தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

4 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 5:12 pm

First topic message reminder :

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...





நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்



தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.



கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.



மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்



அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.



தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 31, 2013 8:42 pm

ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது..
-
நல்லதே நடக்கும் என நம்புவோம்
...

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில்
திரையிடுவதில் தொடர்ந்து
சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் பிப்ரவரி 1-ம் தேதி
திரையிடப்படுகிறது.
படத்தை திரையிடுவதற்காக கமல் ஹாசன் நாளை மும்பைக்கு
செல்கிறார்.
--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா Thu Jan 31, 2013 8:53 pm

திரைப்படம் அனைத்து தரப்பும் பார்க்க கூடிய நிலையில் எடுக்கப்பட்டால்
யென்றும் பிரச்சனை வருவதற்க்கு சாத்தியமே இல்லை...
எம் ஜி ஆர்‌,சிவாஜி படங்களை உதாரணமாய் சொல்லலாமே...முன் உதாரணமாய் ..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 9:59 pm

விஸ்வரூபத்திற்கு தடை: சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இத்தகைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷ் திவாரியின் இந்த கருத்துக்கு, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு அமைப்பு உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் தான் இது போன்ற சந்தோஷமான செய்தியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 10:00 pm

Peria Samy - chennai,இந்தியா
31-ஜன-201318:06:09 IST Report Abuse

தணிக்கைக்குழு அனுமதித்தபின் திரைப்படத்தை திரையிட அரசோ நீதிமன்றமோ தடை விதிக்கக்கூடாது என்ற வாதம் ஏற்கக்கூடியதல்ல. ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள் .விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் இஸ்லாமியர்களால் எழுப்பப்பட்டுள்ளது தங்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக திரைப்படத்தில் காட்சிகள் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.அந்த சிறுபான்மையினரின் உணர்வுகளை எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க வேண்டியது அரசின் கடமை.அப்போது தணிக்கைத் துறையால் என்ன செய்ய முடியும்? .எனவே அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பது தவிர்க்க முடியாதது .ஆனால் அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.அதை கண்காணிக்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒருவேளை தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அது பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருந்தால் நிச்சயமாக அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 10:01 pm

Varatharajan - oslo,நார்வே
31-ஜன-201317:02:34 IST Report Abuse

இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதுவே சரியான தருணம் என்கிறீர்கள் உடனடி தீர்வு எடுக்கலாம் இல்லையா சினிமா துறையை சேர்ந்த மத்திய அமைச்சர் மற்றும் சென்சார் போர்டு நிறுவனத்தார் எல்லாரும், மாநில அரசுடன் பேசலாம் அல்லவா விஸ்வரூபம் படம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை பற்றி. ஒரு படைப்பாளி ஒரு ஒப்புதல் மூலம் தான் குடியிருக்கும் வீடு முதல் அனைத்தையும் இழக்க வுள்ள நிலையில் மத்திய அரசு உடனடி தலையிட்டு படத்தை வெளியிட முன் வரலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 10:03 pm

Joe joe - chennai,இந்தியா
31-ஜன-201313:03:44 IST Report Abuse

17 வயதில் ஒருவன் செய்த கொடும் செயல்க்கு அதிக பட்சம் 3 வருடம் மட்டுமே தண்டனை பெறக் கூடிய அளவில் தான் நம் சட்டம் உள்ளது . அச்சட்டத்தை திருத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சினிமாவின் பிரச்சனை உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா? அதை அருமை என்று கூறி இங்கு கருத்துக்கள் வேறு . என்ன முதிர்ச்சி மக்களிடம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 10:04 pm

Joe joe - chennai,இந்தியா
31-ஜன-201313:03:44 IST Report Abuse

17 வயதில் ஒருவன் செய்த கொடும் செயல்க்கு அதிக பட்சம் 3 வருடம் மட்டுமே தண்டனை பெறக் கூடிய அளவில் தான் நம் சட்டம் உள்ளது . அச்சட்டத்தை திருத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சினிமாவின் பிரச்சனை உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா? அதை அருமை என்று கூறி இங்கு கருத்துக்கள் வேறு . என்ன முதிர்ச்சி மக்களிடம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 31, 2013 10:19 pm

இணையத்தில் படித்த நகைச்சுவை:-
-
[You must be registered and logged in to see this image.]
---
-
டக்ளஸ் அண்ணே,

கமல் கோய்ச்சிக்கிட்டு தமியகத்தை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போறதும் இல்லை;

ரசினி காந்து 'தோ வர்றேன் தோ வர்றேன்னனு' சொல்லிட்டு அரசியலுக்கு வரப்போறதும் இல்லை.

இது சினிமாண்ணே... டிக்கிட்டு வாங்கினோமா, பார்த்தமான்னு போய்ட்டே இருக்கணும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா Fri Feb 01, 2013 11:28 am

ரசிகன் எப்போது படத்தை பார்த்தாலும் அதிகம் பணம் கொடுத்து தான்
பார்க்கணும்...இன்றைய நிலையில் ஒரு நாள் சம்பளம் அவனுக்கு...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 3:46 pm

[You must be registered and logged in to see this link.]
11:11 AM (3 hours ago)


கமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி… இல்ல கடிதம்
--------------- ---------------- ---------
அய்யா ’கமல்’ சாமி,
வணக்கம்

அதெப்படி இன்னிக்கும் பாம்பேல உக்காந்துக்கிட் -டு இனியொருமுறை பிரச்சனை வந்தால் நாடுவிட்டுப் போவேனு போவேனு திரும்பச் சொல்லமுடியுது.. -.

அய்யா, நீ 100 கோடி போட்டு சினிமா எடுக்குற மவராசன், ஒரு தடவ வியாபாரத்துல பிரச்சனை வந்தவுடனே நாடு விட்டுப் போறேனு கூட சொல்லமுடியுது. உன்னால நாடுவிட்டு நாடு என்ன, நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ கூட போலாம், பணம் இருக்குது, பாஸ்போர்ட் இருக்குது, விசா கூட ஒடனே கெடச்சுடும்....

ஆனா, கெதியத்த நாங்க எங்க பிரச்சனைக்கு ஒரு மசுரும் புடுங்க முடியலையே சாமி!
எங்களுக்கு கரண்டு இல்ல, 10 மணி நேரம் மெசின் எதும் ஓட்டுறதுக்கில்ல -, தொழில் போச்சு... மழ பெய்யல, காவிரில தண்ணி வரல, கொஞ்சம் தண்ணியிருந்தாலு -ம் அத பாய்ச்சுறதுக்கு -கரெண்ட் எப்பவாச்சும் தான் வரும்... ஊட்டவுட்டு வெளியே வரமுடியல, மூனு வருசமா தோண்டுன ரோட்ட மூடக்கூட இல்ல.

சாயப்பட்டறை வெச்சதுல நிலம் போச்சு, தண்ணி கெட்டுப்போச்சு, -சாயப்பட்டறைய நிறுத்தினதுல அவங்களுக்கு தொழில் போச்சு…. இதோ எங்கூர்ல செத்துப்போற 10 பேர்ல 2-3 புற்றுநோய்லதான் -போறாங்க!

இதுமாதிரி எங்க பிரச்சனை ஒன்னா ரெண்டா! இதுக்கெல்லாம் உங்கிட்ட தீர்வு கேட்கல. உன் பிரச்சனை எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி, எங்க பிரச்சனை உனக்கு தெரியுமானுதான் கேட்கிறேன்.

முல்லைப் பெரியாறு சண்டை வந்தப்போ, எங்கவூட்டு முக்குல பேக்கரி வெச்சிருக்கிற சாஜூவைக் கூட எதிரி மாதிரிதான் பார்த்தோம். ஆனாப் பாரு, சிவாகாசில வெடிச்சு சாகக் கெடந்தவங்களுக்க -ு மம்முட்டிதான் மருந்து கொடுத்தாராம்ல. மவராசன் நீ எதாச்சும் முல்லைப் பெரியாறுக்கு பேசுனியா அல்லது சிவகாசில ஒரு சிக்கல்னு வந்தப்போ காசு பணம் கொடுத்திருக்கிய -ானு தெரியல. சிக்கலப்போ சொல்லிக் காட்டனும் சொல்லல. ஆனா எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்குது.

காவிரி காஞ்சுகெடக்குது -, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி!

இப்ப பார்த்தா எங்காளுங்களே உன் படத்தத் தேடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும -், ஆந்திராவுக்கும் -, பாண்டிக்கும் வண்டி கட்டுறாங்க. காசு இருக்கிற மவராசனுங்க நீ வெளிநாட்ல செட்டில ஆகி அங்கே மட்டும் படம் வெளியிட்டாலும் கூட வந்து பாப்பாங்களா இருக்கும்.

உனக்கு சினிமா வியாபாரம், அந்தம்மாக்கு அரசியல் வியாபாரம். நீ அந்த அய்யா இருக்கும்போது போயி சந்திச்சிட முடியுது. இந்தம்மா இருக்கையிலும் சந்திச்சிடமுடிய -ுது. இதா… இப்பக்கூட நவம்பர் மாசம் சந்திச்சுப் பேசினப்ப இந்த படம் பத்தி எதாச்சும் பேசாமையா இருந்திருப்பீங் -க!

இப்ப என்னடான்னா, எங்க ஊருல கெழடு கட்டைங்க கூட அன்னிக்கு ராத்திரி 10 மணி வரைக்கும் புள்ளத்தாச்சி பிரசவத்துக்கு போனமாதிரி டிவி முன்னால ஜட்ஜய்யா என்ன சொல்வாரோனு கொசுக்கடியில உட்கார்ந்திருந் -தாங்க. அடுத்த நாள் நேத்து அரசாங்கம் ஆடுன ஆட்டத்தப் பார்த்து….. இதென்ன இப்படியாயிப் போச்சாமேனு எழவு வீடு கணக்கா கெடந்து உம்பிரச்சனைக்கு -முக்குக்கு முக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுத் -திரியறாங்க...

படம் மட்டும் வந்துட்டா ஓட்டுப் போடப் போற மாதிரி ஒரு சனம் உடாம பார்த்துடறதுனு தீர்மானமா வேற இருக்காங்க! படம் வந்துட்டா காசு கெட்டி… கவலை வேணாம். அதுக்காக பாவம் நஷ்டப்படனும்னெல -்லாம் சொல்லல! என்ன கருமம் எங்காளுங்க எச்சுமுச்சா காசு குடுத்து டிக்கெட் வாங்குவாங்க… நாலு நாள் பொறுத்து பொறுமையா பார்த்தாலும் அதே சினிமா தானேனு ஏனோ புரியறதில்ல. எல்லாத்திலேயும் -அவசரம்தான்!

ஒரு சினிமா வியாபாரத்துக்கு -பொங்குபொங்குனு பொங்குற எங்காளுங்க, எங்களோட கரண்டு பிரச்சனைக்கு, தண்ணி பிரச்சனைக்கு ஒரு சக மனுசனா நீ எப்பவாச்சும் வாய் தொறந்தியானு யோசிக்கக் கூட நேரமில்ல சாமி…. இங்கதான் டிவில என்னேரமும் இதையே பேசித் திரியறாங்களே! கரண்டு பிரச்சனைக்குப் பேசுனா கவருமெண்டு கோவிச்சுக்கும், -காவிரி, முல்லைப் பெரியாறுக்குப் பேசினா கர்நாடகா, கேரளாவுல பப்பு வேகாதுன்னு உனக்குத் தெரியாமலா இருக்கும்.

அய்யா சாமி... என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு கலைஞன்... நீ எதாச்சும் நடிச்சு அது திரைக்கு வந்த பொறவு புடிச்சா ரசிப்பேன், புடிக்காட்டி நல்லால்லனு சொல்வேன்... மத்தபடிக்கு நாங்களும் மனுசங்கதான், நீயும் மனுசன்தான். நாங்க இன்னும் ஒருபடி மேல, கரண்ட், தண்ணியில்லாம இன்னும் மூச்சு தம் கட்டி, மானரோசத்துக்கும -் பயந்து வாழ்ந்திட்டிருக -்கோம். இதுல ஊட்ட விட்டு, ஊரவிட்டு ஓட எல்லாம் எங்களுக்கு நாதி இல்லை.

பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவத -ுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனு… எங்கேயும் போக வக்கில்ல…. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும்.

இந்தா இதுக்கும் கூட உன்னை ரொம்பப் புடிக்கிற நாலு பேரு, சரியாப் படிச்சும் படிக்காமலும் வந்து தையத்தக்கனு குதிப்பாங்க. குதிக்கிறது அவங்க சுதந்திரம். எனக்குப் பட்டதைச் சொல்றது என் சுதந்திரம்.

எனக்கும் உன் நடிப்பைப் பிடிக்கும். முடியும்போது இந்தப் படம் பார்த்தாலும் பார்ப்பேன். புடிச்சிருந்தா நல்லாருக்குனு நாலு வார்த்தை சொல்வேன்….. அம்புட்டுதான்…. -.

இனிமேலாச்சும் உனக்கு இப்ப வஞ்சனை நடந்த மாதிரி சராசரியான எங்களுக்கும் ஏராளமான வஞ்சனைகள் நடக்குதுனு உனக்கும் புரிஞ்சா சரி. எங்காளுங்க உன்னை நல்லாருக்கனும் சாதி மதம் ரசிகர் மன்றம் கடந்து நினைச்சதுல, கொஞ்சமாச்சும் திருப்பி குடு சாமி.

நன்றி

-Erode Kathir
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 3:47 pm

மேல் பதிவுக்கான என் பதில்

இப்படி நீங்க ஒரு டீவியில் பேட்டி கொடுங்கள் எத்தனை பேர் பொங்கி எழுகிறார்கள் பாருங்கள்... இந்தப் பிரச்சினைக்காக நான் நாட்டை விட்டு போக முடிவெடுக்கிறேன் என்று சொல்லிப்பாருங்கள்... கமலுக்கு ஆதரவு கொடுத்ததுபோல யாரும் வாய் திறக்கமாட்டார்கள்... ஆனால் வாய் திறந்து சிரிப்பார்கள்...

அரசும் முன் வந்து கமலுக்கு விளக்கம் தந்ததுபோல விளக்கம் தராது

எந்த அமைப்பும் உங்க பிரச்சினையைக் கண்டு கொள்ளாது.

இதுதான் அரசியல்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Fri Feb 01, 2013 4:45 pm

[You must be registered and logged in to see this image.]
-
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
-
பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 7:51 pm

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 9:00 pm

சாரு நிவேதிதா அவர்களின் பார்வையில் விஸ்வரூபம்...

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள்.
கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும்
ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே
இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு
சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை
எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில்
எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ
தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு
மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என்
மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த
இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப்
பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச்
சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும்
non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே
குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ்
அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது
ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?
அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ்
அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள்
என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே
வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச்
சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும்,
கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச்
சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை
விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச்
சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம்
கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு
எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று
பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப்
பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை
நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை
மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு
இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை
விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால்
அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி
விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல்
இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக்
கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது
குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப்
பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த
குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை
ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா
சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை
பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு
வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக
மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர்
இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

Source: [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 10:01 pm

விஸ்வரூபம்: 7 காட்சிகளை நீக்க சம்மதம்; வெளியீடு குறித்து உடனடி அறிவிப்பு: கமல்
சென்னை :"விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், "முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.


அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. இதில், உள்துறை செயலாளர், நடிகர் கமல் மற்றும் முஸ்லீம் தரப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய 7 காட்சிகளில் ஒலியை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட தங்களுக்கு சம்மதம் என முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படும். கமலுக்கும் தங்களுக்கும்இடையே தனிப்பட்ட விரோதம் இல்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினர். இதனிடையே, விஸ்வரூபம் படத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்ந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்,இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த முதல்வருக்கும். பொறுமையாக கருத்துக்களை கேட்ட உள்துறை செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். மத்திய தணிக்கை துறை அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும். எங்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும். தடை உத்தரவும் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உடனடியாக அறிவிக்கப்படும் என கூறினார்.

மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா கூறுகையில், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்‌ளோம். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டமும் வாபஸ் பெறப்படும் என கூறினார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 10:01 pm

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Feb 03, 2013 11:32 am

விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது :

விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது :
கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் . இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.

அதில், விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை கமலஹாசன் இழிவுபடுத்திருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து ராமகிருஷ்ணனிம் நமது நிருபர் பேசியபோது, ‘’விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்புகொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது.

இது எங்களின் உணர்வை புண்படுத்துகிறது. கமல் முற்போக்கு வாதி, அறிவுஜிவி என்றூ சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பிராமணராக அங்கீகரித்தது கிடையாது.

பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிராமணராக இருக்க முடியும்.

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டுவதைவிட ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள ஆஞ்சேனர் கோவிலுக்கு வந்துதேங்காய் உடைத்தி ருந்தால் விஸ்வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும்’’ என்று ஆவேசமாக கூறினார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Feb 03, 2013 11:35 am

"விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்கள் ஆட்சேபித்த ஏழு காட்சிகளை நீக்குவதற்கு கமலஹாசன் சம்மதித்ததால் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது." - செய்தி
விஸ்வரூபம் என்ற பெயரை அனுமதித்தார்களா? வடமொழியில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு உண்டா ? தமிழ் அமைப்புகள் என்ன சொல்கின்றன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Feb 03, 2013 11:35 am

தமிழ் அமைப்புகள் பாவங்க! அப்பாவிகள்!
தமிழ் ஆசிரியர் பாத்திரம் படைத்து, அந்த ஆசிரியரை
நல்ல தமிழ் பேச வைத்து, பேசியதும் அவர் வாயில் பட்டாசு
வைத்து வெடிக்கும் காட்சிகளையே ஓட விடும் பெருந்தன்மை
தமிழ் அமைப்புகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு.
நகைச்சுவை நடிகர் சாலமன் பாப்பையாவுடன்
அங்கவை சங்கவை பாத்திரப் படைப்பை விட உயர்ந்த படைப்பைக்
காண முடியுமா?
இதைக் கேட்டால் தமிழ் வெறி என்று சொல்லி விடமாட்டார்களா?
உலகத்திலேயே மோசமானது தமிழ் மொழியைக் கெடுக்கக் கூடாது
என்று சொல்வதுதானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Feb 03, 2013 11:37 am

"விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்கள் ஆட்சேபித்த ஏழு காட்சிகளை நீக்குவதற்கு கமலஹாசன் சம்மதித்ததால் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது." - செய்தி


நீக்குவது அல்ல. ஒலிமுடக்குவது.

அரபு மொழி வாசகம் நமக்கு புரியாது. முடக்கினால் என்ன? அல்லாங்காட்டிதான் என்ன?

வேந்தன் அரசு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:22 pm

மும்பை: விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று கூறிய தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

விஸ்வரூபம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கமலின் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மத்திய திரைப்பட தணிக்கை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சட்ட விதிமுறைகளின்படி திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலேயே விஸ்வரூபமும் மற்ற திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் முன் வைக்க மத்திய திரைப்பட தணிக்கை துறை விரும்புகிறது.

திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதில் 1951ம் ஆண்டிலிருந்து சட்டப்படி மத்தியத் திரைப்பட தணிக்கை துறை செயல்பட்டு வருகிறது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை பொறுப்பற்றவை ஆகும்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நவநீத கிருஷ்ணன் கூறுகையில்,

நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து மூன்றாவது பார்ட்டிக்கு விளக்கம் அளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று நான் கூறியதில் பொய்யில்லை. நான் கூறியது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் மோசடி நடந்திருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்றார்.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:23 pm

விஸ்வரூபம் - நீக்கப்படும் காட்சிகள் விவரம்!
சென்னை: விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார்.

இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.

* படத்தின் தொடக்கத்தில், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை," என டைட்டில் போடப்படும்.

* படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.

* திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.

* அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.

* முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

* நடிகர் நாசர் ஒரு காட்சியில், "முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை'' என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.

* ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும்

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 05, 2013 1:26 pm

படம் பார்த்தேன்...

இந்தப் பிரச்சினைக்கான காரணம் அதில் ஒன்றும் இல்லை...

அரசியல்தான் காரணம் என்று தோன்றுகிறது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 8 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum