தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 25 of 36 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:29 pm

பொருட்குன்று _  மேருமலை.
பொருட்கை _  அபிநயக்கை.
பொருட்சுவை _ பாட்டின் பொருளால் வரும் இன்பம்.
பொருட் செல்வி _  திருமகள்.
பொருட்டு _  காரணம்.


பொருண்மை _  கருத்துப் பொருள்.
பொருணி _ கள்.
பொருதல் _ போர் செய்தல் : மாறுபடுதல் : ஒப்பாதல் : பொருந்துதல் : வீசுதல் : தடவுதல்.
பொருத்தம் _  இணக்கம் : உடன் படிக்கை : மனநிறைவு : தகுதி.
பொருத்து _  இணைப்பு : ஒன்று சேர்க்கை : ஒப்பந்தம்.



பொருத்துதல் _  பொருந்தச் செய்தல் : கூட்டுதல் : வேலைக்கு அமர்த்துதல்.
பொருநல் _  பொருநை ஆறு.
பொருநன் _  படைவீரன் : அரசன் : திண்ணியன் : படைத்தலைவன் : கூத்தன் : நடிகன்.
பொருநை _  தாமிரபரணியாறு : ஆன்பெருநை நதி.
பொருநைத் துறைவன் _  சேரன் : பாண்டியன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:29 pm

பொருந்தல் _  பொருந்துதல் : உடன் படுதல்.
பொருந்தார் _  பகைவர்.
பொருந்துதல் _ மனம் இசைவாதல் : அமைதல் : தகுதியாதல் : உடன்படுதல் : நிகழ்தல் : அடைதல் :புணர்தல்.
பொருபுவி _  பாலைநிலம் : போர்க்களம்.
பொருப்பன் _  குறிஞ்சி நிலத்தலைவன் : பாண்டியன் : இமய மலை.



பொருப்பு _  பக்கமலை.
பொருமல் _ அச்சம் : துன்பம் : அழாது விம்முதல்.
பொருமி நாதம் _   இரச கருப்பூரம்.
பொருமுதல் _  துன்புறுதல் : பொறாமைப்படுதல்.
பொருவு _ ஒப்பு.



பொருள் _  செய்தி : சொற்பொருள் : செய்கை : அறிவு : தத்துவம் : மெய்ம்மை : கொள்ளை : பொன் : தந்திரம் : மகன்.
பொருள்கோள் _  செய்யுளுக்குப் பொருள் கொள்ளும் முறை.
பொருள் செய்தல் _  உரையிடுதல் : செல்வம் தேடுதல்.
பொலங்கலம் _  பொன்னகை.
பொலங்கா _  இந்திரனுடைய சோலை.


பொலம் _ அழகு : பொன் : பொல்லாங்கு.
பொலன் _  அழகு.
பொலி _ தூற்றிய நெல் : விளைவின் அளவு: தானியமாகக் கொடுக்கும் வட்டி : புணர்ச்சி.
பொலிகடா _  பொலியெருது : பொலியாடு.
பொலி காளை _  காளை வகை: எருது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:30 pm

பொலிகை _  வட்டி : இலாபம்.
பொலிக்கொடி _ வைக்கோல்.
பொலிசை _  வட்டி : இலாபம்.
பொலிச்சல் _ புணர்ச்சி.
பொலிதல் _  பெருகுதல் : செழித்தல் : மிகுதல் : சிறத்தல் : நீடு வாழ்தல்.


பொலிவு _ அழகு : செழிப்பு : எழுச்சி : பொன்.
பொல் _  பதர்.
பொல்லது _ தீயது.
பொல்லம் _ தைத்தல்: இணைத்தல்.
பொல்லர் _  தையற்காரர்.


பொல்லாங்கு _  தீயது : குற்றம் : கேடு.
பொல்லு _ பதர் : தடி : ஊன்று கோல்.
பொழி _  வயல் : வரம்பு : கணு : எல்லை : உரிக்கப்பட்டது: பொழி என்னேவல்.
பொழிதல் _ மழை பெய்தல் : மிகச் செலுத்துதல் : நிறைதல் : தங்குதல்.
பொழிப்பு _ பொழிப்புரை : பொருளின் தொகுப்பு உரைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:30 pm

பொழில் _ சோலை : பூந் தோட்டம்: பெருமை : உலகம் : நாடு : நாட்டின் பகுதி.
பொழிவு _ நிறைவு விருத்தி : ஆதாயம்.
பொழுது _  காலம் : வாழ் நாள் : கணம் : சூரியன்.
பொழுது போதல் _  சூரியன் மறைதல் : காலம் கழிதல்.
பொழுது வணங்கி _  சூரிய காந்திப் பூ.


பொளி _  உளியாலிட்ட துளை.
பொளிதல் _  பிளத்தல் : துளை செய்தல்.
பொள் _ துளை.
பொள்ளல் _  துளைத்தல் : துளை : அம்மை வடு : கொப்புளம் : குற்றம்.
பொள்ளாமணி _  துளையிடாத மணி : மாசற்ற பரம் பொருள்.



பொள்ளுதல் _  துளைத்தல் : கிழிதல்.
பொள்ளை _ தொளை.
பொறாமை _  பிறரது செல்வ வளம் கண்டு மனம் கொள்ளாமை.
பொறி _  வரி : கோடு : புள்ளி: தழும்பு : அடையாளம் : எழுத்து : விருது : முத்திரை : வண்டு : பீலி: தேமல் : பதுமை : விதி : மூட்டு வாய் : மெய் : வாய் : கண் : மூக்கு : செவி என்னும் ஐம்பொறி : எந்திரம் : மதிலுறுப்பு : மரக்கலம் : நெற்றிப்பட்டம் : திருமகள் : பொலிவு : ஊழ் : திரட்சி : முன் வினைப்பயன்.
பொறிதல் _  பறிதல் : தீச்சுடர் : சிதறுதல் : சரிதல் : கலைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:31 pm

பொறித்தல் _  முத்திரையிடுதல் : தெறித்தல் : அழுந்துதல்.
பொறி முதல் _  இந்திரியங்களின் தலைவனாகிய ஆன்மா.
பொறியிலார் _  கீழ் மக்கள்.
பொறியிலி _ அறிவிலி : நற்பேற்றவர்.
பொறிவாயில் _  புலன்.



பொறுக்குதல் _  ஆய்ந்தெடுத்தல்.
பொறுத்தல் _ தாங்குதல் : சுமத்தல் : மன்னித்தல் : தாமதித்தல்.
பொறு _  சாந்தமாய் இரு : பொறு என் ஏவல்.
பொறுப்பு _  பதவி : கடமை :  முக்கியம் : தகுதி : வரி.
பொறுமை _ அடக்கம் : சகித்தல்.


பொறை _  பாரம் : சுமை : மலை : கல் : பூமி : அடக்கம் : பொறுமை : வலிமை : கருப்பம்.
பொறையன் _ சேரன் : தருமராசன்.
பொற்காசு _  பொன் நாணயம்.
பொற்கிழி _ பொன் நிதிக்குவை.
பொற் கூடம் _  இமய மலைக்கு வடக்கேயுள்ள ஏமகூட மலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:31 pm

பொற் கொல்லன் _  தட்டான்.
பொற்கோள் _ வியாழன்.
பொற் சபை _ சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம்.
பொற்சிலை _  பொன்னாலான பொம்மை : மகாமேரு.
பொற் சுண்ணம் _  நறுமணத்தூள்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:31 pm

பொற் சூட்டு _  நெற்றிப்  பட்டம்.
பொற்படி _  பொன்னுலகம்.
பொற் பாதம் _ திருவடி.
பொற் பிதிர் _  பசலை.
பொற்பு _  அழகு : பொலிவு : மிகுதி : ஒப்பனை.



பொற் பூ _  பொன் மலர்.
பொற்ற _ சிறந்த.
பொற்றாமரை _  பொன் மாயமான தாமரை : மதுரைக் கோயிலுள்ள நீர் நிலை.
பொற்றாலம் _ பொன்னாலான தட்டு.
பொற்றாலி _  பொன்னால் செய்யப்பட்ட தாலி: மனைவி.



பொற்றை _  கற்பாறை : சிறுதூறு : காடு.
பொற்றொடி _  தோள்வளை : ஒரு பெண்.
பொற்றோரை _  இடையில் அணியும் பொன் வடம்.
பொன் _  உயர்ந்த உலோக வகை : தங்கம் : இரும்பு : செல்வம்: மேருமலை : பொலிவு : பசலை : ஒளி : அழகு : ஏற்றம் : திருமகள் : வியாழன் : சூரியன்.
பொன் செய்தல் _  நற் செயல் புரிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:32 pm

பொன் மலை _  முப்புரங்களுள் ஒன்று : ஓர் ஊர்.
பொன் மலை வல்லி _  பார்வதிதேவி.
பொன்மனம் _  உயர்ந்த உள்ளம்.
பொன்மை _  பொன்னிறம்.
பொன் வண்டு _  பொன்னிற முள்ள வண்டு.


பொன் வரை _  மாமேருமலை : இமயமலை : அத்தகிரி.
பொன்வாய்ப் புள் _  சிச்சிலிக் குருவி.
பொன் வித்து _ நாக மணல்.
பொன் வில்லி _ சிவபிரான்.
பொன் விழா _  ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம்.


பொன்றக் கெடுதல் _  முற்றவும் அழிதல்.
பொன்றுதல் _  அழிதல் : இறத்தல் : தவறுதல்: பார்வை குறைதல்.
பொன்னகர் _ அமராவதி : சிவலோகம் : தேவலோகம்.
பொன்னஞ்சிலம்பு _  பொன் மலை.
பொன்னம் பலம் _  சிதம்பரத்தில் உள்ள பொற் சபை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:32 pm

பொன்னரி _  கிண்கிணியுள் இடம் பொற் பரல்.
பொன்னவன் _  இரணியகசிபு : வியாழன்.
பொன்னாட்சி _   வியாழக்கிழமை.
பொன்னாடை _  பட்டுக் கரையுள்ள ஆடை.
பொன்னி _ காவிரியாறு : எட்டாம் பாட்டன் : குருதி வடியும் மூக்கு.


பொன்னி நாடன் _  சோழன்.
பொன்னி நாடு _ சோழ நாடு.
பொன்னிலம் _  தேவருலகம்.
பொன்னுக்கு வீங்கி _  கன்னம் வீங்கும் ஒரு நோய்.


பொன்னுடம்பு _   தேவவுடல்.
பொன்னுலகம் _  தேவருலகம்.
பொன்னூசல் _  பொன்னாலாகிய ஊசல்.
பொன்னூல் _  பொற் பூணூல்.
பொன்னெயிற் கோன் _   அருகக் கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:32 pm

பொன்னெழுத்து _  சிறந்த எழுத்து : ஒரு துகில் வகை.
பொன்னேர் _  சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல்.
பொன்னோர் _  தேவர்கள்.
பொன்னோலை _  மகளிர் காதணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:57 pm

போ - போவென்னேவல் ( போ என்று கட்டளையிடல் ) 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:58 pm

போகக்கலப்பை - போக நுகர்ச்சிப் பண்டம்.
போகசிவன் - சதாசிவன்.
போகடுதல் - போகவிடுதல்   :  கழித்தல்.
போகணி - ஓர் ஏனம்.
போகண்டன் - ஐந்தாண்டு தொடங்கிப் பதினைந்தாண்டிற்குட்பட்டவன்.


போகபூமி - விளைநிலம் : சுவர்க்கம் : முப்பத்தாறு தத்துவங்கள்.
போகம் - அனுபோகம் : இன்பம் : கூலி : செல்வம் : தின்றல் : பணயம் : பாம்பின் படம் : பாக்கியம் : பாம்பின் உடல் : 
பாம்பு : பிரயோசன காலம் : வளர்த்தல் : விளைவு : புணர்ச்சி : வியூகவகை : நில அனுபவம்.
போகல் - செல்லல் : உயர்ச்சி : நீளம்.
போகாவலி - கட்டியம் : புகழ்ச்சி.
போகாறு - பொருளைச் செலவிடும் வழி.


போகி - அரசன் : இந்திரன் : ஒரு பண்டிகை : இன்பம் அனுபவிப்போன் : பாம்பு : போகியென்னேவல் : சுக்கிரன் : 
போகசிவன் : நல்லனுபவம் : உடையான் : சிவிகை சுமப்போன்.
போகிகன் - குதிரைக்காரன்.
போகிப்பண்டிகை - தைப் பொங்கற் பண்டிகைக்கு முந்தின நாளில் கொண்டாடும் கொண்டாட்டம்.
போகிய - ஒழிந்த.
போகில் - கொப்பூழ் : பறவை : பூவரும்பு.


போகு - நெடுமை : உயரம் : நீளம்.
போகுடி - ஊரைவிட்டுப் போய்விட்ட குடும்பம் : வாரிசில்லாமல் மறைந்து போனவருடைய சொத்து.
போகுதல் - அழிதல் : செல்லல் : நீளம் : நேர்மை : மாறுதல்.
போகுயர் - நீண்டுயர்ந்த.
போகூழ் - இழத்தலூழ் : இழக்கச் செய்யும் விதி.


போகை - போதல் : செலவு : செல்லல்.
போக்கடி - அழிவு : சுயேச்சை : நட்டம் : போக்கடியென்னேவல் : வழிச்செலவு.
போக்கடித்தல் - அழித்தல்.
போக்கணம் - கட்டுச்சோறு : புகல் : இலச்சை.
போக்கல் - போக்குதல்.


போக்கன் - பரதேசி : வழிச்செல்வோன்.
போக்காடு - சாவு.
போக்காளி - இறந்தவன் : ஒன்றுக்கும் உதவாதவன்.
போக்கி - பின்பு : தவிர.
போக்கிடம் - புகலிடம்.


போக்கியதார் - அனுபவ ஒற்றிக்காரன்.
போக்கியம் - சுக அனுபவத்திற்குரியது : கருமானுபவம் : ஒற்றி உரிமையின் வருவாய் : ஒற்றியுரிமை.
போக்கியல் - சுரிதகம்.
போக்கியார் - கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர்.
போக்கிலி - கதியற்றவன் : நாணயமில்லாதவன் : துட்டன்.


போக்கு - அறையிருப்பு : சாட்டு : நடை : நிலவாசி : மனச்சாய்வு : சாவு : பழக்கம் : போகுதல் : போக்கென்னேவல் : 
ஒரு பொருள் செல்லுந் துவாரம் : வழி : விதம் : நீரோட்டம் : மலம் முதலியவை வெளிப்படுகை : குற்றம் : சிறப்பு : மீட்சி.
போக்குதல் - அழித்தல் : அனுப்புதல் : செலுத்தல் : விடுதல் : போகச் செய்தல் : கொடுத்தல் : இல்லாமற் செய்தல் : 
கழித்தல் : செய்து முடித்தல் : உணர்த்தல்.
போக்குநீக்கு - பாட்டை : புகலிடம் : இடைவெளி : உபாயம்.
போக்தா - அநுபவிப்பவன் : புசிப்பவன்.
போக்துரு - புசிப்பவர் : உண்பவர் : தின்பவர்.


போங்கம் - மஞ்சாடி மரம்.
போங்காலம் - அழிவுகாலம்.
போங்கு - போக்கு.
போசக்கை - மேல்பூச்சு : போலித் தோற்றம்.
போசர் - காவி : வினைக்குடையவர்.


போசனக்குறடா - மிளகாய்.
போசனம் - உணவு : புசித்தல்.
போஞ்சி - கையணி வகை : எலுமிச்சம்பழச் சாற்றினாலாகிய குளிர்ந்த பானவகை.
போடம் - நாடுகள் ஐம்பத்தாறில் ஒன்று.
போடகம் - புண் : கொப்புளிப்பான் : அம்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:58 pm

போடல் - அடித்தல் : எறிதல் : போடுதல் : வழுவவிடல் : வைத்தல் : இடுதல்.
போடி - சம்புநாவல் மரம்.
போடியார் - நிலச்சுவாந்தார்.
போடு - மொட்டை : கோட்டையடுப்பு : பொந்து.
போடுதல் - அணிதல் : இடுதல் : ஈனுதல் : எறிதல் : தரித்தல் : அச்சிட்டு வெளிப்படுத்துதல் : உபயோகித்தல்.


போட்கன் - பொய்யன் : சுணைகேடன்.
போட்டி - எதிரிடை.
போட்டி வழக்கு - இடையறா எதிர் வழக்கு.
போணம் - சோறு.
போணி - முதலாவது செய்யும் வணிகம்.


போதகம் - இளமை : உபதேசம் : காஞ்சிரை : சிங்கக்குட்டி : பசளை : புலிக்குட்டி : மரக்கன்று : யானை : யானைக்கன்று : 
விலங்கின் பிள்ளை : அப்பவருக்கம் : எட்டி.
போதம் - அறிவு : ஞானம் : மரக்கலம் : பரணி நாள் : மனைக்கட்டு.
போதரல் - போகுதல்.
போதரவு - போகை : நயச்சொல் : ஆறுதல் : உபசரணை : கணிசம் : பேணுதல் : செலுத்துகை : இச்சகம்.
போதல் - அகலல் : அழிதல் : உட்படல் : திருத்தியாதல் : நீளப்போதல் : வரல் : செல்லுதல் : பிறத்தல் : நிரம்புதல் : 
நன்கு பயிலுதல் : மிகுதல் : கூடியதாதல் : ஒழிதல் : கழிதல் : மறைதல் : புணர்தல் : முடிவாதல்.


போதருதல் - செல்லுதல் : பெறப்படுதல் : வருதல்.
போதனை - கற்பிக்கை : தூண்டுகை : போதிப்பு.
போதன் - அருகன் : அறிவுடையோன் : நான்முகன்.
போதா - பெருநாரை.
போதாந்தம் - ஞான முடிவு.


போதாந்தன் - கடவுள் : நான் முகன்.
போதாமை - குறைவு : வெறுப்பு.
போதி - அரசமரம் : அறிவு : போதியென்னேவல் : மலை : அறிஞன் : ஞானம் : போதிகைக் கட்டை.
போதிகன் - ஆன்மா.
போதிகை - போதிகைக்கட்டை : தாழ்வாரத் தூண்.


போதிகைத் தூண் - குறுந் தூண்.
போதித்தல் - கற்பித்தல் : அறிவுரை கூறுதல்.
போதிப்பகவன் - புத்தன் : போதித் தலைவன்.
போதிப்பு - போதித்தல் : படிப்பினை.
போதியார் - புத்தர் : பௌத்தர்.


போதிவேந்தன் - புத்தன் : மலையரசன்.
போது - மலரும் பருவத்தரும்பு : மலர் : பொழுது : போதென்னேவல் : செல்வி.
போதுதல் - அகலல் : செல்லல் : தகுதியாதல் : நீளல்.
போதை - மயக்கம் : மூதறிவு.
போத்தருதல் - போய்க்கொண்டு வருதல் : புறப்படவிடுதல் : போதல் : வெளிவருதல்.


போத்திரம் - இடியேறு : கொழு.
போத்திரி - பன்றி.
போத்து - பெற்றம் மான் புலி முதலியவற்றின் பொது :  நீர்வாழ் உயிர்களின் ஆண் : விலங்கு துயிலிடம் : மனக்குற்றம் : 
மயில் எழால் என்பவற்றின் ஆண் : ஓரறிவுயிரின் இளமை : புதுக்கிளை.
போந்த - தகுந்த : பழகின.
போந்தி - பருமை : வீக்கம்.


போந்து - அனுடநாள் : இளம்பனை : பனை : பனங்குருத்து : வந்து : வந்தேன்.
போந்தை - பனை : பனங்குருத்து : அனுடநாள் : வந்தாய்.
போம் - அசைச்சொல் : அச்சம்.
போம்பல் - நீர்க்கடம்பு.
போய்ப்பாடு - புகழ் : பெரிதாயிருக்கை.


போரடி - ஒருவகை விளையாட்டு : கதிரடித்தல்.
போராடல் - போர் புரிதல்.
போரி - எதிரி : திருப்போரூர்.
போரேறு - போர் செய்ய வல்ல காளை : யுத்த வீரன் : செவ்வாய்.
போர் - சதயநாள் : நெற்போர் : பொந்து : போரென்னேவல் : யுத்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:00 pm

போர்க்கதவு - இரட்டைக் கதவு : பல கைகளை இணைத்த கதவு.
போர்க்காளை - புள்ளியமைந்த எருது.
போர்த்தல் - மூடுதல் : தரித்தல் : சூடுதல்.
போர்த்து மூடுதல் - மறைத்துக் கொள்ளுதல்.
போர்ப்பறை - இரண பேரிகை.


போர்ப்பு - போர்த்தல் : போர்வை : நெற்போர்.
போர்மடந்தை - துர்க்கை : வீரலக்குமி.
போர் முகம் - படைமுகம்.
போர்மை - கருணை.
போர்வை - தோல் : மூடுதல் : மெய்க்கவசம் : மேற்போர்வை.


போல - உவமைச் சொல்.
போலி - ஒப்பு : பொய் : வஞ்சகம் : ஒட்டகம் : ஒன்றுபோல் ஒன்று இருத்தல் : கேலி : சாயல்.
போலிநடை - வெளியலங்காரமான நடத்தை : இழிவான நடத்தை.
போல் - உவமை : பதர் : பொந்து : போலென்னேவல் : மூங்கில் : உள்ளீடில்லாதது : வெற்றி : படைவாள்.
போல்மரம் - வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை.


போவர் - உணர்ந்தவர் : கற்றார் : துறைபோனவர் : உணர்த்துவர்.
போவித்தல் - போக்குதல்.
போழம் - மாறுபடும் சொல்.
போழ் - பிளவு : போழென்னேவல் : வார் : துண்டம் : தகடு : பனங்குருத்து.
போழ்தல் - பிளத்தல் : அழித்தல் : அராவுதல்.


போழ்து - காலம் : பொழுது.
போழ்முகம் - பன்றி.
போழ்வாய் - திறந்த வாய் : பொக்கு வாய் : பிளந்த வாய்.
போழ்வு - பிளவு.
போளம் - வாசனைப் பண்டவகை : நிலக்கடம்பு.


போளி - அப்ப வருக்கத்தில் ஒன்று.
போறல் - போலுதல்.
போறை - பொந்து : கிணறு முதலியவற்றின் வங்கு.
போற்றலர் - பகைவர்.
போற்றல் - வணங்கல்.


போற்றார் - பகைவர்.
போற்றி - வணக்கம் : துதித்தல் : புகழ்மொழி.
போற்றிப்பஃறொடை - ஒரு நூல்.
போற்றுதல் - புகழ்தல் : வணங்கல் : உபசரித்தல் : பாதுகாத்தல்.
போனகத்தி - ஊட்டுந்தாய் : சமைக்கிறவள் : வெள்ளாட்டி.

போனகம் - உணவு : அன்னம் : அப்பவருக்கம் : உண்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:00 pm

பெளதிகசரீரம் -பூதவுடல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:00 pm

பௌடிகம் - பதினெண் புராணத் தொன்று : முதல் மறை.
பௌண்டரம் - வீமசேனனுடைய சங்கு.
பௌண்டிரம் - பவுண்டர நாடு.
பௌதிகசாத்திரம் - இயற்கைத் தத்துவ நூல்.
பௌதிகதீட்சை - உலோக தருமினி.


பௌதிகம் - பூத சம்பந்தமானது : உடல் : உலகம் : மருநெல்லி.
பௌதிகன் - சிவன்.
பௌதீகம் - உலகம்.
பௌத்தம் - புத்தமதம்.
பௌத்தன் - புத்த சமயத்தான்.


பௌத்திரம் - தூய்மை.
பௌத்திரர் - பேரர் : தூய்மையானவர்.
பௌமம் - நிலத்திற் பிறப்பன : பூமி சம்பந்தமானது.
பௌமன் - செவ்வாய் : அங்காரகன்.
பௌமி - சீதை : பூமியின் புதல்வி.


பௌரகம் - நகர்சூழ் சோலை.
பௌரணமி - முழுத்திங்கள் நாள்.
பௌரணை - பூரணை : மரக்கன்று.
பௌரம் - பட்டினம் : நகரசம்பந்தமானது.
பௌரவர் - குருகுல வேந்தர் : பூருவழியிற் பிறந்தவர்கள்.


பௌரண் - நகரவாசி.
பௌராணிகமந்திரம் - பிரணவம் இல்லாத மந்திரம்.
பௌராணிகம் - புராண மதம்.
பௌராணிகன் - புராணக் கொள்கையுடையவன் : புராணஞ் சொல்பவன்.
பௌரி - பெரும் பண்வகை.


பௌரிகன் - குபேரன்.
பௌருஷம் - ஆண் தகைமை.
பௌலோமி - புலோமசை : புலோமசைமகள் : சசி : இந்திராணி.
பௌவம் - உப்பு : கடல் : நீர்க்குமிழி : நுரை : பூரணை : மரக்கணு : ஆழம்.
பௌளி - ஓர் இராகம் : பூபாளன் மனைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:01 pm

ம - இயமன் : இறந்தகால விடை நிலை[உ-ம்]என்மர் : ஓர் எழுத்து : ஒரு மந்திரம் : காலம் : சந்திரன் : சிவன் : நஞ்சு : நேரம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:02 pm

மகரயாழ் - நால்வகை யாழினொன்று.
மகரயூகம் - ஒருவகைப் படை வகுப்பு.
மகரவாகனன் - வருணன்.
மகரவாய் மோதிரம் - நால் விரல் அணி.
மகராவாழை - காட்டு மல்லிகை  :  மருகு.


மகராகரம் - கடல் : மகராங்கம்.
மகராசன் - அரசன்.
மகராயனம் - சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங் காலம்.
மகராலயம் - கடல்.
மகரி - கடல்.


மகரிகை - தோரணம் : மகரதோரணம் : மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்கு செறி என்னும் அணிகலம் : தந்தப் பூண் : 
மகரவடிவான வெற்றிலைப் பெட்டி.
மகருதம் - கொடிவேலி.
மகலோகம் - மேலேழ் உலகில் ஒன்று.
மகவதி - இந்திராணி.
மகவன் - இந்திரன்.


மகவான் - ஆயிரங்கண்ணன்.
மகவாட்டி - குழந்தைப் பிள்ளைக்காரி : புத்திரப் பேறுள்ளவள்.
மகவான் - இந்திரன் : சிவன் : மகப் பேறுடையவன் : யாகம் செய்பவன்.
மகவு - கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை : மகன்.
மகளிர், மகளீர் - பெண்கள்.


மகளிர்பருவம் - பேதை : பெதும்பை : மங்கை : மடந்தை : அரிவை : தெரிவை : பேரிளம் பெண்.
மகன் - ஆண்பாற் பிள்ளைப் பொது : புதல்வன் : கணவன் : குழந்தை : சிறந்தோன் : வீரன் : புத்திரன்.
மகன்மை - ஆண்தன்மை.
மகன்றில் - ஆண் பெண்களுள் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத ஒரு நீர்வாழ் பறவை.
மகா - பெருமை : மிகுதி : மேன்மை இவற்றை விளக்குமோர் உபசருக்கம்.


மகாகதம் - காய்ச்சல்.
மகாகவம் - பெரும்போர்.
மகாகாயம் - யானை : பெருவெளி.
மகாகிரியம் - ஒட்டகம்.
மகாசம்பு - பெருநாவல்.


மகாசூதம் - போர்ப்பறை.
மகாசேனன் - சேனாபதி : புத்தன் : முருகன்.
மகாசைவன் - சிவதீட்சை பெற்ற பிராமணன்.
மகாதசை - சாதகனுக்கு ஒரு கிரகத்தின் நடப்புக் காலம்.
மகாதலம் - கீழேழ் உலகின் ஒன்று.


மகாதனம் - பொன் : வேளாண்மை : தூபம்.
மகாதாது - பொன்.
மகாதுந்துபி - போர்ப்பறை.
மகாதுருமம் - அரசு.
மகாதேவன் - கடவுள் : சிவன் : தெய்வம் : வருணன்.


மகாதேவி - துர்க்கை : பார்வதி.
மகாதோரை - ஓர் எண்.
மகாநடன் - சிவன்.
மகாநதி - கங்கை.
மகாநந்தசாகரம் - பேரின்பக் கடல்.


மகாநந்தன் - கடவுள்.
மகாநந்தை - கள் : ஓர் ஆறு.
மகாநவமி - சரசுவதி பூசை நிகழும் நவராத்திரியின் இறுதி நாள்.
மகாநகம் - சுரபுன்னை மரம்.
மகாநாதம் - சங்கு : சிங்கம் : பேரொலி : முகில் : யானை : வாத்தியக் கருவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:03 pm

மகாநித்திரை - இறப்பு.
மகாநிம்பம் - பூவரசு : பெருவேம்பு.
மகாநீலம் - மரகதம்.
மகாநேமி - காகம்.
மகாந்தகை - அறுபத்து நான்கு சத்தி பீடங்களில் ஒன்று : இது மகேந்திரத்திலுள்ளது.


மகாபட்சி - ஆந்தை.
மகாபதுமம் - குபேரன் நவநிதியில் ஒன்று : பத்துக் கோடாகோடி : வெண்டாமரை.
மகாபத்திரம் - பனைமரம்.
மகாபத்திரை - கங்கை.
மகாபலம் - கொளிஞ்சி : தூதுவளை : தெங்கு.


மகாபிரதானி - முதல் மந்திரி.
மகாபிரளயம் - நானூற்று முப்பத்திரண்டு கோடி ஆண்டு முடிவில் வரும் அழிவு : பிரமகற்பத்தழிவு.
மகாபூரி - ஆயிரங்கோடி கோடி கோடாகோடி.
மகாபோதி - கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம்.
மகாமகிமை - பெரும் பெருமை.


மகாமசானம் - காசி நகரம்.
மகாமந்திர மூர்த்திகள் - ஏழரைக் கோடியினரான உயர்தர ஆன்மாக்கள்.
மகாமாயி - துர்க்கை.
மகாமாயை - ஐந்து மாயையில் ஒன்று : பார்வதிதேவி : சுத்தமாயை.
மகாமாரி - கொள்ளை நோய் : துர்க்கை.


மகாமுகம் - முதலை.
மகாமுனி - அகத்தியன் : புத்தன் : வசிட்டன் : வியாசன்.
மகாமேதை - பேரறிவு : பேரறிவாளன் : மருள் ஊமத்தை.
மகாமேரு - பொன்மலை.
மகாரசதம் - பொன்.


மகாரசம் - ஒரு மரம் : கஞ்சி.
மகாரதம் - பதினோராயிரந் தேருக்கு முதல் தேர் : பேராசை.
மகாரதன் - பதினோராயிரந்தேர்க்காரருடனே பொருவோன் : பதினோராயிரந் தேருக்குத் தலைவன்.
மகாராசன் - அதிபதி : அரசன் : கவலையற்றவன் : குபேரன் : சமணகுரு : செல்வம் உடையோன்.
மகாராட்டிரம் - ஒரு நாடு : ஒரு மொழி.


மகாரோகம் - பெருநோய்.
மகாரௌரவம் - ஒரு நரகம்.
மகார் - மக்கட்பன்மை.
மகாலயம் - கோயில் : பிரமலோகம்.
மகாலயன் - கடவுள் : நான்முகன்.


மகாவற்புதம் - ஒரு பேரெண்.
மகாவாக்கியம் - தத்துவமசி : உபநிடதங்களுள் ஒன்று.
மகாவிந்தம் - ஓர் எண் : நளன் நகரம் : வைகுந்தம்.
மகாவிந்து - அப்பிரகம்.
மகாவிரதம் - வீரசைவம் : சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று : சைன விரதவகை.


மகாவிலயம் - ஆகாயம் : இதயம் : குகை : நீர்ச்சாடி.
மகாவீரன் - அக்கினி : கலுழன் : திருமால் : வீரன்.
மகானுபாவன் - பேரறிஞன்.
மகி - பூமி : பசு.
மகிடமர்த்தனி - துர்க்கை.


மகிடம் - எருமைக்கடா.
மகிடன் - மகிடாசுரன்.
மகிடாசுரமர்த்தனி - துர்க்கை.
மகிடி - பாம்பாட்டியின் ஊது குழல் : வெளிக்காணாமல்  புதைத்தும் : புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டு வகை.
மகிணன் - மகிழ்நன் : கணவன் : மருதத் தலைவன் : சுவாமி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:03 pm

மகிதம் - சிவன் சூலம் : மேன்மை.
மகிதலம் - பூமி.
மகிந்தகம் - எலி : கீரி.
மகிபதி, மகிபன் - அரசன்.
மகிமா - மகத்துவம் : மிகவும் பருத்தல்.


மகிமை - கனம் : பெருமை.
மகிலை - பெண் : வெறிபிடித்தவள்.
மகிழம் - மகிழமரம்.
மகிழ் - மகிழமரம் : களிப்பு : மகிழென்னேவல் : இன்பம் : குடிவெறி : மது.
மகிழ்ச்சி - இன்பம் : களிப்பு.


மகிழ்ச்சிவினை - நல்வினை.
மகிழ்தல் - களித்தல் : உவகையெய்துதல்.
மகிழ்நன் - கணவன் : மருத நிலத் தலைவன்.
மகிழ்வு - இன்பம்.
மகிளம் - பூவிதழ்.


மகீ - ஓராறு : பசு : பூமி.
மகீதரம் - மலை.
மகீதலம் - நிலம்.
மகீபதி, மகீபன் - அரசன்.
மகீருகம் - தாவரம்.


மகீலதை - நாங்கூழ்.
மகுடம் - சல்லடைக்கொப்பு : சிகரம் : சிவாகமம் இருபத்தெட்டினொன்று : தலையணி : மறைவு : முடி : முடியுறுப்பு :
பறைவகை : மணிமுடி : தலைப்பாகை வகை : கட்டுரைத் தலைப்பு : மாதர் காதணி : மத்தள விளிம்பு.
மகுடவர்த்தனர் - முடிமன்னர்.
மகுடாபிடேகம் - முடிசூட்டுச் சடங்கு.
மகுரம் - கண்ணாடி : தண்டசக்கிரம் : பளிங்கு : பூ மொட்டு.


மகுலம் - மகிழமரம்.
மகுளி - ஓசை : எட்பயிர் நோய் : செடிகள் நீரின்மையால் வாடி உறும் செந்நிறம்.
மகூலம் - மலர்ந்த பூ.
மகேசன் - சிவன்.
மகேசுர வடிவம் - இலிங்க வடிவொழிந்த சிவமூர்த்தங்கள்.


மகேந்திரசாலம் - ஒரு மாய வித்தை.
மகேந்திரம் - ஒரு நகரம் : ஒரு மலை.
மகேந்திரன் - இந்திரன்.
மகைசுவரியம் - பெருஞ்செல்வம்.
மகோததி - இந்திரன் : கடல்.


மகோதயம் - ஒரு புண்ணியகாலம் : பெருமை : வீடுபேறு : மேன்மை : விடுதல்.
மகோதரம் - பெருவயிற்று நோய் : பூதம்.
மகோதரன் - இராவணன் அமைச்சர்களில் ஒருவன்.
மகோதை - கொடுங்கோளூர்.
மகோற்சவம் - பெருவிழா.


மகௌடதம் - சுக்கு : திப்பிலி : வசம்பு.
மக்கட் புத்தி - குறும்புத்தனம்.
மக்கடித்தல் - அழித்தல்.
மக்கட்கதி - மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு.
மக்கட்டம் பிடித்தல் - இழுபறிப்படுதல்.


மக்கட்டாயம் - மகன் முறையாய் வரும் தாய உரிமை.
மக்கட் பரப்பு - மன்பதை.
மக்கம் - எருக்கு : ஒரு தேயம் : நெய்வார்தறி : முகம்மதுநபி பிறந்த இடம்.
மக்கல் - உக்குதல்.
மக்களித்தல் - சறுக்குதல் : மூட்டுப் பிசகுதல் : குணமடைந்த நோய் திரும்புதல் : உடற்சந்து பிசகுதல் : மாற்றுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:04 pm

மக்கள் - மனிதர்.
மக்கனம் - ஆழ்தல் : கேலி : மூழ்குகை : அவமானம்.
மக்கன் - பலவான்.
மக்கி - குளிகை வகை : ஈவெண் பார்த்தல்.
மக்கு - மந்தகுணம் : அறிவீனன் : அடைமண்.


மக்குதல் - உக்கியழித்தல்.
மங்கள கௌசிகம் -  ஓர் இராகம்.
மங்கலசண்டி - துர்க்கை.
மங்கல சூத்திரம் - திருமங்கலியச் சரடு : மங்கலநாண்.
மங்கலப்பிரதை - மஞ்சள்.


மங்கல மொழி - நன்மை பயக்குஞ் சொல்.
மங்கலம் - கலியாணம் : சுபம் : சேகரிப்பு : சோபனம் : தருமம் : பொலிவு : வாழ்த்து : ஆக்கம் : நன்மை : தாலி : நற்செயல் :
சிறப்பு : மங்கல வழக்கு : தகனப்பலி.
மங்கலவண்ணம் - மங்கலக் குறியான வெண்ணிறம்.
மங்கல வயினி - ஆலத்தி.
மங்கலவள்ளை - ஒரு பிரபந்தம் : உயர்குல மங்கையை 9 வெண்பாவால் வகுப்புறப் பாடும் பிரபந்தம்.


மங்கலவாரம் - செவ்வாய்க் கிழமை.
மங்கல வினைஞன் - நாவிதன்.
மங்கலவெள்ளை - சந்தனக் குழம்பு : பிரபந்த வகை.
மங்கலவேள்வி - திருமணத்தில் வளர்க்கபடும் ஓமத்தீ.
மங்கலன் - செவ்வாய் : நாவிதன்.


மங்கலியகம் - சிறுகடலை.
மங்கலியப் பெண்டுகள் - சுமங்கலிகளாய் இறந்த மகளிர் பொருட்டுச் செய்யுஞ் சடங்குக்குரிய மகளிர்.
மங்கலியம் - தாலி.
மங்கலை - அம்பட்டத்தி : இலக்குமி : உமை : கற்புடையாள் : சுமங்கலி.
மங்கல் - ஒளியின்மை : கெடுதல் : தோற்றக் குறைவு : இருள் : நேரம் : கண் மறைப்பு.


மங்களம் - மங்கலம்.
மங்களாசரணை - மங்களவழிபாடு : அது : வாழ்த்து : வணக்கம் : வத்து நிச்சேதம் என மூவகைப்படும்.
மங்களா சாசனம் - வாழ்த்து : நன்மையை வேண்டுகை : பெரியோர்கள் வழிபாடு : ஆழ்வாராதியரால் துதிக்கப்பெறுகை.
மங்களாதேவி - திருமகள்.
மங்கு - கேடு : சாடி : வங்கு.


மங்குங்காலம் - மரணவேளை.
மங்குசனி - ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுச் சனி.
மங்குதல் - ஒளி மங்குதல் : கெடுதல் : தோற்றங் குறைதல் : நிறங்குன்றுதல் : வாட்டமுறுதல் : சாதல்.
மங்குரம் - பளிங்கு.
மங்குல் - ஆகாயம் : இரவு : இருள் : மேகம் : மூடுபனி : திசை : விண்.


மங்குளம் - இருள் : கலக்கம் : மந்தாரம்.
மங்கை - கற்றாழை : பதின்மூன்று வயதுப் பெண் : பெண்.
மங்சைபங்கன் - சிவன் : மாதிருக்கும் பாதியன்.
மசகம் - கொசுகு : நீர்த்துருத்தி : மயக்கம் : மயிர்.
மசகாரி - கொசுகுவலை.


மசகி - அத்திமரம்.
மசகு - நடுக்கடல் : திசை தெரியாது ஆழ்ந்து அகன்ற இடம் : வண்டிக் கீல் : வண்டி அச்சிலிடும் மை.
மசக்குதல் - மயக்குதல் : குழப்புதல் : கசக்குதல்.
மசக்கை - சூதகக்கட்டு : கருப்பிணிகட்கு மயக்க முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய்.
மசங்குதல் - மயங்குதல் : ஒளி : குறைதல் : கசங்குதல்.


மசண்டை - அந்திநேரம் : கருகு மாலை.
மசம் - அளவு : கொசுகு : கோபம் : தொனி.
மசரதம் - பேய்த்தேர்.
மசனம் - அளத்தல் : வருத்தல்.
மசால் - தீவட்டி : மசாலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:05 pm

மசானம் - சுடுகாடு : இடுகாடு.
மசி - எழுதும் மை : மசியென்னேவல் : மசகு.
மசிகம் - பாம்பளை : புற்று.
மசிதல் - வழுவழுப்பாயிருத்தல் : விட்டுக் கொடுத்தல்.
மசித்தல் - குழையச் செய்தல்.


மசிபதம் - இறகுப் பேனா.
மசியல் - கடைந்து செய்த உணவு முதலியன.
மசிர் - மயிர் : அறுகு.
மசுக்கரம் - மூங்கில்.
மசுரம் - கடலை.


மசூரம் - மூட்டுப் பூச்சி.
மசோதா - அசல் பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல் : சட்டமாவதற்கு முன் சட்ட சபையிற் கொண்டு வரப்படும் சட்ட நகற் குறிப்பு.
மச்சதேசம் - விராடபுரம்.
மச்சப்பொன் - மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன்.
மச்சரம் - பொறாமை : போட்டி.


மச்சம் - தேசம் ஐம்பத்தாறில் ஒன்று : பதினெண்புராணத்தொன்று : மீன் : மீனவிராசி : மாற்று நிதானமறிய வெட்டி வைத்திருக்கும்
பதிற் பொன் : சுவடு : உடம்பில் உண்டாம் புள்ளி.
மச்சாவி - மதினி.
மச்சி - பூனைக்காலி : மச்சுனி.
மச்சிகை - மோர் : ஈ.
மச்சு - மட்டமாகச் செங்கல் குத்திப் பாவிய மேற்றளம் : குற்றம் : மேல் நிலை : மஞ்சு : மேல் மாடம் : உத்தர மட்டத்தின்
மேலுள்ள பலகைத் தடுப்பு.


மச்சை - உட்சுரம் : மறு : மீனம்பர் : மூளை : அம்பு எய்தற்குரிய குறி : மச்சம் : சத்த தந்துவில் ஒன்று.
மஞ்சகம் - கட்டில் : மேடை.
மஞ்சட்காப்பு - இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு : அரைத்த மஞ்சள் விழுது : ஓலைக்கு மஞ்சட் பூசுதல்.
மஞ்சட்பால் கொடுத்தல் - சுவீகாரஞ் செய்தல்.
மஞ்சணம் - பற்பொடி.


மஞ்சணை - எண்ணெய்க் குங்குமம்.
மஞ்சம் - கடல் : கட்டில் : சப்பரம் : ஆசனமிடுதற்குரிய பீடம்.
மஞ்சரம் - முத்து.
மஞ்சரி - ஒரு பிரபந்தம் : தளிர் : நாயுருவி : பூங்கொத்து : பூத்திரள் : பூமாலை : மலர்க்காம்பு : முத்து : ஒழுக்கம் : மஞ்சரிப்பா.
மஞ்சளாலாத்தி - திருட்டி பரிகாரமாக மஞ்சள் நீரால் எடுக்கும் ஆலாத்தி.


மஞ்சள் - அரிசனம்.
மஞ்சனச்சாலை - நீராடும் இடம்.
மஞ்சனநீர் - அபிடேக நீர்.
மஞ்சனம் - குளித்தல் : முழுகல்.
மஞ்சனி - வேலிப்பருத்தி : பெண்.


மஞ்சன் - மைந்தன் : ஆண்மகன் : மைத்துனன்.
மஞ்சா - இலைக்கள்ளி.
மஞ்சாடி - இரண்டு குன்றிமணியெடை : மரவகை : வயிர நிறை : செவ்வள்ளி : நுணாப்பட்டை.
மஞ்சாரி - கஞ்சாங்கோரை.
மஞ்சாளி - வயிரம் நிறுக்கும் நிறை.


மஞ்சி - சுங்கம் வாங்கி : சிறு வரம்பு : படகு : பேடகம் : பேழை : மரல் நார் : சணல் : குறுமாடி : பனி.
மஞ்சிகம் - தாளிக்கொடி : பேடகம்.
மஞ்சிகன் - நாவிதன்.
மஞ்சிகை - காதணி : குண்டலம் : கையாந்தகரை : தாளிக்கொடி : பேழை : வேசி : கொட்டாரம் : தொம்பை : பெட்டி.
மஞ்சிபலை - வாழை.


மஞ்சிமம் - அழகு : சுந்தரம் : மேனி : பொலிவு.
மஞ்சிரம் - காலாழி.
மஞ்சிலை - செங்கல்.
மஞ்சில் - முது வரப்புவழி : பாதையில் தங்கிச் செல்லும் கெடி.
மஞ்சிவிரட்டு - சல்லிக்கட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:06 pm

மஞ்சிறு - கையாந்தகரை.
மஞ்சீரம் - வண்ணார் சேரி : காற்சிலம்பு.
மஞ்சு - அழகு : ஆபரணம் : இளமை : கட்டில் : களஞ்சியம் : பனி : முகடு : முதுகு : மேகம் : யானை முதுகு : வலி :
வெண்மேகம் : மூடுபனி.
மஞ்சுகம் - கொக்கு : அன்னம்.
மஞ்சுவாணி - இந்திராணி : கௌரி.


மஞ்சுளம் - அழகு : மிருது.
மஞ்சூரம் - கடலை.
மஞ்சூர் நகல் - சரிபார்த்து ஒப்புக் கொண்ட நகல்.
மஞ்ஞை - மயில் : கேகயம் : சிகி : மயூரம்.
மடக்கடி - கோணல் : சமமின்மை : அபாயம் : தந்திரம் : வலைக்குட்படுத்துகை : சூது வார்த்தை.


மடக்கம் - அடக்கம் : முடக்கு : வளைவு.
மடக்கல் - அடக்கல் : தடுத்தல் : வளைத்தல் : ஒடுக்கல் : ஊழிக்காலம் : இயமன் : சிங்கம் : இடி.
மடக்கியல் - சிரிதகம்.
மடக்கு - ஓரலங்காரம் : ஓர் ஏனம் : பேரகல் : மடக்கென்னேவல் : மடங்கடிப்பு : முடக்கு : மூலை முடுக்கு : செய்யுளில்
சொல் சீர்கள் பொருள் வேறுபட்டு மாறி மாறி வருதல் : திருப்பு : வளைவு : மடிப்பு : மடக்குக் கத்தி : தடை : தாறுமாறு :
நில அளவு வகை : ஒரு தடவையில் உட்கொள்ளக் கூடிய நீர்.
மடக்குப் பிடிக்கத்தி - எழுத்தாணி.


மடக்குவரி - இரண்டாம் போகத்தின் மேல் விதிக்கும் வரி : வரி மேல் வரி.
மடக்கொடி - பெண்.
மடங்கக்கூறுதல் - திரும்பக் கூறுதல்.
மடங்கடித்தல் - தோற்கச் செய்தல்.
மடங்கலர் - பகைவர்.


மடங்கல் - இடி : இயமன் : காலன் : கீழ்ப்படிதல் : சிங்கம் : தாழை : மீளல் : முடங்கல் : யுகமுடிவு : வடவாமுகாக்கினி :
நோய் : வளைகை : கோணம் : மழுங்கிப் போகை : அடக்கம் : ஒடுக்கம் : முடிவு : முற்றி வளைந்து சாய்ந்த கதிர்.
மடங்கலூர்தி - பராசக்தி.
மடங்கற்கொடியோன் - வீமன்.
மடங்கு - அளவு : இழைக் கயிறு : பங்கு : மடங்கென்னேவல் : நோய்.
மடங்குதல் - வளைதல் : மீளுதல் : திரும்புதல் : செயலறுதல் : கீழ்ப்படிதல் : முடங்கல்.


மடத்தல் - அறியாமையாயிருத்தல்.
மடத்தனம் - அறியாமை.
மடநடை - பதவிய நடை.
மடநல்லார் - பெண்கள்.
மடந்தை - பெண்.


மடப்பம் - அரண்மனையிற் பெண் : ஐந்நூறு சிற்றூர்களுக்குத் தலைமையாயுள்ள ஊர் : மருத நிலத்தூர்.
மடப்பிடி - பெண் யானை.
மடப்புறம் - மடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
மடமை - அறிவின்மை : கபடின்மை.
மடம் - அறியாமை : அழகு : மென்மை : அறப்புறம் : இரதம் : கோயில் : இணக்கம் : காவடி : சத்திரம் : மடமை : முனிவர்
வாசம் : இளமை : கொளுத்தக் கொண்டு கொண்டதுவிடாமை.


மடலூர்தல் - பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் : இஃது அகப்பொருட்டுறையில் ஒன்று.
மடல் - ஈந்து கமுகு தாழை தெங்கு பனை முதலியவற்றின் மடல் : காதின் மடல் : கைச்சீப்பு : சிறு வாய்க்கால் : பனை 
மட்டைக்கங்கு : பூவிதழ் : நீற்றுக் கலம் : தோண் மேலிடம் : கண்ணிமை : கை : பனை மடலைப் பரியாக்கி ஊர்வது.
மடவரல் - மடப்பம் : இளம் பெண்.
மடவளாகம் - கோயிலைச் சூழ்ந்துள்ள தெரு.
மடவன் - அறிவிலான் : மூடன்.


மடவாயம் - மகளிர் விளையாட்டுக் கூட்டம்.
மடவார் - அறிவீனர் : பெண்கள்.
மடவியர் - பெண்கள்.
மடவை - கடவுமரம் : துடுப்பு : கவைக்கால் : தணக்கு : மீன் வகை.
மடவைக்கெண்டை - ஒருவகை மீன்.


மடன் - அறியாமை : அறிவிலான் : உன்மத்தன்.
மடன்மா - மடற் குதிரை.
மடாதிபத்தியம் - கோவில் அல்லது மடத்தின் நிர்வாகம்.
மடி - அடங்கல் : கேடு : சீலை : சோம்பல் : அறை : சோறு : தாழை விழுது : நோய் : பொய் : மடங்குதல் : மடிந்தது : 
மடியென்னேவல் : வயிறு : வலையினருகு : கொங்கை மேடு : மடித்த தொடையின் மேற்பாகம் : ஆடை : தீட்டில்லா நிலை :
அடக்கம் : துர்க்கந்தம்.
மடிக்குதல் - சூழ்ச்சியாய் வெல்லுதல் : மடக்குதல் : முடக்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:06 pm

மடிச்சீலை - ஆசார வஸ்திரம் : பணப்பை.
மடிதல் - கெடுதல் : சாதல் : மடங்குதல் : முயற்சியறுதல் : நுனி மழுங்குதல் : தலை சாய்தல் : வீழ்தல் : சுருங்குதல் : வாடுதல்.
மடித்தல் - மடிக்குதல் : மடக்குதல் : வளைத்தல் : அழித்தல்.
மடிபிடித்தல் - நிர்ப்பந்தித்தல் : வழக்காடுதல்.
மடிப்பு - மடக்கு : மடித்திருப்பது : மோசம் : வஞ்சகம்.


மடிப்புக்காரன் - தீது செய்வோன் : வஞ்சகன்.
மடிப்புப் பேச்சு - கவர்பொருள்படும் சொல்.
மடிப்பை - அடைப்பை.
மடிமை - சோம்பல்.
மடியிறக்குதல் - ஈனுதற்கு முன் பசு மடி பருத்தல்.


மடியுறை - விம்மிதம்.
மடிவித்தல் - மடியச் செய்தல்.
மடிவு - கேடு : சாவு : சோம்பு : வறுமை : மடக்கம் : மடிதல் : உற்சாகக் குறைவு : அழிவு.
மடிவை - தழை.
மடு - ஆற்றினுட் பள்ளம் : குளம் : மடுவென்னேவல் : நீர்நிலை.


மடுவங்கரை - குளக்கரை.
மடுத்தல் - உண்ணுதல் : தீ மூட்டுதல் : இடையூறெதிர்தல் : நிறைத்தல் : சேர்த்தல் : அடக்கிக் கொள்ளுதல் : அமிழ்த்துதல் :
குத்துதல் : விழுங்குதல் : மோசம் பண்ணுதல் : மயக்குதல்.
மடுப்பு - மடிப்பு : அடைவு : நிறைப்பு : ஏமாற்றம் : மோசஞ் செய்கை : கேடு : உண்ணுதல் : சேர்த்தல் : அடக்கிக் கொள்ளுதல் :
ஊட்டுதல் : தீமூட்டுதல் : அமிழ்த்துதல் : மயக்குதல் : செலுத்துதல் : இடையூறு ஏற்படுதல் : கூனல் : ஒட்டுவாய்.
மடை - ஆபரணக் கடைப் பூட்டு : சோறு : துவாரம் : தேவதைகட்குப் படைப்பது : சமையல் வேலை : மதகுப் பலகை :
ஆயுதமூட்டு : ஆணி : நீர் பாயும் மடை : மதகு : வாய்க்கால் : நீரணை.
மடைகோலுதல் - வயலுக்கு நீர் பாய்ச்சுதல்.


மடைக்கடல் - முகத்துவாரமுள்ள கடல்.
மடைத்தலை - மடைமுகம்.
மடைத்தனம் - அறிவீனம்.
மடைத்தொழில் - சமையல் வேலை.
மடைநூல் - பாக சாத்திரம்.


மடைப்பள்ளி - கோயில் முதலியவற்றின் அடுக்களை : ஒரு சாதி : அரண்மனை உக்கிராணத் தலைவன்.
மடையன் - அறிவிலான் : சமையற்காரன்.
மடியான் - ஒரு பறவை.
மட்கல் - அழுக்கேறல் : ஒளிமழுங்கல்.
மட்குகை - மண்குகை : மழுங்குதல்.


மட்குதல் - ஒளிமழுங்குதல் : வலி குன்றுதல் : மயங்குதல் : அழுக்கடைதல் : அழிதல்.
மட்டக்கோல் - கொத்து வேலைக் கருவிகளில் ஒன்று : மட்டப் பலகை.
மட்டப்பலகை - சமனறி கருவி.
மட்டம் - அளவு : எல்லை : உத்தேசம் : ஒப்புரவு : கரும்பு நெல்வாழை முதலியவற்றின் கன்றுகள் : வராதிருத்தல் : கேடகம் :
சமம் : வாலயானை : வாலக் குதிரை : அளவுகோல் : ஒப்பு : சிறுமை : சிறு குதிரை : சமஎண் குறைவு.
மட்டறிதல் - அளவறிதல்.


மட்டன் - மூடன் : மடையன் : அறிவிலி.
மட்டாயுதம் - வாள்.
மட்டி - ஒழுங்கின்மை : கடன்மட்டி : படைக்கலம் : மட்டியென்னேவல் : மதிகேடன் : மூடன் : மக்கு : பரும்படி : மட்டிக்காரை :
சிப்பிமீன் : ஆய்தல் : மண்டலிக்கை.
மட்டித்தல் - பூசுதல் : மட்டுக்கட்டுதல் : மண்டலித்தல் : முறித்தல் : அழித்தல் : பிசைதல்.
மட்டிலை - பச்சிலை.


மட்டு - அவதி : அளவு : எல்லை : கள் : மிதம் : தேன் : மணம்.
மட்டுக்கோணம் - நேர்கோணம்.
மட்டுப்படுத்தல் - அளவுபடுத்தல்.
மட்டை - தென்னை பனை முதலியவற்றின் மட்டை : மடல் : தேங்காயின் மேல்தோடு : வெற்றிலைக் கட்டு : பந்தடிக்கும் மட்டை :
உடற்குறை : ஒரு பாம்பு : மூடன்.
மட்பகை - கட்கலம் அறுக்குங் கருவி : குயவன் : மட்பகைவன்.


மணங்கல் - பானை : மிடா.
மணங்கு - ஆட்டுக்குட்டி : ஒரு நிறை : இருவாட்சி : மடங்கு.
மணத்தல் - கலத்தல் : பொருந்துதல் : கமழ்தல் : மணம்புரிதல் : கூடுதல் : வேட்டல் : நேர்தல் : விளங்குதல் : புணர்தல் :
அணைத்தல் : கூடியிருத்தல்.
மணப்பு - வாசனை : நறுமணம் : சாரம் : புணர்ச்சி : செல்வமுடைமை.
மணம் - திருமணம் : கூட்டம் : மகிழ்ச்சி : வாசனை : கூடுகை : எண்வகை விவாகம் : நறுநாற்றம் : மதிப்பு : நன்னிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 3:07 pm

மணம்பிடித்தல் - எழில் பிடித்தல் : வாசனை பிடித்தல் : மோப்பம் பிடித்தல் : வாசனையால் இழுக்கப் படுதல்.
மணலி - மருக்கொழுந்து : கீரை : நெல்.
மணலேறு - முத்துக்குற்ற வகை.
மணல்வாரி - மண்தோண்டி : நெல் வகை : புல் வகை : சின்னம்மை வகை.
மணவணி - திருமணக் கோலம்.


மணவறை - திருமண மண்டபம்.
மணவறைத் தோழன் - மாப்பிள்ளைத் தோழன்.
மணவாட்டி - மனைவி : மணமக்கள்.
மணவாளன் - கணவன் : மணமகள்.
மணவியது - மணமுடையது.


மணவினை - திருமணச் சடங்கு.
மணவை - அடுப்பு.
மணவோலை - விவாக அழைப்புப் பத்திரிகை.
மணற்கூகை - தவளை.
மணற்பாக்கு - கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு.


மணாட்டி - மனைவி.
மணாட்டு - மணமகளாகும் நிலை.
மணாட்டுப்பெண் - மருமகள்.
மணாளன் - கணவன்.
மணி - அடிக்கும் மணி : அழகு : ஆட்டின் களகம்பளம் : இரண்டரை நாழிகை கொண்ட நேரம் : உருத்திராக்கம் : ஏறி மணி
ஓசை : கண்விழி : கறுப்பு : சங்குமணி முதலியன : தாமரைக் கொட்டை : துளசி : நவமணிப் பொது : நன்மை : நீர்க்கலசம் :
நெல் முதலிய தானியம் : பருக்கைக்கல் : பறவையின் கழுத்தாரம் : பெண்குறியின் ஓர் உறுப்பு : பொன் முதலியவற்றாலாகிய
மணி : மருந்துக்கல் : முத்து : யானை மணி : இரத்தினம் : நீலமணி : சிறந்தது : உருண்டை : ஆண் குறியின் நுனி.


மணிகண்டன் - சிவன்.
மணிகம் - நீர்க்குடம்.
மணிகன்னிகை - காசியில் உள்ள ஒரு தீர்த்தம்.
மணிக்கயிறு - கண்டாமணி இழுத்தடிக்குங் கயிறு : முடிச்சுள்ள சாட்டைக் கயிறு : முத்துவடம்.
மணிக்காலறிஞர் - இரத்தினங்களின் குணாகுணங்களை யறிந்த வணிகர்.


மணிக்காற்பள்ளி - அரசர்க்குரிய சிவிகை வகை.
மணிக்குடர் - சிறுகுடர்.
மணிக்கூடு - மணிதூங்குமாடம் : கடிகாரம் அமைந்த கோபுரம் : வட்டில் : சாயப்பூடு வகை.
மணிதனு - வானவில்.
மணித்தீவம் - பெண்கள் மாத்திரம் வாழும் ஒரு தீவு.


மணிபூரகம் - ஆறு ஆதாரங்களுள் ஒன்று : அது நாபித்தானத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்து இதழ்த் தாமரை
வடிவுடையதாகக் கருதப்படும் தானம்.
மணிபூரம் - கொப்பூழ் : இரைக்குடர்.
மணிப்பாரி - இராக் காவலாளரின் பாட்டு வகை : மணியடித்துக் கொண்டு சுற்றும் இராக்காவல்.
மணிப்பிரவாளம் - வடமொழியும் தென்மொழியும் போன்ற இரு மொழிச் சொற்கள் கலந்த நடை.
மணிமந்தம் - இந்துப்பு.


மணிமலை - பொன்மலை.
மணிமாடம் - சிறந்த மாளிகை.
மணிமாலை - கழுத்தணி மாலை : ஒருவகைப் பிரபந்தம்.
மணிமான் - கதிரவன்.
மணியம் - வேலை.


மணியாசமிடுதல் - சுவர்த்தலம் முதலியவற்றை மெழுகுதல்.
மணியரங்கம் - நிலாமுற்றம்.
மணியுயிர் - வீடு பேறடைந்த உயிர்.
மணிவடம் - அக்கமாலை : இரத்தின மாலை : பாதசாலம் : முத்துமாலை : வீரக்கழல்.
மணிவட்டம் - வீரக்கழல் : சிலம்பு : சேகண்டி.


மணிவண்ணன் - திருமால்.
மணிவீசம் - மாதுளை.
மணை - இருக்கை : தேங்காய்த் துருவலகு : பாதபடி : மழுங்கல் : ஆசனப் பலகை : மணமேடை : யானைமேல் தவிசு :
பருத்தியினின்று பஞ்சு பிரிக்குங் கருவி.
மண் - அணு : ஒப்பனை : கழுவுதல் : சுட்டசாந்து : துகள் : நிலம் : பூமி : மண்ணென்னேவல் : மலை : மாட்சிமை :
முழவின் மார்ச்சனை.
மண்கணை - ஒரு பறை : வாச்சியப் பொது : குடமுழவு வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 25 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 36 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum