தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 6 of 36 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 11:06 am

சூகரம் - பன்றி : மான்.
சூகரை - குளத்தில் உடைப்பு நீர் வெளிப்போகாதபடி இடும் அணை : அடைகரை.
சூகம் - அம்பு : இரக்கம் : ஊர்வன : சுனை : காற்று : தவழ்சாதிப் பொது : தாமரை : 
நெல்வால் : முண் மயிர்.
சூகை - ஓர் எறும்பு : சுழற்சி : யானை : வீட்டின் பின்புறம் : தலைச் சுழற்சி.
சூகைக்கண் - கூச்சக் கண்.


சூகைக்கை - சூம்பிய கை : சொத்தைக் கை.
சூகையாடுதல் - கிறுகிறுத்தல் : சுழலல்.
சூக்கம் - நுண்மை : கூர்மை.
சூக்கும சரீரம், சூக்கும தேகம் - நுண்ணிய உள்ளுடல்.
சூக்குமதாரி - வஞ்சகன் : எத்தன்.


சூக்குமபத்திரம் - கடுகு : கொத்தமல்லி : சீரகம் : செங்கரும்பு.
சூக்குமம் - அணு : அற்பம் : ஓர் அலங்காரம் : கடவுள் : சீந்தில் : தவறு : நுண்ணறிவு : நுண்மை : 
வஞ்சகம் : சிவாகமம் இருபத்தெட்டினின்று : வானோர்வரம் நாலின் ஒன்று.
சூக்குமர் - ஒருவகைத்தேவர்.
சூக்குமித்தல் - நுட்பமாயிருத்தல்.
சூக்குமை - நான்கு வாக்கினொன்று.


சூக்தம், சூக்தி - ஆன்றோர் வாக்கு : வேதப் பகுதி.
சூசகம் - உளவு : தருப்பைப்புல் : அறிகுறி.
சூசகன் - உவாத்தி : ஒற்றன் : சமம் : தமம் முதலிய குணங்கள் உள்ளவன்.
சூசம் - துருவாட்டேறு.
சூசனம் - அறிவித்தல் : பார்த்தல் : குறிப்பிக்கை : குறிப்பு : திட்டம் : கூர்மை.


சூசனை - சயிக்கை : நுண்மை : போதனை : விவேகம்.
சூசி - ஊசி : குறிப்பு : அட்டவணை : துளை : குறிப்பிக்கை.
சூசிகன் - தையற்காரன்.
சூசிகாதாரம் - யானை.
சூசிகாமுகம் - சங்கு : வளை : இப்பி.


சூசிகை - ஊசி : குறிப்பு : யானைத் துதிக்கை.
சூசி, சூசிகம் - முலைக்கண்.
சூடகம் - கிணறு : கைவளை : சடை.
சூடங்கெட்டுப்போதல் - நிலைகெட்டு முடிவடைதல்.
சூடடித்தல் - கதிரைக் கடாவிட்டுழக்குதல்.


சூடம் - உச்சிச்சடை : சிவன்சடை.
சூடன் - கற்பூரம் : மீன்வகை.
சூடாகரணம் - குடுமி வைத்தல்.
சூடாமணி - ஒரு தேவமணி : ஒரு நூல் : முடிமணி.
சூடாலம் - சணப்புவிதை : தலை.


சூடி - புடைவை : சீலை : வஸ்திரம் : கூறை : ஆடை : அணிந்து.
சூடிகை - முடி : மணிமுடி : தூபி.
சூடிக்கை - சுறுசுறுப்புத் தன்மை.
சூடு - அரிக்கட்டு : உச்சிக்குடுமி : எருதுத்திமில் : சுடுதல் : சூடுதல் : சூடென்னேவல் : சேவற்சூடு : 
தலைநுனி : நெல் முதலியவற்றின் அரிக்குவியல் : மயிற்சூடு : முடி : வெடி : வெப்பம் : சுடப்பட்டது.
சூடுகாட்டுதல் - கடுமைக்குறி காட்டல்.


சூடுதல் - அணிதல் : தரித்தல் : பரவுதல் : கவிதல்.
சூடுநறவு - நறவம்பூ.
சூடுமிதித்தல் - போரடித்தல்.
சூடை - ஒருவித மீன் : குடுமி : கைக்கடகம் : வீட்டிறப்பு : தலை.
சூட்சம் - அற்பம் : உபாயம் : சுருக்கம் : சூக்குமம் : சூத்திரம் : தந்திரம் : நுட்பம் : நூதனம் : யூகம்.


சூட்சுமபுத்தி - நுண்ணுணர்வு.
சூட்சுமம் - நுண்மை : கூரறிவு.
சூட்டல் - அணிதல் : ஏற்றல்.
சூட்டாணி - சூட்டுக் கோல்.
சூட்டிஞ்சி - ஏவறைகளைக் கொண்ட மதில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 11:07 am

சூட்டு - குற்றச்சாட்டு : கூர்மை : சூட்டுந்தன்மை : சூட்டென்னேவல் : அணிதல் : நுதலணிமாலை : 
பாம்பின் சூட்டு : மயில் முதலியவற்றின் சூட்டு : மாலை : முடிப்பு : உச்சிக் கொண்டை : போர்ப்பூ : 
சக்கரவிளிம்பு : ஏவறை : உருளையின் விளிம்பில்  வைத்த வளைந்த மரம்.
சூட்டுதல் - அணிதல் : ஏற்றிச் செல்லுதல் : நியமித்தல் : முடித்தல் : முடிபுனைதல்.
சூட்டுமாலை - தோளணி மாலை.
சூட்டுமிதி - நெல் முதலியவற்றின் சூடு மிதித்தல்.
சூணித்துச் சொல்லுதல் - குறை கூறுதல்.


சூதகம் - அருவருப்பு : ஆசூசம் : சிறு கிணறு : தீட்டு : பழைமை : பிறப்பு : மகளிர் பூப்பு : மாமரம் : 
மாதவிடாய் : விலக்கம் : முலைக்கண்.
சூதநதி - ஆன் பொருநை.
சூதமாகதர் - வந்தியர்.
சூதம் - இரதம் : குறிகேட்டல் : சூதாடு கருவி : சூது : பவள மல்லிகை : பாதரசம் : புளிமா : மடைத் தொழில் : 
காமன் கணையில் ஒன்று : மாமரம் : வண்டு : விழுதல்.
சூதரம் - மாங்கனி.


சூதர் - சூதாடுவார் : தேர்ப்பாகர் : பாணர் : புகழ்வோர் : சூதபுராணிகர் : நின்றேத்துவார்.
சூதவம் - வண்டு.
சூதன் - சமையற்காரன் : சூதமாமுனி : சூதாடுவோன் : சூரியன் : தச்சன் : தேர்ப்பாகன் : பாணன் : 
வஞ்சகன் : புகழ்வோன்.
சூதானம் - சாக்கிரதை : சமம்.
சூதி - அசைவு : கதி : நடை : பிள்ளை பெற்றவள்.


சூதிகை - கருவுயிர்த்தவள் : பிரசவித்தவள்.
சூது - ஓரிதழ்த்தாமரை : சூதாடு கருவி : துளுவஞ்சகம் : உபாயம் : வெற்றி : உட்புரை.
சூத்திரதாரன் - நாடகம் நடத்துவோன்.
சூத்திரதாரி - கடவுள் : பதுமையாட்டி.
சூத்திரப்பா - ஓர் அகவல் : நூற்பா அகவல்.


சூத்திரம் - இயந்திரம் : இரகசியம் : உபாயம் : ஒழுங்கு : தீர்ப்பு : நூல் : பஞ்சு நூல் : பூணூல் : வழி நூல்.
சூத்திரி - எந்திரப்பாவை இயக்குவோன்.
சூபம் - அம்பு : ஒரு பயறு : மடைத் தொழில்.
சூப்பிக்கலியாணம் - சுன்னத்துக் கலியாணம்.
சூமம் - ஆகாயம் : நீர் : பால்.


சூம்புதல் - வாடுதல்.
சூரசூதன் - அருணன்.
சூரணிகை - ஒருவகைப் பா : கருத்துப் பொருள் : விபரம்.
சூரணித்தல் - பொடிசெய்தல்.
சூரதை - வீரம் : மறம் : உக்கிரம் : தாட்டியம்.


சூரம் - அச்சம் : கடலை : வீரம் : ஒருவகை மரம்.
சூரமகளிர் - தெய்வப் பெண்கள்.
சூரர் - படை வீரர்.
சூரவன் - பாண்டியன்.
சூரல் - பிரம்பு : சுழித்தடிக்கை.


சூரன் - வீரன் : சூரியன் : நெருப்பு : நாய்.
சூராட்டி - தேவராட்டி.
சூரி - புலவன் : மாகாளி : சூரியன் : எருக்கு : கத்தி : நத்தைச்சூரி : நித்திய சூரி : புளிச்சக் கீரை.
சூரியகலை - பிங்கலை : நாசியின் வலப் பக்கத்துத் துவாரம்.
சூரியகாந்தம் - பதினேழாவது மேளகர்த்தா : கதிரவன் முன்னிலையில் தீக்காலுங் கல்லு.


சூரியகாரம் - பகல்.
சூரியகுண்டம் - காவிரியின் சங்கமுகத்துக்கு அயலதாகிய ஒரு தடாகம்.
சூரியசரம் - பிங்கலை : ஒருவித நாடி.
சூரியப் பிரபை - வெயில் : பொன் ஆபரணம் : வாகனம்.
சூரியவாதம் - கதிரவனைக் கடவுளாகக் கொள்ளும் சமயம்.


சூரியன் - ஞாயிறு : சோழன் : உபநிடதங்களுள் ஒன்று : செம்புமலை.
சூரியை - புதுமணப்பெண்.
சூரினர் - தெய்வப் பெண்கள்.
சூரை - ஒரு செடி : ஒரு பயிர் : கள் : ஒரு மீன் : தூதுளை.
சூர் - அச்சம் : ஓர் அரசன் : சூரென்னேவல் : துன்பம் : தெய்வப் பெண் : தெய்வம் : நோய் : மிளகு : 
கொடுந்தெய்வம் : வஞ்சகம் : கடுப்பு : கொடுமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 11:08 am

சூர்ணிகை - செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர்.
சூர்த்தநோக்கு - கொடுங்கண் : கொடுமை.
சூர்த்தல் - அச்சங்கொடுத்தல் : சுகிர்த்தல் : சுழற்றல் : சினத்தல்.
சூர்ப்பகை - முருகக்  கடவுள்.
சூர்ப்பம் - சுளகு : தூணி என்னும் ஓர் அளவு : முறம்.


சூர்ப்பு - சுழற்சி : அச்சம் : வளைவு : கொடுந்தொழில்.
சூர்மகள் - தெய்வப் பெண் : யோகினி.
சூர்முதல் - சூரபன்மன்.
சூலதரன், சூலபாணி - சிவன் : வயிரவன்.
சூலம் - இரேவதி நாள் : ஓராயுதம் : கழு : சதுரக்கள்ளி : சாமரம் : சூலை : துகிற்கொடி : 
சாவு : இடிதாங்கி : நித்ய யோகத் தொன்று.


சூலல் - சூலுதல் : குடைதல் : தோண்டுதல் : கருக்கொள்ளல்.
சூலவேல் - கழுமுள்.
சூலி - கருப்பிணி : காளி : சிவன் : துர்க்கை : யோகினி : சதுரக்கள்ளி.
சூலிகம் - கோழி : வாரணம்.
சூலிகை - இடிதாங்கி.


சூலிநி - முப்பத்தைந்தாவது மேளகர்த்தா.
சூலினி - பார்வதி : வெற்றிலை : சவுக்காரம்.
சூலுதல் - குடைதல் : கருப்பங்கொள்ளுதல் : தோண்டுதல் : அறுத்தல்.
சூலுளைதல் - ஈற்றுளைதல்.
சூலை - உளைவு நோய்.


சூல் - கருப்பம் : மூட்டை : சூலென்னேவல்.
சூவானம் - அடுக்களை.
சூழல் - ஆராய்தல் : ஆலோசனை : இடம் : கருத்து : குறிப்பு : சுற்றுப்புறம் : கூட்டம் : சூழ்கை : 
மணற்குன்று : சூழ்ச்சி : அவதாரம்.
சூழாமை - ஆராய்வின்மை.
சூழி - உச்சி : உச்சிக் கொண்டை : கடல் : குளம் : சுனை : யானை முகபடாம்.


சூழியம் - உச்சிக் கொண்டை : அணிகலன்.
சூழுதல் - சுற்றுதல் : கலந்தெண்ணுதல்.
சூழ் - கடலை : சுற்று : சூழென்னேவல்.
சூழ்கோடை - சூறாவளிக் காற்று.
சூழ்ச்சி - ஆலோசனை : உபாயம் : தந்திரம்.


சூழ்ச்சி - ஆராய்தல் : ஆலோசனை : உபாயம் : நுண்ணறிவு.
சூழ்தல் - சுற்றியிருத்தல் : சுற்றி வருதல் : ஆராய்தல் : கருதுதல்.
சூழ்த்தல் - சுற்றுதல் : சுற்றி மொய்த்தல்.
சூழ்ந்தோர் - அடுத்தோர் : உறவோர் : சூழநிற்போர் : அமைச்சர்கள்.
சூழ்போதல் - ஆராய்தல்.


சூழ்வளி - சுழல்காற்று.
சூழ்வு - ஆராய்வு : ஆராய்கை : உபாயம் : சுற்றுகை.
சூழ்வோர் - உறவினர் : சூழ்ந்து நிற்பவர் : அமைச்சர்.
சூளி - ஆண் மயிர்.
சூளிகை - செய்குன்று : சிகரம் : நிலா முற்றம் : நீர்க்கரை.


சூளுறல் - ஆணை செய்தல்.
சூளுறவு - ஆணையிடுகை.
சூளை - சுடுசூளை : விலைமகள்.
சூள் - ஆணை : உறுதி : சபதம் : சாபம் : தீவட்டி.
சூள்தல் - ஆணையிடுதல்.


சூறல் - தோண்டல்.
சூறன் - மூஞ்சூறு : ஒரு வகை வீட்டெலி.
சூறாவளி - சுழல் காற்று.
சூறுதல் - சூழ்தல்.
சூறை - ஆறலைத்தல் : கொள்ளை : சுழல் காற்று : சல்லடம் : மயிர் முடிவகை.


சூறையர் - பரத்தையர் : வேசியர்.
சூறையாடுதல் - கொள்ளையடித்தல் : தலை சுற்றுதல்.
சூனம் - பிறப்பித்தல் : பூ : மான் : வயிற்று வீக்கம்.
சூனர் - ஊன்விற்போர்.
சூனன் - கதிரவன் : பெருவயிறன் : ஊன் விற்போன்.


சூனியப்பார்வை - மந்திரவாதியின் தீக்கண்.
சூனியமாதல் - அழிவுறுதல் : பயனின்றாதல் : தவறிப் போதல்.
சூனியம் - அசுசி : வானம் : இன்மை : பாழ் : புள்ளி : பூச்சியம் : பொறி : மாயை : மாரண வித்தை.
சூனியவாதம் - கடவுள் இல்லையென்று மொரு சமய வாதம்.
சூனியவித்தை - மாரண வித்தை.


சூனு - சூரியன் : பின்னோன் : மகன் : மகள் மகன்.
சூனை - குற்றம் : சூணம் : சொத்தை : மகள் : வயிற்று வீக்கம்.
சூன் - ஊன் : பெருவயிறு : பிதுக்கம் : வளைவு : குற்றம் : கபடம் : கை முதலியன சூம்பியிருக்கை : 
புறம் போக்கு நிலம் : இரகசியம்.
சூன்முகில் - கருமுகில்.
சூன்றல் - தோண்டல் : குடைதல்.
சூன்றிடல் - குடைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 08, 2013 1:39 pm

அருமையான தொகுப்புகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 10:00 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:54 pm

செகதம் - பட்சித்தல் : அழித்தல் : கெடுத்தல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:54 pm

செகச்சாலம் _ மாயவித்தை : பேரொளி.
செகம் _ உலகம்.
செகரிகம் _ நாயுருவிச்செடி.
செகில் _ சிவப்பு : தோளின் மேற்புறம்.
செகிள் _ கேழ் வரகின் கப்பி : மீன் செதிள் : கனித்தோல்.


செகுத்தல் _ வெல்லுதல் : கொல்லுதல்.
செக்கடி _ எண்ணெய் ஆட்டும் இடம்.
செக்கடித்தல் _ செக்கில் எள் முதியவற்றை இட்டு ஆட்டுதல்.
செக்கணி _ ஒரு கூத்து வகை.
செக்கம் _  சிவப்பு : கோபம் இறப்பு.


செக்கர் _ சிவப்பு : செவ்வானம்.
செக்கல் _ செவ்வானம் : மாலை நேரம்.
செக்கவுரி _ செடிவகை.
செக்காட்டி _ எண்ணெயின் பொருட்டுச் செக்காட்டுபவன் : வாணியன்.
செக்கு _ எண்ணெய் ஆட்டும் இயந்திரம் : சதய நாள் : உண்டியல்.


செக்குரல் _ செக்கின் அடிப்பகுதி.
செக்குலக்கை _  செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு : மிக்க வலிமையுள்ளவன்.
செங்கட்டி _ காவிக்கல் : செங்கல்லின் துண்டு : சாதிலிங்கம்.
செங்கடம்பு _ ஒரு கடப்பமரவகை.
செங்கணான் _  ஒரு சோழ அரசன் : திருமால்.



செங்கண் _  சிவந்த கண் : ஒரு கடல் மீன் வகை.
செங்கண்ணான் _ சிவந்த கண்களுடைய ஓர் எலி வகை.
செங்கண்ணி _ சிவந்த கண்ணுடைய ஒரு மீன் வகை : ஒரு செந்நெல் வகை.
செங்கண் மா _  சிவந்த கண்ணுடைய கரடி : ஒரு நகரம்.
செங்கண் மாரி _ காமாலை.


செங்கண்மால் _ சிவந்த கண்ணுடைய திருமால்.
செங்கதிர் _ சூரியன்.
செங்கதிர் நாள் _ சூரியனை அதிதேவதையாகக் கொண்ட உத்திர நாள்.
செங்கமலம் _ செந்தாமரை.
செங்கமலை _ செந்தாமரை மலரில் விளங்கும் திருமகள்.


செங்கயல் _ ஒரு மீன் வகை.
செங்கரடு _ செம்மண் குன்று.
செங்கரப்பான் _ எயிற்றுப் புண்.
செங்கருங்காலி _ ஒரு மரவகை.
செங்கரும்பு _  செந்நிறமுள்ள கரும்பு வகை.


செங்கலம் _ செந்தாமரை.
செங்கல் _ சுட்ட மண்கல் :  காவிக் கல் : மாணிக்கம்.
செங்கல் வராயன் _ செங்கல்வகிரி என்னும் திருத்தணிகை மலைத் தலைவனான முருகக் கடவுள்.
செங்கல் வரை _  திருத்தணிகை மலை.
செங்கழுநீர் _  செங்குவளை : செவ்வாம்பல் : கொடிவகை.


செங்களம் _  போர்க்களம்.
செங்களி _ செம் பஞ்சுக் குழம்பு : பாக்கு ஊறவைக்கும் சாயக் குழம்பு.
செங்கற்றலை _ ஒரு மீன் வகை.
செங்கனல் _ கொழுந்து விட்டெரியும் தீ : கனிந்து கொண்டிருக்கும் அழல்.
செங்காகம் _ செம்போத்துப் பறவை.



செங்காடு _ திருச் செங்காட்டங்குடி என்னும் சிவதலம் : சிவந்த காட்டு நிலம் : ஓர் ஊர்.
செங்காந்தள் _  செந்நிறமுள்ள படர் கொடி வகை : செங்கோடற் பூ.
செங்காய் _ பழுக்கும் பருவத்துள்ள காய்.
செங்காரி _ கருஞ் சிவலையான பசு முதலிய விலங்கு.
செங்காரித்தல் _ சினம், வெயில் : கடுமை இவற்றால் முகம் சிவத்தல், மழையின்றிப் பயிர் வதங்கிச் செந்நிறமாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:54 pm

செங்கார் _  ஒரு கார் நெல் வகை.
செங்காலி _ செங்கருங்காலி மரம்.
செங்காவி _ குங்குமக் காவி, செங்கழு நீர்.
செங்கிடை _ ஒரு முட் செடிவகை.
செங்கிரந்தி _ செந்நிறப் புண் கட்டி : ஒரு மேகக் கட்டி வகை.


செங்கிளுவை _ கீச்சுத்தாராப் பறவை : ஒரு மரவகை.
செங்கீரை _  பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம் : ஒரு கீரை வகை.
செங்குங்குமம் _ சந்தன மரவகை.
செங்குணக்கு _  நேர் கிழக்கு.
செங்குத்து _  நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை : நேர் நிலை.


செங்குந்தம் _  கண்ணோய் வகை : இரத்தத்தால் சிவந்த ஈட்டி.
செங்குந்தர் _  கைக்கோளர்.
செங்குமுதம் _ செவ்வாம்பல்.
செங்குலிகம் _ சாதிலிங்கம்.
செங்குவளை _  செங்கழு நீர்ப் பூ.


செங்கை _  கொடுக்கும் தன்மையுடைய கை : அழகிய கை : சிவந்தகை : திருவாதிரை நாள்.
செங்கொல் _  செம்பொன்.
செங்கொல்லர் _  தட்டார்.
செங்கோடு _  செங்குத்தான மலை: செருந்தி மரம் : ஒரு சிவதலம்.
செங்கோட்டி யாழ் _   நால்வகை யாழ்களுள் ஒன்று.



செங்கோல் _ நல்லரசாட்சி : நெருப்புச் சலாகை.
செங்கோற் கடவுள் _ இயமன்.
செச்சை _ குடில் : ஆடு : மேட ராசி : வெள்ளாட்டுக்கடா : சந்தனக் குழம்பு :வெட்சி: நீறு : சட்டை : தழைகள் : செங்காடு : உதய சந்திரன்: இலிங்கப் பெட்டகம் : இரட்டை : சிவப்பு : செந்துளசிச் செடி.
செஞ்ச _  நிறைய : சேர : முழுதும் : நேராக.
செஞ்சம் _  நேர்மை: முழுமை.



செஞ்சாந்து _ குங்குமம் : சந்தனக் கலவை.
செஞ்சாலி _ செந் நெல்வகை.
செஞ்சி _  முழுமை : நேர்மை : நீதி : ஓர் ஊர் : வேடரினம்.
செஞ்சிலை _ சிவந்தகல் : செங்காவி : அழகிய வில்.
செஞ்சுடர் _  சூரியன் : தீ.


செஞ்சுருட்டி _  ஒரு பண் வகை.
செஞ்செவியர் _ செல்வர்.
செஞ்செவே _ முழுதும் நேராக: எளிதாக.
செஞ்செழிப்பு _ முகமலர்ச்சி : ஏராளம்.
செஞ்சொல் _  திருந்திய சொல்: வெளிப்படையான சொல்.



செஞ்சொல் மாலை _  புகழ் மாலை.
செஞ்சோறு _ சிவப்பன்னம்: உரிமைச்சோறு.
செடகன் _  அடிமை : வேலைக்காரன்.
செடி _  பூண்டு : புதர் : நெருக்கம் : பாவம் : தீமை : துன்பம் : தீ நாற்றம் : அற்பம் : பதனழிந்தது : ஒளி : குற்றம்.
செடிக்காடு _  புதர்.


செடி சீத்தல் _  காடு வெட்டுதல்.
செடிச்சி _  இழிந்தவள்.
செண்டாடுதல் _  பந்தாடுதல் : நிலை குலைதல்.
செண்டாயுதன் _  ஐயனார்.
செண்டு _  பூங்கொத்து : பந்து : குதிரைச் சம்மட்டி : வையாளி வீதி : பந்தடி மேடை : நூற் செண்டு : கூர்மை.


செண்டு கோல் _ பந்தடிக்கும் கோல்.
செண்டேறுதல் _ சாரிகை புறப்படுதல்.
செண்டை _ கொட்டு வாத்திய வகை.
செண்ணம் _ நுண்டொழில் : அழகிய வடிவு.
செண்ணுதல் _ அலங்கரித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:55 pm

செண்பகம் _ வண்டுண்ணாத மலர் : செம்போத்துப்பறவை : சண்பக மரம்.
செண்பக வருக்கை _  பலாமரவகை.
செதிளெடுத்தல் _ முற்றும் போக்குதல் : தோலையுரித்தல்.
செதுகு _  சருகு : கூளம் : தீங்கு.
செதுகுதல் _ தவறுதல்.


செதுகை _ தீமை.
செதுக்கு _ பூதம் : செதுக்குகை : பூ முதலியன வாடுதல்:  சேறு: மந்தி.
செதுக்குப் பாரை _ புல்: மண் முதலியன செதுக்குங் கருவி.
செதுக்கை _ தழும்பு.
செதுமகவு _  இறந்து பிறக்கும் பிள்ளை.


செது மொழி _ பொல்லாச் சொல்.
செதும்பு _ சேறு : சிறிதளவு ஓடும் நீர்.
செதுவல் _ பட்டுப்போதல்.
செத்தல் _  சாதல் : தேங்காய் நெற்று : உலர்ந்து சுருங்கிய பனம் பழம் : மிளகாய் : வாழை முதலியன : மெலிந்தது, பசுமையற்றது : அறக்காய்ந்தது.
செத்து _  செதுக்குகை : கருதி : ஐயம் : ஒத்து.



செத்துதல் _ செதுக்குதல்.
செத்தை _ வைக்கோல் : துரும்பு : குப்பை : உலர்ந்த சருகு : ஓலை வேலி : கடல் மீன் வகை.
செந்தட்டு _  தன் மீது படும் அடியைத் தடுத்தல்.
செந்தணல் _ செந் தீ.
செந்தணற் கொடி _ பவளக் கொடி.


செந்தண்டு _ செந்தண்டுக் கீரை: நோயாற் சிவந்த கதிர்: பவளம்.
செந்தண்மை _ அருள்.
செந்தமிழ் நிலம் _ வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம்.
செந்தரா _  கசப்புள்ள மருந்துக்கொடி வகை.
செந்தருப்பை _ நச்சுப்புல் வகை.


செந்தலித்தல் _ செழிப்பாதல்.
செந்தலிப்பு _ செழிப்பு.
செந்தலை _ அரைக்கால்.
செந்தழல் _ செந்தணல் : பொங்கி எரியும் தீ : கேட்டை நாள்.
செந்தழற் கொடி _ பவளக் கொடி.



செந்தளித்தல் _ செவ்வியுறுதல் : செழிப்பாதல்.
செந்தளிர் _ செந்நிறமுள்ள இளந்தளிர்.
செந்தளிர்ப்பு _ மகிழ்ச்சி : செழிப்பு : இளமை வளம்.
செந்தாது _ பொன்.
செந்தாமரை _  சிவந்த தாமரை.


செந்தார் _  ஆண் கிளியின் கழுத்துள்ள செங்கோடு.
செந்தாழை _  செந்நிறமுள்ள தாழை , பார்வையை மறைக்கும் கண்ணோய் நெல் வகை.
செந்தாளி _  தாளிச் செடி வகை.
செந்திரு _ திருமகள் : தாளகம்.
செந்திருக்கை _ மஞ்சள் வகை.


செந்தில் _ திருச்செந்தூர்.
செந்திறம் _ குறிஞ்சி யாழ்த்திறம்: தெளிவு : சிவப்பு.
செந்தினை _ கம்புப் பயிர்.
செந்தீ வேட்டல் _ வேள்வி செய்தல்.
செந்து _ அணு :நரி : உயிரினம்: ஏழு நரகத்துள் ஒன்று : பெரும் பண்ணுல் ஒன்று : சடாமாஞ்சில் : பெருங்காயம்.


செந்துத்தி _ பெருங்காயம்.
செந்துருதி _ குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று.
செந்துருத்தி _ செம்பாலைப் பண்களுள் ஒன்று.
செந்துறை _ பாட்டு வகை.
செந்தூக்கு _ செங்குத்து : தாள வகை : பாட்டு வகை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:55 pm

செந்தூரத்தாசி _ கந்தகம்.
செந்தூரம் _  சிவந்த தூள்.
செந்தேன் _  உயர்ந்த தேன்.
செந்தொடை _ சிவந்தமாலை : எதுகை மோனை விரவப் பெறாத செய்யுள்.
செந்நாகம் _  செந்நிறமுள்ள நாகப் பாம்பு வகை: கேது.



செந்நாப்போதார் _ திருவள்ளுவர்.
செந்நிலம் _ போர்க்களம்.
செந்நிலை _ கூத்து நிலை வகை.
செந்நீர் _  இரத்தம் : புதுவெள்ளம் : தெளிந்த நீர் : சுரோணிதம் : சாயச்சரக்கு.
செந்நெல் _ செஞ்சாலி நெல் : நன்னீர் மீன் வகை.


செந்நெறி _  சண் மார்க்கம் : நல் வழி.
செபம் _  மந்திரம் ஓதுதல் : சூழ்ச்சி.
செபமாலை _  செப வடம்: செபம் செய்வதற்குரிய மாலை.
செபித்தல் _  மந்திரம் சொல்லுதல்.
செப்பட்டை _  பற்வைச் சிறகு தோட் பட்டை : கன்னம்.



செப்படி வித்தை _ தந்திரம் : ஒரு வகைத் தந்திர வித்தை : சூழ்ச்சியான செயல் : சிக்கனம்.
செப்பம் _ சீர் திருத்தம் : நடு நிலை : பாது காப்பு : செவ்விய வழி : தெரு : நெஞ்சு : மன நிறைவு: ஆயத்தம்.
செப்பல் _ சொல்லுகை : செப்பலோசை.
செப்பல் பிரிதல் _  பொழுது விடிதல்.
செப்பாடு _  நேர்மை.


செப்பு _  சொல்: விடை : செம்பு  : சிமிழ் : நீர் வைக்கும் குடுவை : இடுப்பு.
செப்புக்கோட்டை _  செம்பாலான இராவணன் கோட்டை.
செப்புத்துறை _  இடுகாடு.
செமித்தல் _  செரித்தல் : பிறத்தல்: பொறுத்தல்.
செம் _  செம்மை : சிவப்பு.


செம்பகை _ யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று : இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை.
செம்பஞ்சி _  ஒரு பருத்தி வகை : சிவந்த பஞ்சு : செவ்வரக்குச் சாய மிட்ட பஞ்சு.
செம்பஞ்சுக் குழம்பு _  அழகிய சிவப்புக் கலவை.
செம்படவன் _ மீன் வலைஞன்.
செம்பட்டை _  சிவந்த மயிர் : வாத்திய வகை.


செம்பத்தி _  உண்மையான அன்பு.
செம்பரத்தை _ ஒரு செடி வகை.
செம்பலகை _ செங்கல்.
செம்பலா _ இலவங்க வகை.
செம்பாகம் _ சரிபாதி : இனிமை : நல்ல பக்குவம்.


செம்பாதி _ சரிபாதி.
செம்பாம்பு _  கேது.
செம்பாலை _  பாலைப் பண் வகை.
செம்பி _  கரு வண்டு : மரு தோன்றி : சிவப்பு.
செம்பியன் _  முதலேழு வள்ளல்களுள் ஒருவன் : சிபியின் வழி வந்த சோழன்.


செம்பிற் பொருப்பு _  செம்புத் தாதுள்ள பொதிய மலை.
செம்பு _ தாமிரம்: பொன் : செம்புப் பாத்திரம் : 3 1/4  சேர் கொண்ட ஒரு முகத்தலளவு : தூர்தல்.
செம்புகம் _  நரி : செம்போத்துப் பறவை.
செம்புண்ணீர் _ இரத்தம்.
செம்புயிர் _  கீழ் மக்கள் : விலங்கு இவற்றின் உயிர்.



செம்புலம் _  செழிப்பான நிலம் : போர்க்களம் : பாலை நிலம் : சுடுகாடு.
செம்புலியாடு _  செம்மறியாடு.
செம்புள் _  கருடன்.
செம்புனல் _  புது வெள்ள நீர்: இரத்தம்.
செம்பூறல் _  செம்பில் உண்டாகும் களிம்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:56 pm

செம்பை _  சிற்றகத்தி : ஒரு மர வகை : நெற் பயிரின் நோய் வகை.
செம்பொடி _  பூந்துகள் : மகரந்தப்பொடி: செம்மணல் : நீலக்கல் : சிந்தூரம்.
செம்பொத்தி _  ஆடை வகை.
செம்பொருள் _  உண்மைப் பொருள் : சிறந்த பொருள் : முதற் பொருளான கடவுள் : அறம்.
செம்பொறி _  அரச முத்திரை.


செம்பொன் _  சிறந்த பொன்.
செம்பொன் வரை _  மேரு மலை.
செம்போதகர் _  சமணருள் ஒரு பகுதியார்.
செம்போத்து _  ஒரு பறவை வகை : கள்ளிக் காக்கை.
செம்மகள் _  அனுபவ மற்ற பெண்: திருமகள்.


செம்மட்டி _  மரமஞ்சள் : ஒரு சிப்பி வகை.
செம்மணி _  மாணிக்கம் : சிவப்பு மணி : கெம்புக் கல் : கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மணி.
செம்மண் _  சிவந்தமண்.
செம்மரம் _  அழிஞ்சில் மரம் : மஞ்சாடி : தேவதாரு : செஞ்சந்தனம்.
செம்மருதர் _  நல்ல உழவர்கள்.



செம்மலை _  ஆவிரைச்செடி.
செம்மலைப்பாலை _  பாலைப் பண்வகை.
செம்மல் _  தலைமை : வலிமை : பெருமையிற் சிறந்தோன் : நீர் : இறைவன் : சிவபிரான் : அருகன் : புதல்வன் : சாதிபத்திரி : முல்லைப் பூ வகை : பழம் பூ : வாடாப் பூ.
செம்மறி _  ஓர் ஆடு வகை.
செம்மறிப்புருவை _  பெண்ணாடு : செம்மறியாட்டுக் குட்டி.



செம்மாத்தல் _  மிகக் களித்தல்: வீறு பெறுதல்.
செம்மாத்தி _  சக்கிலியக் குலப்பெண்.
செம்மாப்பு _  இறு மாப்பு : அக மலர்ச்சி : வீற்றிருக்கை.
செம்மாளி _  செம்படவர் தரிக்கும் செருப்பு வகை.
செம்மான் _  சக்கிலியன்.


செம்மீன் _  அருந்ததி : செவ்வாய் : திருவாதிரைத் திருநாள் : பெருந் தலைத் திமிங்கிலம்.
செம்மீன் வயிரம் _  செம்மீன் வயிற்றில் காணப்படும் மீனம்பர் என்னும் மருந்துப் பண்டம்.
செம்முதல் _  மூடுதல் : துர்த்தல் : புடைத்தல் : கலங்குதல்: நிறம் முதலியன பரவுதல்: புண்ணைக் கீறிவிடுதல்.
செம்முல்லை _  தளவம் : முல்லை வகை.
செம்மேவல் _  இணங்குகை.


செம்மை _  சிவப்பு : செவ்வை : நேர்மை : ஒற்றுமை : பெருமை : தூய்மை : அழகு : கேது : கந்தகம்.
செய _  ஒரு தமிழ் வருடம்: வெற்றிக் குறிப்பு.
செயத் தம்பம் _  வெற்றித்தூண்.
செய நீர் _  சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர்.
செயப்படு பொருள் _  தொழிலின் பயனை உரைப்பது, நூலாசிரியன் கூறப்புகும் நூற் பொருள்.


செயம் _  வெற்றி.
செயர் _  வீட்டு வரி : சந்தை வரி முதலிய வருவாய்.
செயலழிதல் _  வலியழிதல்.
செயலறவு _  வலியின்மை.
செயலை _  அசோக மரம்.


செயல் _  சேறு : தொழில் : இழைப்பு வேலை : காவல் : ஒழுக்கம் : வலிமை : செய்யல் : செல்வாக்கு : நிலைமை.
செயற்கை _  இயற்கைக்கு மாறானது : செயற்கைப் பொருள் : தன்மை : தொழில்.
செயற்கை வாசனை _  உண்டாக்கப்பட்ட மணம் : சேர்க்கைக் குணம்.
செயித்தல் _  வெற்றியடைதல் : செயல் கை கூடுதல்.
செயிரியர் _  பாணர்.



செயிர் _  குற்றம் : கோபம் : போர் : வருத்துதல் : நோய்.
செயிர்ப்பு _ குற்றம் : சினம்.
செய் _  வயல் : ஒன்றே முக்கால் ஏக்கர் கொண்ட நன்செய் நில வளவு : நூறு சிறு குழி கொண்ட நில அளவு.
செய்கடன் _  கடமை செய்தல் : பிதிரர் கடன்.
செய்கரை _  வரப்பு : பாலம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:56 pm

செய்கால் _  சோலை : பயிரிடப்படும் நிலம் : நற்காலம்.
செய்கால் சாகுபடி _  நன்செய் நிலத்தில் புன்செய்ப் பயிர் செய்கை.
செய்காற் கரம்பு _  தரிசாகவிடப்பட்ட நிலம்.
செய் குறை _  பிழை: அரைகுறை வேலையாய் இருப்பது.
செய் குன்று _ செல்வந்தர்  விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை.


செய்கை _  தொழில் : செயல் : வேலைப்பாடு : ஒழுக்கம் : உடன் படிக்கை : செயற்கைப் பொருள்: செய்கைச் சூத்திரம் : பில்லி சூனியம் : வேளாண்மை.
செய்க் கடன் _ அகழ்ந்து உண்டாக்கப்பட்ட நீர் நிலை.
செய்தல் _  இயற்றுதல் : உண்டாக்கல் : சம்பாதித்தல்.
செய்தி _  செயல் : தொழில்:ஒழுக்கம் : தன்மை : செய்ந்நன்றி :சமாச்சாரம் .
செய்திறம் _  மருத யாழ்த்திறத்துள் ஒன்று.


செய்ந் நன்றி _ உதவி.
செய்பவன் _  கருத்தா.
செய்பாவை _  திருமகள்.
செய்ய _ சிவந்த : செப்பமான.
செய்யல் _  ஒழுக்கம் : காவல் : சேறு : செய்தொழில்.



செய்யவள் _  செய்யாள் : திருமகள்.
செய்யவன் _  சூரியன் : செவ்வாய்: சிவந்த மேனியன்.
செய்யன் _  சிவந்தவன் : நேர்மையானவன் : பாம்பு வகை.
செய்யா மொழி _ வேதம்.
செய்யார் _  பகைவர்: ஓர் ஊர்.


செய்யாள் _ திருமகள் : தாயின் தங்கையான சிறிய தாயார்.
செய்யான் _  சிவந்தவன் : ஒரு பூரான் வகை.
செய்யுட்கலம்பகம் _ பலவகைப் பாடல் திரட்டு.
செய்யுட் கிழமை _ ஆறாம் வேற்றுமைப் பொருள்களுள் இன்னாரது பாடல் என ஆக்கியோனுக்கும் அவன் பாடலுக்கும் உள்ள உரிமையாகிய பொருள்.
செய்யுள் _  பாட்டு : காவியம் : விளை நிலம் : செய்கை.



செய்யுள் வழு _  யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம்.
செய்யுள் விகாரம் _  வலித்தல்,மெலித்தல்,நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை , கடைக்குறை என்று செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு.
செய்யுள் உறுப்பு _  எழுத்து, அசை, சீர்.தளை.அடி. தொடை என்னும் செய்யுளின் உறுப்புகள்.
செய்யோள் _  திருமகள்: சிவந்த நிறத்தினாள்.
செய்யோன் _  செந்நிறமுடையவன்: அருகன்: சூரியன்: செவ்வாய்.



செய்வினை _ வினை முதல் வினை :முற்பிறப்பில் செய்த கருமம் : பில்லி சூனியம் : செய்யும் தொழில்.
செய்சேதி _  உப்பு.
செரித்தல் _  சீரணமாதல்.
செரிப்பித்தல் _  சீரணிக்கச் செய்தல்: தொல்லையை நீக்குதல் : நிலை நிறுத்துதல்.
செரு _  போர் : ஊடல்.



செருகுதல் _  இடைநுழைத்தல்: அடைசுதல் : சிக்குதல்.
செருக்களம் _  போர்க்களம்.
செருக்களவஞ்சி _  போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடப்படுதல்.
செருக்கு _  அகந்தை : மகிழ்ச்சி : ஆண்மை : மயக்கம் : செல்வம்: செல்லம்.
செருக்குதல் _ ஆணவங் கொள்ளுதல் : களித்தல்: மிகுத்தல்: நன்கு நுகர்தல்: மதர்த்தல்: மயங்குதல்.


செருத்தணி _  திருத்தணிகை.
செருத்தல் _  மாட்டுமடி.
செருத்தி _ வெற்றிக்கொடி.
செருத்தொழிலோர் _  படைவீரர்.
செருநர் _  படைவீரர் : பகைவர்.



செருந்தி _  வாட்கோரைப்புல்:சிலந்தி மரம் : மணித்தக்காளிச் செடி: குறிஞ்சி யாழ்த்திறவகை.
செருந்து _  பூவிதழ் : சிலந்திமரம்.
செருப்படை _  ஒரு படர் கொடி வகை: சிறந்த போர்வீரர்களைக் கொண்ட சேனை.
செருப்பு _  மிதியடி : பூழி நாட்டில் உள்ள ஒரு மலை.
செரு மகள் _  கொற்றவை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:57 pm

செருமல் _ தொண்டையைத் தூய்மைசெய்யக் கனைத்தல்.
செரு முனை _ போர்க்களம் : போர்புரியும் படை.
செருவிடை வீழ்தல் _ அகழினையும் காவற் காட்டையும் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை.
செருவிளை _ வெள்ளைக் காக்கணம்.
செருவுறுதல் _ ஊடுதல்.


செலகம் _ மல்லிகை.
செலக்குரு _ நவச்சாரம்.
செலக் கூபம் _ நண்டு.
செலசரம் _ நீர் வாழ்வன.
செலதம் _ கோரைக்கிழங்கு.


செலம் _ நீர் : இலாமிச்சைப்புல்.
செலவடை _ செலவு.
செலவழித்தல் _ பொருள் கொடுத்தல்: பொருளைச் செலவிடுதல்.
செலவாளி _ அளவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன்.
செலவு _ பண அழிவு : போக்கு : ஓட்டம் : 



செலம் _ நீர் : இலாமிச்சைப்புல்.
செலவடை _ செலவு.
செலவழித்தல் _ பொருள் கொடுத்தல் : பொருளைச் செலவிடுதல்.
செலவாளி _ அளவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன்.
செலவு _ பண அழிவு : போக்கு : ஓட்டம் : நடை குதிரை நடை : பயணம் : படையெடுப்பு : வழி: தேவை :மொய் : ஆணை : பிரிவு : சாவு : காலக் கழிவு.



செலு _ மீன் செதிகள் : நறுவிலி மரம் : மெலிந்த.
செலுத்துதல் _ ஓட்டுதல்: இறுத்தல்: நடத்துதல்: எய்தல்.
செலுந்தி _ மெலிந்தது.
செலுவன் _ மெலிந்தவன்.
செல் _ போதல்: வாங்கிய கடனுக்குச் செலுத்திய தொகை: கையொப்பம் : சென்ற கால அளவு : மேகம் : வானம் : குடி: வேல்: கறையான். 


செல் கதி _ உய்வு : புகல்.
செல் சுடர் _ மறையும் சூரியன்.
செல்லம் _ செல்வம் : வெற்றிலை பாக்கு வைக்கும் பெட்டி : இளக்காரம் : விநோதம் : கொஞ்சற் பேச்சு.
செல்லல் _ துன்பம் : வெறுப்பு : ஒரு வகை மீன்.
செல்லன் _ அருமைக் குழந்தை: சுகவாசி : செல்வமுள்ளவன்.


செல்லாக் காலம் _ செல்வாக்கு நீங்கின காலம்.
செல்லாமை _ வறுமை : பிரிந்து போகாமை : ஆற்றாமை.
செல்லி _ அருமைப் பெண்: ஓர் ஊர்த் தேவதை.
செல்லிடம் _ பலிக்குமிடம் : போகுமிடம்.
செல்லியம் _ கோழி.


செல்லுஞ்சொல் _ நாடெங்கும் செல்லும் மதிப்பு : பிறர்க்கு ஏற்கக் கூறும் சொல்.
செல்லுதல் _ நிகழ்தல் : ஆதல்: பயனுறுதல் : பரவுதல் : பொருந்துதல் : கழிதல் : தணிதல் : கெடுதல்.
செல்வம் _ கல்வி: அழகு : செழிப்பு : நுகர்ச்சி : துறக்கம் : ஐசுவரியம்.
செல்வன் _ செல்வம் உடையவன் : இறைவன் : புத்தன் : மகன்.
செல்வாக்கு _ மதிப்பு : புகழ்.



செல்வி _ திருமகள் : தலைவி : மகள்.
செல்வி நாதன் _ திருமால்.
செவல் _ செந்நிறமாக விலங்கு : செம்மண் நிலம்.
செவி _ காது : வீணையின் முறுக்காணி : ஓரங்குல மழை.
செவிச் செல்வம் _ கேள்வியாகிய செல்வம்.


செவிசாய்த்தல் _ சொல்வதைக் காது கேளாமை : கன்னம் : ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு.
செவிப்படுதல் _ கேட்கப்படுதல்.
செவிப்புலன் _ காதால் உணரும் ஓசையுணர்வு.
செவிமடுத்தல் _ கேட்டல்.
செவி மந்தம் _ செவிடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:57 pm

செவிமலர் _  மகளிர் காதணி : உட்செவி.
செவியறிவுறூஉ _  நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை.
செவியன் _  முயல்.
செவியேறு _  கேள்வி.
செவிரம் _  ஒரு பாசி வகை.


செவிலி _ வளர்ப்புத்தாய்.
செவிள் _  காதின் மேற்புறத்து உறுப்பு.
செவ்வட்டை _  அட்டைப்பூச்சி.
செவ்வணம் _ செவ்வையாக.
செவ்வணி _  தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம்.


செவ்வந்தி _  பூச்செடி வகை.
செவ்வரக்கு _  சாதிலிங்கம்.
செவ்வரத்தை _ செம்பரத்தைச் செடி.
செவ்வரி _ கண்ணிலுள்ள சிவந்த கோடு.
செவ்வலரி _  ஓர் அலரி வகை.



செவ்வழி _  நன்னெறி : முல்லைப்பண்.
செவ்வனம் _ செவ்வையாக.
செவ்வாப்பு _  காமாலை வகை : குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் வகை.
செவ்வாய் _ ஒன்பது கோள்களுள் ஒன்று : செவ்வாய்க்கிழமை : பிடாரிகோயில்  திருவிழா.
செவ்வாழை _  வாழை வகை.



செவ்வி _  ஏற்ற சமயம் : காட்சி : பக்குவம் : புதுமை : அழகு : சுவை : மணம் : தகுதி : சித்திரை நாள்.
செவ்விது _  நன்று : நேரானது.
செவ்விய _  நேர்மையான.
செவ்வியம் _ மிளகுக் கொடி.
செவ்விளகி _ கழுதை வண்டு.


செவ்வு _ செம்மை : நேர்மை : திக்கு : முத்துகளின் அளவு வகை.
செவ்வேள் _ முருகக் கடவுள்.
செவ்வை _ நேர்மை : மிகுதி: வழி : சரியான நிலை.
செழிச்சி _ வளம் :செழிப்பு.
செழித்தகல் _  சுக்கான் கல்.



செழித்தல் _  தழைத்தல் : வளம் பெருகுதல் : முகம் மலர்ச்சியுறுதல்.
செழிப்பு _ வளம் : பொலிவு : நிறைவு.
செழியன் _  பாண்டியன்.
செழுகம் _  அட்டை.
செழுத்து _  வளம்.


செழுந்து _  நிறைவு.
செழுப்பம் _  வளம் : நிறைவு.
செழு மறை _  நெருப்பு : கனல்.
செழுமை _  மாட்சிமை : அழகு : செழிப்பு : வளம் : தழைத்தல்.
செளிம்பன் _ குணக்கேடன்.



செளிம்பு _ களிம்பு : பிடிவாதம்.
செளுகம் _ அட்டை.
செளைப்பு _ சோர்வு.
செள்ளு _ உண்ணி வகை : தெள்ளுப் பூச்சி.
செறல் _  கொல்லுகை : சினம்.



செறி _ நெருக்கம்.
செறிஞர் _ உறவினர்.
செறிதல் _ நெருங்குதல் : இறுகுதல் : அடங்குதல் : பொருந்துதல் : மிகுதல் : திரளுதல் : கலத்தல்.
செறித்தல் _  சேர்த்தல் : இறுக்குதல் : அடைதல் : அடக்குதல் : வைத்தல் : திணித்தல் : பதித்தல் : அடை வித்தல் : மூழ்குதல் : திரட்டுதல்: நெரித்தல்.
செறிப்பு _ நெருக்கம் : அடக்கம் : சேர்த்தல் : செறிவு : பாத்தி : நீர் நிலை: உப்பங் கழி : உழு நிலம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:57 pm

செறிமை _  நெருக்கம்.
செறிவன் _ அருகன் : சலியாதவன்.
செறிவு _  நெருக்கம் : மிகுதி : உறவு : கூட்டம் : பொந்து : கலப்பு : உள்ளீடு.
செறு _  வயல் : குளம் : பாத்தி : கோபம்.
செறுதல் _ தடுத்தல் : வருத்துதல் : வெல்லுதல் : அழித்தல் : வேறு படுதல் : அடக்குதல்.


செறுத்தல் _  அடக்குதல் : தடுத்தல் : தூர்த்தல் : சினத்தல்: வெறுத்தல் : கொல்லுதல்.
செறுநர் _ பகைவர்.
செறுப்பு _ கட்டுப்பாடு : நெருக்கம் : கொலை.
செறுமுதல் _ தேம்பியழுதல்: கனைத்தல்.
செறும்பு _ மனவயிரம் : பகைமை : வெறுப்பு.


செற்றல் _  கொல்லுதல் : அழித்தல் : கேடு.
செற்றார் _  பகைவர்.
செற்று _  நெருக்கம்.
செற்றுதல் _ செதுக்குதல் : கொல்லுதல் : அழித்தல்.
செற்றை _  கூட்டம் : நன்னீர் மீன்.


செற்றோர் _  பகைவர்.
செனகன் _ தந்தை.
செனனம் _ பிறப்பு.
செனனி _ தாய் : சிவசத்தி.
செனித்தல் _ பிறத்தல்.


செனு _  பிறப்பிடம்.
சென்மம் _  பிறப்பு.
சென்று போதல் _ கடத்தல்.
சென்னம் _ நீர்ப்பறவை வகை : வடிவு.
சென்னி _ தலை: உச்சி : சிறப்பு : சோழன் : பாணன் :கன்னம் : அசுவினி.


சென்னியம் _ உண்டு பண்ணப் பட்டது.
சென்னியர் _  கூத்தர்.
சென்னை _ கோயில் மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம் : மீன் வகை : கன்னம் : சென்னைப் பட்டினம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:58 pm

சே - அழிஞ்சில் மரம் : இடபராசி : உயர்வு : எதிர்மறை : எருது : ஒலிக் குறிப்பு : ஓர் எழுத்து : 
சிவப்பு : சேரான் மரம் : விலங்கேற்றின் பொது : வெறுப்புக் குறி : காளை : செங்கோட்டை : 
சேவென்னேவல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:58 pm

சேகண்டி _ காவலாளர் உறைவிடம்.
சேகம் _  மரவியிரம்.
சேகரம் _  சம்பாத்தியம் : திரட்டுதல் : கூட்டம் : பிரதேசம் : இனவழி : மணிமுடி : தலை: தலையில் அணிவது : அழகு : மாமரம்.
சேகரன் _ சிறந்தோன்.
சேகரி _ நாயுருவிச் செடி.


சேகரித்தல் _  ஒன்று சேர்த்தல் : சம்பாதித்தல் : சிறந்திருத்தல்.
சேகன் _  சேவகன் : ஆற்றல் உடையவன்.
சேகிலி _ வாழை மரம்.
சேகில் _ சிவந்த எருது.
சேகு _ சேகம் : சிவப்பு : திண்மை : குற்றம் : ஐயம் : தழும்பு.



சேகை _  சிவப்பு.
சேக்கரித்தல் _ கொக்கரித்தல்.
சேக்காளி _ தோழமையுடையவன்.
சேக்கிழார் _  தொண்டை நாட்டு வேளாளரின் குடிப்பெயர் : பெரிய புராணம் இயற்றிய நூலாசிரியர்.
சேக்கு _ தாய்ப்பால் : கன்னக் குடுமி : துருப்புச் சீட்டு.



சேக்குப் புள்ளி _ உறவினர் இல்லாத தனித்தவன்.
சேக்கை _  மக்கட் படுக்கை : விலங்கின் படுக்கை : தங்குமிடம் : பறவைக்கூடு : வலை : மார்பகம் : உடல் தழும்பு : கடகராசி : நண்டு : சிவப்பு.
சேக்கைப் பள்ளி _ படுக்கை.
சேக்கோள் _ பகைவரது ஆநிரைவேர்தல்.
சேங்கன்று _ ஆண்கன்று.


சேங்கொட்டை _ சேமரம் : சேமரக்கொட்டை.
சேடகம் _ கேடகம்.
சேடக்கிரியை _ ஈமக்கடன்.
சேடக் குடுமி _  கோயில் அருச்சகன்.
சேடக் கோல் _ தூக்குக் கோல்.


சேடம் _  மிச்சப்பொருள் : எச்சில் : இறைவனுக்குப் படைக்கும் பொருள் : அடிமை : சிலேட்டுமம்.
சேடவட்டில் _ உண்கலம்.
சேடன் _ ஆதி சேடன் : நாகலோக வாசி : நெசவு செய்வோர் : இளமையுடையவன்: பெரியோன் : தோழன் : காதலுக்குத் துணை புரிபவன்: கடவுள்: பல தேவன்:ஏவல் செய்வோன்.
சேடி _  தோழி : ஏவல் செய்வோள், இறையவள் : வித்தியாதர உலகம்.
சேடிகை _ கன்னியாராசி : பணிப் பெண்.



சேடித்தல் _ குறைத்தல்: எஞ்சுதல்.
சேடியம் _ ஊழியம்.
சேடு _ அழகு : பெருமை : திரட்சி: நன்மை : இளமை.
சேடை _ அரிசியிடும் மணச் சடங்கு : நீர் கட்டப்பட்டு உழுத வயற்பரப்பு :சேறு.
சேடைவைத்தல் _ நிலத்தை உழுது சேறாக்குதல்.



சேட்சி _  தொலைவு.
சேட்டம் _ அழகு : ஆனி மாதம் : செழிப்பு : மேன்மை : வலிமை.
சேட்டன் _ தமையன்: மூத்தவன்:பெரியோன் : உருத்திரர்களுள் ஒருவன்.
சேட்டனம் _  முயற்சி.
சேட்டா தேவி _ மூதேவி.



சேட்டி _ அக்காள் : தொழிற் படுத்துவோள்.
சேட்டித்தல் _ தொழிற்படுத்தல்.
சேட்டுக் குழி _ சேற்றுக் குழி.
சேட்டுமம் _ கபம்.
சேட்டை _  குறும்புச் செய்கை : மூத்தவள் : மூதேவி: பெருவிரல்: கேட்டை நாள்: விசாக நாள்: முறம் : செய்கை.



சேட்படுதல் _  எதிர் படுதல்:தொலைவாதல்.
சேட்புலம் _ தொலைவிடம்.
சேண _ உயர.
சேணம் _ மெத்தை : கலணை.
சேணவி _ அறிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:58 pm

சேணாடர் _ வானோர்.
சேணாடு _ துறக்கம்.
சேணி _ ஏணி : முறை : குழு : செடி.
சேணியர் _ ஆடை நெய்வோர் :வித்தியாதரர்.
சேணியன் _ இந்திரன் : ஆடை நெய்வோன்.



சேணை _  அறிவு.
சேணோன் _ மலையில்  வாழ்பவன்: பரணிலிருந்து , பயிர்களை அழிக்க வரும் விலங்குகளை விரட்டுபவன்.
சேண் _ நீளம் : அகலம் : சேய்மை : உயரம் : வானம் : மலையின் உச்சி : தேவருதலம்: நெடுங்காலம்.
சேதகம் _ சேறு : சிவப்பு.
சேதம் _ கேடு : இழப்பு : பிரிப்பு :வெட்டு: துண்டு : கீழ் வாயிலக்கம் : கூத்தில் ஓர் உறுப்பு.



சேதனம் _   அறிவுப்பொருள் : அறிவு.
சேதனன் _ அறிவுடையோன் : உயிர்.
சேதனை _ அறிவு : பிளவு செய்தல்.
சேதா _  சிவப்புப் பசு.
சேதாம்பல் _ செவ்வாம்பல்.


சேதாரம் _ தேய்மானம் : நகை செய்யும்போது ஏற்படும் பொன்னிழப்பு : வெட்சி மரம் : தேமா மரம்.
சேதி _  செய்தி : தன்மை: சேதிநாடு: ஓர் அரச மரபு.
சேதித்தல் _ அழித்தல்: வெட்டுதல்: களைதல்.
சேதிமம் _ தேவாலயம்: சமண பெளத்தப்பள்ளி.
சேது _  சேது அணை : செய்கரை : சிவப்பு: இராமேசுவரம் : தனுஷ் கோடி முதலிய தீர்த்தக் கட்டம்.



சேது பந்தனம் _  அணைக்கட்டு.
சேத்திரக்கிஞன் _ உடலையறிபவனான ஆன்மா.
சேத்திரபாலன் _ பைரவர்: காக்கும் கடவுள்.
சேத்திரம் _ பன்னிரண்டு சாளக்கிராமம் கொண்ட தொகுதி: புண்ணிய தலம் : கருப்பை:மனைவி.
சேத்து _ சிவப்பு : ஒப்பு: கருத்து நிலம்: உறுப்பு : நெருக்கம் : ஐயம்: அசைச்சொல்.


சேந்தன் _  முருகன்: சேந்தனார் என்னும் சைவத் திருமுறை ஆசிரியர்: திவாகரம்  செய்வித்தவர்.
சேந்தி _ களஞ்சியம் : பரண்: கள்.
சேந்து _ சிவப்பு : தீ : அசோக மரம்.
சேந்துதல் _  இறைத்தல்.
சேந்து பந்தம் _ அரக்கு.



சேந்தை _ கட்டிலின் மேற்கட்டி.
சேபம் _  ஆண்மர்மத் தானம்.
சேப்பு _ தாமரைக்கிழங்கு: சிவப்பு: சட்டைப்பை: சிவப்புக்கல்.
சேமகாலம் _ செழிப்புக் காலம்.
சேமக்கலம் _ கோல் கொண்டு அடிக்கும் வட்ட மணி.



சேமக்காரன் _  காவற்காரன் : முன்னெச்சரிக்கையுள்ளவன்:நம்பிக்கையுள்ளவன் : சிக்கனமுள்ளவன்.
சேமஞ் செய்தல் _ மூடி வைத்தல்.
சேமணன் _ தந்தையற்றவன்.
சேமணி _ மாட்டுக்கழுத்தில் கட்டும் மணி.
சேமத்தேர் _  வைப்புத் தேர்.



சேமம் _ நல்வாழ்வு : காவல் : இன்பம் : புதை பொருள் : சிறைச்சாலை : ஓலைச் சுவடியின் கட்டு.
சேமரம் _ அழிஞ்சில் மரம்: சேங்கொட்டை மரம்.
சேமறி _ மாட்டின் புணர்ச்சி.
சேமன் _ போக்கிரி : கொடியவன்.
சேமா _ எருது.



சேமித்தல் _ பாதுகாத்தல் : போற்றி வைத்தல்.
சேம்பு _  ஒரு செடி வகை.
சேயம் _  கரை: ஓட்டம்: வெற்றி.
சேயவன் _ செவ்வாய்: முருகன்.
சேயன் _ தொலைவில் உள்ளவன்:செந்நிறமுள்ளவன்: மகன்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:58 pm

சேயா _ பகைவர்.
சேயிலம் _ இலுப்பை மரம்.
சேயோன் _ முருகக் கடவுள்: சிவபிரான்: தொலைவில் இருப்பவன்.
சேய் _ மகவு : சிவப்பு: இளமை : முருகன் : செவ்வாய்: தலைவன்: தொலைவு : நீளம் : பெருமை: மூங்கில் : மனையிடம்.
சேய்மை _ தொலைவு: நீளம்.


சேர _ அணித்தாக : முழுதும் : கூட.
சேரமான் _ சேர நாட்டரசன்.
சேரலன் _ சேர மன்னன் : பகைவன்.
சேரலி _ ஒரு நெல் வகை.
சேரன் _ சேரமான்.


சேரா _ கள்.
சேராங் கொட்டை _ செங்கொட்டை.
சேரார் _ பகைவர்.
சேரி _  ஊர்: முல்லை நிலத்தூர்: தெரு.
சேரிகை _ ஊர்.



சேரிடுதல் _  பிணைத்தல்.
சேரி மடை _ கழிவு வாய்க்கால்.
சேருகம் _ நாகண வாய்ப் புள்.
சேரை _ சிறங்கை.
சேர் _ திரட்சி: களஞ்சியம் : ஓர் ஏர் மாடு : நிறுத்தலளவை: ஒரு முகத்தலளவை.



சேர்கால் _   தளை கால்.
சேர்கொடுத்தல் _  காட்டிக் கொடுத்தல்.
சேர்க்கை  மூலை _ சந்து மூலை.
சேர்க்கை வாசனை _ செயற்கைக் குணம்.
சேர்தல் _ தொடுத்தல் : கலத்தல்: கட்டுதல்: ஈட்டுதல்: அடைவித்தல்.



சேர்ந்தகை _ கூட்டாளி.
சேர்ந்தகைமை _ கூட்டுறவு.
சேர்ந்தலை _ கூட்டுறவு : புணர்ச்சி.
சேர்ந்தார் _ அடைக்கல மடைந்தவர்: நண்பர்: உறவினர்.
சேர்ந்தாரைக்கொல்லி _ தன்னையடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு.



சேர் பந்து _ கசை.
சேர்பு _ வீடு : வாழ்விடம்.
சேர்ப்பன் _ நெய்தல் நிலத் தலைவன்: வருணன்.
சேர்ப்பு _ வாழ்விடம்: கடற்கரை: கலப்புப் பொருள்: பிற் சேர்க்கை : கப்பலிருந்து சரக்கு இறக்கும் பாலம்.
சேர்மானம் _  கூடுகை: இணைப்பு: ஐக்கியம் : கூட்டுறவு : புணர்ச்சி.




சேர்விடம் _  வாழுமிடம்.
சேர்வு _  அடைதல்: வாழிடம்:திரட்சி : ஊர்: கூட்டம்: ஒன்று சேர்க்கை.
சேர்வை _ கலவை : கூட்டுறவு : உலோகக் கலப்பு : மகளிர் காதணி வகை : வணக்கம்: பற்று : ஒரு பட்டப் பெயர்.
சேர்வை காரன் _ கள்ளர் : மறவர்: முதலியவர்களின் பட்டப்பெயர்.
சேர்வைக்கால் _ ஏணியைத் தாங்குங்கால் : தட்டைத் தாங்கி நிற்கும் பீடக்கால்.



சேர்வையணி _ வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் கலவையணி.
சேலகம் _ கோரைக்கிழங்கு.
சேலம் _ ஓர் ஊர் : ஆடை.
சேலவன் _ மீனாகத்திரு அவதாரம் செய்த திருமால்.
சேலியால் _ இலாமிச்சைப்புல்.


சேலேகம் _ சந்தன மரம் : சிந்தூரம்.
சேலை _ புடைவை : மகளிர் சீலை : ஆடை : அசோக மரம்: முழுத்துணியின் பாதி.
சேலோதம் _ சந்தன மரம்.
சேல் _ கொண்டை மீன் வகை.
சேவகம் _ ஊழியம் : வீரம்: யானைக்கூட்டம் : உறக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:59 pm

சேவகன் _ வீரன் :ஊழியன்.
சேவகனார் _ வீரத் தெய்வமாகிய ஐயனார்.
சேவடி _ சிவந்த பாதம்.
சேவம் _ பாம்பு : உயரம் : ஆண் மர்மத்தானம்.
சேவல் _ மயில் தவிர ஏனைய பறவைகளின் ஆண்: கோழியின் ஆண்: ஆண் அன்னம் : காவல்: ஆண் குதிரை: சேறு.



சேவற்கொடியோன் _ சேவலைக் கொடியிற்  கொண்டுள்ள முருகக் கடவுள்.
சேவனை _  ஊழியத் தொழில் : கோயில் தொண்டு : விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை.
சேவனைக்காரர் _ கோயில் மேளக்காரர்.
சேவா _  வாடகை.
சேவாகாலம் _ திவ்விய பிரபந்தம் ஓதுதல்.



சேவாலங் கொட்டை _  நேர் வாளம்.
சேவாலிகம் _ கரு நொச்சி.
சேவிதம் _ தொண்டு.
சேவியம் _ வெள்ளை வெட்டிவேர்.
சேவுகம் _ ஊழியம் : வீரம்.



சேவை _ தொண்டு : வழிபடுதல்: காட்சி : ஒரு மரவகை : திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல்: ஒரு வகைப் பணிகாரம்.
சேவையூர் _ சிதம்பரம்.
சேழம் _  மீதி.
சேழ் _  மேலிடம்.
சேறடி _ வண்டிச் சக்கரத்தில் படும் சேற்றைத் தடுக்க அமைக்கும் கருவி.




சேறல் _  செல்லுகை.
சேறு _ கள்: மணி: சகதி: குழம்பு : சாரம் : இனிமை: தேன்: பாகு : திருவிழா : சீழ்: பனம் பழம் முதலியவற்றின்  உள்ளீடு :விளாம்பழம் : நீரோட்டம்.
சேற்கண்ணி _ அரிதாரம்.
சேற்பனம் _ கபம்.
சேற்றுக்கடி _ சேற்றுப் புண்.




சேற்றுக் கால் _  சேடையாக்கி விதைக்கும் வயல்: களி மண் வயல்.
சேற்றுப் புண் _ சேற்றால் கால் விரலிடையில் உண்டாகும் புண்.
சேற்றுப் புழி _ உழப்பட்ட நிலம்.
சேற்றுமம் _  கமம்.
சேனம் _  பருந்து.




சேனன் _ ஒரு பட்டப் பெயர்.
சேனா _ விலங்கு மீன்.
சேனா சமுத்திரம் _ கடல் போன்ற பெரும் படை : பெருங் கூட்டம்.
சேனாதிபதி _  படைத்தலைவன்.
சேனாவரையன் _ படைத் தலைவன்: தொல் காப்பிய உரையாசிரியருள் ஒருவர்.



சேனாவு _ தகரைச் செடி.
சேனை _ யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நாற்படை கூட்டம் : கடைத் தெரு : தெரு சந்தை : கருணைக்கிழங்கு : சேணம்.
சேனைப்பால் _ குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீர்ம வடிவான உணவு.
சேனைப் பெருங்கணி _ சேனையில் அமைந்துள்ள சோதிடத் தலைவன்.
சேனை முதலியார் _ திருமால் கணத் தலைவர் : கைக் கோளச் சாதியார்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:59 pm

சை - இகழ்ச்சிக் குறிப்பு : ஓர் எழுத்து. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 6:59 pm

சைகதம் _ மணல் : மணற் கரை.
சைகதவுண்டை _ மணல் மலை.
சைகை _  சாடை : சமிக்கை.
சைங்கி கேயன் _ இராகு.
சைசவம் _ இளமை : பதினாறு வயதிற்கு உட்பட்ட பருவம்.


சைதனம் _ சீவான்மா.
சைதனியம் _ அறிவு : சீவான்மா: பரமாத்மா.
சைதனியவான் _ அறிவுள்ளவன்.
சைத்தான் _ பிசாசு.
சைத்தியம் _ பெளத்தராலயம் : குளிர்ச்சி : இறப்புக்கல் வெட்டு: பலிபீடம்.


சைத்தியன் _ சுக்கிரன்.
சைத்திரம் _ சித்திரை மாதம் : ஓவிய வேலை : வெற்றி.
சைத்திராதம் _ குபேரனின் நந்த வனம்.
சைத்திராவலி _ சித்திரை மாதத்து முழு நிலவு.
சைத்திரி _ சித்திரை மாதத்தில் நடைபெறும் வேள்வி.


சைத்திரியம் _ தெளிவு : மனத்திட்பம்.
சைந்தவம் _ இந்துப்பு : குதிரை: தலை: சிந்து நதி : சிந்து தேசம்.
சைந்தவி _ ஒரு பண் வகை.
சைமானம் _ அன்பளிப்பு.
சையகம் _ படுக்கை.


சையமினி _  யமனது நகரம்.
சையம் _ கல்: குடகு  மலை: நியமம் : மலை.
சையோகம் _ கலக்கை : புணர்ச்சி.
சைரிகம் _  கலப்பை.
சைரிகன் _ உழவன் : ஏர் மாடு.


சைரிபம் _ எருமை.
சைலகம் _  மலையிருவேலிப்புல் : சாம்பிராணி.
சைலதரன் _ மலையைக் குடையாகப் பிடித்துத் தாங்கிய கண்ண பிரான்.
சைலபதி _ மலைகளுக்குத் தலைமையாக விளங்கும் இமயமலை.
சைல பித்தி _ கல்லுளி.


சைலம் _ சேலை : மலை.
சைலாந்திரம் _ மலைக்குகை.
சைவ சித்தாந்தம் _ சைவ சமயத் தெளிவு உண்மை.
சைவம் _  சிவ சமயம் : ஆகமம் : சிவ புராணம் : இளமை : புலால் உண்ணாதிருத்தல்.
சைவரல் _ இகழுதல்.


சைவர் _ சிவசமயத்தார் : புலால் உண்ணாதவர்.
சைனம் _ சமண மதம்.
சைனியம் _ சேனை : படை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:00 pm

சொகினம் - சகுனம் : நிமித்தம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:00 pm

சொகுசு _ சிறப்பு : இன்பம் : நேர்த்தி.
சொக்கட்டான் _ தாய விளையாட்டு வகை.
சொக்க நாதன் _ மதுரைச் சோம சுந்தரக் கடவுள்.
சொக்கப் பானை _ கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக்கூடு.
சொக்கம் _ தூய்மை : சுத்த நிறுத்தம் : களவு : கொம்புக் கல்: துறக்கம்.


சொக்கலி _
 சிறு பசளைக் கொடி.
சொக்க லிங்கம் _ மதுரை சோம சுந்தரக் கடவுள்.
சொக்க வெள்ளி _ தூய வெள்ளி.
சொக்கறை _ கன்னத்தில் விழும் குழி : சிறிய அடைப்பு : மதிலில் உண்டாகும் துளை.
சொக்கன் _ அழகன் : சிவன்: வணிகரின் கையாள் : குரங்கு : மூடன் : வேலைக்காரச் சிறுவன்.


சொக்காய் _
 சட்டை.
சொக்காரன் _ சொத்தின் உரிமைக்குரிய தாயாதி : சகலன்.
சொக்காலி _ சிறு துளைப் பூண்டு.
சொக்கு _ அழகு : மயக்கம் : பொன் : கன்னம் : தூய்மை : வயப்படுதல்.
சொக்கு வித்தை _ மயக்கு வித்தை.


சொங்கு
 _ குற்றம்.
சொச்சம் _ மிச்சம் : மாசின்மை : சில்வானம்.
சொடக்கு _ நெட்டி : சோம்பல் தன்மை : கைந் நொடிப்பு : துளைக் கருவி.
சொடி _ சுறுசுறுப்பு.
சொடிதல் _ குழைதல் : பயிர்கள் வாடுதல்.



சொடித்தல்
 _ குறைவாய் விற்றல்.
சொடுதலை _ வாயகன்ற பாத்திர வகை.
சொட்டம் _ குற்றமுள்ளவன்.
சொட்டா _ வாள் வகை.
சொட்டு _ குற்றம் : குட்டு : சுன்னம்: நீர்த்துளி வீழ்தல்: குறிப்பு.



சொட்டை 
_ பள்ளம் : வளைதடி : வளைந்த வாள்: வளைவு : பழிச்சொல்: ஏளனம் : வழுக்கைத் தலை: தலைப்பொடுகு : சொற் சித்திரம்.
சொட்டையாளன் _ படை வீரன்.
சொட்டை விழுதல் _ தலைக்கு வழுக்கை உண்டாதல்.
சொண்டறை _ புல்லன்: இழிஞன்.
சொண்டன் _ செருக்கன்.



சொண்டி _
 சுக்கு.
சொண்டிலி _ இழி குணத்தன்.
சொண்டு _ குழிவு : பறவை மூக்கு : உதவு : தடித்த உதடு: அற்பன்: தலையழுக்கு : பொடுகு : ஆயுத நுனி : உத்தியோகம்.
சொண்டுக் கதை _ உணவுக்காகச் சொல்லும் கதை : பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை.
சொண்டுக்காரன் _ தடித்த உதடன்.



சொண்டு பண்ணுதல்
 _ இகழ்ச்சி பண்ணுதல்.
சொண்டு பேசுதல் _ நிந்தித்தல்.
சொண்டு விற்றல் _ புறங்கூறுதல்.
சொதி _ தேங்காய்ப்பால் அவியல்.
சொதை _ உடைமை : இரட்டை: பொன்.



சொத்தி _ 
உடற் குறை : நொண்டி.
சொத்து _ உடைமை : பொன் : உடற் குறை.
சொத்தை _ சீர் கேடு : ஊனம் : மெலிந்த உயிரினம்.
சொந்தம் _ தனக்குரியது: நெருங்கிய உறவு.
சொப்பம் _ ஒளியின்மை.



சொப்பனம் _
 கனவு : கனவு நிலை : மாயத் தோற்றம்.
சொம் _ சொத்து : உடைமை.
சொம்பு _ அழகு : செம்பு.
சொம்மாளி _ உரிமைக்காரன்.
சொரங்கம் _ ஏலத் தோல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 7:00 pm

சொரசத்தோரசி _  இலவங்கப்பட்டை.
சொரடு _  துறட்டி.
சொரி _ தினவு.
சொரிதல் _  
உதிர்தல்: மிகுதல்: மழை பெய்தல்: பொழிதல்: கொட்டுதல்: மிகக் கொடுத்தல்.
சொரி மணல் _  கால் வைத்தவரை இறக்கியமிழ்த்தும் மணல்.


சொரிவு _  ஈவு : உதிர்வு : பொலிவு.
சொருவு _ உறை.
சொரூபம் _  சாயல் : வடிவம் : அழகு : சிறப்பியல்பு.
சொரூபி _  உருவுடையவன் : கடவுள்.
சொர்க்கம் _ தேவலோகம் : துறக்கம்.



சொர்ணக்கல் _  வைடூரியம்.
சொர்ண சீரகம் _  கரும்பு.
சொர்ணம் _  பொன்: நாணயம்.
சொலவு _  சொல்லுகை : பழமொழி.
சொலி _  மரப்பட்டை.



சொல் _  பேச்சு : மொழி : பழமொழி : புகழ் : மந்திரம் : சாபம் : கட்டளை : பெயர்: வினை : இடை : உரியெனும் நால் வகைச் சொல்: சொல்னென்னேவல்: செந்நெல்.
சொல்லணி _  சொல்லின் ஓசை முதலியன அமைக்கும் அணி வகை.
சொல்லதிகாரம் _  சொல்லின் பாகுபாடு முதலானவற்றைக் கூறும் இலக்கணப்பகுதி.
சொல்லறிபுள் _  கிளி: பூவை.
சொல்லாட்டு _  பேச்சு.



சொல்லிழுக்கு _  சொற்குற்றம்.
சொல்லுருபு _  வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்கும் சொல்.
சொல்லுரை _  சொற்பயன்.
சொல்லெச்சம் _  சொல் எஞ்சி நிற்பது.
சொல்லேருழவர் _ அமைச்சர் : புலவர்.


சொல்வழு _  சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையாகிய குற்றம்.
சொல்வளம் _ சொற் பொலிவு.
சொல் வன்மை _  பேச்சுத்திறம்.
சொல் விளம்பி _  பேசச் செய்யும் கள் குடிமயக்கம்.
சொள்ளை _  சொத்தை : இழுக்கு : செயற்கேடு.


சொறி _ சுரசுரப்பு : மீன் வகை: காஞ்சொறிச் செடி.
சொறிக் கிட்டம் _  இருப்புத்துரு.
சொறிதல் _ நகத்தால் தேய்த்தல்.
சொறிவு _  தினவு.
சொற்காரி _  ஏழு வகை மேகங்களுள் ஒன்று.



சொற்கோ _  திருநாவுக்கரசர்.
சொற் சீரடி _  அப்போதரங்க உறுப்பு.
சொற்சுவை _  சொல்லின்பம்.
சொற் செலவு _  செல்வாக்கு: பரிந்து பேசுகை.
சொற் செறிவு _  சொல் வளம்.



சொற் படுதல் _  பலன் மிகுதல்.
சொற்பதம் _  சொல்லளவு : சொல்லாற் குறிக்கப்படும் நிலை.
சொற்பம் _ சிறியது.
சொற்பழி _  நிந்தை மொழி.
சொற்பானு _  இராகு கிரகம்.


சொற் பிழை _  எழுத்துக் குற்றம் : சொற்குற்றம்.
சொற்புரட்டு _  பொய்.
சொற்புள் _  பின் வருவதைச் சொல்லும் காக்கை.
சொற்பெருக்கு _  சொற் பொழிவு.
சொற் பொழிவு _  அவையில் உரையாற்றுதல்.



சொற்போர் _  ஒரு பொருள் குறித்துச் செய்யும் வாக்கு வாதம்.
சொற்றல் _  சொல்லுதல்.
சொற்றாமம் _  புகழ்ச்சி : புகழ் மாலை.
சொற்றிரிபு _  சொல்லின் கண் நிகழும் மாறுபாடு.
சொற்றொடர் _  பல மொழிகள் கொண்ட வாக்கியம்.


சொனகு _  பெரும் புல்வைக.
சொனாகம் _  வேலிப் பருத்தி : உத்தாமணிக்கொடி.
சொன் மாரி _  சொல்லாகிய மழை.
சொன் மாலை _  புகழ்ச்சி.
சொன்றி _  சுக்கு : சோறு.



சொன்னகாரன் _  தட்டான்.
சொன்ன சீரம் _  கரும்பு.
சொன்னம் _  பொன்: சோளம் : கால்வாய்.
சொன்னல் _  சோளம் : இரும்பு.
சொன்னி _  மணம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 6 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 36 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum