தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 17 of 36 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 26 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:28 pm

நாகரிகம் _ நகரவொழுக்கம் : செப்பம் : கண்ணோட்டம் : மரியாதை.
நாகரிகர் _ வல்லோர் : காமுகர்: சதுரர்: சுவைஞர் : கண்ணோட்டம் உடையவர்.
நாகர் _ தேவர் : நாகலோக வாசிகள்.
நாகலிங்கம் _ நாகம் கவிக்கப் பெற்றது போன்று இலிங்க உருவம் கொண்ட பூவுள்ள மரவகை.
நாகலோகம் _ தேவலோகம் : கீழேழு உலகத்துள் ஒன்று : பாதலம் : தேவலோகம்.


நாகல் _  நாவல்.
நாகவராளி _ ஒரு பண் வகை.
நாகவல்லி _ வெற்றிலைக்கொடி: திருமணச் சடங்குகளில் ஒன்று.
நாகவள்ளி _  வெற்றிலைக்கொடி : வள்ளிக் கிழங்கு.
நாகவாயு _  தச வாயுக்களுள் ஒன்று : விக்கல் முதலியவற்றை உண்டாக்கும் வாயு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:28 pm

நாகவாரிகம் _  மயில் : கருடன் : அரசர் ஏறுதற்குரிய யானை.
நாகவாரிகன் _  யானைப் பாகன்.
நாகன் _  நாக வாயு.
நாகாசனன் _  கருடன்.
நாகாதிபன் _ இந்திரன் : ஐராவதம் : ஆதிசேடன் : இமயமலை : மேரு மலை : குறிஞ்சித் தலைவன்.



நாகாத்திரம் _
 நாகபாசம்.
நாகாந்தகன் _ நாகங்களைக் கொல்லும் கருடன்.
நாகாபரணன் _ சிவபிரான்.
நாகாரி _  கருடன் : தேவேந்திரன்.
நாகாலயம் _  பாதலம் : தேவர்களிருப்பிடம்.



நாகியர் _
  தேவமாதர்.
நாகினி _  வஞ்சிக் கொடி: வெற்றிலை.
நாகு _  இளமை : பெண்மை : எருமை : மரை : பெற்றம் : நத்தை : பசு : கிடாரிக் கன்று : சங்கு : இளமரம் : புற்று : மலை.
நாகு கன்று _  கிடாரிக் கன்று.
நாகேசுரம் _  சிறு நாகப் பூ.



நாகேசுவரன் _  ஆதிசேடன்.
நாகை _  சோழ நாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம்: நாக்கு என்னும் உறுப்பு : சொல்: நடு : துலைநா : நா: மணியின் நாக்கு : தீயின் சுடர் : படகு வலிக்கும் தண்டு.
நாக்குப்புண் _  நாவில் தோன்றும் நோய்.
நாக்குப் புரட்டு _  பொய்.
நாங்கு _  மரவகை : தானியமாகச் செலுத்தும் வட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:29 pm

நாங்குதல் _  ஆற்றல் குறைதல்.
நாங்கூழ் _  நாக்குப் பூச்சி.
நாசகாரி _  கேடு செய்பவன்.
நாசகாலம் _  அழிவு காலம்.
நாசநட்சத்திரம் _  சுக்கிரன் நின்ற நாளுக்குப் பத்தாம் நாள்.



நாசம் _ அழிவு : சாவு.
நாசன் _  இயமன் : அழிப்போன்.
நாசி _  மூக்கு : சலதாரையின் வாய்.
நாசிகாமலம் _  மூக்குச்சளி.
நாசிகேது _  அக்கினி.



நாசிகை _  மூக்கு.
நாசியம் _  மூக்கணாங்கயிறு.
நாசுக்கு _  அழகு.
நாசுவன் _  அம்பட்டன்.
நாச்சி _  தலைவி.



நாச்செறு _  வசை.
நாஞ்சில் _  கலப்பை : மதிலுறுப்பு : நாஞ்சில் நாடு : வள்ளுவன் என்ற தலைவனின் மலை.
நாஞ்சிற் படையோன் _  கலப்பையாயுதம் உடைய பலராமன்.
நாடகக் கணிகை _  நாட்டியப் பெண்.
நாடகசாலை _  கூத்து நிகழும் இடம்.



நாடக சாலையர் _  கூத்தர் : நடிகர்.
நாடகம் _  கலை அறுபத்துநான்கினுள் ஒன்று.
நாடக வழக்கு _  புனைந்துரை வழக்கு.
நாடல் _  ஆராய்தல் : சென்று காணுதல்.
நாடவர் _  தேசத்தார்.



நாடன் _  தேசத்தான் : குறிஞ்சி நிலத்தலைவன் : கார்த்திகை நாள்.
நாடா _  நூற்பட்டை.
நாடி _  மூச்சுக் குழாய் : யாழின் நரம்பு : மூக்கு : நாழிகை : சோதிடநூல் : தாது நரம்பு : இலை நரம்பு.
நாடு _  நாட்டுப் பகுதி : இடம் : பூமி : உலகம் : நாட்டுப்புறம் : மருத நிலம் : பக்கம் : இடப்பரப்பு : ஒரு பேரெண் : நாடு என்னேவல்.
நாடுதல் _  தேடுதல் : விரும்புதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:29 pm

நாடுபடுதிரவியம் _ நாட்டில் விளையும் பொருள்களான நெல், பயறு, கரும்பு முதலியன.
நாடுரி _ ஒன்றரை நாழி கொண்ட முகத்தல் அளவை.
நாடோடி _ ஊர்சுற்றுபவன்.
நாடோறும் _ தினமும் : நாள் தோறும்.
நாட்கடன் _ தினக்கடன்.



நாட்காலை _ ஏற்றபருவம் : விடியற்காலம்.
நாட்கூலி _ தினக்கூலி.
நாட்கொல்லி _ ஆயுளைப்போக்கும் இயமன்: வீண் பொழுது கழிப்பவன்.
நாட்டம் _ நோக்கம் : கண்: பார்வை : அழகு : சோதிட நூல் : விருப்பம் : ஐயம் : வாள்.
நாட்டவன் _ நாட்டுக்காரன்.



நாட்டார் _ தேசத்தார் : ஒரு சாதியரின் பட்டப்பெயர்.
நாட்டியக்காரன் _ கூத்தாடுபவன்.
நாட்டியக்காரி _ கூத்தாடுபவள்: பகட்டுக்காரி.
நாட்டியம் _ கைமுதலியவற்றால் காட்டும் குறிப்பு: கூத்து.
நாட்டுக்காவல் _ நாடு காக்கும் தொழில்.



நாட்டுதல் _ நடுதல்: படைத்தல்: நிலை நிறுத்தல்: எழுதுதல்.
நாட்டுத்தேவர் _ அந்தணர்.
நாட்டுப்புறம் _ பட்டிக்காடு.
நாட்டை _ ஒரு பண்.
நாட்பூ, நாட்போது _ அன்றலர்ந்த பூ.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:29 pm

நாணக்கேடு _ வெட்கமின்மை.
நாணம் _ வெட்கம் : அறிவு : மானம் : கூச்சம்.
நாணயம் _ நேர்மை : மனசாட்சி : முத்திரையிடப்பட்ட காசு : கட்டுப்பாடு : விலங்கின் மூக்கிலிடும் கயிறு.
நாணயவான் _ நேர்மையானவன்.
நாணல் _ வெட்கப்படுதல் : தருப்பை வகை : ஒரு புல் வகை.



நாணி _ வில்நாண்.
நாணீர் _ புதுப்புனல்.
நாணுகம் _ குதிரை.
நாணுதல் _ மனங்குன்றுதல் : அஞ்சுதல் : அடங்குதல்: வெட்கப்படுதல்.
நாணுவம் _ நாகணவாய்ப்புள்.



நாண் _ கூச்சம் : வெட்கம் : வில் நாண் : கயிறு : மாங்கலியம் கோத்த சரடு.
நாண்மங்கலம் _ பிறந்த நாள் சிறப்புச் சொல்லும் புறத்துரை.
நாண் மலர் _ அன்றலர்ந்த பூ.
நாண் மீன் _ அசுவினி முதலிய விண்மீன்.
நாண் முல்லை _ போரின் பொருட்டுக் கணவன் பிரிந்த நிலையில், இல்லின் தலைவன் தற்காத்துத் தங்கிய நிலைமை சாற்றும் புறத்துறை.



நாண்முழவு _ காலை முரசு : நாழிகைப் பறை.
நாண்மை _ வெட்கம் : மகளிர் கூச்சம்.
நாதகீதன் _ சிவபிரான்.
நாதக்குடம் _ சங்கு.
நாதக்குழல் _ ஊது கருவி.



நாதம் _ ஒலி: வாச்சிய ஓசை : இசைப்பாட்டு.
நாதரவி _ உடற்கொழுப்பு.
நாதன் _ தலைவன்: அரசன் : கணவன் : குரு: அருகன்.
நாதாங்கி _ பூட்டு : தாழ்ப்பாள் : சங்கிலி இவற்றை மாட்ட உதவும் கதவு நிலை உறுப்பு.
நாதாந்தம் _ ஞான நெறிகளுள் ஒன்று.



நாதார் _ ஏழைக்குடிகள்.
நாதி _ உறவினன் : ஞாதி : காப்பாற்றுவோன்.
நாந்தகம் _ திருமாலின் வாள் : வாள்.
நாந்தல் _ மந்தாரம் : ஈரம்.
நாந்தி _ நாடக முன்னுரை : பாயிரம் : முதுகு :சிராத்தவகை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:30 pm

நாந்திகந்துரு _ மரமஞ்சள்.
நாந்துதல் _ நனைதல்.
நாபதி _ பேச்சாற்றல் : உடையவன்.
நாபி _ கொப்பூழ் : கத்தூரி.
நாபிசன் _ நான்முகன்.


நாபிரம் _ விந்து.
நாப்பண் _ நடு : தேர்நடு : யாழின் உறுப்பு.
நாப்பாடம் _ மனப்பாடம் பண்ணியது.
நாப்பு _ ஏளனம்.
நாப்புதல் _ வஞ்சித்தல் : ஏளனம் செய்தல்.



நாமகரணம் _ பெயரிடும் சடங்கு.
நாமகள் _ கலைமகள்.
நாமக்கட்டி _ திருமண் கட்டி.
நாமடந்தை _ நாமகள் : கலைமகள்.
நாமதேயம் _ கடல்.



நாமநீர் _ கடல்.
நாமம் _ திருமண் கட்டி : அச்சம் : நிறைவு : புகழ் : திருமண் காப்பு : பெயர்: தன்மைச் செடி : முள் தராசின் நடு.
நாமயம் _ தற்போதம்.
நாமவைகுண்டம் _ தும்மைப்பூடு.
நாமறுதல் _ முற்றும் அழிதல்.



நாமாவளி _ திருப்பெயர் வரிசை.
நாமிதம் _ வளைவு.
நாமுடி _ நாவின் நுனி : நுனி நாக்கு.
நாம் _ அச்சம் : தன்மைப் பன்மைப் பெயர்.
நாம்பு _ மெலிந்தது.



நாம்புதல் _ இளைத்தல்.
நாயகமணி _ அணிகலன் நடுவில் விளங்கும் இரத்தினமணி.
நாயகமுத்து _ பெருமுத்து.
நாயக மேனி _ மரகதப் பச்சை.
நாயகம் _ மேம்பாடு : தலைமை : கிரந்தி நாயகச்செடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:30 pm

நாயகன் _ தலைவன் : கணவன் : அரசன் : கடவுள்.
நாயகி _ மனைவி : தலைவி : பார்வதி : ஒருபண்.
நாயக்கன் _ படைத்தலைவன் : ஒரு சாதிப்பெயர் : ஒரு பட்டப்பெயர்.
நாயரஞ்சி _ நாயுருவிச் செடி.
நாயனம் _ நாதசுரம்.



நாயனார் _ தலைவர் : சிவனடியார் : திருவள்ளுவர்.
நாயன் _ கடவுள் : அரசன் : தலைவன்.
நாயன்மார் _ பெரியபுராணத்தில் கூறப்படும் சிவனடியார்கள்.
நாயிகை _ தலைவி.
நாயுருவி _ ஒரு பூண்டு வகை.



நாயுள்ளி _ நரிவெண்காயம்.
நாயுறக்கம் _ பொய்யுறக்கம்.
நாயோட்ட்ம் _ குதிரை நடையில் ஒன்று.
நாயோட்டு மந்திரம் _ திருவைந்தெழுத்தில் சி என்னும் எழுத்து.
நாய் _ ஒரு விலங்கு : சூதாடு கருவி.



நாய்க்கரந்தை _ குன்றிக் கொடி.
நாய்த்திசை _ தென்மேற்குத் திக்கு.
நாய்த்துளசி _ கஞ்சாங் கோரைப் பூண்டு.
நாரகர் _ நரகத்துக்குரிய பாவிகள்.
நாரசிங்கம் _ உபபுராணத்துள் ஒன்று : மருந்து வகை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:31 pm

நாரணவன் _ கிருமி வகை : மாட்டு நோய்.
நாரணன் _ திருமால்.
நாணி _ துர்க்கை.
நாரதம் _ மேகம் : பெரியயாழ்: பதினெண் புராணத்துள் ஒன்று.
நாரதன் _ பிரம புத்திரராகிய பெருமுனிவர் : புத்தருள் ஒருவர்: கவகம் செய்பவன்.



நாரநிதி _ கடல்.
நாரம் _ நீர் : பாசி : நீர் வாழ்ப்பறவை: பசுவின் கன்று : ஆன்மாக்கள் : மக்கட் கூட்டம் : மரவகை.
நாரன் _ மன்மதன்.
நாராங்கி _ கதவின் தாழ்ப்பாள் : நாதாங்கி.
நாராசம் _ இரும்பாணி : எழுத்தாணி : விட்டம் : குறுக்குச் சந்து.




நாராயண கோபாலர் _ திருமாலுருவுடையோர்.
நாராயண கெளளம் _ ஒரு பண்.
நாராயணப்பிரியன் _ சிவபிரான்.
நாராயணம் _ அரச மரம் : நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று : கடல் மீன் வகை.
நாராயணன் _ நீரை இடமாக உடைய திருமால்: சிவபிரான்: நான்முகன் : வருணன் : சந்திரன்: திருமாலின் அவதாரமான ஒரு முனிவன் : நாரை வகை.



நாராயணாத்திரம் _ ஓர் அம்பு.
நாராயணி _ துர்க்கை : திருமகள்: பார்வதி : கங்கா தேவி: தண்ணீர் விட்டான் கிழங்கு : குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று.
நாராயம் _ அம்பு : எழுத்தாணி : அளவுப் படிவகை.
நாரி _ வில்லின் நாண் : பன்னாடை : யாழ்நரம்பு : பெண் : கள் : தேன்: பார்வதி : மணம் : சேனை : நன்னாரி : இடுப்பு.
நாரிகேரம் _ தென்னை : தேங்காய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:31 pm

நாரிகை _ பெண்.
நாரிபாகன் _ சிவபிரான்.
நாரிப்பிடிப்பு _ இடுப்புவலி.
நாரியங்கம் _ கிச்சிலி வகை.
நாரை _ வெண் கொக்கு : ஒரு நீர்ப்பறவை : பறவை வகை.



நார் _ மட்டை முதலியவற்றின் நார் : கயிறு : வில்லின் நாண்:பன்னாடை : கல் நார் : அன்பு.
நார்ச்சீலை _ மரவுரி.
நார் மடி _ பட்டாடை போன்றதும் நாரால் செய்ததுமான ஆடை வகை.
நார் மட்டை _ பனை மட்டை.
நாலம் பலம் _ கோயிலுள் ஒரு பகுதி.



நாலா _ பல : வாய்க்கால்: பள்ளத்தாக்கு.
நாலாரைச் சக்கரம் _ சித்திரகவி வகை.
நாலாவிதம் _ பலவிதம்.
நாலி _ முத்து : கார்த்திகைப்பூ : கந்தைத்துணி.
நாலிகம் _ எருமை : காகம் : தாமரை.



நாலிகை _ மூங்கில்.
நாலு _ நான்கு : சில : பல : நாலடியார்.
நாலுதல் _ தொங்குதல்: கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளுதல்.
நாலைங்கள்ளி _ இலைக்கள்ளி மரம்.
நால் _ நான்கு : நாலடியார் என்னும் தமிழ் நூல்.



நால்வாய் _ யானை தொங்கும் வாய்.
நாவடக்கம் _ மோனம்.
நாவணம் _ உள்நாக்கு.
நாவமிர்தம் _ அறிவுரை : பேச்சு.
நாவரசர், நாவரையர் _ திரு நாவுக்கரசு நாயனார்.



நாவலந்தீவு _ ஏழு தீவுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு.
நாவலம் பொலம் _ சாம்பூநதம் என்னும் பொன்.
நாவலர் _ பேசுதலில் வல்லவர் : புலவர்: அமைச்சர்.
நாவலர் கோன் _ நாவலூரினரான சுந்தரர்.
நாவல் _ நாவல் மரம் : வெற்றியொலி : துன்பக் குறிப்பு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:31 pm

நாவழி _  நாக்கு வழிக்கும் கருவி.
நாவறட்சி _  நீர் வேட்கை.
நாவாய் _  மரக்கலம் : இரேவதி நாள் : ஒரு பறவை வகை.
நாவி _  கொப்பூழ் : கத்தூரிமான் : புழுகு பூனை : புழுகு : மரக்கலம்: ஊமத்தை.
நாவிகன் _  கப்பற்காரன்.



நாவிக்குழம்பு _ புழுகு.
நாவிசம் _  நாவிதத் தொழில்.
நாவிதன் _ அம்பட்டன் : கார்த்திகை நாள் : பூர நாள்.
நாவித்தண்டை _ எருமுட்டை : பீநாறிப்பூண்டு.
நாவிப்பிள்ளை _  கத்தூரி விலங்குக் குட்டி.



நாவிப்புழுகு _  புழுகு : மான்மதம்.
நாவியம் _  காந்தள் மலர்.
நாவிலை _  வெற்றிலை.
நாவின்கிழத்தி _  கலைமகள்.
நாவினார் _ நாவலர்.



நாவு _  நாக்கு.
நாவுதல் _  கொழித்தல் : நாவினால் குறிகாட்டி நகையாடுதல்.
நாவை _  கலப்பை நுனி : கொழு நுனி.
நாழம் _  வசை.
நாழி _  அளக்கும் கருவி : காற்படி: நாழிகை : அம்பறாத்தூணி : பூரட்டாதி நாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:32 pm

நாழிக்கிணறு _ சிறு கிணறு : திருச்செந்தூர்க் கடற்கரையிலுள்ள தீர்த்தக் கிணறு.
நாழிகை _  கால அளவு : அறுபது விநாடி கொண்டது : கோயிற் பகுதி : உத்திரட்டாதி நாள் : நாடா.
நாழிகைப் பறை _ நாழிகை அறிவிக்க  அடிக்கும் பறை.
நாழிகை வட்டம் _  சூரியக் கடிகாரம் : நாழிகை வட்டில் : கடிகாரம்.
நாழிகை வட்டில் _  நாழிகையை  அறிவிக்கும் கருவி.



நாழ் _  குற்றம் :  செருக்கு : திறமை : நாள் : இல்லாதது சொல்லுதல்.
நாழ்மை _  குற்றம் : செருக்கு.
நாளகம் _  இலாமிச்சம் புல்.
நாளங்காடி _  பகலில் வாணிபம் செய்யும் கடை.
நாளது _  நடைபெறும் காலம் : நிகழ்காலம்.




நாளம் _  உள் துளை : தண்டு : நரம்பு : பொன்னாரிதாரம்.
நாளவை _  அன்றாடம் நடைபெறும் அளவைக் கூட்டம்.
நாளார் _  இயமன்.
நாளி _ நாய் : ஞாளி : கள் : அறுபது விநாடி கொண்ட நேரம்.
நாளிகம் _  வெள்ளைக் கொடி : தாமரை : மதிற் சுவரில் அமைக்கப்படும் எறிபடை.



நாளிகேரம் _ தென்னை.
நாளிதழ் _ தினசரி செய்தித்தாள்.
நாளினி _ புளி மாமரம்.
நாளும் _ தினந்தோறும்.
நாளுலத்தல் _ இறத்தல் : நாட் கழிதல்.



நாளை _  அடுத்த நாளில்: நாளுக்குரிய.
நாளோதி _  பஞ்சாங்கம் : ஓதுவோன்.
நாளோலை _  சாதகம் : முகூர்த்த ஓலை.
நாள் _  தினம் : காலம் : வாழ் நாள்: நன்னாள் : நட்சத்திரம் : திதி : வெண்பாவின் ஈற்றடியில் வரும் ஓரசைச் சீரின்  வாய்ப்பாடு.
நாறல் _ நாறுதல்: தீ நாற்றம்.


நாறுகட்டி _  பெருங்காயம்.
நாறுதல் _ மணத்தல்: தோன்றுதல்: மோத்தல் : தீய நாற்றம் வீசுதல்.
நாற்சி _  தொங்குதல்.
நாற்பாட்டன் _  பாட்டனுக்குப் பாட்டன்.
நாற்பான் _ நாற்பது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:32 pm

நாற்பொருள் _  உறுதிப்பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு.
நாற்றம் _  மணம்: கள்: தோற்றம் : தொடர்பு.
நாற்றி _ நான்கு மடங்கு.
நாற்று _  பிடுங்கி நடும் பயிர்.
நாற்றுதல் _  தொங்கவிடுதல்.


நானச்செப்பு _  புழுகு செப்பு.
நானமா _  கத்தூரி விலங்கு.
நானம் _  மணப்பண்டம் : கத்தூரி : கத்தூரி விலங்கு : புழுகு : பூசுவன: கவரிமான்: ஞானம் : புனித நீராடல்.
நானா _  பல.
நானிலம் _  பூமி : குறிஞ்சி : முல்லை,மருதம்,நெய்தல் என்னும் நிலம்.


நான்கு _  ஓர் எண்.
நான் மாடக் கூடல் _  மதுரை நகரம்.
நான்முகத்தோன் _  பிரமன்.
நான்முத்தோன் _  பிரமன்.
நான்முகன் _  பிரமன்: அருகன்.
நான்முகன் தேவி _  கலைமகள்: நான்று :காலம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:27 pm

நி - இன்மை : அன்மை : அதிகம் : சமீபம் : நிறைவு : உறுதி : ஐயம் : வன்மை : விருப்பம் முதலிய
பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி இடைச்சொல் : ஓர் எழுத்து. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:27 pm

நிகடம் _  அண்மை.
நிகணம் _  வேள்விப்புகை.
நிகண்டு _  சொற்பயன் விளக்கும் நூல்: அகராதி : உறுதி : படலம்.
நிகதம் _ பேச்சு.
நிகப்பிரபை _ இருள்.


நிகம் _ ஒளி.
நிகரம் _  கூட்டம் : மொத்தம் : கொடை : பொருள்.
நிகரார் _  பகைவர்.
நிகரிடுதல் _  ஒப்பிடுதல்.
நிகருவம் _ அடக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:28 pm

நிகர் _  ஒப்புமை : சமானம் : ஒளி: போர்.
நிகர்ப்பு _  ஒப்பு : போர்.
நிகர்வு _  ஒப்பு.
நிகலம் _ பிடரி.
நிகழ்காலம் _  தற்காலம்.



நிகழ்ச்சி _ சம்பவம் : செயல்.
நிகழ்தல் _ நடத்தல் : தங்குதல் : விளங்குதல்.
நிகளம் _  தளை : நீளம் : யானைக் காற் சங்கிலி : விலங்கு.
நிகற்பம் _  பத்து லட்சங்கோடி.
நிகாசம் _  உவமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:28 pm

நிகாதம் _  நரகம்.
நிகாதன் _ வஞ்சகன்.
நிகாயம் _ இடம் : வீடு : நகரம் : கூட்டம்.
நிகாயன் _ வடிவமற்ற கடவுள்.
நிகாரணம் _  காரணமற்றது : கொலை.


நிகாரம் _  அவமரியாதை : பணி : தவறு : தூற்றுதல்: விழுங்குதல்.
நிகிதம் _  படை : இதம் : இன்மை.
நிகிருதி _ வறுமை : பொல்லாங்கு : நிந்தை.
நிகிலம் _ எல்லாம்.
நிகீனன் _  கீழ்மகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:28 pm

நிகுஞ்சம் _  புதர்வீடு : குகை : சிறுகுடிசை.
நிகுஞ்சனம் _ கொலை.
நிகுட்டம் _  தொனி.
நிகுத்தை _  கதவு.
நிகூடம் _ ஆழம் : மறைவு.


நிகேதனம் _ வீடு : கோயில்: நகரம்.
நிகோதம் _  விலங்கினம் : கொடிய நரகத்துன்பம்.
நிக்கந்தன் _  அருகன்.
நிக்கிரகம் _ தண்டனை : அடக்குதல்: அழித்தல்: வெறுப்பு : வாதத் தோல்வி : எல்லை.
நிக்குரோதம் _ ஆலமரம்: கட்டாமணக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:28 pm

நிசகரம் _  உறுதியளித்தல்.
நிசங்கம் _ அம்புக்கூடு : இணக்கம்.
நிசதி _ தவறாது : நாள்தோறும்.
நிசப்தம் _ அமைதி.
நிசம் _ உண்மை.


நிசா _ இரவு.
நிசாகசம் _ இரவில் மலரும் ஆம்பல்.
நிசாகம் _ மஞ்சள்.
நிசாகரன் _ சந்திரன்: சேவல்.
நிசாசரம் _  ஆந்தை : பாம்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:29 pm

நிசாசரன் _ அசுரன்: சந்திரன்: இராக்கதன்.
நிசாசரி _ கூகை : அரக்கி : விலைமகள்.
நிசாசலம் _ பனி.
நிசாடம் _ ஆந்தை.
நிசாடு _ மஞ்சள்.


நிசாதனம் _  வீடு: இடம் : நகரம் :உடல்.
நிசாதன் _ வஞ்சகன்: இழிஞன்.
நிசாதி _ மாலை வெளிச்சம்.
நிசாந்தம் _ விடியற்காலம்.
நிசாபதி _ சந்திரன்: கருப்பூரம்.



நிசாமணி _ மின்மினி : சந்திரன்.
நிசாமனம் _ கேள்வி : பார்வை : நிழல்.
நிசாமானம் _ இராக்கால அளவு.
நிசாரணம் _  கொலைகாரன்.
நிசாரம் _  வருத்தம் : சத்தற்றது.


நிசாரி _ சூரியன்.
நிசார்த்தம் _  உண்மை.
நிசாளம் _  ஒரு கட்பறை.
நிசான் _ கொடி.
நிசி _  நள்ளிரவு : இருள்: மஞ்சள்: பொன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:29 pm

நிசிசரன் _ அசுரன்: சந்திரன்: கள்வன்: காவற்காரன்.
நிசிதம் _ இரும்பு : கூர்மை: பொய்: இகழ்ச்சி.
நிசிதன் _ அசுரன்: இழிந்தன்.
நிசிந்தன் _ ஈசன்.
நிசீதம் _ நள்ளிரவு : இரவு : கூர்மை : புன்மை.



நிசீதிகை _  உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுதல்.
நிசுளம் _  நீர்க்கடப்பமரம்.
நிசூதனம் _  அழித்தல்.
நிசை _  இரவு.
நிச்சயம் _  உறுதி : மெய்.


நிச்சயித்தல் _  உறுதிப்படுத்தல்.
நிச்சலம் _  நித்தியத்துவம் : அசைவின்மை.
நிச்சலை _ பூமி : சத்திவிசேடம்.
நிச்சல் _  எப்போதும்.
நிச்சாயகம் _  உறுதிப்படுத்துவது.



நிச்சாரகம் _  காற்று.
நிச்சாலங்கம் _  மலை.
நிச்சித்தம் _  மனோலயம் : கவலையின்மை.
நிச்சிந்தன் _ அருகன்: ஈசன்.
நிச்சிரேணி _  ஏணி.




நிச்சிரேயசம் _  வீடு பேறு.
நிடதம் _  ஒரு நாடு : ஒரு மலை.
நிடலம் _  நெற்றி.
நிடலாட்சன் _  சிவபிரான்.
நிடாதம் _  ஏழிசையுள் ஏழாவது.



நிடூதனம் _  கொலை.
நிடூதனன் _  கொலைகாரன்.
நிடேகம் _  விலக்கு : விலக்கப் பட்ட பொருள்.
நிட்கண்டன் _  பகையற்றவனாகிய சிவபிரான்.
நிட்கம் _  நாணயவகை : பொன்: பறைவகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:30 pm

நிட்களங்கம் _ மாசின்மை.
நிட்களம் _ தூய்மை : உருவமின்மை.
நிட்களர் _  சிவபிரான்.
நிட்காமியம் _  விருப்பமின்மை : பயனை விரும்பாது செய்யும் செயல்.
நிட்காரம் _ நிந்தை.


நிட்குடி _ 
ஏலம்.
நிட்டூரம் _ கொடுமை.
நிட்டை _ தியானம் : நோன்பு நோற்றல்.
நிட்பிரபஞ்சம் _ பிரபஞ்சத்தைக் கடந்தது.
நிட்பிரபஞ்சன் _ சாந்தமுள்ளவன்.



நிணச்செருக்கு _ 
உடற் கொழுப்பாலாகிய ஆணவம்.
நிணம் _ கொழுப்பு : ஊனீர் : ஊன்.
நிணர்தல் _ கட்டுதல் செறிதல்.
நிணவை _ பிணிப்பு : பின்னிச் செய்யப்பட்டது.
நிணறு _ உருக்கம் : இதழ்.



நிண்ணயம் _
 ஏற்பாடு : உறுதி : ஆராய்வு.
நிதகம் _ நீர்முள்ளிப் பூண்டு.
நிதம் _ தினமும்.
நிதம்பம் _ தோள் : மலைப்பக்கம்: பிருட்டம் : அல்குல்: கரை: கற்பரிபாடாணம்.
நிதரிசனம் _ எடுத்துக்காட்டு : உவமையணி.




நிதலம் _ 
கீழேழுலகத்துள் ஒன்று.
நிதனம் _ வறுமை : அழிவு : சாவு: பிறந்த நாளுக்கு ஏழாம் நாள்.
நிதாகரன் _ சூரியன்.
நிதாகம் _ வெப்பம் : வியர்வை.
நிதாந்தன் _ மேன்மையுள்ளவன்.



நிதார்த்தம் _ 
உறுதி : நேர்மை : உண்மை : சமன் செய்கை.
நிதானம் _ பொன்: இரத்தினம் : படை : தீர்மானம் : நோக்கம் : நேர்மை : சமம் : பிரமாணம் : அமைதி : பெளத்தர் கூறும் 12 நிதானங்கள்.
நிதானவான் _ அறிவாளி.
நிதானன் _ கடவுள்.
நிதி _ பொன்: பொருட்குவை.




நிதிக்கோன் _ 
குபேரன்.
நிதிநிட்சேபம் _ புதையல்.

நிதிப் பொதி _ பொற்கிழி.
நிதீசன் _ குபேரன்.
நிதுவனம் _ கலப்பு : புணர்ச்சி: மகிழ்ச்சி : விளையாட்டு.



நிதேசம் _ 
கட்டளை : சொல்: அண்மை.
நிந்தகன் _ இழிவாகப்பேசுவோன்.

நிந்தம் _ தனியுரிமை.
நிந்தனை _ இகழ்ச்சி.
நிந்தாத்துதி _ இகழ்தல் போலப் புகழ்தல்.




நிந்திதம் _ 
பரிகாசம் : ஏளனம் : தடை.
நிந்து _ வயிற்றில் இறந்த பிள்ளையைப் பெற்றவள்.

நிந்தை _ நிந்தனை.
நிபதனம் _ கீழ் இறக்குதல்.
நிபத்தி _ உண்மை : தோன்றுமிடம் : உதவி.



நிபத்தியை _ 
போர்க்களம்.
நிபந்தம் _ கோயிற் கட்டளைக்கு விடப்பட்ட சொத்து : தாவரப் பொருள் : அணை : கடமை : யாப்பு.

நிபந்தனை _ கட்டுப்பாடு : பொது விதி : தண்டனை.
நிபம் _ உவமை: வஞ்சனை : கோள் : காரணம்.
நிபாதம் _ இறப்பு : செயலொழிதல்.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:30 pm

நிபாதனம் _  கொல்லுகை.
நிபானம் _  கிணறு : பாற்குடம்.
நிபீடனம் _  மல்வித்தை.
நிபுடம் _  நெருக்கம்.
நிபுணம் _  திறமை : சிறப்பு.



நிப்பரம் _  
பாராமின்மை : அசைவின்மை.
நிப்பாட்டுதல் _  தாமதித்தல் : நிறுத்துதல் : நேராக நடுதல்.
நிமந்தக்காரர் _  கோயில் வேலைக்காரர் : திருவடி தாங்குவோர்.
நிமந்தம் _  கோயில் ஊழியம்.
நிமலம் _  மாசின்மை.



நிமலன் _
  தூயன் : கடவுள்.
நிமலை _  உமாதேவி.
நிமிடம் _  கால நுட்பம் : தாளத்தின் காலவகை.
நிமிடன் _  திறமையாளன்.
நிமிடிபாதம் _  கண்டிப்பு : பிடிவாதம்.



நிமிடு _  திறமையான வேலை.
நிமிண்டி _  சிறு திருடன் : ஓர் எறும்பு வகை.
நிமிண்டுதல் _  கசக்குதல் : கிள்ளுதல்.
நிமிதல் _  வாய் நெளிதல்.
நிமித்தம் _  அடையாளம் : காரணம் : சகுனம் : காரணம்.



நிமிரல் _  சோறு.
நிமிர்தல் _ உயர்தல் : வளர்தல்: ஏறுதல்: நடத்தல்:உறுதியாதல்.
நிமிளன் _ கெட்டிக்காரன்.
நிமிளை _  செவ்வெண்மையான கல்வகை.
நிமை _  இமை.


நிமைத்தல் _  இமைத்தல்.
நிம்பம் _  வேப்ப மரம்.
நிம்பன் _  பாண்டியன்.
நிம்பிரி _  பொறாமை.
நிம்பை _  திருமகள்.


நிம்மதி _  மனஅமைதி.
நிம்மளம் _  களங்கமற்றது : மனஅமைதி.
நியக்கி _  மான்.
நியக்குரோதம் _  ஆலமரம்.
நியதம் _  அடக்கம் : எப்பொழுதும்.



நியதி _  கட்டுப்பாடு : ஒழுக்கவிதி : வரையறை.
நியதுதல் _  விடுதல்.
நியந்தா _  கடவுள்: கட்டளையிடுவோன்.
நியமம் _  விதி : அட்டயோக விதி : உறுதி : முடிவு: நகரம் : கோயில்: மண்டபம் : வீதி: இடம்.
நியமனம் _  ஆணை :கட்டளை : நியர்: ஒளி.


நியர்ப்புதம் _  பதினாயிரங்கோடி.
நியாசம் _  கரியை : வேம்பு : ஈடுவைத்த பொருள்: தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல்.
நியாமகன் _  ஓட்டுநன் : மாலுமி.
நியாயசபை _  நீதிமன்றம்.
நியாய மலைவு _  தருக்க நூலுக்கு மாறான கூற்று.



நியாயமுரசு _  அரசன் நீதி வழங்குவதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு.
நியாயம் _  நீதி : வாய்மை : சட்டம் : நன்னெறி : கட்டுப்பாடு.
நியாய வாதி _  வழக்கறிஞன்.
நியாயவான் _  நீதிபதி.
நியாளம் _  ஒரு பறை.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:30 pm

நியுதம் _   நூறாயிரம் : பத்து நூறாயிரம்.
நியுத்தன் _  ஒரு செயலைச் செய்ய அமர்த்தப்பட்டவன்.
நியூனம் _  குறைவு.
நியோகம் _  கட்டளை : தத்துவம் : உறுதி : முயற்சி : நியமித்த தொழில்.
நியோசனம் _  இசைவு : கட்டளை.



நிரக்கு _  நேர்மை: அகவிலை.
நிரங்குசம் _  கட்டுப்படாமை.
நிரசம் _  சுவையின்மை : சத்தற்றது.
நிரசனம் _  பட்டினி : அழித்தல்: கக்குதல்.
நிரஞ்சனம் _  பட்டினி : அழித்தல்: கக்குதல்.




நிரஞ்சனம் _  குற்றமில்லாதது: வெளி : நிறைவு : வீடு பேறு : இரசகற்பூரம்.
நிரஞ்சனன் _ சிவன் : கடவுள்: அருகன்.
நிரஞ்சனி _  பார்வதி தேவி.
நிரட்சம் _  நிலநடுக்கோடு : பூமத்தியரேகை.
நிரதம் _  எப்பொழுதும்.



நிரதி _ பற்று.
நிரதிசயம் _  உயர்ந்த நிலைமை.
நிரந்தம் _  முடிவற்றது : குரங்கு: நெருக்கிடை.
நிரந்தரம் _  இடைவிடாமை : எப்போதும் இருப்பது : நெருக்கம் : அழிவு : சாராசரி: குரங்கு.
நிரபராதி _  குற்றமற்றவன்.



நிரப்பம் _ முழுமை : இறப்பு : ஒப்புமை : கற்பு : சமம்.
நிரப்போர் _  வறியர்: இரப்போர்.
நிரம்ப _  நிறைய : மிகுதியாக.
நிரம்பரன் _  ஆடையில்லாதவன்: அருகன்: சிவன்.
நிரம்பாமொழி _  மழலைச்சொல்.



நிரம்பியம் _  வாழை.
நிரயபாலர் _  நரகத்தில் உள்ளவர்.
நிரல் _  வரிசை: ஒப்பு.
நிரவதி _ எல்லையற்றது.
நிரவம் _  ஒலியின்மை.



நிரவயன் _  அழிவில்லாத கடவுள்.
நிரவுதல் _  சமனாதல்:தீர்தல்: பரவுதல்: குறைதீர்த்தல்: அழித்தல்: சரிப்படுத்துதல்.
நிரனிறை _  ஒழுங்காக நிறுத்தல்: பொருள் கோள்  தன்மையில் சொற்களை நிறுத்தல்.
நிராகம் _  உடலின்மை.
நிராகரணம் _  மறுப்பு.



நிராகாரம் _  புறக்கணிப்பு : உருவமின்மை : வானம் : வீடு பேறு: உணவின்மை.
நிராகுலம் _  கலக்கமின்மை.
நிராங்குதல் _  நருங்குதல்: தேய்தல்: நொறுங்குதல்.
நிராசை _  விருப்பமின்மை.
நிராதபகை _  இரவு.



நிராதாரம் _  ஆதாரமின்மை.
நிராமயம் _  நோயற்றது.
நிராமயன் _  கடவுள்.
நிராயுதன் _  ஆயுதமற்றவன்: அருகன்.
நிராலம்பம் _  பற்றுக்கோடின்மை : வெளி: 108 உபநிடதங்களுள்  ஒன்று.



நிராலம்பன் _  கடவுள்.
நிரியாணம் _  யானைக் கடைக் கண்: இறப்பு : வீடு பேறு.
நிரீட்சண சுத்தி _  கண்ணேறு கழித்தல்.
நிரீட்சணம் _  பார்வை : மதிப்பு.
நிரீச்சுரம் _  கடவுள் இல்லை என்னும் மதம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:31 pm

நிருணயம் _  ஆராய்வு : உறுதி.
நிருதர் _  அரக்கர்.
நிருதி _  தென்மேற்குத்திக்குப் பாலகன் : அரக்கி.
நிருதூளி _  தூளி : அழுக்கு.
நிருத்தம் _  நடனம் : பற்றின்மை.




நிருத்தாசனம் _  தீர்மானம்.
நிருபர் _  செய்தி திரட்டுபவர்.
நிருபன் _ அரசன்.
நிருமதம் _  யானை.
நிருமலம் _  மாசின்மை.



நிருமாலியம் _  பூசித்துக் கழித்த பொருள்.
நிருமிதி _    படைப்பு.
நிருவாகம் _ ஆளுகை : பொறுப்பு : மேற்பார்வை : ஒம்புகை.
நிரூபணம் _  மெய்ப்பித்தல்: ஆராய்ச்சி.
நிரை _  வரிசை : ஒழுங்கு : படை வகுப்பு : பசுக்கூட்டம் : நிரையசை.



நிரைகிளம்பி _ சினையாடு.
நிரைதல் _ நிரப்புதல்: ஒழுங்காக்குதல்: முடைதல்: முறைப்படுதல்.
நிரையம் _  நரகம்.
நிரோதம் _  தடை : அடக்கம்.
நிரோதனை _ புலனடக்கம்.


நிர்க்கதி _ கதியின்மை.
நிர்க்குணம் _ குணமின்மை : இழி குணமில்லாமை.
நிர்ணயம் _ உறுதி : ஆராய்வு.
நிர்ப்பந்தம் _ கட்டாயம் : தொந்தரவு.
நிர்மலம் _ மாசின்மை.



நிர்மலன் _ கடவுள்.
நிர்மாலியம் _ பூசித்துக் கழித்த பொருள்.
நிர்மூலம் _ பாழாதல்: காரணமற்றது.
நிர்வகித்தல் _ செயல் நடப்பித்தல்: ஆளுதல்.
நிர்வாகி _ மேலாளர் : பொறுப்பாளர்.



நிர்வாணம் _ சமண பெளத்தரின் முத்திநிலை : வீட்டின்பம் : அம்மணம்.
நிர்விகற்பம் _ வேறு பாடின்மை : ஐயமின்மை.
நிர்விசாரம் _ கவலையின்மை: துயரின்மை.
நிலக்கடலை _ வேர்க் கடலை : மணிலாக் கொட்டை.
நிலக்கரி _ பூமியிலிருந்து எடுக்கப்படும் கரிவகை.



நிலக்கிழார் _  நிலத்துக்கு உரியவர்.
நிலக்குழி _ உரக்குழி.
நிலத்தாமரை _ ரோசா மலர்.
நிலநடுக்கம் _ பூகம்பம் : பூமி அதிர்வு.
நிலபுலம் _ நன்செய் புன்செய் : விளை நிலம்.



நிலமகள் _ பூமதேவி.
நிலமகன் _ செவ்வாய்.
நிலமடந்தை _ நிலமகள்.
நிலம் _ தரை : மண்: பூமி : இடம் : வயல்.
நிலம்பி _ கொசு.



நிலவடலி _  சிறுபனை மரம்.
நிலவரம் _ நிலைபேறு : நிலைமை : அன்றாட வேலை.
நிலவரி _ அரசாங்கத்துக்குச் செலுத்தும் வயலில் பயிரிடுவதற்கான வரி.
நிலவாரம் _ பயிரிடுவோன் நிலச் சாந்தக்காரருக்குக் கொடுக்கும் தானியத்தின் ஒரு பகுதி.
நிலவு _  சந்திரன்: நிலவொளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:31 pm

நிலவுதல் _  தங்குதல்: நிலைத்திருத்தல்:வழங்குதல்: பரவுதல்.
நிலவுலகம் _ பூமி.
நிலா _  நிலவு : நிலாக்கொழுந்து : இளம்பிறை.
நிலாவுதல் _  நிலைத்திருத்தல்.
நிலுவை _  வரவு பாக்கி.


நிலை _  தன்மை : இடம் : உறுதி : தூண் : பசு ஒரு தடவை கழிக்கும் சாணி.
நிலைக்களம் _ தங்குமிடம்.
நிலைகுலைதல் _  சிதறவடித்தல்: ஒழுக்கம் கெடுதல்.
நிலைகெடுதல் _  தடுமாறல்.
நிலைத்தல் _  நிலைபெறுதல்.


நிலைத்தானம் _  கோயில்.
நிலை _  நீர்: கடல்.
நிலைப்பாடு _ உறுதிப்பாடு.
நிலை மண்டிலம் _ ஆசிரியப்பாவகை.
நிலைமை _ இயல்பு : நிலவரம் : திண்மை : உண்மை.



நிலையகம் _  மனை.
நிலையம் _  தங்குமிடம் : கோயில் : படி: கூத்து : மருதநிலத்தூர் : இலக்கு.
நிலையாமை _ அழிந்து படும் தன்மை.
நில் _ நிற்றல்: நில்னென்னேவல்.
நில்லாமை _ உறுதிப்படாமை: அழிவது.




நிவகம் _  கூட்டம்.
நிவசதி _  வீடு.
நிவசனம் _ ஆடை.
நிவத்தல் _ உயர்தல் : படர்தல் : வளர்தல் : மேலாதல் : தோன்றுதல்.
நிவந்தம் _ கோயில் தொண்டு : நிபந்தனை : கடவுளை வழிபடும் இடம்.



நிவப்பு _  உயரம்.
நிவம் _ தோளின் மேலிடம்.
நிவர்தல் _  ஓங்குதல்.
நிவறுதல் _ மொய்த்தல்: பொடியாதல்.
நிவாசம் _  தெய்வம் வாழிடம்.



நிவாதம் _  காற்றின்மை.
நிவாரணம் _ தடுக்கை : தடை : ஒழிப்பு : துன்ப நீக்கம்.
நிவாரம் _  தடை.
நிவி _  மாமரம்.
நிவிர்த்தி _ விடுதலை : துறவு: ஒழிப்பு.



நிவிர்த்திகலை _  ஆன்மாக்களைத் தளையின்ன்று விடுவிப்பது.
நிவேசம் _  வீடு.
நிவேசனம் _ இடம் : வீடு : ஊர்: 2400 சதுர அடிகொண்ட மனையளவு.
நிவேதனம் _ கடவுளுக்குப் படைக்கும் அமுது : ஒப்புவித்தல்.
நிழத்துதல் _ தின்றழித்தல் : இன்மையாக்குதல்.




நிழலாடுதல் _  எதிரொளித்தல் : நிழல் தோன்றுதல்.
நிழலி _  ஒளி : நீதி : காற்று : நோய்.
நிழலுதல் _  ஒளி செய்தல்.
நிழல் _ சாயை : எதிரொளி : அச்சு : குளிர்ச்சி : அருள் : ஒளி : நீதி : புகலிடம் : கொடை : செல்வம் : மரக்கொம்பு : நோய் : பேய்.
நிழறுதல் _  ஒளிவிடுதல்.



நிழற்றுதல் _ ஒளிவிடுதல் : நிழல் செய்தல் : அடங்குதல் : காத்தளித்தல்.
நிறக்கேடு _ புகழ்க்குறைவு.
நிறங்குணம் _ இயல்பு.
நிறம் _ வண்ணம் : இயல்பு : ஒளி : புகழ் : இசை : மார்பு : நடுவிடம் : உயர்நிலை : உடல் : தோல்.
நிறுத்தல் _ நிலை நிறுத்தல் : எடை பார்த்தல் : தீர்மானித்தல் : படைத்தல் : தடை செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 17 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 36 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 26 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum