தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

4 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 5:12 pm

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...





நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்



தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.



கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.



மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்



அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.



தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Sat Jan 26, 2013 5:51 pm

கமல் தரப்பு பதில் என்ன?
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா Sat Jan 26, 2013 7:10 pm

ஒரு படைப்பு யாரையும் இழிவு படுத்தக்கூடாது...பொதுக்கூட்டத்தில்
தரைகுறைவாய் பேசினாலே அவதூறு வழக்கு இருக்கும் நிலையில்
சமூகத்தை தவறாக நினைக்கும் படி செயல் தேவையற்றது...விலங்குகளை கூட சித்திரவதை செய்கிற கட்சிக்கு எதிர்க்கும் நிலையில்...
ஒரு படைப்பு யாரையும் இழிவு படுத்தக்கூடாது...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 8:42 pm

சென்னை: ஒரு தரப்பினரின் எதிர்ப்பை பெற்றுள்ள கமலின் விஸ்வரூபம் படத்திற்கு மாநில அரசு தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக நடிகர் கமல் தரப்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை நீதிபதி இன்று பார்த்தார். படத்தைப் பார்த்த பின் அவர் கருத்து ஏதும் கூறவில்லை. எனினும் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வழக்கு வரும் போது இதுதொடர்பான கருத்தை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 8:44 pm

ரஜினிகாந்த் நன்றி தினமலர்

சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.
கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் வெளியான படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் எவ்வித சச்சரவும் இல்லை. ஐதராபாத் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். பயங்கரவாதம், காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

விரைவில் வெளிவர துணை:

தமிழகத்தில் படம் திரையிடப்படவில்லை. கமல் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தடை குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.
இந்தப்படம் தணிக்கையான பின்னர் வெளியிடுவதற்கு முன்பாகவே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு திரைப்படம் காண்பித்துள்ளார். இதிலிருந்தே இஸ்லாமிய மக்களின் மீது கமல் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

மகா கலைஞன் கமல்

: திரு கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அநுபவித்திருக்கிறார் என்பதை அறியும் போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் வைத்து இந்த படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் இருந்து மாறி கமல் வந்த பின்னர் கலந்து பேசி கதைக்கு பாதிப்பு வராத வகையில் படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டு கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.,

இவ்வாறு அவர் கைப்பட எழுதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 8:46 pm

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுவதாக இருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள பின்னணியில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். சென்சார் போர்டு அனுமதியளித்துள்ள போது, தமிழக அரசு தடைவிதித்திருப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல். எனவே உடனடியாக விஸ்வரூபம் படத்திற்கான தடையை விலக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 27, 2013 10:06 am

விஸ்வரூபம் படப் பிரச்சினை- திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சீரமைக்க வேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் சமூகச் சிக்கலாக இப்போது உருமாறியிருக்கிறது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும், படத்தை அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் போன்ற திரைப்படக் கலைஞர்களும் பேசி வருகின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினையில் சுமூகமாகத் தீர்வு காண வேண்டும்.
திரு. கமலஹாசன் அவர்கள் இந்தியாவிலிருக்கின்ற சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால் அவருக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. திரைப்படத்தின் தாக்கம் எத்தகையது என்பதை நன்கு அறிந்த அவர், ஒரு திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும்போது வணிக நோக்கைவிட சமூக நோக்கைக் கூடுதலாகக் கொண்டு உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் இசுலாமிய சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இருக்கின்ற இசுலாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்களிலும் இத்திரைப்படத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்படாமல்
திரு. கமலஹாசன் அவர்கள் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது நமக்கு ஏமாற்றமளிக்கிறது.
ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் அதனைத் தடுக்கக்கூடாது என நீதிமன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன. திரைப்படத்தைப் பொறுத்தவரை தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களே நீதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். அவ்வாறிருக்கும்போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கு எத்தகைய கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அத்தகைய கவனம் தணிக்கைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த பிரிவினரை திரைப்படங்களில் எதிராகச் சித்தரிப்பதால் சமூகத்தில் மிக மோசமான கருத்து பரவுகிறது. இருப்பதிலேயே மிக வலிமையான ஊடகமாக இருக்கும் திரைப்படம் குறித்து ஆட்சியாளர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதையே விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சிக்கல் நமக்கு உணர்த்துகிறது. தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை முன்வைத்து பெண்கள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் செய்யப்படுவதுபோலவே 'விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சனையை முன்வைத்து திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சீரமைப்பதற்கு அரசு முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 27, 2013 10:07 am

முத்தமிழ் வேந்தன்

விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?...

கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்...காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்...அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்...முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்...பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை காயவைத்தானே அப்போது எங்கே போனது உங்கள் குரல்..."என்னை வாழவைத்த தமிழக மக்கள்" என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது திரு ரஜினி அவர்களே உங்களை வாழவைத்த இந்த மக்கள் இன்று நீரில்லாமல் சாகிறார்களே, வயலெல்லாம் காய்கிறதே ஒரு வார்த்தையாவது காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று கேட்கும் துணிவு உங்களுக்கு உள்ளதா?...

தமிழ்நாட்டில் இதுவரை விவசாயம் பொய்த்துபோனதால் 10ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீரை தாருங்கள் என்று எந்த நடிகரிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை...

சேவை வரிக்கு எதிராக குரலிருக்கு எங்கள் விவசாயிக்கு எங்கே உங்கள் குரல்...

குற்றப்பத்திரிக்கை, ஆணிவேர், தேன்கூடு இவற்றிக்கு எங்கே போனது உங்கள் கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?..

40 ஆண்டுகால நண்பருக்கு குரல் ரஜினி அவர்களே நாற்பதாண்டுகாலம் உங்களை வாழவைக்கும் தமிழக விவசாயி நீரின்றி சாகிறான் எங்கே உங்கள் குரல்?..

காவிரி பிரச்சனை வந்தால் கர்நாடக நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...முல்லை பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...ஆனால் தமிழ்நாடு நடிகர்கள் மட்டும் வாயே திறப்பதில்லை...ஏன்?...படத்தில் மட்டும் தங்கச்சி, அம்மா சென்டிமன்ட்...மக்களை ஓடி ஓடி காப்பாத்தறது...இங்கே தண்ணீர் இல்லாமல் செத்தால்கூட எந்த நடிகனும் ஆதரவாககூட தமிழகத்திற்கு இருப்பதில்லை...தமிழன் மட்டும் இவர்களை வாழவைக்கவேண்டும்...ஆனால் இவர்கள் குரல் கூட கொடுக்கமாட்டார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா Sun Jan 27, 2013 11:29 am

சகோதரர் முத்தமிழ் வேந்தன் அவர்களே உங்களின் சமூக நல அக்கறை
உங்கள் கட்டுரையில் அறிய முடிகிறது...மகிழ்ச்சி...

இதை இவர்களிடம் எதிர்ப்பார்க்க கூடாது...இப்படி எதிர்ப்பார்த்து தான் இவர்களை தலைவர்களாய்...கடவுளாய் இன்று தமிழக ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து உள்ளார்கள்...தமிழில் நடிக்கும் எந்த நடிகர்களும் எதிர்ப்பு குரல்
அதிகரித்த பின்னே தான் குரல் கொடுத்து வருவது நாம் கண்ட உண்மை...
அவர்கள் நடிகர்கள் நடிக்க தான் தெரியும் அதை தான் அவர்கள் இன்று வரை
செய்து வருகிறார்கள்..வருவார்கள்...அவர்களுக்கு இது வியாபாரம் ...
வியாபாரத்துக்காக எது வரை வேண்டுமாலும் போவார்கள்...இவர்களிடம்
சமூக அக்கறையை நாம் எதிர்ப்பார்ப்பது ,எதிர்ப்பார்த்தது நமது தவறு...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா Sun Jan 27, 2013 11:34 am

நீதிபதிகளை நியமிப்பதற்கு எத்தகைய கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அத்தகைய கவனம் தணிக்கைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும். சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Sun Jan 27, 2013 1:09 pm

இன்று தீர்ப்பு எதிர்நோக்கலாம்..
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 28, 2013 1:12 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 7:53 pm

ரவிக்குமார்

விஸ்வரூபம் மீதான தடை நாளை நீதிமன்றத்தால் விலக்கப்படலாம்.இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு அந்தப் படத்துக்குக் கூடுதல் கவனத்தையும் வசூலையும் கொண்டுவரலாம். அது கமலுக்கு லாபம்தான். அதைவிடவும் லாபம் அவர் ரொம்ப நல்லவர் என்று ரஜினி முதல் கலைஞர் வரை அளித்துள்ள நற்சான்றுகள். மாறாக, இஸ்லாமியர்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்ற கருத்து அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் மூலமாகவும் ஊடகச் செய்திகள் வாயிலாகவும் பூடகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சனையால் கமலுக்கு லாபம் இஸ்லாமியர்களுக்கு நட்டம் என்று சொல்லலாமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 7:54 pm


//
---------- Forwarded message ----------
From: Dr L. Kailasam

சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்பட்த்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். பட த்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். எதற்கு இத்தனை பாதுகாப்பு என்பது புரியவில்லை. தமிழ் நாட்டில் படம் இன்னும் வெளியாகாத்தால் பல இளைஞர்கள் அருகிலிருந்த தமிழக நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்து வந்திருந்தார்கள். இன்னும் ஒரிரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் திரையிடப்படலாம். அதற்குள் ஏன் இத்தனை அவசர்ம் என்பது புரியவில்லை.

ஆங்கிலப்படம் போல பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பட ம். ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானத்தில் தேடியதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்பனைக் கதை. முழுக்கதையும் அமெரிக்காவிலும் ஆப்கானிலும் நடப்பது போன்றே அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான காட்சிகளும் திருப்பங்களும் உடைய கதை. பல முறை யோசித்தும் கமலஹாசன் வில்லனிடம் இருந்து எப்படி தப்பி அமெரிக்கா போனார்? எப்பொழுது கோழி சாப்பிடும் சின்னமாமியைத் திருமணம் செய்து கொண்டார் என்பதெல்லாம் புரியத்தான் இல்லை.
பூஜாகுமார், ஆண்டிரியா மற்றும் நடித்துள்ளனர் அருகிலிருந்த என் கேரளத்தோழி "நாசர், நாசர்" நோக்கு என்றாள். எனக்கு ,கமலஹாசனைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியவில்லை. வேறு மொழியில் பேசுவதால் என்ன பேசுகிறார்கள் தமிழில் சப் டைட்டில் போட்டலும் புரியத்தான் இல்லை.

வர வர தேசியகீதம் பாடுவது என்பது மிகவும் குறைந்து விட்ட து. ஆனால் இந்தப் பட த்தின் ஆரம்பித்திலே தேசியகீத்த்துக்கான அனைவரையும் எழ வைத்த்து. ஆனால் படக்கதைக்கும், நாட்டின் தேசியகீத த் தை ஆரம்பித்த்தில் காரணம் புரியத்தான் இல்லை.
இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பகுதி வர இருப்பதாக பட த்தின் கடைசிப்பகுதியை பார்த்தபோது எனக்கு புரிந்தது. ஆனால் புரியாத்து கமலஹாசன் தன்னையும் வருத்தி இத்தனை பொருட்செலவில் இதை ஏன் எடுத்தான் என்பதும், இரண்டாம் பகுதிக்கு என்ன அவசியம் என்பதும்தான்.
கிராமத்து ஜன்ங்களுக்கு மொழியும் கதையும் புரியுமா என்பது சந்தேகமே. சினிமாக்கார்கள் சொல்லும் ஸி செண்டரில் இந்தப் படம் வெற்றிமாக ஓடுமா? எனக்கு புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று.
அலுவலக தொழில் பிரச்சனைகழிலும் வீட்டு பிரச்சனைகளிலும் பல மன வேதனைகளை அனுபவித்து கொஞ்சம் அவற்றை எல்லாம் மறந்து இருக்கலாம் என்று நினைத்தவன் ஏமாந்துதான் போனேன். மைக்கேல் மதன காமராஜன் அவ்வை சண்முகி போன்ற கமலஹாசனின் திரைப்படங்கள் மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைந்து அளித்த மகிழ்வை இந்தப் படம் ஏன் கொடுக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

//
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 7:56 pm

அன்பின் நண்பர் பக்ருதீன், (மின்னஞ்சல்)

எனக்கு தங்களின் இரு கருத்துகளிலும் முழு உடன்பாடு உண்டு.
சற்று அகலமாகப் பார்க்க வேண்டிய விதயம் இது.

இதற்கு ஆழ்ந்த சிந்தனை கொண்ட நீண்ட கால அணுகுமுறையை,
முசுலீம், பிற சமய முதிர்ந்த தலைவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

இசலாத்தின் தத்துவங்கள் அல்லது பிற சமய கோட்பாடுகள், உரிமைகள்
என்ற உயர்நிலைச் சிந்தனைகள் ஒரு புறமிருக்க,
தமிழ்நாட்டின் சாதாரண பொதுமக்கள் நிலையில் இருந்து சிந்தித்துப் பார்ப்பது பலன் தரக்கூடும்.

இசலாமிய அமைப்புகளின் தலைவர்கள் பேசுகின்ற பேச்சு
மிக உக்கிரமாக இருக்கிறது. புதிய தலைமுறை, சன் தொலைக்காட்சிகளில்
நான் கண்டதும் கேட்டதும் அப்படித்தான் இருந்தன.

படம் தடைசெய்யப்படாவிடில் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழும் என்று
சில தலைவர்கள் உறுதியான குரலில் பேசும்போது ஒரு சாதாரண மனிதன்
என்ன நினைப்பான் என்பதை எண்ணிப் பார்க்க அவர்கள் தவறிவிட்டனர்!

எனது வீட்டைச் சுற்றி ஒரு அமைப்பு சுவரொட்டிகள் ஒட்டியிருக்கின்றனர்.
அதன் வாசகங்கள் போர்க்குரலாக இல்லாமல் மிரட்டல் குரலாக இருக்கின்றன
என்பது கவலைதரும் விதயம் என்பதை அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

இசலாமியக் குமுகத்தை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கக் கூடாது என்ற
கவலை இவர்களுக்கு இருக்கின்ற மாதிரியே தெரியவில்லைங்க. எங்களை அப்படிச்
சித்தரிக்கக் கூடாது - செய்தால் விரும்பத் தகாதன நிகழும் என்பது
எவ்வளவு முரண்பாடான அணுகுமுறை என்பதை ஆழ்ந்து இசலாமியக் குமுகம்
சிந்திக்க வேண்டும்.

எனக்கு இவ் அஞ்சல் எழுதுதற்கு பெரிய தயக்கம் இருந்தது. நமக்கென்ன யாரோ
எப்படியோ போகட்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், செய்தித்தாள்களில் வருகின்ற
இசுலாமியத் தலைவர்களின் பேச்சு, அவற்றை உறுதி செய்கின்ற சுவரொட்டிகள்
ஆகியவற்றைப் பார்க்கும் போது அச்சமே வருகிறது. இது பலவற்றையும்
சிந்திக்கச் செய்திருக்கிறது.

கமல் எடுத்திருக்கும் படம் இது வரை வந்த செய்திகளின் படி
அநேகமாக மொக்கை-மசாலாவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
ஊத்திக்கக்கூடிய படத்தை ஊதிப் பெரிதாக்கி விட்டார்களோ என்றே தோன்றுகிறது.

ஆயினும் - தமிழ்நாட்டுக்காரன் எடுக்கும் நெருடலான படத்தைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று
எண்ணுவது எனக்கு ஏற்பே. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எவனோ ஏற்படுத்திய
நெருடல்களுக்கும் இங்கே சென்னை அதிர்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, இது தமிழ்நாட்டுக்
குமுகம் பிளவு பட்டு விடுமே என்ற அக்கறையில் நடத்தப்படுகின்ற போராட்டமாகத் தெரிய மாட்டேன்கிறது.

தமிழ்நாட்டுக்காரன் தமிழ்க் குமுகத்தைப் பிளவு படுத்தி விடக்கூடாது என்ற அக்கறை வேண்டும் என்பதில்
நூறு விழுக்காடு எனக்கு ஒப்புமை உண்டு. தமிழன் என்று வரும்போது அங்கே சாதி, மத வேறுபாடுகளுக்கு
இடமில்லை.

ஆனால், உலகின் பிற இடங்களில், இந்தியாவின் பிற இடங்களில் எவனோ எங்கேயோ செய்கின்ற
ஏடாகூடங்களுக்காக தமிழ்நாடு தகிக்கும் என்ற நிலை இருப்பது ஏற்குமாறு இல்லை. ஒன்றுக் கொன்று
அணுகுமுறையில் முரண்பாடு இருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்நாடு எனும்போது தமிழர் நலம்
என்ற அளவில் வருகின்ற உறவு - உலகத்தில் எங்கோ இசலாத்தைக் குறித்து எவனோ செய்கின்ற காரியங்களுக்கு
எதிராகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை மற்றவர்களுக்கு உருவாக்குவது எந்த வகையில்
சரியான அணுகுமுறை என்று சிந்திக்க இருக்கிறது என்று கருதுகிறேன்.

கடந்த திசம்பர் ஐந்தாம் தேதி, நானும் சில நண்பர்களும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இரவில்
சீருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். என் வீடு வரும்வரை மூன்று இடங்களில், திச-6 தேதிக்காக
ஏற்படுத்தப் பட்ட சிறப்புச் சோதனைச் சாவடிகளில் (சென்னை எல்லைக்குள் மட்டும்) காவலர்கள்
எங்களையும் சீருந்தையும் சோதித்தனர். என் முகத்தில் கைவிளக்கை அடித்துச் சோதித்த போது
எனக்கு மிகவும் அருவெறுப்பாக இருந்தது. எப்பவோ நடந்த பாபர் மசூதி இடிப்பிற்கு,
அதுவும் என்னைப் போன்றோர் வன்மையாகக் கண்டித்த
பாபர் மசூதி இடிப்பிற்கு, அதுவும் எங்கோ நடந்த இடிப்பிற்கு நான் ஏன் இன்றும் அச்சப்பட்டுக்
கொண்டிருக்க வேண்டும்? பாபர் மசூதி இடிப்பின்போது தமிழ்நாடுதான் பெரிதும் அமைதி காத்தது
என்பது மட்டுமல்ல - தமிழ்நாடுதான் அதிகமாக அதனைக் கண்டித்த மாநிலமும் ஆகும் என்பது
அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருந்த மாநிலத்தில் குமுக அமைதியை மதிக்கின்ற
ஒரு மாநிலத்தில் இம்மாதிரியான நிலை இருப்பது சலிப்பைத் தருமாறு இருக்கிறது.
நான் என்ன செங்கல் ஏற்றி அனுப்பினேனா? கடப்பாரை கொண்டு கொடுத்தேனா?
மாறாக அப்படிச் செய்தவர்களை மறுத்தவர்கள்தான் நானும் தமிழ்நாட்டின் பெரும்பகுதியும்.
ஆனால் - இத்தனை ஆண்டு கழித்தும் என் முகத்திலும் பயணிக்கின்ற பல்ரின் முகத்திலும்
என்ன தேடுகின்றனர் என்று எண்ணும் போது அது கவலை அளிக்கிறது.

எங்கோ எவனோ எதற்கோ செய்வதற்கும் இங்குள்ளவன் கவலை கொள்ள வேண்டியதிருக்கிறது
என்ற சூழலும் இங்குள்ளவன் ஏதும் செய்தாலும் கவலை கொள்ள வேண்டிய சூழலும்
உண்மையான நல்ல குமுகத்தில் நஞ்சை விதைத்துவிடுமோ என்று மேலோட்டமாக அல்லாமல்
ஆழ்ந்து சிந்திக்க வேண்டியே இருக்கிறது.

காட்டாக, தலைவர்கள் வரிசையில் இருக்கின்ற, கல்வி கற்ற செயினாலுதீன் மனுசிய புத்திரனைப்
பற்றிப் பேசியிருப்பதைப் பாருங்கள். மனுசிய புத்திரனின் எழுத்துகளையோ அவர் போன்ற
இன்றைய எழுத்தாளர்களின் *இழ*க்கியங்களையோ பத்து காசுக்கும் நான் மதிப்பவனல்ல.
அதனால் அவருக்குப் பரிந்து வருகிறேன் என்று எண்ண வேண்டாம்.
ஆனால் ஒரு தலைவர் வரிசையில் இருப்பவர் மனுசிய புத்திரனின் மனிதாபிமானம் சார்ந்த ஒரு கருத்துக்கு
இப்படியா பதில் சொல்வது? உடல் ஊனத்தை இப்படியா கேலிக்குள்ளாக்குவது?
இதுதான் இசலாத்தா? என்று படிப்பவர்களை அதிர்ச்சியடையச்
செய்கின்ற வாசகங்கள் அவை.
உலகிலே மனிதன் தோன்றிய போதே பண்பட்டு அறமுடன் வாழ்ந்த எந்த ஒரு நாட்டையும் குமுகத்தையும்
காட்ட முடியாது. நாகரிகமும் பண்பாடும் பல ஆயிர ஆண்டு மாற்றங்களில் வந்தனவையே.
அந்த வகையில் அரேபியாவில், இன்னும் பண்பட நாளாகக் கூடும் என்று கருதப்படுகிற அந்த நாட்டில் நடக்கும்
செயல்கள் எல்லாவற்றையும் ஞாயம் நீதி மனிதம் என்று சொல்லி அதுவே இசலாம் என்று ஒரு இசலாமியத் தலைவர்
சொன்னால் மக்களிடம் இசலாத்தின் நல்ல பகுதிகளைச் சிந்திக்க வாய்ப்பில்லாமல் போய் இசலாம் என்றாலே அச்சம்தான் வரும்
அல்லவா?
குழுக்குழுவாக பல்வேறு பெயர் புரியாத அமைப்புகளாகச் செயல்படுகிற இசலாம் அமைப்பினரின்
பாராட்டத்தக்க அணுகுமுறைகளே இசலாத்தை ஒழுகுபவர்கள் மேல், தொன்மையாக கிராமங்களில்
இருந்த/இருக்கின்ற நேயத்தைத் தக்கவைக்கும். ஆனால், போட்டி போட்டு, நான்தான் அதிக பற்றுள்ளவன்
அல்லது பற்றுள்ள அமைப்பு என்று காட்டிக் கொள்கிறதைப் போல சிலர் உக்கிரமாகச் செயல்படுவதும், அரேபியாவில்
நடக்கும் எல்லாமும் சரியே என்று வாதிட்டுக் கொண்டிருந்தால் யாரும் இது பற்றிப் பேசவே அச்சம்தான் கொள்வார்கள்.
பலனைச்சிறிதாகவும் பகையை அதிகமாகவும் ஏற்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கும்.
இதில் சாதாரண பொதுமக்களின் இறைவன், இறைப்பற்று, ஆன்மீகம் போன்றவைகளும் அடிபட்டுப் போகக்கூடும்.
ஆகவே அணுகுமுறை என்பது ஆழ்ந்து சிந்தித்து எடுக்க வேண்டியது. மிரட்டல் போக்கு நேயத்தை எடுத்து விடக் கூட்டியது.
கமல் என்ற கலைஞனை சிவாசிக்கு அடுத்து நான் விரும்புகின்ற போதும், அவரின் சுவரொட்டிப் படத்துக்கு
தேங்காய் உடைத்துத் தூபம் காட்டும் பகுத்தறிவாளார் கூட்டத்தில் நின்று சொல்லவில்லை. போர்க்குரலாக எழும்பியிருந்தால்
கமலும் அவரின் படமும் என்றளவில் இருந்திருக்கும். அதைத் தாண்டி அது மிரட்டல் குரலாகப் போனது இழப்பாகிப் போனது
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் - என்றைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்லூரிப் பிள்ளைகளைக் கூட கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதையும் 25ஆம் தேதி படம் இல்லை என்று தெரிந்தவுடன் அலுத்துக் கொண்ட பல விடலைகளின்
குரல்கள் மென்மையாக இல்லை என்பது அனைவருமே கவலைப் பட வேண்டிய ஒன்று.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 7:57 pm

சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் நேற்று பார்வையிட்டனர். நாளை இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது தடையை நீக்கி நீதிபதி உத்தரவிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. இதனால் விஸ்வரூபம் படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வரவில்லை. அதேபோல புதுவையிலும் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

அதன்படி நேற்று நீதிபதிக்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தனர். உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர், ஐந்து பதிவாளர்கள், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ஐந்து அரசு வக்கீல்கள், கமல்ஹாசன் தரப்பு வக்கீல் ராமன், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இஸ்லாமிய அமைப்பினரின் வக்கீல்களான சங்கரசுப்பு, ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் இதில்அடக்கம்.

படம் பார்த்து முடித்ததைத் தொடர்ந்து நாளை வரும் விசாரணையின்போது நீதிபதி வெங்கடராமன் தனது உத்தரவை வழங்கவுள்ளார். அப்போது தடை நீக்கப்படுமா என்பது குறித்துத் தெரிய வரும்.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 8:08 pm

[You must be registered and logged in to see this image.]
மின்னஞ்சல்.
அப்பரம் என்ன பண்ணவேண்டியது தானே

விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்- அரசுடன் பேச கமலுக்கு அட்வைஸ்


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 28, 2013 8:17 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 28, 2013 8:17 pm

மின்னஞ்சலில் வந்தது... விஸ்வரூபம் படம் இம் முகவரியில் பார்க்கலாமாம்.
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 2:20 pm

நன்றி - தினமலர்

"விஸ்வரூபம்' திரைப்படத்தை, தமிழக திரையரங்குகளில் வெளியிட தடை நீடிக்கும் நிலையில், பிப்., 2ம்தேதி, டி.டி.எச்., வாயிலாக வெளியிட கமல் தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. டி.டி.எச்., வாயிலாக ஒளிபரப்புவதை, மாநில அர” தடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,ல் வெளியிட, கமல் முடிவு செய்ததால் தான், முதல் பிரச்னை எழுந்தது. "டி.டி.எச்.,ல் வெளியிட்டால், திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்; திரையரங்குகளில் முதலில் வெளியிட்ட பின், படம் ஓடுவதற்கு, கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பின்பே, டி.டி.எச்.,ல் வெளியிட வேண்டும்' என, திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

கமல் சமாதானம்:

"டி.டி.எச்., புதிய தொழில்நுட்பம்; அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; டி.டி.எச்.,ல் படம் வெளியாவதால், திரையரங்கு வசூல் பாதிக்காது' என, கமல் சமாதானம் செய்து பார்த்தார்.ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் விடாப்பிடியாக இருந்ததால், திரையரங்கில், ஜன., 25ம் தேதியும், டி.டி.எச்.,ல், பிப்., 2ம் தேதியும் வெளியாகும் என, கமல் அறிவித்தார்.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முஸ்லிம்களின் எதிர்ப்பால், விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு வார தடையை, தமிழக அரசு விதித்துவிட்டது. விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடை கோரி மனு:

இந்த இக்கட்டான சூழலில், டி.டி.எச்., மூலம், பிப்., 2ம்தேதி விஸ்வரூபம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரையரங்குகளில் வெளியிட மட்டுமே, தமிழக அரசால் தடை விதிக்க முடியும்.மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், "டிவி' ஒளிபரப்புகளை கட்டுப்படுத்துவதால், டி.டி.எச்., ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது என, தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. "விஸ்வரூபம் படத்தை வெளியிட, எந்ததெந்த, டி.டி.எச்., நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனரோ, அந்த நிறுவனங்களுக்கு, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, முஸ்லிம்கள் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதி உள்ளது :

இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், பல நாடுகள் விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதித்துள்ளன. இந்நிலையில், செயற்கைகோள் ஒளிபரப்பில், ஒருபகுதிக்கு மட்டும் தடை செய்ய முடியுமா என்ற கேள்வியை, சைபர் கிரைம் அதிகாரிகள் எழுப்புகின்றனர்.ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்துதல், பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல், தனிப்பட்டவரின் சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுதல் ஆகியவற்றுக்கு, தொலைத் தொடர்பு ஒளிபரப்பு ஆணையம் தடை விதிக்கிறது.எனவே, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விஸ்வரூபம் படம் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு, ஒழுங்குமுறை ஆணை விதி ஒத்துவருவதால், டி.டி.எச்.,ல் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்படும் என, கேபிள் எம்.எல்.ஓ.,க்கள் தெரிவிக்கின்றனர்.

நஷ்டத்தை தடுக்க:

படத்தை, 100 கோடி ரூபாயில் தயாரித்து, திரையிட தாமதம் ஆவதால், பெரும் நஷ்டம் கமலுக்கு ஏற்படுகிறது. கோர்ட் போராட்டத்தைக் கடந்து, படம் வெளியாவதற்கு நீண்ட காலம் ஆகும்.மேலும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குதல், அதற்கு ஏற்றாற் போல் படத்தை முழுமைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு அவகாசம் தேவைப்படும். எனவே, டி.டி.எச்., வாயிலாக படத்தை வெளியிட, கமல் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

- நமது சிறப்பு நிருபர் -
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 2:21 pm

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 2:28 pm

மதுரை: தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எழிலரசு. இவர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி இந்த படத்திற்கு தமிழ கத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.

திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது.

இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது.

எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் தலீபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்," என்று கோரியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 4:16 pm

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.

நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார்.

மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.

இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமளவில் போலீஸ் குவிப்பு

இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 4:18 pm

கமலுடன் பேச தமிழக அரசு தயாராக இல்லை?!

Posted by: Shankar
Published: Tuesday, January 29, 2013, 14:17 [IST]

சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவிருக்கிறது.

அதற்கு முன், அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.

ஆனால் கமல், நேற்று வரை இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச தயாராக இருப்பதாக அறிவித்தாரே தவிர, அரசை அணுகப் போவதாகக் கூறவே இல்லை. அதே போல அரசும் கூட அவருடன் பேச விரும்பாத சூழலே உள்ளது.

ஆனால் இன்று அவர் அரசை அணுகி, விஸ்வரூபத்தை சுமூகமாக வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து கமல் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "காட்சிகளை வெட்டிவிட்டு இந்தப் படத்தை வெளியிடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. மேலும் அரசை அணுகும் திட்டம் எதுவும் கமலிடம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்," என்றனர்.

இதற்கிடையில் அரசும் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிடவோ, முடிவிலிருந்து பின்வாங்கவோ தயாராக இல்லை என்று தெரிகிறது. துப்பாக்கியில் காட்சிகளை வெட்டியது போல இந்தப் படத்திலும் வெட்டிவிட்டுப் போவதுதானே ... ஏன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறார் கமல்? என்றுதான் திருப்பிக் கேட்டுள்ளார்கள் அரசுத் தரப்பில் பேசியவர்கள்.

இதற்கிடையில் இன்றைய நீதிமன்ற விசாரணையில் கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படம் வெளி வருவதற்காக ஏக முறைகேடுகளைச் செய்துள்ளார் கமல் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளதால், கமலுக்கு உச்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு வெகு விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள். பார்க்கலாம்!

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 4:19 pm

நடிப்புத் தொழிலை மட்டும் பார்த்தால் இந்தச் சிக்கல் எழ வாய்ப்பு இல்லை.

அரசியல் பேசுவதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 9:57 pm

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை என தமிழக அரசு வாதம் செய்துள்ளது.இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை இன்று தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
தினமலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum