தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:19 pm

தெய்வத்தன்மை - கடவுளியல்பு.
தெய்வப்பசு - காமதேனு.
தெய்வப்பாவை - கொல்லிப் பாவை.
தெய்வப் புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி.
தெய்வப்புலமை - தெய்வீகமான அறிவு : தெய்வத்தன்மை வாய்ந்த புலமை.


தெய்வப்புள் - கருடன்.
தெய்வமணம் - எண்வகை மணத்துள் ஒன்று.
தெய்வமணி - குதிரைக் கழுத்திலுள்ள நற்சுழி : சிந்தாமணி : பரிசவேதி.
தெய்வம் - ஊழ் : எண் வகை மணத்தில் ஒன்று : கடவுள் : ஆண்டு.
தெய்வவிசுவாசம் - கடவுளிடம் நம்பிக்கை : கடவுள் உண்டென்ற கொள்கை.


தெய்வவீடு - விமானம்.
தெய்வவுத்தி - சீதேவி என்னுந் தலைக்கோலம்.
தெய்வாதீனம், தெய்வீகம் - தற்செயல் : தெய்வச் செயல்.
தெய்வீகமாதல் - இறத்தல்.
தெய்வோபாசனை - கடவுள் வழிபாடு.


தெரிகடை - தீரக்கழிகடை : இழிபொருள்.
தெரிகவி - பல கவிகளுள் தேர்ந்தெடுக்குங் கவி.
தெரிகோல் - பொருள்களை ஆராயுந் துலாக்கோல்.
தெரிசி - அறிவுடையோன் : குதிரை.
தெரிசியம் - காட்சி.


தெரிசொல் - அருமொழி விளக்கம் : காரணம் : சத்தியம்.
தெரிதரல் - அறிதல் : தோற்றுதல்.
தெரிதருதேற்றவுவமை - ஐயுற்றதனைத் தெரிந்துணர்வது.
தெரிதல் - அறிதல் : ஆராய்தல் : அலோசித்தல் : காணல் : தெரிந்து கொள்ளுதல்.
தெரித்தல் - எழுதல் : கொழித்தல் : சொல்லல் : தெரிவித்தல் : பங்கிடுதல் : மாறுபடுதல்.


தெரிபடுதல் - தெரிந்தெடுக்கப்படுதல் : தோன்றுதல்.
தெரிபொருள் - ஆன்மா.
தெரிப்பு - அறிவிப்பு : ஆராய்வு : எழுதுதல் : கொழிப்பு : சொல்லுதல் : பிரிப்பு.
தெரிமா - சிங்கம்.
தெரியக்காட்டுதல் - வெளிப்படுத்துதல்.


தெரியத்தெரிதல் - தெளிவாயறிதல்.
தெரியலர் - அறிவீனர் : தரியலர் : பகைவர்.
தெரியல் - ஆராய்தல் : காணல் : பூமாலை.
தெரியவருதல் - அறிதல்.
தெரியவைத்தல் - அறிவித்தல்.


தெரிவிடுதல் - ஆராய்தல் : தெரிந்தெடுத்தல்.
தெரிவித்தல் - அறிவித்தல் : வெளிப்படுத்தல்.
தெரிவு - அறிவு : ஆராய்வு : தேர்தல் : தெரிந்தெடுக்கப்படுதல்.
தெரிவை - பெண்களின் பருவத்தில் ஒன்று : 25 வயது முதல் 32 வயதுக்குட்பட்ட பெண் : கன்னியாராசி.
தெரு - வழி : வீதி.


தெருட்சி - அறிவு : தெளிவு.
தெருட்டு - இருது : தெருட்சி : தெருட்டென்னேவல்.
தெருட்டுதல் - அறிவுறுத்தல் : மனதைத் தெளிவித்தல் : வற்புறுத்தல்.
தெருணை - ஒருவகை மரம்.
தெருண்ட பெண் - இருதுவான பெண்.


தெருண்டமேலவர் - அறிவிற் சிறந்தவர்கள்.
தெருமரல் - கழலல் : மனச்சுழற்சி : அச்சம்.
தெருவிலழகி - குப்பைமேனி.
தெருளல் - இருதுவாதல் : தெளிதல்.
தெருளான் - அறிவிலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:19 pm

தெருளுடைமை - அறிவுடைமை.
தெருள் - அறிவு : தெருளென்னேவல் : தெளிவு.
தெருள்வி - தெளியச் செய்.
தெருள்வு - தெளிவு : விளக்கம்.
தெலிங்கம் - ஒரு நாடு.


தெல் - அஞ்சல் : கலாதி : நெடுங்கிடங்கு : நெடும்பாத்தி.
தெல்லடித்தல் - வஞ்சனை : இழுபறி : எத்து : குழப்பம்.
தெல்லுக்கட்டுதல் - இழுபறிப்படுதல் : பாத்திகட்டுதல்.
தெல்லுக்காரர் - அஞ்சற்காரர்.
தெவம் - மாமரம் : மாந்திமரம் : சூதமரம்.


தெவிட்டு - தெவிட்டென்னேவல் : நிறைவு : வெறுப்பு.
தெவிட்டுதல் - உமிழ்தல் : ஒலித்தல் : தேக்கிடுதல் : தங்குதல் : நிறைதல் : நினைத்தல் : 
வாந்தித்தல் : குவட்டுதல் : அருவருத்தல்.
தெவிள - திரள.
தெவுட்டல் - அடைதல் : கொப்பளித்தல் : ஒலி செய்தல் : தங்குதல் : நிறைதல் : நினைத்தல் : மறைத்தல்.
தெவுளல் - பெருகுதல்.


தெவ் - சத்துரு : பகை : போர்.
தெவ்வர் - பகைவர்.
தெவ்வினை - போர்.
தெவ்வு - பகை : போர்.
தெவ்வுதல் - கொள்ளுதல் : கவர்தல் : நிறைத்தல் : மன்றாடிக் கேட்டல்.


தெழி - ஒலி.
தெழித்தல் - அதட்டல் : கோபம் : சினக்குறிப்பு : துவைத்தல் : பேரொலி செய்தல் : பிரித்தல்.
தெழிப்பு - இரைச்சல் : தொனி.
தெழ்கு - இடையில் அணியும் அணிவகை.
தெளிஞன் - அறிஞன் : கல்வியிற் சிறந்தோன்.


தெளிதல் - அறிதல் : ஆராய்தல் : ஆலோசனை : ஊடுருவுதல் : கலக்கம் : கொழுக்குதல் : சுத்தமாதல் : தேறுதல் : நீங்கல்.
தெளித்தல் - ஒலித்தல் : கொழித்தல் : சுத்தமாக்குதல் : தூவல் தெரித்தல் : உறுதி செய்தல் : புரோட்சித்தல் : விதைத்தல்.
தெளிப்பு - தெரிப்பு : நிச்சயம் : விதைப்பு : வடிக்கை : தூவிகை.
தெளிரல் - உள்ளோசை : தெளிரென்னேவல்.
தெளிர்தல் - பிரகாசித்தல் : பேசலால் எழும் ஒலி : பொருந்துதல்.


தெளிர்த்தல் - ஒலித்தல் : செழித்தல் : மகிழ்ச்சியுறுதல்.
தெளிவு - அறிவு : குணவலங்காரம் : கொழுப்பு : தீர்க்கம் : துணிவு : மனத்தேற்றம் : வெளிச்சம் : விளக்கம் : 
சாறு : ஞானம் : ஆராய்ந்து கண்டது : நம்பிக்கை.
தெள் - தெள்ளென்னேவல்.
தெள்கு - ஒருவகைப் பூச்சி : தெள்கென்னேவல்.
தெள்குதல் - தெளிவித்தல் : வீசுதல் : தெளிவாதல்.


தெள்விளி - இசைப்பாட்டு : மகிழ்ச்சியால் ஆர்த்தல் : தெளிந்த சொற்கள்.
தெள்ளத்தெளிதல் - நன்றாகத் தெளிதல்.
தெள்ளி - யானை.
தெள்ளிச்சி - பூநீறு : உவர்மண்.
தெள்ளிமை - அறிவு : தெளிவு. 


தெள்ளியர் - அறிவுடையோர் : கல்வியிற் சிறந்தவர்.
தெள்ளு - தெள்கு : தெள்ளுதல் : தெள்ளென்னேவல்.
தெள்ளுதமிழ் - செந்தமிழ்.
தெள்ளுதல் - கொழித்தல் : தெளிவாதல் : ஆராய்தல் : அனுபவ முதிர்தல்.
தெள்ளேணம் - கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு.


தெறல் - வெம்மை : கோபிக்கை : அழிக்கை.
தெறி - தெறித்தல் : தெறியென்னேவல் : சிதறுகை : குறும்புப் பேச்சு : தெறிப்பு.
தெறிகெடுதல் - நிலைகெடுதல்.
தெறிக்கப்பேசுதல் - நிதானமின்றிக் கடுத்துப் பேசுதல்.
தெறித்தல் - அட்டா துட்டி பண்ணல் : அதைத்தல் : சிந்தல் : பாய்தல் : முறிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:20 pm

தெறிப்பு - அதைப்பு : சிந்துதல் : சுண்டுகை : முறிவு.
தெறிமுற்றினது - முழுதும் பழுத்தது.
தெறியன் - ஐதானது.
தெறு - சுடுகை : சினம் : அச்சம் : துன்பம்.
தெறுகுவர் - அழிப்பர்.


தெறுக்கால் - தேள் : விருச்சிக ராசி.
தெறுதல் - சுடுதல் : காய்ச்சுதல் : நீங்குதல் : அழித்தல் : தங்குதல் : வருத்துதல் : நெரித்தல்.
தெறுத்தல் - நெரித்தல்.
தெறுநர் - கொலையாளர் : பகைவர்.
தெறுவு - சுடுகை.


தெறுழ் - ஒரு காட்டுக் கொடி.
தெற்கு - தென் திக்கு : சிவேதை : யாமம்.
தெற்குத்திக்கணை - குழந்தை வலிப்பு நோய்.
தெற்றல் - சித்திர கூடம் : திண்ணை : பழிபாவம் விளைவிப்பவன் : வாசற்படி : மாடம் : தெற்றியம்பலம் : மேட்டிடம்.
தெற்று - அடைப்பு : இழைப்பு : தெற்றென்னேவல் : பின்னல் : மாறுபாடு : தேற்றம் : இடறுகை.


தெற்றுக்கால் - முட்டிக்கால்.
தெற்றுவாய் - திக்குவாய்.
தெற்றென - தெளிய : விரைவாக : கடுக.
தெனாது - தெற்கு : தெற்குள்ளது.
தென் - அழகு : இசை : எதிர் : கருமை : தெற்கு : தென்னை மரம் : இசைப்பாட்டு : இனிமை : தாளக்குறிப்பு :
கற்பு : வலப்பக்கம்.


தென்கலை - தமிழ் : தென்கலை நாமம்.
தென்கலையார் - வைணவரில் ஒரு பிரிவினர்.
தென்கால், தென்காற்று - சோழகம்.
தென்குமரி - ஓர் ஆறு.
தென்கோடு - தென்முனை.


தென்சார் - தென்பக்கம்.
தென்படுதல் - கிடைத்தல் : கண்முன் தோன்றுதல்.
தென்பாண்டிநாடு - நாஞ்சில் நாடாகும் பாண்டி.
தென்பாரதம் - நவகண்டத்தொன்று.
தென்பாரிசம் - தென்திசை.


தென்பார் - தென்னாடு : பாண்டி நாடு.
தென்பாலி - ஒரு பழைய தமிழ்நாடு.
தென்புலக்கோன் - இயமன்.
தென்புலம் - இயமலோகம்.
தென்புலத்தார் வேள்வி - பிதிரர் பொருட்டுச் செய்யும் தருப்பணம்.


தென்புலர் - இயமபடர்.
தென்மலை - சோலைமலை : பொதிய மலை.
தென்முனி - அகத்தியன்.
தென்றமிழ் - செந்தமிழ்.
தென்றல் - தென்றற்காற்று.


தென்றற்றேரான் - காமன்.
தென்றி - தெற்கு : தென்றற்காற்று.
தென்றிசைக்கோன் - இயமன்.
தென்றுதல் - சிதறுதல் : இனம்பிரிதல்.
தென்னர் - பகைவர் : தென்னாட்டவர் : பாண்டிய அரசர் : கூற்றுவன்.


தென்னல் - தென்றல்.
தென்னவன், தென்னன் - பாண்டியன் : இராவணன் : இயமன்.
தென்னி - வாழை.
தென்னிலம் - போர்க்களம்.
தென்னுதல் - கிளம்புதல் : நெம்புதல்.
தென்னுலகு - பிதிரர் உலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:20 pm

தே - ஓர் எழுத்து : கடவுள் : அருள் : கொள்ளுகை : தெய்வம் : நாயகன் : 
மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:21 pm

தே  - தெய்வம் ; தலைவன் ; தேடிப் பெறுதல்
தேக்கம்  - நிறைதல் ; தேங்குதல் ; நீரோட்டத்தின் தடை ; ஏப்பம் ; மனக் கலக்கம்
தேக்கிடு  - மிகுதியால் வெறுத்தல் செய் ; ஏப்பமிடு ; நிரம்பி வழி [தேக்கிடுதல்]
தேக்கு  - ஓட்டத்தைத் தடைச் செய் ; நிரம்பப் பருகு ; நிறைவுறு ; ஏப்பமிடு ; தெவிட்டு [தேக்குதல்] ; ஒரு மரம் ; கமுகு மரம்
தேகம்  - உடம்பு ; கமுகு


தேங்காய்  - தெங்கின் காய் ; இனிய காய்
தேங்குழல்  - அரிசி மாவினால் ஆன ஒரு பணியாரம்
தேசம்  - நாடு ; இடம் ; ஒளி
தேசாந்தரம்  - அயல் நாடு [தேசாந்தரி]
தேசாபிமானம்  - (தன்) நாட்டுப் பற்று [தேசாபிமானி]


தேசாவரம்  - திப்பிலி வேர்
தேசிகம்  - அந்த இடத்துக்கு உரிய பேச்சு ; ஒரு மொழியில் கலக்கும் அயல் மொழிச் சொல் ; ஒருவகைக் கூத்து ; அயல் நாட்டுப் பண் ; ஒளி ; பொன் ; அழகு
தேசிகன்  - குரு ; தந்தை ; சில மடாதி பதிகளுக்கு வழங்கும் பட்டப் பெயர் ; ஆசிரியன் ; தேசாந்தரி
தேசு  - ஒளி ; பிரகாசம் ; அழகு ; புகழ் ; பொன் ; ஞானம் ; பெருமை
தேட்டம்  - சம்பாதித்தல் ; சேகரித்த பொருள் ; விருப்பம் ; தேடுதல்


தேடு - நாடிச் செல் ; சம்பாதித்தல் செய் [தேடுதல்]
தேதி - மாதத்தின் பகுதியான நாள் 
தேம் - இனிமை ; தேன் ; நறுமணம் ; தேனீ ; கள் ; யானை மதம் ; நெய் ; தேசம் ; திசை ; ஏழாம் வேற்றுமை உருபு
தேம்பு - வாடு ; மெலிவுறு ; விம்மியழு ; வருந்து ; அழிந்து போ [தேம்புதல், தேம்பல்]
தேமல் - சுணங்கு ; தோல் பற்றிய நோய்


தேய்  - உரைக ; குறைவாகு ; மெலிந்து போ ; அழிந்து போ ; இறந்து போ ; உரைசச் செய் ; குறையச் செய் ; அழித்தல் செய் ; தேய்த்துத் துலக்கு ; துடைத்தல் செய் [தேய்தல், தேய்த்தல்]
தேய்பிறை  - குறையும் சந்திரன் ; கிருட்டின பக்கம்
தேய்மானம்  - தேய்வினால் உண்டாகும் நட்டம் ; சிக்கனம் ; சோம்பல்
தேயம்  - ஒளி ; செல்வம் ; நாடு ; இடம் ; உடல் ; களவு ; தியானிக்கத் தக்கது
தேயிலை  - ஒரு செடி


தேர் - ஆராய் ; அறி ; தெரிந்தெடு ; தேடு ; நிச்சயி ; பெறு ; ஐயுறு ; பயிற்சி மிகு [தேர்தல்] ; கலத்தல் செய் [தேர்த்தல்] ; இரதம் ; சிறுவரின் விளையாட்டுத் தேர் ; கானல் நீர்
தேர்ச்சி - ஆராய்ச்சி ; தெளிவு ; பயிற்சி ; பரீட்சையில் தேறுதல்
தேர்வு - ஆராய்ச்சி ; பயிற்சி ; அனுபவத்திறமை
தேரை - தவளை ; ஒருவகை நிலத்தவளை ; தேங்காய்க்கு உண்டாகும் ஒருவகை நோய் ; தூண்டிலில் அமைக்கும் உணவு
தேவடியாள் - தேவதாசி


தேவதாரம், தேவதாரு  -  ஒருவகை மரம்
தேவதை  - கடவுள் ; தெயவம்
தேவநாகரி  - சமஸ்கிருத மொழியின் வடிவெழுத்து
தேவபாடை  - சமஸ்கிருத மொழி
தேவர்  - கடவுளர் ; வானுலகவாசிகள் ; சில பெரியோருக்கு வழங்கும் சிறப்புப் பெயர் ; மறவர் இன மக்களின் சிறப்புப் பெயர்


தேவராட்டி  - தேவைதை ; ஆவேசமாகக் கூடிய ஒருத்தி
தேவரீர்  - பெரியோரை மரியாதையாக விளிக்கும் சொல்
தேவன்  - கடவுள் ; வானுலகவாசி ; மறவ இனத்தானுக்கு வழங்கும் ஒரு பட்டப் பெயர் ; அரசன்
தேவாங்கு  - ஒருவகை விலங்கு ; உயர் தர ஆடை வகை
தேவாரம்  - பூசை ; வீடுகளில் வழி படப்பெறும் கடவுள் ; அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மாரும் அருளிய பக்திப் பாடல்கள்


தேவாராதனை  - கடவுள் வழிபாடு
தேவி  - தெய்வ மகள் ; மனைவி ; தலைவி
தேவு  - தெய்வம்
தேவை  - காரியம் ; இன்றியமையாது வேண்டப்படும் ஒன்று ; விருப்பம் ; அடிமைத்தனம் ; இராமேசுவரம்
தேள்  - ஒரு விஷ ஜந்து ; விருச்சிகராசி


தேற்றம், தேற்றரவு  - உறுதி ; தெளிவு  ; மனம்கலங்காமை ; சூளுறவு ; செழிப்பு
தேற்று  - தெளியச் செய் ; தெளிவாக அறி ; சூளுறு ; ஆற்று ; வலிமையுண்டாக்கு [தேற்றுதல்] ; தெளிதல் ; தெளிவித்தல் ; தேற்றா மரம்
தேற  - முழுதும்
தேறல்  - தெளிவு ; தெளிந்த கள் ; தேன் ; தெளிந்த சாறு 
தேறு  - தெளிவாகு ; உண்மையெனக் கொள் ; மயக்கம் ; தெளி ; செழிப்புறு ; ஆறுதலுறு ; தேர்ச்சியுறு ; நம்பிக்கை கொள் ; நிச்சயி ; பொருந்து [தேறுதல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:21 pm

தேன்  - மது ; சாறு ; இனிமை ; கள் ; நறுமணம் ; தேனீ ; தேன் கூடு
தேன்குழல்  - தேங்குழல்
தேன் கூடு  - தேனீக்கள் கட்டும் கூடு
தேனடை  - தேன் கூடு
தேனி - தேன் திரட்டும் வண்டு


தேனு - பசு ; எருமை ; காமதேனு ; திருட்டு
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:22 pm

தேஎம் _ தேயம் : நாடு : இடம்.
தேகரசம் _  வியர்வை.
தேகவியோகம் _  இறப்பு.
தேகளி _  இடைகழி.
தேகனி _  மஞ்சள்.



தேகாந்தம் _  இறப்பு.
தேகாபிமானம் _  தேகப்பற்று.
தேகி _  ஆன்மா : புல்லுருவி.
தேக்கர் _  மிகுதி.
தேக்கொக்கு _  தேமா.



தேங்குதல் _  நிறைதல் : தங்குதல்: மிகுதல்: அஞ்சுதல்: தாமதித்தல்: மனம் கலங்குதல்.
தேசகன் _  நாடாள்வோன்.
தேசகாலம் _  காலநிகழ்ச்சி.
தேசனம் _  மூங்கில் : திருத்தம்.
தேசனி _  மஞ்சள் : மருள்.



தேசன் _  ஒளிமயமானவன்: சிவ பிரான்.
தேசாட்சரி _  உச்ச வேளையில் பாடப்படும் ஒரு பண்வகை.
தேசாந்திரி _ பரதேசி : பயணி.
தேசி _  பெரிய குதிரை : ஒரு பண்: ஒரு வகைக் கூத்து : அழகு : எலுமிச்சை மரம்.
தேடுதல் _  ஆராய்தல் : விசாரித்தல் : சம்பாதித்தல்: ஓம்புதல்: முயலுதல்.
தேட்குடிச்சி _  வருவண்டு.



தேட்டக்காரன் _  திருடன் : பொருள் தேடுவோன்.
தேட்டாண்மை _  நாட்ட்ம் : விசாரிப்பு : சம்பாதித்தியம்.
தேட்டாளன் _  சம்பாதித்தியம் : மிக்கவன் : புதல்வன்.
தேட்டு _ விருப்பம் : சுவையுணவு : பாதுகாப்பு.
தேட்டை _  தெளிவு : உயர்ந்தது.



தேணிறம் _  மாந்தளிர்க்கல்.
தேண்டுதல் _ துருவி நாடதல்.
தேநீர் _ தேயிலை : நீர்.
தேபூசை _ தெய்வ வழிபாடு.
தேப்பை _  தெப்பம்.



தேமம் _  ஈரம்.
தேமா _  மாமரவகை : நேர்நேர் என வரும் சீரைக்குறிக்கும் வாய்ப்பாடு.
தேமாங்கனி _ நேர்நேர் நிரையெனும் சீரைக்குறிக்கும் வாய்ப்பாடு.
தேம்பல் _  வாட்டம் : தேம்புதல்: மெலிதல்: விம்மியழுதல்: பழம்பூ : குறைந்த நிலை.
தேயன் _  திருடன் : நினைக்கப்படுவோன்.



தேயாமணி _  வைரமணி.
தேயாமதி _ முழு நிலவு.
தேயு _ நெருப்பு : மயக்கம்.
தேயுசகா _ நெருப்பின் நண்பனான காற்று.
தேயுலிங்கம் _ அக்கினி வடிவமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம்.


தேய்தல் _ குறைதல் : மெலிதல் : கழிதல்: அழிதல்: சாதல்.
தேய்தவளை _  தேரை.
தேய்த்தல் _  துலக்குதல்: செதுக்குதல்: குறைத்தல் : துடைத்தல் : அழித்தல்.
தேய்வு _  குறைபாடு : இழிவு : மெலிவு.
தேரகன் _  தேரோட்டி.



தேரடி _  தேர்ச்சக்கரம் : தேர் நிறுத்தப் பெறும் இடம்.
தேரர் _  பெளத்த முனிவர் : ஒரு சித்தர்.
தேரலர் _  பகைவர்.
தேரார் _   கல்லாதார் : பகைவர்.
தேரி _  மணல் : தரை : மணற் குன்று.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:22 pm

தேர்க்கால் _  தேர்ச்சக்கரம்.
தேர்தல் _  சிந்தித்தல் : ஆராய்தல்: தேடுதல்: உறுதி செய்தல் : மக்கட் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் அமைப்பு முறை.
தேர்ந்தவன் _  அறிஞன் : வல்லவன். 
தேர்ப்பாகன் _  சாரதி : தேரோட்டி : வலவன்: புதன்.
தேர்மறம் _  அரசனது போர்த்தேரின் சிறப்புக் கூறும் புறத்துறை.


தேர்வடம் _  தேரிழுக்கும் கயிறு.
தேலிக்கை _  எளியது.
தேலுதல் _ தப்புதல் : தேறுதல்.
தேவகணம் _  தேவர்களின் கூட்டம்.
தேகண்ணி _  மலை வேப்பமரம்.



தேவகந்தம் _  குங்கிலியம்.
தேவகாந்தாரி _  ஒரு பண்.
தேவகுசுமம் _  கிராம்பு.
தேவகுஞ்சரி _  தெய்வ யானை.
தேவகுரு _ வியாழ பகவான்.


தேவகோட்டம் _  கோயில்.
தேவ கோடி _  ஒரு பேரெண்.
தேவக்கிரியை _  ஒரு பண் : தெய்வச் செயல்.
தேவசங்கு _  சங்க நிதி.
தேவசபை _  இந்திர சபை.




தேவசேனாபதி _  முருகக் கடவுள்.
தேவதச்சன் _  விசுவகன்மா.
தேவதத்தம் _  கோயிலுக்கு வழங்கும் கொடை: அருச்சுனன் கைச் சங்கு.
தேவதரு _  கற்பக மரம் : வேப்ப மரம்.
தேவதா _  தெய்வம் : பிசாசம்.



தேவதாகாரம் _  கோயில்.
தேவதாசன் _  தெய்வத் தொண்டன்: அரிச்சந்திரன்மைந்தன்.
தேவதாசி _  கோயிற் பணிவிடை செய்யும் கணிகை : தேவலோகத்து நடன மகளிர்.
தேவதாடம் _  இராகு : தீ.
தேவதாமரை _  பதும நிதி.



தேவதாயம் _  கோயிலுக்கு விடப்பட்ட நிலம்.
தேவதீபம் _  கண்.
தேவதூபம் _  வெள்ளைக் குங்கிலியம்.
தேவபதி _  இந்திரன்.
தேவ பூமி _  தேவலோகம்.



தேவப்பிரமா _  நாரதர்.
தேவப்புள் _  அன்னம்.
தேவமாதா _  தேவர்களின் தாயான அதிதி : கன்னிமரியாள்.
தேவம் _  கடவுள்: அனிச்சை : மாமரம்.
தேவயானை _  இந்திரன் பட்டத்து யானையாகிய ஐராவதம் : முருகப் பெருமான் தேவியருள் ஒருத்தி.



தேவரகசியம் _  தேவர்க்கு மட்டும் தெரிந்த செய்தி.
தேவரகண்டன் _ திருவாரூர்ச் சிவபிரான்.
தேவரன் _  கணவருடன் பிறந்தவன்: கொழுந்தன்.
தேவராசன் _  காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாளின் மற்றொரு பெயர்: தேவர்களின் அரசனான இந்திரன்.
தேவராலயம் _  தேவர்களின் இருப்பிடமான மகா மேரு.




தேவரான் _  காமதேனு.
தேவருணவு _  அமுதம்.
தேவலகன் _ கோயில் அருச்சகன்.
தேவலன் _  நன்னெறி நடப்போன்: அந்தணன்.
தேவலோகம் _  துறக்கம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:23 pm

தேவவருடம் _  365 மானுட ஆண்டுடையது.
தேவவிரதன் _  வீடுமன் : தேவனை வழிபடுவோன்.
தேவளம் _  கோயில்.
தேவனம் _  தாமரை : சூதாட்டம்.
தேவாசிரியன் _ திருவாரூரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்.


தேவாதிதேவன் _  முதற்கடவுள்.
தேவாத்துமா _ அரசமரம்.
தேவாபீ்ட்டை _ வெற்றிலை.
தேவாயுதம் _ வானவில்.
தேவாலயம் _  இறைவன் திருக்கோயில்: மேருமலை.



தேவான்னம் _  கடவுளுக்குப் படைக்கப்படும் அமுது.
தேவிகை _  ஊமத்தை.
தேவிகோட்டம் _  காளிகோயில்.
தேவேசியம் _  வியாழன்.
தேவேந்திரன் _  தேவர்களின் அரசன்.



தேளி _  தேங்காய் வகை : ஒரு மீன் வகை.
தேளை _  இதயத்துடிப்பு.
தேறகம் _  கடல் மீன்வகை.
தேறலர் _  தேறார் : பகைவர் : அறியாதவர்.
தேறுகடை _ தீர்மானம்.



தேறுதல் _  தெளிதல் : துணிதல்: பலித்தல்: முதிர்தல்: செழித்தல்: கூடுதல்: நம்புதல்.
தேறுநர் _  கற்றோர் : நம்பத்தக்கவர்.
தேறுமுகம் _  பற்றுக்கோடு.
தேற்றா _ தேற்றா மரம்.
தேற்றாங்கொட்டை _  கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் தேற்றாமர விதை.



தேற்றார் _  அறிவிலார் : பகைவர்.
தேற்றுதல் _  தெளிவித்தல்: சூளுறுதல்: ஆற்றுதல்: தேறுதல் கூறுதல்: ஊக்கப் படுத்துதல்.
தேற்றேகாரம் _  உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம்.
தேனம் _  பெருங்கடல்.
தேனருவி _  குற்றால மலையின் மேலுள்ள ஓர் அருவி.



தேனன் _  திருடன்.
தேனித்தல் _  இனித்தல்: மகிழ்தல்: தியானித்தல்.
தேனுகம் _  பெண்யானை.
தேனுகாரி _  தேனுகனுக்குப் பகைவனான கண்ணபிரான்.
தேனூறுதல் _  இனிமையாதல்.



தேனெய் _ தேன்.
தேனெறும்பு _  பெரிய எறும்பு : நஞ்சுள்ள எறும்பு வகை.
தேன் கதலி _  வாழை வகை.
தேன் மரம் _  மகாகனி மரம்.
தேன் மெழுகு _ தேனடையில் உள்ள மெழுகு.
தேன் வதை _  தேன் கூடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:24 pm

தை - ஓர் எழுத்து : ஒரு திங்கள் : தாளக்குறிப்பின் ஒன்று : தைக்கத்தக்கவை : பூச நாள் : 
மகரராசி : அலங்காரம் : மரக்கன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:24 pm

தைசம் _  பூச நாள்.
தைதம் _  விரல் நுனி.
தைதிலம் _  காண்டாமிருகம்.
தைதேயர் _  அரக்கர்.
தைத்தல் _ தையலிடுதல்: பொருத்துதல்: இணைத்தல்: வலை பின்னுதல்: தொடுத்தல்: கோத்தல்: பதித்தல்: அடைத்தல்: ஊடுருவுதல்.


தைத்திய குரு _ அசுரர் குருவான சுக்கிரன்.
தைத்தியர் _ திதி என்பவளின் மைந்தரும் பதினெண் கணத்துள் ஒரு வகையினருமான அசுரர்.
தைத்தியாரி _ அசுரர்களின் பகைவரான திருமால்.
தைத்திரீயம் _  யஜுர் வேத சாகைகளுள் ஒன்று: ஒரு உபநிடதம்.
தைப்பான் _  தையற்காரன் ஊசி.



தைப்பை _  சட்டை.
தையல் _  பெண்: புனையப்படுவது: தைப்பு : மேகம் : கட்டழகு.
தையற்காரன் _  துணி தைப்பவன்.
தைரியம் _  குதிரையின் பெருமித நடை: மனத் துணிவு.
தைலபீதம் _  அத்திப்பிசின்.


தைலம் _  எண்ணெய் : மரச்சந்து : மணப் பண்டங்களுள் ஒன்று.
தைலா _  மரப்பெட்டி.
தைலி _ பணப்பை.
தைலிகன் _  எண்ணெய் வாணிகன் : மருத்துவன்.
தைவதம் _  தெய்வம் : தெய்வ ஆராதனை: ஏழு சுரங்களுள் ஒன்று : ஆறாவது சுரம்.



தைவதீபம் _  தெய்வம் அருளிய விளக்கான கண்கள்.
தைவம் _  கடவுள்: தெய்வத்தின் வடிவம் : பரார்த்த லிங்க வகையுள் தேவர்களால் நிறுவப்பட்டது.
தைவரல் _ வருடுதல்: தடவுதல்: அலங்கரித்தல்.
தைவிகம் _  பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பட்டது : தெய்வத்தன்மையுடையது.
தைனியம் _  எளிமை : கீழ்மை : பொருளாசை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:25 pm

தொகம் - மதிப்பு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:25 pm

தொகல் - கூடல்  :  சுருங்கல்  :  சேர்தல்.
தொகாநிலை - வேற்றுமை முதலியன விரிந்து நிற்பது.
தொகு - கூடு  :  தொகையாகு  :  சேரு  :  சுருங்கு  :  கூட்டு  :  தொகைசெய்.
தொகுதல் - கூடுதல்  :  சுருங்குதல்  :  நெருங்குதல்  :  ஒன்றாதல்  :  அடுக்கி வருதல்  :  மொத்தமாதல்  :  
ஒடுங்குதல்  :  வீணாதல்  :  குட்டையாதல்.
தொகுதி - அளவு  :  கூட்டம்  :  பகுதி  :  வரிசை  :  சேர்க்கை  :  சாதி  :  மொத்த எண்.


தொகுதிப் பெயர் - குழூஉக் குறிப் பெயர்.
தொகுத்தல் - அளவு படுத்தல் : ஒழுங்காக்குதல் : கூட்டல் : சம்பாதித்தல் : சுருக்குதல் : தொக்கு நிற்கச் செய்தல்.
தொகுத்துக் காட்டல் - தொகையாகக் காண்பித்தல்.
தொகுத்துச் சுட்டல் - நூல் உத்தியின் ஒன்று.
தொகுத்துரை - பொழிப்புரை.


தொகுநிலைத் தொடர்மொழி - வேற்றுமை யுருபு முதலியன நடுவே தொக்கு நிற்கச் சொற்கள் தொடர்ந்து வருவது.
தொகுபு - கூடி.
தொகுபுலப் பொருட்டற் குறிப்பு - ஓர் அணி : அஃது உபமேய உபமானங்கட்குரிய தருமவிடயந் தொக்கு நிற்பது.
தொகுப்பு - தொகுத்தல்.
தொகை - கணக்கு வகை நான்கின் ஒன்று : கூட்டம் : சுருக்கம் : தொக்கு நிற்றல் : கூடுதல்.


தொகைச் சூத்திரம் - பலதிறப் பொருள்களையும் வேறு வேறாகத் தொகுத்துச் சொல்லும் சூத்திரம்.
தொகைத்தல் - தொகைப் படுத்துதல்.
தொகைநிலை - தொக்கு நிற்கும் நிலை : சமுகமாய் நிற்கை : சுருங்கி நிற்கை : புறத்துறை வகை.
தொகைநிலைச் செய்யுள் - ஒரு வகைப் பிரபந்தம்.
தொகைப் பொருள் - முதலிற் பல காரணங்களால் விரித்துச் சொன்ன பொருளை முடிவிற் சுருக்கிச் சொல்லுதல் : 
பிண்டப் பொருள் : தொகை நிலைத் தொடரின் பொருள்.


தொகையுவமம் - உபமான உபமேயங்களின் உவம உருபும் பொதுத் தன்மையும் தொக்கு நிற்கச் சொல்லப்படும் அணி.
தொகையுவமை - பண்பு முதலாயின தொக்கு நிற்பது.
தொகைவிரி - தொகுத்தாலும் விரித்தலுமாயிருப்பது.
தொக்கடம் போடுதல் - உடம்பு பிடித்தல் : கசக்கிச் சாறு பிழிதல்.
தொக்கடவு - குறுக்கு வழி : ஊடு பாதை.


தொக்கடி - குடலை : காவற்குடிசை : சிறுகூடை.
தொக்கடை - வறுமை : தரித்திரம்.
தொக்கம் - தொங்கல் : வழக்கு : சீரணமாகாமல் வயிற்றில் சிக்கிக் கொள்ளும் பொருள்.
தொக்கார் - அடுத்தோர் : தோழர்.
தொக்கிந்திரியக் காட்சி - ஓர் அளவை : அது பரிசம் அறிதல்.


தொக்கு - அற்பம் : உடல் : தோல் : அது பஞ்ச விந்திரியத்தொன்று : சருமம் : மரப்பட்டை.
தொக்குநிற்றல் - உருபு முதலியன சுருங்கி நிற்றல்.
தொங்கட்டான் - தொங்கலாயுள்ள அணிவகை : உடையைத் தளர்வாகக் கட்டுகை.
தொங்கணி - ஆபரணத்தின் கடைப் புணர்வு.
தொங்கல் - ஆண்மயிர் : ஆபரணக் கடைப்பூட்டு : காதணி : குதித்தல் : தங்கல் : தொங்குதல் : பீலி : பீலிக் குஞ்சம் : 
பீலிக் குடை : பூமாலை : மயிர் : மயில்தோகை : முந்தல் : மூலைமூடும் உத்தரீயம் : முனை : வெண்குடை.


தொங்கல் விழுதல் - குறைவாதல்.
தொங்கண் - கள்வன் : சோம்பேறி.
தொங்காரம் - ஏளனம்.
தொங்கி - கள்ளி : திருடி : ஏடா கூடி.
தொங்கிசம் - அழிவு : நட்டம்.


தொங்கிப் போதல் - வைத்தது காணாமற் போதல் : பொருள் மோசம் போதல் : வழியிற் களைத்துத் தங்குதல் : 
சாதல் : ஓடிப்போதல்.
தொங்கு கிழவன் - தொண்டு கிழவன்.
தொங்குதல் - குதித்தல் : தங்குதல் : தூங்குதல் : அண்டிக் கிடத்தல் : திடமாதல் : கிடைத்தல் : சாதல் : முடிவு பெறாது
தாமதித்திருத்தல் : உதவியற்றிருத்தல்.
தொசம் - துவசம் : கொடி.
தொடக்கம் - ஆதி : செல்வம் : துவக்கம் : வருக்கம்.


தொடக்கு - துடக்கு : கட்டு : பாசம் : பற்று : சூதகம் முதலிய தீட்டு : குஞ்சம்.
தொடங்கல் - முயலல்.
தொடங்கு - காலணி : தொடங்கென்னேவல் : விலங்கு.
தொடராமுறி - விடுதலைப் பத்திரம்.
தொடரி - ஒரு செடி : தொடர்ந்து : நாற்றி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:26 pm

தொடரெழுத்து - நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவி நிற்கும் எழுத்து.
தொடர் - கோவை : சங்கிலி : தொடரென்னேவல் : தொடர்பு : நூல் : பஞ்சிநூல் : பழைமை : பிசின் : பூமாலை : வாசம் : விலங்கு.
தொடர்ச்சி - உரிமை : ஒழுங்கு : தொடர்பு : பற்றுதல் : பூத்திரள் : முயற்சி : வழக்கு.
தொடர்ச்சொற்புணர்த்தல் - தந்திர உத்தியின் ஒன்று : அஃது ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்து வைத்தல்.
தொடர்தல் - கட்டல் : தேடல் : பின்போதல் : பின்தொடர்தல் : முயற்சியாயிருத்தல் : வழக்கிலே அழைத்தல்.


தொடர்நிலைச்செய்யுள் - பொருளால் ஆயினுஞ் சொல்லால் ஆயினும் தொடர்ந்து நிற்கும் பாடல்.
தொடர்பு - உறவு : ஒழுங்கு : நண்பு : சேர்மானம் : தொடர்ச்சி : பழைமை : பா : பாட்டு : முறைமை.
தொடர்ப்பாடு - தொடர்ச்சி : பற்று : காமநுகர்ச்சி.
தொடர்மொழி - புணர்மொழி.
தொடர்வட்டி - வட்டிக்கு வட்டி.


தொடலை - மகளிர் விளையாட்டு : மாலை : விளையாட்டு : தூக்கு : தொங்க விடுகை : மணிக் கோவைகளால்
தொடுக்கப்பட்ட மேகலை.
தொடல் - சார்தல் : தீண்டல் : தோண்டல் : பீடித்தல் : புசித்தல்.
தொடி - ஒரு பலம் : கங்கணம் : கைவளை : பூண் : வளைவு : தோள்வளை : வீரவளை : சுற்று வட்டம்.
தொடிசு - உடந்தை : தொடர்பு.
தொடிமகள் - விறலி.


தொடு - அணாப்பு : தொடுவென்னேவல் : தோண்டல் : தோட்டம் : பரிசம் : மருதநிலம் : வஞ்சம் : வயல்.
தொடுகழல் - செருப்பு : தொடுதோல்.
தொடுகை - தோண்டுகை : பரிசம்.
தொடுக்கம் - பொன்.
தொடுசு - தொடிசு.


தொடுதல் - அணிதல் : இணைந்திருத்தல் : உண்ணல் : எய்தல் : தீண்டல் : தொடங்கல் : தோண்டல் : பிடித்தல்.
தொடுதுணை - உதவி.
தொடுதோல் - செருப்பு.
தொடுத்தல் - அணிதல் : அறிமுகமாதல் : உருவாக்கல் : கட்டல் : கோத்தல் : செலுத்தல் : சேர்த்தல் : தொடங்கல் : 
பற்றல் : பாத்தொடுத்தல் : பிணைத்தல் : பொருத்தல் : வில்வளைத்தல் : வைத்தல்.
தொடுபதம் - சோறு.


தொடுப்பி - புறங்கூறுவோன். 
தொடுப்பு - கட்டு : கலப்பை : கூட்டு : கோவை : கோள் : சங்கிலி : சேர்க்கை : தந்திரம் : துவக்கம் : பழக்கம் : 
பாதரட்சை : மரக் கொம்பு : வழக்கு : வெறும் புறங் கூறல்.
தொடுப்புக்கத்தி - பட்டாக்கத்தி.
தொடு வழக்கு - கள்ள வழக்கு.
தொடுவாய் - ஆறுங் கடலுஞ் சேரும் இடம்.


தொடுவான் - அடிவானம் : பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு.
தொடுவை - கூட்டாளி : தொடுத்திருப்பது : புது யானையைப் பழக்கும் யானை.
தொடுவை வள்ளம் - துணைச் சிறு படகு.
தொடை - அம்பு : உத்திரந் தாங்குங் கட்டை : செய்யுளைத் தொடுத்தல் : துடை : தொடர்ச்சி : நாணி : பூங்கொத்து : 
பூமாலை : மதில் : மாலை : வீணை முதலியவற்றின் நரம்பு :  கட்டு.
தொடை தட்டி வேளாளர் - நாவிதர்.


தொடையல் - தொடர்ச்சி : கட்டுகை : தோளணிமாலை : தொடுத்த மாலை : தேன்கூடு : நாசம்.
தொடைவாழை - ஒரு செடி : ஒரு நோய்.
தொட்டல் - தோண்டல் : தீண்டுகை : கட்டுகை : உண்ணுகை.
தொட்டவிரல் தரித்தான் - பெருங் குறிஞ்சி.
தொட்டாட்டுமணியம் - குற்றேவல்.


தொட்டால் சுருங்கி - ஒருவகைச் செடி : தொட்டால் வாடி.
தொட்டி - காஞ்சொறி : கெண்டம் : தொட்டில் : வேலி : குறுந்தொட்டி : நீர்த்தொட்டி : அழி : குப்பைத் தொட்டி : தொட்டிக் கட்டு : 
அம்பாரி : கள் : சிறுகாஞ்சொறி : சிற்றாமுட்டி மரம் : முத்துச் சிப்பி விற்கும் இடம் : சிற்றூர் : பத்தல் : முன்னணை.
தொட்டிமை - ஒற்றுமை : அழகு.
தொட்டியம் - ஒரு நாடு : ஒரு மொழி : ஒரு வித்தை.
தொட்டியர் - ஒரு சாதியார்.


தொட்டில் - சிறுகட்டில் : தொட்டி.
தொட்டு - தொடங்கி : பற்றயெனெச்சம் : தோண்டி : தொடர்தல் : தொடங்கி : செறிந்து : தோண்டுங் கருவி.
தொண்டகம் - குறிஞ்சிப்பறை : ஆகோட்பறை : தொண்டு பூண்ட இருதயம்.
தொண்டலம் - யானைத் துதிக்கை.
தொண்டிக்கள் - நெல்லாற் சமைத்த கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:26 pm

தொண்டிச்சி - அடியாள்.
தொண்டியோர் - சோழ குலத்தோர் : சேரர்.
தொண்டீரன் - தொண்டைமான்.
தொண்டு - அடிமை : ஒன்பது : ஒரு பூடு : பணி : பழமை : கடவுள் வழிபாடு : ஒழுக்கங் கெட்டவன்[ள்] : 
ஒடுக்க வழி : உருவு சுருக்கு.
தொண்டை - ஆதொண்டைச் செடி : இனிய குரல் : கொவ்வைச் செடி : பெருங்குரல் : மிடறு : யானைத் துதிக்கை.


தொண்டைத் தூரு - உள்நாக்கு வளரும் நோய்.
தொண்டையுடைதல் - பருவத்தாற் குரல் மாறுதல்.
தொதி - பப்பரப்புளி.
தொத்தன் - அடிமைக்காரன்.
தொத்தியேறுதல் - அதிகாரங்காட்டுதல் : பற்றியேறுதல்.


தொத்து - அடிமை : ஒட்டு : சார்பு : பழமை : பூங்கொத்து : திரள் : சம்பந்தம் : பற்று : வைப்பாட்டி : தொத்து நோய்க் குணம்.
தொந்தப்பழி - நீடித்து நிற்கும் பழி.
தொந்தம் - அன்னியோன்னியம் : இரட்டித்தது : சலஞ்சாதித்தல் : சேர்க்கை : தொடர்பு : பழைமை : போர் : 
புணர்ச்சி : இரட்டை : பகை : ஆயுதவகை : நெருங்கிய பழக்கம்.
தொந்தயுத்தம் - விடாப்போர்.
தொந்தரவு - வருத்தம்.


தொந்தவினை - பழவினை.
தொந்தி - சதைமடிப்பு : தொப்பை : பெருவயிறு : நோய் வகை.
தொந்தித்தல் - தொடர்தல்.
தொந்திப்பு - இரட்டிப்பு : தொடர்பு : பேதம் : தாதுக் கலப்பு : சந்திப்பு : தீராப்பகை.
தொப்பணம் - தோப்புக்கரணம்.


தொப்பற - நன்றாய்.
தொப்பாரம் - கொப்புளம் : தோள் பாரம் : நெடுஞ் சப்பாத்து : பேரில்லம் : பொட்டணம் : துணிப் பெருமூட்டை : 
முகமூடி வகை : புற்கட்டு.
தொப்பி - கள் : குல்லா.
தொப்புள் - கொப்பூழ்.
தொப்பை - தொந்தி : தோற்பை : கொப்புளம்.


தொம்பம் - கம்பக் கூத்து.
தொம்பரம் - புந்தி : பேரில்லம்.
தொம்பரை - ஊர் சுற்றி.
தொம்பர் - கழைக்கூத்தர்.
தொம்பறை - களஞ்சியம் : பெரு வயிறன்.


தொம்பை - தானியங்களைத் தொகுத்து வைக்குங் குதிர்.
தொம்மனை, தொம்மை - மிகப் பருத்தது.
தொயில் - தொய்யில்.
தொய் - குற்றம் : தொய்ந்து போ : சோர் : தளரு : வளை.
தொய்தல் - இளகல் : இளைத்தல் : தளர்தல் : துவளுதல் : வளைதல் : பயன் குறைதல்.


தொய்தன் - துவிதன்.
தொய்யகம் - தலைப்பாளை : தலைக் கோலத்தின் ஓர் உறுப்பு : தலையணியில் ஒன்றுள்.
தொய்யப்போடுதல் - ஒரு பயனுக்காகக் காரியத்தைச் சிறிது தாழ்த்துதல்.
தொய்யல் - அகமகிழ்ச்சி : இளைத்தல் : இன்பம் : உழவு : மகிழ்ச்சி : சேறு : சோர்தல் : துன்பம்.
தொய்யவாங்குதல் - மெல்ல மூச்சு வருதல் : நிலை தாழ்த்துதல்.


தொய்யவிடுதல் - கயிறு முதலியவற்றைத் தளர விடுதல் : காரியத்தை நிறுத்தி வைத்தல் : விலையேறுதற்
பொருட்டு விலைப் பொருள்களை நிறுத்தி வைத்தல்.
தொய்யா - துயிலி : கெடாத : தொய்யாக் கீரை.
தொய்யாது - உழாது : கெடாது.
தொய்யில் - உழுநிலம் : ஒரு கீரை : சாந்தினால் உடலில் இடுங்கோலம் : நீர்க் கொடி வகை : நீங்குகை : அழகு : கிளர்ச்சி.
தொய்வு - இளைப்பு : ஈளை : சுவாசமுட்டு : தொய்தல்.


தொலி - உமி : தொலியென்னேவல் : தோல்.
தொலித்தல் - உரித்தல்.
தொலை - உவமை : எல்லை : துலை தூரம் : தொலையென்னேவல்.
தொலைச்சிய - கொன்ற : அழித்த.
தொலைதல் - ஒழிதல் : கெடுதல் : சாதல் : நீங்குதல் : முடிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:26 pm

தொலைதூரம் - தொலைவெட்டு : மிகுதூரம்.
தொலைத்தல் - அழித்தல் : கொல்லல் : நீக்குதல் : சிதைத்தல் : கெட்டுப் போக்குதல் : சேதப்படுத்தல் : முற்றுப் பெறச் செய்தல்.
தொலைபு - கெடுதல் : அழிகை.
தொலைப்பி - கெடுதி : இழிவு : நட்டம்.
தொலைவு - அழிவு : தூரம் : தோல்வி.


தொலைவெட்டு - வெகுதூரம்.
தொல் - பழைய : இயற்கையான.
தொல்லியல் - பழைய உழுவலன்பு.
தொல்லெழில் - இயற்கையழகு.
தொல்லை - தொந்தரவு : பழைமை : துன்பம் : செயல்.


தொல்லையார் - தேவர்.
தொல்வரவு - பழங்குடியொழுக்கம்.
தொழல் - தொழுதல்.
தொழிதல் - சிதறுதல்.
தொழித்தல் - சினத்தல் : ஒலித்தல் : சிதறச் செய்தல்.


தொழிலி - தொழிலையுடையாள்.
தொழில் - அலுவல் : செயல் : தன்மை : வினைச்சொல் : வேலை.
தொழில் முடக்கம் - தொழில் செய்ய மறுத்திருக்கை.
தொழிற்கை - அபிநயங் காட்டுங்கை.
தொழிற்படுதல் - காரியப்படுதல்.


தொழிற்று - தொழிலையுடையது.
தொழின்மொழி - வினைச் சொல்.
தொழு - இரேவதி : குட்ட நோய் : தொழுமரம் : தொழுவென்னேவல் : பசுக்கூடம் : மாட்டுக் கொட்டில் : 
சிறைக்கூடம் : நீர் நிலை.
தொழுகண்ணி - அரவாட்டிப் பச்சை.
தொழுகல்லீர் - தொழமாட்டாதீர்.


தொழுகுலத்தோர் - ஒழுக்கமுடைய குலத்தவர் : பார்ப்பார்.
தொழுகை - தொழுதல்.
தொழுக்கன் - அடிமை.
தொழுதல் - கும்பிடுதல் : வணங்கல்.
தொழுதி - கூட்டம் : திரட்சி : பறவைக் கூட்டத் தொலி : தொழுகிறாய் : திரள் : புட்கூட்டம்.


தொழுத்தை - அடிமைப் பெண் : கற்பில்லாதவள் : வேலைக்காரி.
தொழுநோய் - குட்ட நோய்.
தொழுந்தகை - தொழத்தக்கவன்.
தொழுப்பு - உழு தொழில் வளைப்பு.
தொழுமரம் - உழலை : துலங்குமரம்.


தொழும்பர் - அடிமைகள் : குற்றேவல் செய்வோர்.
தொழும்பு - அடிமை : அடிமை வேலை : கடவுள் கைங்கரியம்.
தொழுவம் - தொழுவோம் : பட்டி.
தொழுவறை - மாட்டுக் கொட்டில் : தொழுவம்.
தொழுவர் - மருதநில மாக்கள் : தொழில் செய்வோர்.


தொழுவை - மடு.
தொழுனை - யமுனையாறு.
தொளி - சேறு : தொளியென்னேவல்.
தொளியடித்தல் - வயலில் சேறு கலக்குதல்.
தொளை - உட்டுளை : துளைமூங்கில்.


தொள்கு - வலை : சேறு : பள்ளம் : குழி.
தொள்ள - துளைக்க : நெகிழ.
தொள்ளம் - சேறு : தெப்பம்.
தொள்ளல் - துளை : துளைத்தல் : நெகிழ்வானது.
தொள்ளாடுதல் - தளர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:27 pm

தொள்ளாயிரம் - ஒன்பது நூறு.
தொள்ளி - குழை சோறு.
தொள்ளுதல் - துளைத்தல்.
தொள்ளை - துளை : துளையுடைப் பொருள் : மரக்கலம் : மரக்கால் : குழி : குற்றம் : அறியாமை.
தொறு - அடிமை : கூட்டம் : தொழில் பயிறல் : பசுக் கூட்டம் : பொலிவு : மிகுதி : தொழு : இடைச்சாதி.


தொறுத்தி - இடைச்சி.
தொறுப்புதல் - அலப்புதல்.
தொறுவர் - இடையர்.
தொறுவி - இடைச்சி : தொறுத்தி.
தொறுவிடம் - மாட்டுத்தொழு.


தொறுவு - தொறு : செய்தொழில் : அடிமை : தொழில் : பசுக் கூட்டம் : அடியாள்.
தொற்ற - ஏறுதல் : ஒட்டு : தொற்றென்னேவல் : பற்று : பொருத்து : மூலைக்கையோடணைத்த மரம்.
தொனி - ஒலி : தொனியென்னேவல்.
தொனித்தல் - ஒலித்தல் : குறிப்புப் பொருள் தோன்றுதல் : சொல்லுதல்.
தொனிப்பு - ஒலி : கூச்சல்.


தொன்மரம் - ஆலமரம்.
தொன்மை - பழைமை : பாவின் எண்வகை வனப்பின் ஒன்று.
தொன்றுதொட்டு - அனாதி காலமாய்.
தொன்று - பழைமை : பழையது ஊழ்.
தொன்னீர் - கடல்.
தொன்னை - இலையாற் செய்த ஏனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:27 pm

தோ - நாயைக் கூப்பிடும் ஒலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:27 pm

தோகசம் _  பால்.
தோகதம் _  விருப்பம்.
தோகம் _  சிறுமை : துயரம் : பால் : இளங்குழந்தை.
தோகலி _  அசோக மரம்.
தோகை _ மயில் : மயிற்பீலி : இறகு : பெண் : விலங்கின் வால்: முன்றானை : பெருங்கொடி : நெல் கரும்பு வாழை முதலியவற்றின் இலை: பெண் மயிர்: ஆடை : கொய்சகம் : தொங்கல்: ஆண் குறியின் நுனித்தோல் : மீன் வகை.


தோகைப்பகை _ மயிலுக்குப் பகையான ஓந்தி.
தோகை மயில் _  ஆண்மயில்.
தோக்கு _  கைத்துப்பாக்கி.
தோக்குமம் _  காதின் குறும்பி: முகில்.
தோக்கை _ சீலை : முன்றானை : கொய்சகம் : மேற்போர்வை.



தோசை _  மாவாலான ஒரு பணிகார வகை.
தோடகம் _  தாமரை : கொப்புளம்.
தோடம் _  குறை : பாவம் : பிணி : சன்னி : விடக்காய்ச்சல்.
தோடயம் _  நாடகத்தின் முன் தொழிப்பாட்டு.
தோடா _  கையணி வகை : கல்வித்திறனுக்குப் பரிசிலாகப்பெறும் பொற்காப்பு.


தோடி _ ஒரு பண்.
தோடு _ பூ : பூவிதழ் : ஓலை : காதணி : பழத்தின் ஓடு : தோல் : இலை.
தோடை _  ஆடாதோடை : கிச்சிலி வகை : முத்துக்குளியலில் ஒரு முழுக்கில் கிடைக்கும் சிப்பிகள் : மாட்டு நோய் வகை.
தோட்காப்பு _  தோள் வளை.
தோட்டக்கால் _  கொல்லை நிலம்.


தோட்டப்பயிர் _  காய்கறிகள்.
தோட்டம் _  படப்பை : வீட்டுக்கொல்லை : சோலை.
தோட்டா _  துப்பாக்கி வெடி மருந்து.
தோட்டி _  காவல் : கதவு : ஆணை : மனைவாயில் : செங்காந்தள் மலர் : நெல்லி மரம் : அங்குசம், கொக்கி : வெட்டியான் : துப்பரவு செய்வோன்.
தோட்டுணை _  கணவன்.



தோணாமுகம் _  அகழ் சூழ்ந்த பெரிய நகரம்.
தோணி _  ஓடம் மிதவை : மரக்கலம் : நீர் : சேறு : நீர்த்தொட்டி : மதிலுறுப்பு : அம்பு : இரேவதி நட்சத்திரம் : சிறு வழு துணங்காய்.
தோணித்துறை _ துறைமுகம்.
தோணிபுரம் _  சீகாழி.
தோணியம் _  அம்பு.



தோணோக்கம் _  மகளிர் விளையாட்டு வகை.
தோண்டான் _  ஓநாய்.
தோண்டி _ நீர் இறைக்கும் சிறு பாத்திரம்.
தோண்டுதல் _  அகழ்தல் : குடைதல்: முகத்தல்.
தோண்முதல் _  புயவலிமை.



தோண்மேல் _  பிடரி.
தோதகம் _  வஞ்சகம் : வருத்தம் : சாலவித்தை : கற்பொழுக்கமின்மை.
தோதம் _  பசுவின் கன்று : வருத்தம்.
தோதனம் _  அங்குசம் : ஈட்டி.
தோது _  வசதி : பொருத்தம் : ஒப்பு : உபாயம் : தொடர்பு : போட்டி.



தோத்திரம் _  புகழ்ச்சி : வணக்க மொழி.
தோப்பி _  நெல்லாற் சமைத்த கள்: கள்.
தோப்பு _  அடர்ந்த மரங்கள் உள்ள இடம் : சோலை.
தோப்புக்கரணம் _  இரு கை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கி அமர்ந்து எழுதல்.
தோமம் _  கூட்டம் : சாம வேதத்தின் தொகுதி.



தோமரம் _  எறியாயுதம் : கைவேல்: தண்டாயுதம்.
தோம் _  குற்றம் : தீமை : துன்பம்.
தோம்பு _  சிவப்பு : நிலவிவரக் கணக்கு.
தோயசம் _  தாமரை.
தோயசூசகம் _  தவளை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:28 pm

தோயதம் _  மேகம் : வெண்ணெய் : நெய்.
தோயதரம் _  நீர் விளங்கும் மேகம்.
தோயதி _  கடல்.
தோயம் _  கடல் : நீர்.
தோயல் _  கலத்தல் : குளித்தல் : தயிர் : தோய்தல்.



தோய்ச்சல் _ உறைகை.
தோய்தல் _ முழுகுதல்: நனைதல் : நிலத்துப்படிதல் : செறிதல்: அணைதல் : உறைதல்: கலத்தல் : பொருத்துதல்: ஒத்தல்.
தோய்த்தல் _  நனைத்தல் : சாய மேற்றுதல்: ஆடை துவைத்தல்.
தோரணம் _  அலங்கார வாயில் : தெருவில் அலங்கரிக்கும் மாலை வகை : தராசு தாங்கி: யானை நடை.
தோரணன் _ யானைப்பாகன்.



தோரணை _  நல்லொழுங்கு : முறை.
தோரத்தம் _  தொந்தரவு : கட்டாயம் : போர்க்குணம்.
தோராயம் _ எதிர்பார்ப்பு.
தோரி _  சோறு.
தோரிதம் _  குதிரை நடை.




தோரியம் _  கூத்து : வாச்சியம்.
தோரிய மகள் _ நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்.
தோரை _  மூங்கிலரிசி : மலை நெல்: இரத்தம் : பனை மர வகை : மங்கல் நிறம் : மயில் விசிறி : நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை.
தோர்த்தல் _ தோல்வியுறுதல் : இழத்தல்.
தோர்வை _  தோல்வி.


தோலனம் _ நிறுத்தல்.
தோலன் _  புல்லன் : அற்பன்.
தோலா _  ஒரு ரூபாய் எடை.
தோலாட்டம் _  கயமைத்தனம்.
தோலாண்டி _  இழிஞன்.



தோலாமை _  தோல்வியின்மை.
தோலி _  ஒரு மீன் வகை : அரக்கு : பழத்தோல்.
தோலிகை _ காது : ஊஞ்சல்.
தோல் _  சருமம் : உடம்பின் மேலுள்ள தோல்: கேடகம் : துருத்தி : புகழ் : அழகு : சொல் யானை : உடம்பு : தோல்வி : நற்பேறின்மை : பக்கரை : மூங்கில்.
தோல்வி _ வெற்றியிழப்பு.


தோவத்தி _  ஆடவர் அரையாடை.
தோவம் _  ஒரு கால அளவு.
தோவாளம் _ கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர்.
தோழமை _  நட்பு.
தோழம் _  பேரெண் : மாட்டுக்கொட்டில் : கடல்.



தோழன் _  நண்பன்.
தோழி _  பணி செய்பவள்: நட்புடையவள்: தேவி: பாங்கி.
தோழ் _  மாட்டுத்தொழுவம்.
தோளணி _ தோளில் அணியப்படும் அணிகலன்.
தோளாமணி _  இரத்தினம்.



தோளி _ அரக்கு : அவுரிப்பூண்டு.
தோள் _  புயம் : கை : தொளை.
தோள் கொடுத்தல் _  உதவுதல் : சுமையைத்தாங்குதல்.
தோள்வளை _ தோளில் அணியும் அணி.
தோறும் _  ஒவ்வொன்றும் என்னும் பொருள் தரும் இடைச்சொல்.



தோற்கருவி _ தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி வகை.
தோற்பரம் _  கேடகம்.
தோற்பு _  தோல்வி.
தோற்றம் _  காட்சி : விளக்கம் : சாதி : படைப்பு : சாயை : புகழ் : உயர்ச்சி : பிறப்பு : வலிமை : எண்ணம் :மாயை.
தோற்றுதல் _  தோன்றுதல்.


தோற்றுவாய் _ தொடக்கம் : பாயிரம்.
தோன்றல் _ தலைமை : தோற்றம் : விளக்கம் : தலைவன்: முல்லை நிலத் தலைவன்: அரசன் :மகன்.
தோன்றி _ இரத்தம் : காந்தள்: ஒரு மலை.
தோன்றிகர் _ வணிகர் : செல்வர்.
தோன்றுதல் _ வெளிப்படுதல்: முளைத்தல் : வருதல்: விளங்குதல்: உண்டாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:29 pm

தௌகித்திரன் - மகளுக்கு மகன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:29 pm

தெளகித்திரி _  மகளின் மகள்.
தெளசாரம் _  குளிர் :பனி.
தெளதசிலம் _ பளிங்கு.
தெளதம் _  வெள்ளி : குளியல்: துவைத்த ஆடை.
தெளதிகம் _
 முத்து.



தெளத்தியம் _ துதி : தூது.
தெளரிதம் _  குதிரை நடை.
தெளர்ப்பல்லியம் _ வலுவின்மை.
தெளர்ப்பாக்கியம் _ நற்பேறின்மை.
தெளலம் _  துலாக்கோல்.


தெளலிகன் _ ஓவியன்.
தெளலேயம் _  ஆமை.
தெளவல் _ கேடு.

தெளவாரிகன் _
 வாயில் காப்போன்.
தெளவுத்தல் _ கெடுதல்.
தெளவை _ தவ்வை : தாய்: தமக்கை: மூதேவி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 25, 2013 2:21 pm

தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:34 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 10:14 pm

ந - இன்மைப் பொருள், எதிர்மறைப் பொருள், பிறிதின் பொருள் இவற்றைக் காட்டுமோர் உபசருக்கம் : 
ஓர் எழுத்து : மிகுதிப் பொருள் உணர்த்தும் இடைச் சொல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum