தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 31. சாதி – மதம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
31. சாதி - மதம்
சாதி என்பதும் மதம் என்பதும் இந்த நாட்டிக்குரிய பழியோ என எண்ணத் தோன்றுகிறது. மதம், தர்மம், சமயம், நெறி என்பன ஏறத்தாழ ஒரே பொருள் தருவன. இவை அந்தந்தக் கால மக்களை நெறிப்படுத்துவதற்காகச் சான்றோர்கள் உருவாக்கிய வழிமுறைகள்.
‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’
எனத் தொல்காப்பியமும் மக்கள் நெறி பிறழ்ந்த போது சட்டங்களைச் சான்றோர்கள் அமைத்தனர் எனக் கூறும் போது மக்களை நெறிப்படுத்துவதைத் தங்கள் கடமையாக ஐயர் - சான்றோர் கொண்டனர் என்பது தெரிய வருகிறது. பிற்காலத்தில் மதத்தின் பெயரால் சில கயவர்கள் சுயநலம் கருதி போது மதத்திலும் தவறான கருத்து கொள்ளப்பட்டது. மதங்களின் உண்மைப் பொருளும் இழிவு படுத்தப்பட்டது. ஆனால் மதங்கள் தீமையைப் போதிக்கவில்லை என்றே கூறலாம். சாதி என்பதும் தொழில் அடிப்படையில் தொடங்கி இன்று எல்லாச் சண்டை சச்சரவுகளுக்கும் அடிப்படையாகி விட்டது. இது குறித்தே ஒளவையாரும்,
‘சாதி இரண்டொழிய வேறில்லை’
என்று அறுதியிட்டுக் கூறுவாராயினர். அத்தகைய சாதி மதங்களைப் பற்றிக் கவிஞர் அவர்கள் பாடிய செய்திகள் நோக்கத்தக்கன.
சாதி என்பது மாயப்பேய்; அது மக்களின் இரத்தத்தைப் பலி கேட்கின்றது. எனவே தர்மங்கள் தப்பித்துக் கொண்டு ஓடிப்போய்க் கள்வர் கோட்டைக்குள் சென்று தஞ்சம் கேட்கின்றன.
ஜாதி என்கின்ற மாயப் பேயொன்று ரத்தம்
கேட்கின்றதே, தர்மம் தப்பித்துக் கல்வர் கோட்டைக்குள் தஞ்சம்
கேட்கின்றதே.
(1 - 200)
சாதியின் பெயரால் இங்கே இரத்த ஆறுகள் ஓடியதை, ஓடுவதை வெறுத்த கவிஞர் அதனை மாயப் பேயென்றார். பேய்க்கு இரத்தம் தானே வேண்டும். இந்த நிலையில் தர்மங்கள் வாழும் நிலை இல்லை; கயவர்கள் பிடியில் சிக்கி விட்டன என்று கவிஞர் மனம் நோகிறார்.
இளம் உள்ளங்கள் உண்மையாகக் காதல் கொண்டபோது சாதியும் மதமும் குறுக்கிட்டு ஆறு வெட்டிக் கொடுக்கின்றன - இரத்த ஆறு பாய்வதற்கு. இதைத் தான் கவிஞர் முன்னவர்கள் செய்த மோசடி எனக் குறிப்பிடுகிறார்.
சாதி மத பேதமெல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம். (2 - 2)
சாதியாகி வேதாந்தம் இங்கத் தேவை இல்லை. ஊனெனில் ஏழை எளிய மக்களைச் சுரண்டி வாழும் ஆட்சிக்கு அது தானே அடிப்படை. கட்சி, ஆட்சி என்பது நிலையில்லாதது. நிலையில்லாததற்கு நிலையான ஒன்றை, சாதி எனும் பெயரில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பழைய இருட்டைத் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கப் போவதாகக் கவிஞர் கூறுவார்.
ஜாதிபேத வேதாந்தம் இனி இங்க இல்லை
சுரண்டி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை.
.....
பழைய இருட்டைக் கொளுத்துவேன். (2 - 8)
எனவே இந்த நாட்டில் சமத்துவம் பெருகிட வேண்டும், அதன் வழிச் சாதிகளும் ஒழிய வேண்டும் எனக் கவிஞர் குரலெடுக்கறி ர்.
சமத்தவம் பெருக
சாதிகள் ஒழிக. (2 - 119)
உண்மையில் காதலெனும் களங்கம் இல்லாத சோதியைச் சாதி எனும் இருள் நெருங்க முடியாது.
காதல் பெருக
பார்ப்பதில்லை ஜாதி. (2 - 122)
உண்மையில் சாதி மத பேதமில்லாமல் வாழ்பவர்கள் நம் நாட்டைக் கண்போல் காப்பாற்றும் போர் வீரர்களே. அவர்கள் சாதி பேதம் பார்த்தால் இந்த நாடே நாதியற்றுப் போய்விடும். உண்மையில் அவர்கள் மனைவி மக்கள் என்பதையெல்லாம் மறந்து வந்தவர்களே.
குடும்பம் அட குழந்தை - அதை
மறந்து வந்துவிட்டோம்
ஜாதிமத பேதம் - அதைக்
கடந்து வளர்ந்துட்டோம். (2 - 141)
சாதி பேதங்கள் மனிதர்களுக்குத் தான். இந்த நாட்டில் மட்டுமல்ல - எந்த நாட்டிலும் ஓடி வளப்படுத்துகின்ற ஆறுகள் சாதி மதம் பார்ப்பது இல்லை. அவை எல்லாரையும் தானே வாழ வைக்கின்றன.
சாமிரவருணி ஆத்துத் தண்ணீர் - அது
ஜாதி பேதம் பார்ப்பதில்லை. (2 - 189)
காதலர்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. இது வாழ்க்கை நிலை; குடும்ப நிலை. இராணுவ வீரர் சாதி மதம் பார்ப்பதில்லை. இது நாட்டின் நிலை. குடும்ப நிலையும் நாட்டு நிலையும் உயர்ந்த குறிக்கோளுடன் வாழும் போது இடையிலிருப்பவர்கள் மட்டும் இந்த மண்ணில் நஞ்சைத் தூவுவானேன் என்பதைத் தான் கவிஞர் மனம் திறந்து பேசுகிறார்.

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 16. அரசியல், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 32. பிற காவியங்கள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 ஓர் ஆய்வு - தாய்மை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -17. மருத்துவம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum