாறை _  விளைவற்ற கற்பாங்கான பகுதி : சந்தனக்கல்.
வட்டப் பூ _ கால் விரல் : அணிவகை.
வட்டமிடுதல் _ சூழ்ந்து வருதல் : நோக்கங் கொண்டு சுற்றுதல் : உருண்டையாதல் : பறவை முதலியன சுற்றி வருதல்.
வட்டம் _ பரிவேடம் : மண்டலம் : குயவன் : திரிகை : பீடம் : வண்டிச்சக்கரம் : எல்லை : தடவை : சுற்று : சுற்றுப் பகுதி : சந்தனக்கல் : சில ஊர்கள் கொண்ட பகுதி : கேடகம் : முத்து வகை : குளம் : கொள்கலம் : வளைவு : ஊதியம் : ஆடை : ஐந்நூறு சால்கொண்ட நீரளவு : தாழ்வு.



வட்டா _ வாயகன்ற பாண்டம்.
வட்டாடுதல் _ சூதாடுதல்.
வட்டாணி  _ திறமை.
வட்டாரம் _ காற்றுப் பகுதி : வீடு : சுற்றுப்புறம் :  தானியக் களஞ்சியம்.
வட்டி _ கூடை : ஒரு படி அளவு : பலகறை : வழி : இலாபம் : பணத்தைப் பிறன் பயன் படுத்தியதற்காக உடையவன் கொள்ளும் ஊதியம்.



வட்டிகை _ சித்திரம் : கூடை : ஓர் ஓட வகை : கைம்மணி : சுற்றளவு: ஓவியம் வரையும் கோல் : ஒரு விருது வகை.
வட்டில் _ கிண்ணம் : உண்கலம் : நாழிகை : வட்டில் : அம்புக்கூடு : கூடை : ஒரு விருது :வழி.
வட்டிற் பூ _ தாமரைப் பூ.
வட்டு _ சூதாடும் கருவி : திரண்ட பொருள் : சிறுதுணி : கண்ட சருக்கரை.
வட்டுவம் _ வெற்றிலை முதலியன வைக்கும் பை : மருந்துப்பை.


வட்டை _ வழி : தேர் : வயல்: பெருங்காடு : திக்கு : மரவட்டை வகை : நாட்டுப் பகுதி : புலியின் உடல் வரி.
வட்புலி _  அரிமா.
வணக்கம் _  மரியாதை சிறப்பிக்கை.
வணங்குதல் _ அடங்குதல் : வழிபடுதல்.
வணர் _ வளைவு : கட்டட வேலை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:18 pm

வணர்தல் _  வளைதல் : மயிர் சுருண்டியிருத்தல்.
வணிகம் _ பொருள்களை வாங்கி விற்றல்.
வணிகன் _ வியாபாரி : துலா ராசி.
வணிதம் _ செப்பம் : நாட்டுப்பகுதி.
வணைதல் _ வளைதல்.


வணைத்தல் _ வளைத்தல் : தண்ணீர் ஊற்றுதல்.
வண்களமர் _ உழுபவர் : வேளாளர்.
வண்சிறை _ மதில்.
வண்டம் _ குந்தப்படை.
வண்டர் _ அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார் : மங்கலப் பாடகர் : வீரர்.


வண்டலம் _ சேறு.
வண்டலவர் _ விளையாட்டுப்பெண்கள்.
வண்டல் _ மகளிர் விளையாட்டு : மகளிர் கூட்டம் : நீரின் அடியில் தங்கிய பொடி மண்வகை.
வண்டவாளம் _ நிலைமை : உண்மைத்தன்மை.
வண்டனான் _  முனிவன்.



வண்டன் _ குள்ளன் : தீயோன் : திண்ணியன்.
வண்டாலம் _  குந்தாலி : ஆயுதவகை.
வண்டானம் _ நாரை வகை.
வண்டி _ சகடம் : வண்டிப்பாரம் : வயிறு.
வண்டில் _ சக்கரம் : சகடம்.


வண்டு _ அறுகாற் சிறு பறவை : அம்பு : குற்றம் : சங்கு : கைவளை : நூல் : பூச நாள் : அபிநய வகை : சிற்றொழுக்கம் : வைக்கோற் கூடு : மரவகை.
வண்டுணாமலர் _ சண்பகப் பூ : வேங்கைப் பூ.
வண்டெச்சில் _ தேன்.
வண்டை _ வெண்டைச் செடி :கொச்சையானது.
வண்ணகம் _ வருணனை : சந்தனம் : மணம் : கலிப்பா உறுப்பு.



வண்ணக்கன் _ நாணய சோதனை செய்வோன்.
வண்ணத்துப் பூச்சி _ தட்டாரப் பூச்சி.
வண்ணம் _ நிறம் : சாந்துப் பொது : அழகு : ஒப்பனை : நன்மை : சிறப்பு : வடிவு : சாதி : இனம் : பண் :மாலை.
வண்ணாத்தி _ ஒரு பறவை வகை : மருந்துப் பொடி : தட்டாரப் பூச்சி : ஒரு மீன் வகை : நாகண வாய்ப்புள் : வண்ணாரப் பெண் : பூநீறு.
வண்ணான் _ ஆடை வெளுப்பவன்.


வண்ணிகன் _ எழுத்தாளன்.
வண்ணிகை _ மருந்துச் சரக்கு.
வண்ணித்தல் _ புனைந்துரைத்தல் : புகழ்தல்.
வண்புகழ் _ கொடையால் வரும் கீர்த்தி.
வண்மை _ வளப்பம் : ஈகை : குணம் : வாய்மை : வலிமை : அழகு : புகழ் : வாகை மரம்.



வதகம் _  இறப்பு.
வதகன் _ கொலைகாரன்.
வதக்குதல் _  வாட்டுதல் : வருத்துதல்.
வதங்குதல் _  வாடுதல் : சோர்தல்.
வதந்தி _ புரளி : உறுதிப் படுத்தப்படாத பேச்சு.



வதம் _ கொலை : நோன்பு.
வதரி _  இலந்தை மரம் : இமயமலைச் சாரலில் உள்ள ஒரு திருமால் தலமான பதரிகாசிரமம்.
வதவல் _  வாடியது : உடல் வலிமையில்லாதவர்.
வதறுதல் _  வாயாடுதல் : திட்டுதல் : மழலை மொழிதல்.
வதனம் _  முகம்.


வதாங்கம் _  நஞ்சு.
வதானியன் _  குபேரன் : வரையாது : கொடுப்போன்.
வதி _  விலங்கு தங்குமிடம் : சேறு : கால்வாய் : வழி.
வதிட்டன் _ வசிட்டன் : பருத்தவன்.
வதிதல் _  தங்குதல் : துயிலுதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:18 pm

வதிரன் _ செவிடன்.
வதிர் _ செவிடு.
வதில் _ பிரதி : நகல் :விடை.
வது _ மணமகள் : மனைவி : மகனின் மனைவி.
வதுகி _ வைக்கோல்.


வதுகை _ மனைவி.
வதுக்கு _ நன்னிலை.
வதுவர் _ யானைப் பாகவர் : குதிரைப் பாகர்.
வதுவை _ மணமகள் : திருமணம் : மணமாலை : மணம் : புணர்ச்சி.
வதூவரர் _ மணமக்கள்.


வதை _  கொலை : தொல்லை : தேன்கூடு.
வதைதல் _  துன்புறுதல் : வருந்துதல்.
வதைத்தல் _ துன்புறுத்துதல் : வருத்துதல்.
வத்தமம் _  ஆமணக்கஞ்செடி.
வத்தம் _ சோறு.


வத்தனை _ ஆக்கம் : மரபுவழி : கூலி : உயிர் வாழ்க்கை.
வத்தா _ சொல்பவன் : நூலாசிரியன் : நாவிதன்.
வத்தாலை _ கொடிவகை.
வத்தி _ திரி : தீக்குச்சி : ஊதுவத்தி : மெழுகுவத்தி : விளக்குத் தகழி : ஆடையின் அருகு.
வத்தித்தல் _  உளதாதல் : பெருகுதல்.


வத்திப்பெட்டி _  தீப்பெட்டி.
வத்திரம் _  ஆடை : முகம்.
வத்து _ பொருள் : மது : உவமை.
வத்தூரம் _  கீரை வகை.
வத்தை _ மரத்தோணி : உயிர் வாழ்க்கை : கூலி.



வத்தனம் _ வணக்கம் : பணிவு : மரியாதைச் சொல் : முகம்.
வந்தனி _ கோரோசனை.
வந்தி _ புகழ்வோன் : மங்கலப் பாடகன் : பாணன் : ஏணி : மலடி : மூதாட்டி : வந்தி  என்னேவல் : வலாந்காரம் : கட்டாயம் : முரண்டு : சண்டை.
வந்திகை _ அணிகலவகை : அழகு : தேமல் : மலடி.
வந்தித்தல் _  புகழ்தல் : வணங்குதல்.



வந்து _  காற்று : உவமை : பாவனம் : கால் : ஓர் அசைச் சொல்.
வந்தை_  மலடி : பெருமை : புல்லுருவி.
வபனம் _ மயிர்க் களைதல் :விதைத்தல் : விதைத்தானியம்.
வபு _  உடல்.
வபை _ முதன்மையானது : நிணப் பொருள்.


வமனம் _ வாந்தி செய் மருந்து.
வமிசம் _ குலம் : மூங்கிலம் : வேய்ங்குழல்.
வமிசாவளி _  மரபுவழி.
வம்பமாந்தர் _ அயல் நாட்டு மாந்தர்.
வம்பமாரி _ காலமல்லாத காலத்து மழை.


வம்பலன் _  புதியவன் : வழிப் போக்கன்.
வம்பலாட்டம் _ குழப்பம்.
வம்பல் _ திசை.
வம்பு _ வஞ்சனை : புதுமை : வீண் பேச்சு : பயனிலாமை : பழமொழி :  தீம்புச் சொல் : படிறு சரசச் செயல் : சண்டை : மணம் : உவமை : கையுறை : மேற் போர்வை : பெரிய பானை.
வம்மை _ பெற்றோர் மணமகட்குக் கொடுக்கும் சீர் வரிசை.


வய _ வலிமை : மிகுதி.
வயக்கம் _ ஒளி : விளக்கம்.
வயக்கு _ ஒளி.
வயக்குதல் _ பழக்குதல் : திருத்துதல்.
வயங்கல் _ கண்ணாடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:19 pm

வயங்குதல் _  விளங்குதல் : தெளிதல் : மிகுதல் : தோன்றுதல்.
வயஞானம் _ உண்மையுணர்வு.
வயணம் _ விதம் : நிலைமை : உணவு வளம் : நேர்த்தி : ஏற்ற செம்மையுடையது.
வயதரம் _  கடுக்காய்.
வயது _ அகவை : ஆண்டு : இளமை.


வயதெற்றி _  திப்பிலி.
வயத்தம்பம் _ இளமை மாறாமல் நிறுத்தும் வித்தை.
வயத்தன் _ வசப்பட்டவன்.
வயந்த மன்னவன் _ மன்மதன்.
வயப்படுதல் _ வசமாதல் : தலைப்படுதல்.


வயப்புலி _ அரிமா.
வயமம் _ அத்தி.
வயமா _ அரிமா : புலி : யானை : குதிரை : ஆவணி மாதம்.
வயமான் _ புலி : அரிமா.
வயமீன் _ உரோகிணி நாள்.


வயம் _ வெற்றி : வலிமை : வேட்கை : பூமி : புவம் : பறவை : மூலம் : சம்பந்தம் : ஏற்றது : நீர் : இரும்பு : குதிரை : ஆடு : முயல் : கிராம்பு.
வயலை _ பசலைக்கொடி : வெளி.
வயல் _ கழனி : மருத நிலம் : வெளி.
வயவரி _ புலி.
வயவன் _ வீரன் : திண்ணியன் : காதலன் : கணவன்.


வயவு _  வலிமை : விருப்பம் : கருப்பகாலத்து மகளிர்க் குண்டாகும் மயக்கம்.
வயவெற்றி _ வயதெற்றி : திப்பிலி.
வயவை _ வழி.
வயளை _ பசலைக் கொடி.
வயறு _ கொக்கி : கயிறு.



வயனம் _ உரை : வகை : வேதம் : பழமொழி.
வயனர் _ பறவை வடிவினர்.
வயன் _ விதம் : நிலைமை : இனிய உணவு : விவரம் : நேர்த்தி : காரணம்.
வயா _ வேட்கைப் பெருக்கம்: கருப்பம் : கருப்பை : மகப் பேற்று நோய்.
வயாவுதல் _ விரும்புதல்.


வயாவுயிர்த்தல் _ கருவீனுதல் : வருத்தம் தீர்தல்.
வயானம் _ பறவை : சுடுகாடு.
வயித்தியம் _ மருத்துவம் : வைத்தியம்.
வயிந்தவம் _ குதிரை : மாயை.
வயிரம் _ திண்மை : வலிமை : கூர்மை : தண்டாயுதம் : கிம்புரி : திருவோண நாள் : கோபம்.


வயிரவம் _ அச்சம் : ஓர் அகப்புறச் சமயம்.
வயிரவன் _ சிறு கீரை : சிவ மூர்த்தங்களுள் ஒன்று.
வயிரவன் _ வாகனம் : நாய்.
வயிரவாள் _ வச்சிரப்படை.
வயிரவி _ துர்க்கை : ஒரு பண்வகை.


வயிராக்கியன்  _ பிடிவாதமுள்ளவன் :ஊக்கமுள்ளவன்.
வயிரி _ பகைவன் : வன்னெஞ்சுடையவன்.
வயிரியம் _ மயிர்ச்சீலை.
வயிரியர் _ கூத்தர் : பாடகர்.
வயிர் _ கூர்மை : ஊது கொம்பு : மூங்கில்.


வயிறு _ உதரம் : கருப்பப்பை : நடுவிடம் : உள்ளிடம் : மனம்.
வயிறுதாரி _ பெருந்தீனிக்காரன்.
வயிறுவளர்த்தல் _ பாடுபட்டு உணவு தேடி வாழ்தல்.
வயிறுவாய்த்தல் _ கருக்கொள்ளுதல் : மகவு பெறுதல்.
வயிற்றுப் பிழைப்பு _ உயிர் வாழ்வு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:20 pm

வயிற்றுப் போக்கு _ செரியாமல் மலங்கழிக்கை : பேதியாதல்.
வயின தேயன் _ கருடன்.
வயினம் _ பறவை.
வயின் _ இடம் : பக்கம் : வயிறு : வீடு : முறை : பக்குவம் : எல்லை.
வயோதிகம் _  முதுமை.



வர _ வரை : அசைச்சொல்.
வரகவி _ அருட்கவி.
வரகாத்திரம் _  யானைத்தலை : தலை.
வரகு _ தானியவகை : சாமை.
வரடம் _ அன்னம் : கொடி வகை.


வரணம் _ சூழ்தல் : மதில் : மறைத்தல் : சட்டை : ஒட்டகம் : பால் : தெரிந்தெடுத்தல்.
வரண்டகம் _  உண்டை : சுவர்: யானைமேல் தவிசு : முகப்பரு.
வரதட்சிணை _ மணமகனுக்குப் பெண் வீட்டார் கொடுக்கும் பொருள்.
வரதநூல் _ சகுன சாத்திரம்.
வரதம் _ அருள் : நல்லுடை : குபேரன் நிதி.


வரதன் _ வரம் தருபவன் : கடவுள் : உதவுவோன் : காளமேகப் புலவரின் இயற்பெயர் : காஞ்சி புரத்திலுள்ள திருமால் பெயர்.
வரதை _ உமையம்மை : கன்னி : வரம் தருபவள்.
வரத்து _ வருகை : வருவாய் : பெருக்கு : மரபுவழி.
வரநதி _ கங்கையாறு.
வரபலம் _ தென்னை மரம் : வரத்தாலாகிய தன்மை.


வரப்பு _  வயலின் கரை : எல்லை.
வரப்புக் கடா _ நண்டு வகை.
வரம் _ அருள் : வாழ்த்து : வேண்டுகோள் : விருப்பம் : மேன்மை : சூழல் : அடைக்கலாங்குருவி : எறும்பு :  மஞ்சள்.
வரம்பழிதல் _ அளவு கடத்தல்.
வரம்பிலாற்றல் _ முடிவிலா ஆற்றல்.


வரம்பிலின்பம் _ அளவிலா ஆனந்தம்.
வரம்பு _ எல்லை : வரப்பு : அணை : விளிம்பு : ஒழுங்கு : மனை : வட்டி : வழி.
வரயோகம் _ யோக வகை.
வரர் _ வானோர் : சிறந்தவர்.
வரலாறு _ சரித்திரம் : செய்தி : விவரம் : எடுத்துக்காட்டு : வழி வகை.


வரவிடுதல் _ அனுப்புதல்.
வரவு _ வருகை : வருவாய் : விளைவு.
வரன் _ சிறந்தவன் : கடவுள் : மணமகன் : கணவன்.
வரன்முறை _ வரலாறு : ஒழுங்கு முறை : நியதி : ஊழ்.
வராகற்பம் _ திருமால் பன்றி அவதாரம் கொண்டாகலம்.


வராகம் _ பன்றி : பதினெண் புராணத்துள் ஒன்று, உபநிடதங்களுள் ஒன்று : கணித நூல் : ஒரு நாட்டுப் பகுதி : போர் : ஆசன வகை.
வராகன் _ 3 1/2 ரூபாய் மதிப்புள்ள பொன் நாணயம் : அருகன்.
வராகிவேய் _ முள்ளம் பன்றி முள்.
வராங்ககம் _ இலவங்கப்பட்டை.
வராங்கம் _ தலை : அழகிய உருவம் : உடல் : யானை : இலவங்கம் : வானவரின் உடம்பு.


வராங்கனை _ உருவிற் சிறந்தவள் : கூந்தற் பனை.
வராடகம் _ பலகறை : தாமரையின் காய் : கயிறு.
வராடி _ பலகறை : பாலை யாழ்த்திறத்துள் ஒன்று : முரட்டு நூற் சீலை.
வரால் _ ஒரு மீன் வகை.
வராளம் _ பாம்பு.


வராளி _ சந்திரன் : ஒரு பண் வகை : யாழ்வகை : மண்ணீரல்.
வரி _ கோடு : கைரேகை : எழுத்து : புள்ளி : தேமல் : வண்டு : கடல் : கட்டு : கூத்து வகை : உயர்ச்சி :  குடியிறை : நிறம் : அழகு : வடிவு : நெல் : தீ.
வரிக்கடை _ வண்டு.
வரிக்குதிரை _ விலங்குவகை.
வரிசி _ தூண்டில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:20 pm

வரிசை _ ஒழுங்கு : மரியாதை : தகுதி : மேம்பாடு : பாராட்டு.
வரிதகம் _ 32 அடியால் வரும் இசைப்பாட்டு.
வரிதல் _ எழுதுதல் : பூசுதல் : மூடுதல் : கட்டுதல்.
வரித்தல் _ கட்டுதல் : அமர்த்தல் : தேர்ந்து கொள்ளுதல்.
வரிப்பணம் _ குடியிறை.


வரிப்புலி _ வேங்கைப்புலி.
வரிப்புறம் _ அணில் வகை.
வரியரிசி _ சீரகம்.
வரிவயம் _ புலி.
வரிவரிமணலி _ கற்றாழை.


வரிவனம் _ தில்லைமரம்.
வரிகம் _ மயில் தோகை : இலை : பரிவாரம்.
வருகை _ வருதல்.
வருக்கம் _  இனம் : குலம் : சதுரம் : தொகுதி : ஒழுங்கு : ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கி வந்த தொகை அத்தியாயம்.
வருக்கு _ கஞ்சி : பேரேடு.



வருக்கை _ மீன்வகை : வேர்ப்பலா : இனவரிசை.
வருச்சதித்தல் _ விலக்குதல் : கைவிடுதல்.
வருடகம் _ முடக்கொற்றன்.
வருடம் _  ஆண்டு : மழை : பூகண்டம்.
வருடித்தல் _ மழை பொழிதல் : சொரிதல்.



வருடுதல் _ தடவுதல்.
வருடை _ ஆடு : வரையாடு : மேடராசி : எண்காற் பறவை : மாற்சரியம்.
வருடைமான் _ மலையாடு.
வருட்டம் _ வேப்பமரம் : முட்டை.
வருட்டுதல் _ தேற்றுதல் : வயப்படுதல்.



வருணதிசை _ மேற்குத்திக்கு.
வருணம் _ நிறம் : சாதி : குலம் : அழகு : ஒளி : மஞ்சள் : பொன் : யானை : நீர் : வேடம் : சதய நாள்.
வருண விந்து _ முத்துச்சிப்பி.
வருணன் _ மேற்றிசைப்பாலனும், கடலுக்கும் நெய்தல் நிலத்திற்கும்  உரியவனும் : மழைக்குத் தலைவனுமாகிய கடவுள்.
வருணநாள் _ சதய நாள்.



வருணனை _ தோத்திரம் : புகழ்ந்துரைத்தல்.
வருணாயலயம் _ கடல்.
வருணி _ பிரமசாரி : பொன்.
வருதி _ ஆணை : வருக என்னும் விளி.
வருத்தம் _ துன்பம் : களைப்பு : முயற்சி.


வருத்தனை _ பிழைப்பு : தொழில் : கூத்தின் செயல் : செல்வம் : சம்பளம் : வழி : மனித உரிமை : பெருகுதல்.
வருத்து _ துன்பம் செய் : வருத்து என்னேவல்.
வருநர் _ விருந்தினர்.
வருநாள் _ எதிர்காலம்.
வருந்துதல் _ துன்புறுதல் : உடல் மெலிதல்.



வருபிறப்பு _ மறுபிறப்பு : மறுமை.
வருபுனல் _ பெருகிவரும் நீர் : ஆறு.
வருமாறு _ நிகழ்ச்சி முறை : வரும் விதம்.
வருமானம் _ வருவாய்.
வருமானவரி _ வருமானத்தின் மேல் விதிக்கப்படும் அரசு வரி.



வருமை _  மறுபிறப்பு.
வரும்படி _ வருமானம்.
வருவியம் _ முழங்கால்.
வரூதம் _ கவசம் : பரிசை : வாழுமிடம்.
வரூதினி _ படை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:21 pm

வரேந்திரன் _ அரசன் : இந்திரன்.
வரை _  மலை : கல் : எல்லை : அளவு : கோடு : எழுத்து : மூங்கில் : இடம் : காலம் : வரை என்னேவல்.
வரைச்சிலம்பு _  மலைச்சாரல்.
வரைதல் _ எழுதுதல் : கணித்தல் : விலக்குதல் : திருமணம் செய்தல்.
வரைநீர் _ மலையருவி.



வரையறை _   எல்லை : திட்டம் : முடிவு.
வரைநேமி _ சக்கரவாள மலை.
வரைப்பு _ உலகம் : எல்லை : மதில் : மாளிகை : குளம்.
வரையரையன் _ இமவான்.
வரையறுத்தல் _ மதிப்பிடுதல் : கணித்தல் : வளைத்தல்.


வரையாடு _ மலையாடு : மான் வகை.
வரைவு _ பிரிவு : அளவு : எல்லை : எழுதுதல் : திருமணம்.
வர்க்கம் _  தீ : வகுப்பு : இனம் : வமிசம் : எருக்கம் பால் : பிசாசு.
வர்ச்சியம் _ விலக்கத்தக்கது.
வர்ணகம் _ சந்தனம் : மரவகை.




வர்ணம் _ நிறம் : குலம் : அழகு : ஒளி : புகழ் : மணம் : துதி : குங்குமம் : மஞ்சள்.
வர்ணனை _ புகழ்ந்துரைத்தல்.
வர்த்தகம் _ வாணிகம்.
வர்த்தமானம் _ செய்தி : தற்கால நிகழ்ச்சி.
வர்த்தனை _ செல்வம் : பெருகுதல் : வளர்ச்சி.


வர்மம் _ உட்பகை : வன்மம்.
வலக்காரம் _ பொய் : விரகு : கட்டாயப் படுத்துதல் : வெற்றி.
வலக்கை _ வலப் பக்கம் : வலப்பக்கக் கை.
வலங்கம் _ பெருங்குடும்பம்.
வலங்காரம் _ மத்தளத்தின் மார்ச்சனை பூசிய பக்கம்.


வலங்கை _  வலப்பக்கத்துக் கை.
வலங்கொள்ளுதல் _  வெற்றி கொள்ளுதல் : வலம் வருதல்.
வலசை _  இடம் விட்டுப் பெயர்தல் கூட்டம்.
வலட்டி _ வல்லமையுள்ளது.
வலது _ வெற்றி : திறமை : செயல் : வலப்பக்கம்.



வலந்தம் _ உரை : வளைவு.
வலமன் _  வலப் பக்கம்.
வலம் _ வெற்றி : விலிமை : படை : ஆணை : வலப் பக்கம்: மேலிடம் : உயர்வு.
வலம்பம் _  நேர்கோடு.
வலம்புரி _  வலப்பக்கம் முறுக்குண்ட சங்கு.


வலயம் _ வட்டம் : சக்கரப்படை : கடல் : குளம் : கைவளையம் : தாமரையின் சுருள் : சுற்றிடம் : நீர் நிலை : பாத்தி : எல்லை : தோட்டம்.
வலவன் _ திறமையுடையவன் : வெற்றியாளன் : தேர்ப்பாகன் : திருமால் : ஓர் அசுரன்.
வலவாய் _ வலப்பக்கம்.
வல்லவை _ விநாயகன் தேவியாகி வல்லபை : திறமை : காளி : இடாகினி : வஞ்சகப் பெண்.
வலற்காரம் _  பொய்.


வலன் _ வெற்றி : வலப் பக்கம் : ஆணை : வலிமை : சேனை : வலம் வருதல் : திறமையானவன் : ஓர் அசுரன்.
வலாகம் _ கொக்கு : நீர்.
வலாகு _ கொக்கு.
வலாட்டிகன் _ திண்ணியன்.
வலாரி _ வலன்  என்னும் அசுரனின் பகைவனான இந்திரன்.



வலாற்காரம் _ கட்டாயப்படுத்துதல்.
வலி _ வன்மை : வல்லெழுத்து : அகங்காரம் : பற்றுக்கோடு : சூள் : இழுக்கை : இசிவு நோய் : குரங்கு : இழு : வலி என்னேவல்.
வலிங்கம் _ வலாற்காரம் : கட்டாயப்படுத்துதல்.
வலிசெய்தல் _ வல் வழக்கு உரைத்தல் : மிடுக்குச் செய்தல்.
வலிதம் _  சுற்று வட்டம் : அசைவு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:21 pm

வலிதல் _ திண்ணியதாதல் : துணிதல் : மீறுதல் : கட்டாயப் படுத்தல்.
வலிதின் _ வலாற்காரமாக.
வலிது _ வலிமையுள்ளது : வலாற்காரம்.
வலித்தல் _ கட்டாயப்படுத்துதல் : துணிதல் : ஆலோசித்தல் : வளைத்தல் : அழகு காட்டுதல் : துடுப்பால் : படகு தள்ளுதல் : இழுத்தல்.
வலிநோய் _ வலிப்பு நோய்.


வலிபடுதல் _ மாறுபடுதல்.
வலிப்பு _ இசிவு : நோவு : வருத்தம்.
வலிமுகம் _ குரங்கு.
வலிமை _ வன்மை : திறமை : திண்மை : வலாற்காரம்.
வலிய  _ தானாக : பெரிய : கட்டாயமாக : வலிமையுள்ள.


வலியன் _ வலிமையுடையவன் : திறமையானவன் : கரிக்குருவி.
வலிவு _ வலிமை : உச்ச விசை.
வலீநகம் _ தாழை.
வலீமுகம் _ குரங்கு.
வலு _ வலிமை : கனம் : திறமை : கொசு : பற்று : ஒரு பசை மருந்து : பலமான : எட்டு : மிகுதியான.


வலுத்தல் _ திடப்படுதல்.
வலுமை _ பலம் : வலாற்காரம்.
வலுவன் _ திறமை மிக்கவன்.
வலூகம் _ தாமரைக்கிழங்கு.
வலை _ சூழ்ச்சி : உயிர்களை அகப்படுத்துதற்குரிய கருவி.


வலைகொள்ளுதல் _  சூழ்தல்.
வலைச்சல் _ ஓட்டு வீடுகளில் மேற் கூரையில் பயன்படுத்தப் படும் சிறிய மரச் சட்டம்.
வலைப்படுதல் _ வலையில் அகப்படுதல் : சூழ்ச்சிக்குட்படுதல்.
வலைப்பை _  வலைபோற் கண்ணுள்ள பை.
வல் _ வலிமை : திறமை : சூதாடு கருவி : விரைவு : மார்பகக் கச்சு.


வல்கம் _ மரப்பட்டை.
வல்சி _ உணவு : அரிசி : சோறு : நெல்.
வல்மீகம் _ கறையான் புற்று : யானைக்கால் நோய்.
வல்ல _  வலிமையுள்ள : திறமையுள்ள.
வல்லடி _ வலிமை : திறமை : வரலாற்காரம் : கொடுமை : அருஞ்செயல்.


வல்லடி வழக்கு _  அநியாய வழக்கு.
வல்லணங்கு _ காளி.
வல்லநாய் _ சூதாடு கருவியாகிய நாய்.
வல்லபசத்தி _ குண்டலி சத்தி : மிகுவலிமை.
வல்லபம் _ வலிமை : திறமை : விருப்பம் : அருஞ்செயல் : உயர் சாதிக் குதிரை.


வல்லபன் _  கணவன் : அன்பிற்குரியவன் : வலிமையுள்ளவன்.
வல்லபி _ உமையம்மை.
வல்லபை _ மனைவி : தலைவி : வலிமையுள்ளவர் : திறமையுள்ளவர் : விநாயகக் கடவுளின் தேவி.
வல்லமை _  வலிமை.
வல்லம் _ ஆற்றல் : மனைவி : ஓர் ஊர் : வாழை : பளிங்குக் கல்வகை.



வல்லயம் _ ஈட்டிவகை.
வல்லரி _ தளிர் : பூங்கொத்து : காய்க்குலை : கொடி.
வல்லவன் _ வலியவன் :கணவன் : .இடையன் : திறமையுடையவன் : சமைப்போன் : வீமன் : ஓர் அரசன்.
வல்லா _ முடியாதவை.
வல்லாங்கு _ இயன்ற அளவு.


வல்லாட்டு _ குறும்பு.
வல்லாண்முல்லை _ ஒருவனது குடிப்பெருமையைப் புகழ்ந்து அவனது ஆண்மைபெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை.
வல்லாண்மை _ பேராற்றல்.
வல்லாமை _ இயலாமை : தள்ளாமை.
வல்லாரை _ கீரை வகை : கேட்டை நாள். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:22 pm

வல்லார் _  வலிமையுடையவர் : திறமையுள்ளவர்.
வல்லாளன் _ வலிமையுள்ளவன் : ஓர் அரசன்.
வல்லான் _ வலிமையுள்ளவன் : கடவுள்.
வல்லி _ படர்கொடி : இளம் பெண் : வள்ளியம்மை : உபநிடதம் : பதாகை : திருமணம் : முருக்க மரம் : விரைவு : கால் விலங்கு.
வல்லிகம் _ மிளகு : மஞ்சள் : கொடி.



வல்லிகை _ யாழ் : காதணிவகை : குதிரையில் கட்டும் ஒருவடம்.
வல்லிக் கயிறு _ உடைமேல் தரிக்கும் அரைஞாண்.
வல்லிசம் _ மிளகு.
வல்லிசாதகம் _ கற்பக மரத்தில் படரும் கொடிவகை.
வல்லிசாதி _ தெய்வத் தன்மையுள்ள கொடி.


வல்லிசை _ பாம்பு : வல்லோசை.
வல்லிசைவண்ணம் _ வல்லெழுத்துமிக்குப் பயின்றுவரும் சந்தம்.
வல்லிதின் _ வல்லாங்கு : இயன்ற அளவில் : விரைவாக.
வல்லி மண்டபம் _ கொடிப் பந்தல்.
வல்லி மரம் _ கப்பலின் தலைப்பாய் மரம்.



வல்லியம் _  புலி : கொடி : கொல்லி மலை : மஞ்சள் : இடைச்சேரி.
வல்லியம்  பொருப்பு _ கொல்லி மலை.
வல்லினம் _ வல்லோசையுள்ள க்,ச்,ட்,த்,ப்,ற்,  எழுத்துகள்.
வல்லீகம் _ பெருங்காயம்.
வல்லுதல் _ ஒழுங்கு : செய்ய இயலுதல்.



வல்லுநர் _ தொழிலிற் சிறந்தோர்.
வல்லுரம் _ காடு :  புல்தரை : வயல் : மணல் : பூங்கொத்து : தனிமை : காட்டுப்பன்றியிறைச்சி.
வல்லுவம் _ வெற்றிலைப் பை.
வல்லுளி _ பன்றி.
வல்லூகம் _ கரடி : ஆண்குரங்கு : முசு.



வல்லூரம் _ இறைச்சி : பாழ்நிலம் : வனம்.
வல்லூறு _ இராசாளி என்னும் பறவை.
வல்லூற்று _  பாறையிடையினின்று சுரக்கும் ஊற்று நீர்.
வல்லே _ விரைவாக.
வல்லேறு _ பேரிடி.



வல்லை _ வலிமை : பெருங்காடு : மேடு : கோட்டை : வருத்தம் : வட்டம் : விரைவு : புன முருங்கை : மரவகை : வயிற்றுக் கட்டி வகை.
வல்லையம் _ ஈட்டி வகை.
வல்லோன் _ வலிமையுடையவன் : கொடுமையானவன்.
வல்விலங்கு _ யானை : புலி.
வல்வினை _ வலியதாகிய ஊழ் : தீவினை : கொடுஞ் செயல்.


வவ்வால் _  ஒரு பறவை : ஒரு மீன்.
வவ்வுதல் _  கவர்தல் : பற்றுதல்.
வழக்கம் _  பழக்கம் : ஈகை : தொன்று தொட்டு நடைபெறுதல்.
வழக்கழிவு _ முறை கேடு.
வழக்கறிஞன் _  வழக்குரைஞன்.


வழக்கறுதல் _  வழக்கத்திலிருந்து நீங்குதல்.
வழக்காடுதல் _  வாதாடுதல் : ஊடுதல்.
வழக்காறு _ பழக்கவொழுக்கம்.
வழக்கிடுதல் _ வாதாடுதல்.
வழக்கு _ இயங்குகை : நீதி : நெறிவண்மை.



வழங்காத்தேர் _ பேய்த்தேர் : கானல் நீர்.
வழங்காவழி _  புதுவழி.
வழங்குதல் _  இயங்குதல் : நடைபெறுதல் : நடமாடுதல்.
வழலிக்கை  _  இளைப்பு.
வழலுதல் _  தோலுரிதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:23 pm

வழலை  _  பாம்பு வகை : கோழை : புண்ணிலிருந்து வடியும் நீர் : சலவைக் கட்டி : உப்கு வகை.
வழாறு _  நிறை நீர் உள்ள ஆறு.
வழி _  நெறி : வழிபாடு : கழுவாய் : காரணம் : ஒழுக்கம் : முறைமை : மரபு : சுவடு : பழைமை : பின்பு : வழியென்னேவல்.
வழிகட்டுதல்   வழிமறித்தல்.
வழிகாட்டி _  முன்மாதிரியாகயிருப்பவர்.



வழிகெடுதல்  _  சுவடு அழிதல்.
வழிச் செலவு _  பயணச்செலவு : பயணம்.
வழிதல் _  நிரம்பிப் பெருகுதல்.
வழித்தல் _  வடித்தல், திரட்டி எடுத்தல், பூசுதல் : துடைத்தெடுத்தல்.
வழித்துணை _  வழிக்குத்துணையாகவுள்ளவன்.



வழித் தெய்வம் _  குலதெய்வம்.
வழித் தொண்டு _  வழியடிமை.
வழித்தோன்றல் _  மகன்.
வழிநடத்தல்  _  பிறர் செய்த வாறு இயங்குதல்.
வழிநூல் _  முதல் நூல் வழியை விகற்பிக்கும் நூல்.


வழிபடுதல்  _  பின்பற்றுதல் : வணங்குதல்.
வழிபாடு  _  பூசனை : வணக்கம்.
வழிப்பறி  _ வழியில் இடும் கொள்ளை.
வழிமறித்தல் _  செல்வதைத் தடுத்தல்.
வழிமுதல்  _  குலமுதல்வன்.


வழிமுறை _ தலைமுறை.
வழிமொழிதல் _  முன்னதை ஏற்றுக் கூறுதல்.
வழியடியர் _  பரம்பரைத் தொண்டர்.
வழியம்பலம்  _  சாலையில் தங்குவதற்குரிய சத்திரம்.
வழியல் _  வழிந்தோடுவது.


வழியாயம் _  சுங்கம்.
வழியிலார் _ திக்கற்றவர்.
வழியுணவு _  கட்டுச்சோறு.
வழு  _  தவறு : கேடு : பாவம் : குற்றம்.
வழுக்கல் _   சறுக்குதல்.



வழுக்கு  _  தோல்வி : சறுக்குகை : மறதி : தவறு : வழுவழுப்பானது.
வழுக்கு நிலம் _  சறுக்கலான தரை.
வழுக்கை _  இளந்தேங்காயின் உள்ளீடு : தலைமயிர் உதிர்ந்து வளராத நிலை.
வழுதலை  _  கத்தரிச் செடி : புல்லுருவிச் செடி.
வழுதி _  பாண்டியன்.



வழுது _  பொய் : வைக்கோல்.
வழுதுணங்காய்  _ கத்தரிக்காய் : கண்டங் கத்தரி வகை.
வழுதுணை _  கத்தரிச் செடி.
வழுத்தரல் _  இறந்து போதல்.
வழுத்துதல் _  வாழ்த்துதல் : துதித்தல்.


வழுநிலை _  இலக்கணம் : சொல் தவறாக வரும் தன்மை.
வழுநீர் _  கண்பீளை.
வழும்பு  _  குற்றம் : நிணம் : தீங்கு : அழுக்கு.
வழுவல் _ நழுவுதல் : தவறு : கேடு.
வழுவழுப்பு _  வழுக்கும் தன்மை : மென்மை : எண்ணெய்ப் பசையுடைமை.


வழுவாமை _   தவறு : இன்மை.
வழுவு  _  தவறு : குற்றம் : கேடு : பாவம்.
வழுவை  _  யானை.
வழை _ புன்னை மரம்.
வழைச்சு _  புதுமை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:23 pm

வளகம்  _  பவளம்.
வளகு _ செழிப்பு.
வளநாடு _ செழிப்புள்ள நாடு.
வளந்து _ பெரிய மிடா.
வளப்பம் _ செழுமை : நன்மை : மாட்சிமை.


வளமை _ செழிப்பு : நன்மை : செல்வம் :  பொருள்.
வளம் _ பயன் : செழுமை : மிகுதி: செல்வம் : வருவாய் : அழகு.
வளர் _ இளங்கொம்பு : பெருகும் தன்மை.
வளர்தல் _ உறக்கம் : நீள்தல் : பெருகுதல்.
வளவளப்பு _ வீண் பேச்சு.


வளவன்  _ சோழன்.
வளவு _ வீடு : வீட்டுப்புறம்.
வளவுதல் _ வளர்தல்.
வளன் _  வளம்.
வளாகம் _  இடம் : உலகம் : நாடு : பரப்பு.



வளார் _ இளங் கொம்பு.
வளாவுதல் _ மூடுதல் : சூழ்தல் : கலத்தல்.
வளி _ காற்று : உடல் வாதம்.
வளிசம் _ தூண்டில்.
வளிநிலை _ கோபுரம்.


வளிமகன் _  அனுமன் : வீமன்.
வளிமறை _ வீடு : கதவு.
வளு _ இளமை.
வளும்பு _ நிணம் : அழுக்கு.
வளை _ சங்கு : கைவளை : துளை : சக்கரப்படை : சுற்றிடம் : சிறிய உத்திரம் : தூதுவளை என்னும் கொடிவகை : கட்டு : முற்றுகையிடு : வளை என்னேவல்.



வளைகாப்பு _  கருவுற்ற பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு.
வளைதல் _ சூழ்தல் : கோணுதல் : திடம் அறுதல் : தாழ்தல்.
வளைத்தல் _ தடுத்தல் : பற்றுதல் : கவர்தல்.
வளைப்பு _  குடியிருப்பிடம் : காவல் : உழவுச்சால் : வளைத்தல்.
வளைமணி _ சங்குமணி : அக்குமணி.


வளையகம் _ சங்கு.
வளையம் _ தாமரைச்சுருள் : சுற்று : குளம் : கைவளை : சங்கு : எல்லை : மண்டலம்.
வளையல் _ கண்ணாடி : மகளிர் கையணிகல வகை.
வளைவாணன் _ பலராமன் : நாகநாட்டரசன்.
வளைவு _ சுற்று : கோணல் : பணிவு.



வள் _ வளம் : பெருமை : வார் : வாள் : கடிவாளம் : காது : படுக்கை : கூர்மை : வலிமை.
வள்ளடி _ செவிமூலம் : காதின் அடி.
வள்ளம் _  உண்ணும் வட்டில் : நாழிகை : சிறு தோணி : அளவு வகை.
வள்ளலார் _ இராமலிங்க அடிகளார் : நாயன்மார்.
வள்ளல் _ கொடையாளி : வண்மையுடையோன் : கொடிவகை.


வள்ளி _ கைவளை : முருகக் கடவுளின் தேவி : சந்திரன் : கொடி வகை : கைவளை.
வள்ளிக் கண்டம் _ சீந்திற் கொடி.
வள்ளிச்சாய் _ நேர்த்தியாய் : சரியாய்.
வள்ளிசு _ நேர்த்தி : முழுமை.
வள்ளியம் _ ஊது குழல் : மரக்கலம் : மெழுகு : மிளகு : ஈகைக் குணம்.


வள்ளியன் _ வண்மையுடையோன் : கொடையாளி : வள்ளல்.
வள்ளுரம் _ பசுவின் இறைச்சி.
வள்ளுவன் _  நிமித்திகன் : ஒரு சாதியான் : திருவள்ளுவர்.
வள்ளுரம் _ பசுந்தசை : சூட்டிறைச்சி.
வள்ளை _ ஒரு கொடி வகை :மகளிர் நெல் குற்றும் போது பாடும் பாட்டு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:24 pm

வறங்கூர்தல் _ பஞ்சம் உண்டாதல் : வறட்சியாதல்.
வறடன் _ மெலிந்தவன் : மலடி.
வறடு _ வறட்சி : ஈனாத பசு.
வறண்டி _ குப்பை வாரும் கருவி.
வறண்டுதல் _  பிறாண்டுதல் : திருடுதல்.


வறத்தல் _ காய்தல் : வறுமையாதல் : மழை பெய்யாது போதல்.
வறல் _  உலர்தல் : சுள்ளி : வறுத்தல்.
வறவு _ கஞ்சி.
வறளி _ உலர்ந்தது.
வறஞன் _ பொருளில்லாதவன்.


வறிது _ பயனின்மை : அறியாமை : குறைவு : வறுமை.
வறுதல் _ வறுபடுதல்.
வறுத்தல் _  பொரியச் செய்தல் : தொந்தரவு செய்தல்.
வறுநகை _ புன்னகை.
வறுமை _  துன்பம் : இன்மை.


வறுவியோர் _ இல்லாதவர் : திக்கற்றவர்.
வறை _ பொரிக்கறி.
வரை நாற்றம் _ தீ நாற்றம்.
வறையல் _ பிண்ணாக்கு.
வறையார் _  பயனற்றவர்.


வற்கடம் _ வறட்சி : பஞ்சம்.
வற்கம் _ குதிரையின் கடிவாளம் : பிசாசு : அத்தியாயம் : ஒழுங்கு : மரபு.
வற்கலம், வற்கலை _  மரவுரி : மரப்பட்டை.
வற்காலி _ வெள்ளாடு : ஆடு.
வற்குணம் _   கொடுமை.


வற்சதரம் _  இளங்கன்று.
வற்சவம் _ பசு : எருமைக்கன்று: குழந்தைப் பருவம் : ஒரு நாடு : மார்பு.
வற்சரம் _  ஆண்டு.
வற்சலம் _ பேரன்பு : ஈன்ற பசு.
வற்சன் _  குழந்தை.


வற்சை _ குழந்தை : மலட்டுப் பசு.
வற்பம் _ வறட்சி : வன்மை.
வற்பு _  வலிமை : உறுதிப்பாடு.
வற்புலம் _  மேட்டு நிலம்.
வற்புறுத்தல் _ கட்டாயப்படுத்தல்.



வற்றம் _  கடல் நீர் வடிதல் : வறட்சி.
வற்றல் _  உலர்தல் : உலர்ந்தது.
வற்றுதல் _ வதங்குதல் : வாடுதல் : வருந்துதல்.
வனகவம் _  காட்டுப் பசு.
வனசமூகம் _ பூஞ்சோலை.


வனசம் _ தாமரை.
வனசரம் _ காட்டு விலங்கு : காடு.
வனசரர் _ வேடர்.
வனசன் _ காமன்.
வனசை _ திருமகள் : சந்தன மரம்.



வனச்சுவை _ நரி : புலி : புனுகு பூனை.
வனதீபம் _ சண்பகம்.
வனதுர்க்கம் _   காட்டரண்.
வனதேவதை _  காடுறை தெய்வம்.
வனபதி _ பூவாது காய்க்கும் மரம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 7:24 pm

வனபந்தம் _ தடாகம்.
வனப்பிரியம் _  குயில்.
வனப்பு _ அழகு : இளமைத்தன்மை.
வனமல்லிகை _  காட்டு மல்லிகை.
வனமாலி _ துளசி : திருமால்.


வனமாலை _ துளசி மாலை: மலரும் தழையும் கொண்ட மாலை.
வனம் _  நீர் : காடு : ஊர் சூழ்ந்த சோலை : அழகு : வழி : சுடுகாடு : மலையருவி : துளசி : மிகுதி : புற்று : நிறம்.
வனரஞ்சினி _  தாய்ப்பால்.
வனராசன் _ சிங்கம்.
வனலட்சுமி _ வாழை.


வனவசம் _ சந்தனமரம்.
வனவன் _ வேடன்.
வனவாசம் _ காட்டு வாழ்க்கை.
வனாந்தரம் _  பாலைவனம் : காட்டின் உட்பகுதி.
வனி _ சுரம்.



வனிகை _  தோப்பு : சோலை : பூந்தோட்டம்.
வனிதம் _ சிறப்பு : மேன்மை.
வனிதை _ மனைவி : பெண்.
வனைதல் _ அலங்கரித்தல் : அழகு படுத்துதல்.
வன் _ கொடிய : கொடூரமான.


வன்கண் _ பகைமை : பொறாமை : வீரத்தனமை.
வன்கண்ணன் _ கொடுமையானவன்.
வன்கண்மை _ கொடுமை : வீரன்.
வன் கணாளன் _ வீரன்.
வன் சிறை _ கடுங்காவல்.


வன்சொல் _ கடுஞ்சொல்.
வன்பு _ வலிமை : கடினத்தனமை.
வன்புலம் _  குறிஞ்சி நிலம் : முல்லை நிலம்.
வன்பொறை _ பெரும்பாரம் : அதிகச்சுமை.
வன்மம் _ தீராப்பகை : சூளுரை.


வன்மனம் _  கல்நெஞ்சம்.
வன்றி _ பன்றி.
வன்னசரம் _ பலவகை மணிகளாலான கழுத்தணிவகை.
வன்னம் _ எழுத்து : தங்கம் : நிறம்.
வன்னரூபி _ கலை மகள் : உமை.


வன்னி _ கிளி : நெருப்பு : குதிரை: வன்னிமரம் : வன்னியன் : பிரமசாரி : இராவணனுக்கு உதவியாய் வந்த ஓர் அரக்கன்.
வன்னிகை _ எழுது கோல்.
வன்னிசகாயன் _ காற்று.
வன்னித்தல் _ வருணித்தல்.
வன்னியர் _   ஒரு சாதியார்.


வன்னியன் _ சாமந்தன் : ஒரு சாதியார் பட்டப் பெயர்.
வன்னிலம் _ பாறைப் பாங்கான பூமி.
வன்னிவகன் _ தீயைத் தாங்குபவனாகிய காற்று.
வன்னி வண்ணம் _ செந்தாமரை : செவ்வாம்பல்.
வன்னெஞ்சு _ கடுமையான மனம் : பாவம் செய்ய அஞ்சாத நெஞ்சு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 36 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 32 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum